வெள்ளி, ஜனவரி 15, 2010

நாசி ரோக சிகிச்சைகள்


நாசிரோக சிகிச்சை

பீனச ரோகத்தில் முதலில் காற்றில்லாத வீட்டில் இருத்தல்,இலகுவான உணவு, உஷ்ண பதார்த்தங்கள், நசியம், வமனம், வியர்வை வரச்செய்தல், சிரசிற்கு தயிலம் பிரயோகங்கள் முதலிய சிகிச்சைகளை செய்தல்வேண்டும்.

சகல பீனச ரோகத்திற்கு சிகிச்சைகள் :- சகலமான பீனசரோகத்தில் தயிரில் மிளகுபொடி, வெல்லத்தைக் கலந்து எப்பொழுதும் கொடுத்துக்கொண்டிருந்தால் சகல பீனசரோகம் நிவர்த்தியாகிசுகமாயிருக்கும்.

குடாதி யோகம் :- வெல்லம், மிளகுசூரணம் ஒன்றாய்ச்சேர்த்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் துர்நாற்றமுள்ள பீனசம் நிவர்த்தியாகும்.

பீநசஹர நசியங்கள் :- திப்பிலி, சுக்கு, மிளகு இவைகளைவெந்நீரில் அரைத்து நசியஞ் செய்தாலும், தேவதாருபழம், இஞ்சி இவைகளைக் குளிர்ந்த ஜலத்தில் அரைத்து குன்றிஎடை பிரமாணம் 7-நாள் நசியஞ் செய்தாலும் பீனசம், நாசிரொகம் முதலியன நிவர்த்தியாகும்.

திராக்ஷ¡தி தைலம் :- திரா¨க்ஷ, சுக்கு, வாய்விளங்கம், திப்பிலி, கோஷ்டம், இவைகளை சமஎடையாய் சூரணித்து சூரணத்திற்கு பத்து பங்கு அதிகமாய் ஜலத்தை வார்த்து நாலிலொன்றாய்க்கியாழம் காய்ச்சி அதில் மேல் சூரணத்திற்கு சமஎடையாய்ச்சூடான நெய்யையாவது அல்லது எண்ணெயையாவது வார்த்து
தயிலபதமாய்க் காய்ச்சி நசியஞ் செய்தால் நாசிரோகம் நிவர்த்தியாகும்.

கணாதி நசியம் :- திப்பிலி, இந்துப்பு இவைகளை வெந்நீரில் அரைத்து நசியஞ் செய்தால் நாசிவாதம், கர்ணவாதம், கண்டவாதம் முதலியன நிவர்த்தியாகும்.கருஞ்சீரகத்தை துணியில்சுற்றி முகர்ந்துவந்தால் பீனசரோ
கம் நிவர்த்தியாகும். மஞ்சளை சுட்டு புகையை பிடித்து வந்தாலும் காசரோகம், நாசி அடைப்பு, தும்மல், பீனசம் முதலியன நீங்கும்.

நொச்சி இலை ரசம் 16 பலம், எண்ணெய் 10 பலம் கலந்துஇவைகளுடன் திரிபலை, திரிகடுகு, சீரகம், கருஞ்சீரகம், இந்துப்பூ வெள்ளைச்சாரணைவேர், இவகளில் கற்கமும் 2 சேர்த்து ஆட்டுப்பாலை யும் கலந்து தைலபதமாக காய்ச்சி நசியசெய்தால் நாசாரோகம் நிவர்த்தியாகும்.

பூதிநாசா ரோகத்திற்கு வியாக்கிரீ தைலம் :
- கண்டங்கத்திரி, தந்திவேர், வசம்பு, முருங்கன், சித்தரத்தை, சுக்கு, திப்பிலி, மிளகு இந்துப்பு இவைகளின் கற்கத்தோடாவது அல்லது கியாழத்தோடா
வது தயிலத்தை தயார்செய்து நசியஞ்செய்தால் பூதிநாசா ரோகம் நிவர்த்தியாகும்.

சிக்குரு தைலம் :- முருங்கன், கண்டங்கத்திரிவிரை, நாகதந்தி விரை, சுக்கு, திப்பிலி, மிளகு, இந்துப்பு, வில்வ இலைரசம் இவைகளின் கற்கத்தினால் தயார்செய்த தயிலத்தை நசியஞ்செய்தால் பூதி நாசாரோகம் நிவர்த்தியாகும்.

வியோஷாதி குடிகைகள் :- சுக்கு, திப்பிலி, மிளகு, சித்திரமூலம், தாளிசபத்திரி, புளி, புளிவஞ்சி, செவ்வியம்,சீரகம், இவை வகைக்கு 1-பலம், ஏலக்காய், இலவங்கபட்டை, இலவங்கபத்திரி, இவை வகைக்கு 1/4-பலம் இவை யாவையுஞ் சூரணித்து பழைய வெல்லத்தை கலந்து மாத்திரைசெய்து சாப்பிட்டால் பீனசம், சுவாசம்,
இருமல் முதலியன நிவர்த்தியாகும்.

பூயரக்த சிகிச்சைகள் :- சீழ், ரத்தம் ஒழுகும் நாசிகாரோகத்தில் ரத்தபித்தஹர கியாழங்கள் நசியங்கள் முதலியவைகளுடன் சிகிச்சைகளை செய்யவேண்டியது.

ஷட்பிந்து கிருதம் :- கரிசாலை, இலங்கம், அதிமதுரம்,கோஷ்டம், சுக்கு இவைகளின் கியாழத்தில் பசிம்நெய் சமஎடை சேர்த்து பக்குவமாய் காய்ச்சி நசியஞ்செய்துவந்தால் மூக்கில் உண்டான பீனச நோய்கள், சிரோரோகம் முதலிய சகல ரோகங்கள் நிவர்த்தியாகும்.

க்ஷவதரோகத்திற்கு சுண்டியாதி கிருதம் :- சுக்கு, கோஷ்டம், திப்பிலி, வில்வபழம், திரா¨க்ஷ இவைகளின் கற்கத்திலாவது அல்லது கியாழத்திலாவது நெய் கலந்து நெய்ப் பதமாய்ச் சமைத்து நசியம்செய்தால் க்ஷவதரோகம் நிவர்த்தியாகும்.  நெய், குங்கிலியம், மெழுகு இவைகளை ஒன்றாய்ச் சேர்த்து புகை போட்டால் க்ஷவது, பிரம்சது இவை நிவர்த்தியாகும்.

நாசாசிராவ சிகிச்சைகள் :- நாசாசிராவ ரோகத்தில் கடுக்காய் சூரணத்தை குழைகளினால் உள்ளே பிரவேசிக்கச் செய்தல், அதிபீடனம், தேவதாரு, சித்திரமூல, முதலியவைகளின் தீக்ஷண கரங்களான புகைகள் இவைகளினால் உபராசங்கள் செய்ய வேண்டியது. இந்த ரோகத்தில் ஆட்டின் இறைச்சியை சாப்பிடவேண்டியது.

பிரதிசியாய சிகிச்சைகள் :- சகல பிரதிசியாய ரோகங்களில் வாதரஹிதமான இடங்களில் இருத்தல், தளமாயும், உஷ்ணமாயும் இருக்கும். வஸ்திரத்தை தலைக்கு சுற்றிக்கொள்ளுதல் இவைகள்ஹிதகரங்களா யிருக்கும்.

பாலமூலகஙூஷம் :- பிரதிசியாய ரோகத்தில் இளமுள்ளங்கி, கொள்ளு இவைகளின் ரசம், வியர்வை வாங்குதல், உஷ்ணமான போஜனம், சீதோதகம் இவைகளைசெய்வதினால் பிரதிசியாய ரோகம் பக்குவமாகும்.

பிப்பல்யாதி நசியம் :- கபம் பக்குவமான பிறகு சீர்ஷவிரேசனம் செய்வித்து கபத்தை யெடுத்துவிட வேண்டியது.  திப்பிலி, முருங்கைவிரை, வாய்விளங்கம், மிளகு இவைகளை நசியம் செய்விக்க வேண்டியது. இம்மாதிரி செய்தால் பிரதிசியாயம் நிவாரணமாகும்.

வாதபிரதிசியாய சிகிச்சைகள் :- பஞ்சலவணங்கள் அல்லது` பஞ்சமூலங்கள் இவைகளுடன் சித்தமான கிருதபானம் செய்ய வேண்டியது.

பித்தபிரதிசியாய சிகிச்சைகள் :- பித்த பிரதிசியாயத்தில்நெய்யில் கரிசாலை கற்கம் இஞ்சிரசம் இவைகளில் ஒன்றாவது அல்லது பால், இஞ்சிரசம் இவை கலந்தாவது பானம் செய்ய வேண்டியது.

கபபிரதிசியாய சிகிச்சைகள் :- கபநாசாரோகத்தில் கிருதத்தினால் சினிக்த்தம் செய்து பிறகு எள்ளு உளுந்து இவைகளினால் தயார் செய்யப்பட்ட யுவாகை குடித்து கபநிவாரணமான அவுஷ தங்களை சாப்பிடவேண்டியது.

தாத்திரீ லேபனம் :- நெய்யினால் நெல்லிவற்றலை அரைத்து தலைக்கு தடவிக்கொண்டால் மூக்கிலிருந்து ரத்தம்வடிதல் நிவர்த்தியாகும்.

பிரதிசியாய சாமானிய சிகிச்சைகள் :- வசம்பு, பொறிமாவு இவைகளின் புகைகளை பிடித்து பிறகு வாய்விளங்கம், இந்துப்பு, குங்கிலியம், மனோசிலை இவைகளின் சூரணத்தை மூட்டைக்கட்டி,
மோர்ந்துக்கொண்டிருந்தால் பிரதிசியாயம் நிவர்த்தியாகும்.

சத்துத தூமம் :- நெய், எண்ணெய் இவைகளுடன் பொறிமாவை கலந்து அதின் புகையை மோர்ந்துக்கொண்டிருந்தால் , ஜலுப்பு, இருமல், விக்கல் இவைகள் நிவர்த்தியாகும்.

நவசாகர யோகம் :- தலைநோயுடன் கூடியிருக்கும் நீர் பீனசத்திற்கு நவாசாரம், சுண்ணாம்பு இவைகள் இரண்டும் சமஎடையாக கல்வத்திலிட்டு அரைத்து குன்றிஎடை, எடுத்து முகர்ந்துவர தலை நோய் நீர்பீனசம், ஜலுப்பு, தும்மல் இவைகள் நிவர்த்தியாகும்.
 
பிரதியாஹர நசியம் :- வசம்மையாவது அல்லது ஓமத்தையாவது சூரணித்து வஸ்திரத்தில் மூட்டைகட்டி மோர்ந்து வந்தால் ஜலுப்பு நிவர்த்தியாகும்.

சட்டியாதி சூரணம் :- கிச்சிலிக்கிழங்கு, நெல்லிவற்றல், திப்பிலி, மிளகு இவைகளின் சூரணத்தில் நெய், வெல்லம்
கலந்து சாப்பிட்டால் மிகவும் ப்யங்கரமான ஜலுப்பு, பக்கசூலை மார்பு நோய் இவைகள் நிவர்த்தியாகும்.

கிருமிநாசா சிகிச்சைகள் :- கிருமிரோகத்தில் சொல்லிய ஓளஷதத்தினாலும் கிருமி நாசகஓளஷதங்களினாலும் கிருமிநாசரோகம் நிவர்த்தியாகும்.

கிருமிஹர சிகிச்சை :- சிகப்பு காசினிகீரை சுரத்தை வடிகட்டி, மோரில் கலந்து நசியம் செய்து பிறகு சிகப்பு காசினி கீரையை அரைத்து நாசியின் துவாரத்தில் வைத்து மூன்று நாள் கட்டினால் அப்பொழுதே புழுக்கள், ஜலுப்பு இவைகள் நிவர்த்தியாகும்.

ஆயில்பட்டை தைலம் :- ஆயில்பட்டை பலம் 10 சதைத்து ஓர் பாண்டத்திலிட்டு 2 படி நீர்விட்டு எட்டிலொன்றாகிய 1/2 படி யளவிற்கு சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் பசும்பால் நல்லெண்ணெய்வகைக்கு படி 1/2 வீதம் சேர்த்து கோஷ்டம், சிற்றாமுட்டிவேர், நன்னாரிவேர், கஸ்தூரி மஞ்சள், அதிமதூரம், பெருங்காயம், மஞ்சள் தூள், வெள்ளைப்பூண்டு, தேவதாரு, கல்மதம், சடாமாஞ்சில்கடுக்காய், வாய்விளங்கம், சந்தனம், மிளகு வகைக்கு கழஞ்சு 1/2 வீதம் ஆவின் பால்விட்டரைத்து சேர்த்து கலக்கி ஓர் தைல பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எர்த்து தைலபதத்தில் காய்ச்சி வடித்து வைத்துக்கொள்க. இதைக்கொண்டு முறைப்படி ஸ்கானஞ்செய்து வர பீனசரோகங்கள் யாவும் குணமாகும்.

நாசிரோகத்தைலம் :- இளநீர், நல்லெண்ணெய், ஆவின்பால் வகைக்குப் படி 1/4 இவைகளை ஒர் தைல பாண்டத்திலிட்டு அதில்  வெட்டிவேர், விலாமிச்சவேர், மஞ்சிஷ்டிவேர், அதிமதூரம், கோரைக்கிழங்கு, பூலங்கழுகு, கஸ்தூரிமஞ்சள், தண்ணீர்விட்டான் கிழங்கு, குங்குமப்பு, சண்பகமொட்டு பதமுற தைலங்காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு முறைப்படி ஸ்கானஞ்செய்து வர சகலநாசிரோகங்களும் பீனச நோய்களும் விரைவில் குணமாகும்.

பீனசத்தைலம் :- நொச்சியிலைச்சாறு, கரிசனாங்கண்ணிச்சாறு, நல்லெண்ணெய் வகைக்குப் படி 1 இவைகளை ஓர் தைலபாண்டத்திலிட்டு அதில் திப்பிலி, சிற்றரத்தை, ஆமணக்குவேர், பாலை மரவேர், கிரந்திதகரம், கோஷ்டம், சுக்கு, தேற்றாங்கொட்டை அதிமதூரம், வாய்விளங்கம், சதபுட்டு, இந்துப்பு, வகைக்குப் பலம் 1/4  வீதம் வெள்ளாட்டுப்பால் விட்டரைத்து சேர்த்து பதமுறக்காய்ச்சிவடித்து வைத்துக்கொண்டு வாரத்திற்கொருமுறை வீதம்ஸ்கானமும் வாரமிரு முறை நசியமும் செய்துவர பீனச ரோகங்கள்யாவும் குணமாகும்.

பீநசக் கிருதம் :- ஆவின் நெய் படி-1, குங்குமப்பூ, கோரோசனம், அதிமதுரம், கோஷ்டம், கோரைக்கிழங்கு வகைக்குக்கழஞ்சி-1, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம் வகைக்கு பனவெடை-1, இவற்றுள் சரக்குகளை நன்கு இடித்துச் சூரணஞ்செய்து வைத்துகொண்டு நெய்யை உருக்கி காய்ந்த பதத்தில் கீழிறக்கி அதில் சரக்குகளின் சூரணத்தைத் தூவி இவைகளின் சத்தானதுஎண்ணெயில் உறவானதும் வடித்து வைத்துகொள்க. இதை
முறைப்படி நசியஞ் செய்துவர பீனசரோகங்கள் யாவும் குணமாகும்.

நாசிகாரோகத்திற்கு பத்தியங்கள் :- வியர்வைவாங்கல், அப்பியங்கனம், பழைய யவதானியம், அரிசி, கொள்ளு, பச்சைபயறு இவைகள் கூட்டு, கிராமிய மாமிச ரசம், கத்திரிக்காய், பேய்ப்புடல், முருங்கக்காய், விலவபழம், இளமுள்ளங்கி, வெள்ளைப்பூண்டு, உஷ்ணோதகம், திரிகடுகு, காரம், புளிப்பு, உப்பு பதார்த்தங்கள்,
உஷ்ணம், இலகுகரமான போஜனம் இவைகளை நாசாரோகமுடைய வர்கள் பத்தியங்கள் செய்யவேண்டியது.

அபத்தியங்கள் :- குளிர்ந்த ஜலம், பனிக்காற்று, நீராடுதல்,கோபம், மலம், மூத்திரம், வாயுவேகத்தை தடுத்தல், சோகம், திரவபதார்த்தங்கள், நிலத்தில் தூங்குதல் இவைகளை நாசாரோகம் உடையவர்கள் பிரயத்தினபூர்வமாக விடவேண்டியது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக