பாலர்கட்கு நோய் உண்டாவதற்கு காரணம் :- பொது வாக பாலர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதாவது தாய்ப் பாலைமட்டு மருந்துங் குழந்தைகள், தாய்ப்பாலையும் அன்னத்தையு மருந்துங் குழந்தைகள், அன்னத்தைமட்டு மருந்துங் குழந்தைகள் என்பதாம். இவற்றுள் முலைப்பாலும் அன்னமும் தோஷமற்றிருந்தால் சிசுக்களுக்கு நோய் வராது. ஆகவே உணவாதி பேதம் தகாத நடத்தை முதலிய காரணங்களினால் தோஷமுற்று நோய் வாய்ப்பட்ட மாதர்கள் கருப்பமுள்ள மாதர்கள் முதலியவர்களின் முலைப்பாலை அருந்துவதால் பாலர்கட்கு அநேக வியாதிகள் ஏற்படுகின்றது. முக்கியமாக கருப்பஸ்திரீகளின் பாலை அருந்தும் குழந்தை கட்கு கருப்பஸ்திரீயின் வயிற்றைபோலவே வயிறு பெறுத்து பல வித நோய்களை உண்டாக்கும்.
க்ஷ£ராலஜக ரோகம் :- இது தோஷமுள்ள தாய்ப்பாலை அருந்து வதால் குழந்தைகட்கு ஏற்படும் நோயாம். இதனால் சிசுக்களுக்கு மலமானது துர்க்கந்தத்துடன் அசீரணப்பட்டு நீராகவும், குழம்பாகவும் சிறிது கட்டுப்பட்டது போலவும் சிதறி சிதறி நானாவிதமாக பேதியாகும். மூத்திரமானது மஞ்சள் வெண்மை நிறத்துடன் குழம்பாக இறங்கும். மற்றும் சுரம், அரோசகம், வாந்தி, தாகம், கொட்டாவி, வயிற்றுப்புசம். வயிற்றிரைச்சல், நாசி, வாய் முதலியன துர்க்கந்தமுடன் காணல் முதலியன ஏற்படும்.
வாததோஷமுள்ள மாதரின் முலைப்பாலை அருந்தும் குழந்தை கட்கு வாயு அதிகரித்து வாதரோகங்கள் உண்டாவதுடன், மலமூத்திர சிக்கல், சுரம், இளைப்பு, முதலியவைகளும் காணும்.
பித்ததோஷமுள்ள மாதரின் முலைப்பாலை அருந்தும் குழந்தை கட்கு பேதி, தாகம், காமாலை, சரீர உஷ்ணம், பித்தாதிக்கம், சுரம் முதலியன உண்டாகும்.
கபதோஷமுள்ள மாதரின் முலைப்பாலை அருந்தும் குழந்தை கட்கு கபம் அதிகரித்து கபநோய்கள், வாந்தி, சொள்ளுவடிதல்,சீதளம், வீக்கம், கண்கள் வெளுத்து ஊதலாயிருத்தல் முதலியன உண்டாகும்.
மற்றும் பாலுண்ணுங் குழந்தைகட்கு பாலின் தோஷமானது ஆமாசயத்தைப்பற்றி பத்துவகை நோய்களை உண்டாக்குமென அறியக்கிடக்கின்றது. அவையாவன :-
1.வாதகுண்டலாக்கட்டி :- இதில் கறுத்த நிறத்துடன் கட்டிகள் எழும்பி அதிக குத்தலும் தேகத்தில் சுரமும் உண்டாகும். இதற்கு வாதசெவ்வாப்பு கட்டி என்று பெயர்.
2.பித்தகுண்டலாக்கட்டி :- இதில் மஞ்சள் நிறத்துடன் கட்டி கள் நீங்காத எரிச்சலை கொடுத்து சீக்கிரத்தில் பழுத்துடைந்து அவற்றினின்று சுத்தரத்தம் மாத்திரம் வடியும். இதுவே பித்தசெவ்வாப்பு கட்டி என்று பெயர்.
3.சிலேஷ்மக் குண்டலாக்கட்டி :- இதில் கட்டிகள் கனத்து வெளுத்து நமைச்சலுடன் அசைவற்று புடைகள் உள்ளதாய் வெகுகோரமாய் எழும்பும். இது சிலேஷ்மச்செவ்வாப்பு கட்டியாம். இது கஷ்டசாத்தியம்.
4. தாலுகண்டகரோகம் :- கபதோஷம் அதிகரித்து தாடைகளிலிருக்கும் மாமிசத்தைப்பற்றி அவ்விடத்திலும் தலையிலும் குழி விழும்படிக்குச் செய்து சிசுக்களுக்கு முலைப்பாலில் அசங்கியம் பிரயாசத்தின்மேல் பாலுண்ணல், தாகம், வாயில் நமைச்சல், கண்ணோய், கழுத்து விகுந்தல், வாந்தி, பச்சை நிறத்துடன் பேதி
என்னும் குணங்கள் உண்டாகும்.
5. நிசூளிகாவிரணரோகம் :- இது பித்தத்தினால் நமைச்சலுடன் பிறந்து உடம்பெங்கும் சிறு சிறு கொப்புளங்கள் எழும்பி அடங்கும். மறுபடியும் இரவிலாவது பகலிலாவது முன்பு உண்டானது போல் மிக நெருக்கமாக பாவும். இது சரீர முற்றிலும் வியர்க்குருக் கொப்புளங்களினால் சட்டைபோட்டது போல் மறைப்பதால் நிசூளிகாவிரணமெனப் பெயர் பெற்றது.
6. பாலசோஷரோகம் :- குளிர்ந்தநீர், கபதோஷப்பால் முதலியவைகளை குடித்து பகலில் நித்திரை செய்து பிறகு முலைப்பாலைக்குடிக்கின்ற சிசுக்கழுக்கு இந்நோய் உண்டாகும். இதனால் உடல் இளைத்தல் முகத்திலும் கண்ணீலும் காந்தி நீங்குதல்,பீனிசம், இருமல் என்னும் குணங்கள் உண்டாகும். இதற்கு உள்ளுறுக்கி
உடலுறுக்கி என்றும் பெயர்.
7. துந்தரோகம் :- இது குழந்தைகட்கு வாயுவினால் ஏற்பட்ட அசீரணம், வயிற்றுப்புசம், நாபியில் வலி, நாவில் மாவு படிந்திருத்தல் முதலிய குணங்கள் பெற்றிருக்கும். இதனை துத்தி நோய் என்வும்கூறுவர்.
8. குதக்கூடரோகம் :- இது பாலர்கட்கு புளித்த மலம் சேருவதினாலும், அதிசாரரோகத்தினாலும், பிறந்த குதஸ்தானத்தில் சிவந்த நிற விரணமும், உள்ளீல் அதிக நமைச்சலும் மிக உபத்திரவமும் உண்டாகும்.
9. விஷமசிராரோகம் :- இது அசீரணத்தினால் சிசுக்களுக்கு ரத்தநரம்புகளில் எந்நேரமும் காங்கையும் அதிக நமைச்சலும் உண்டாகி மிகுந்த உபதிரவத்தைச் செய்யும்.
10. முகதூஷிகரோகம் :- இது கபவாத விருத்தியினால் பிறந்து சிசுக்களுக்கு வாயில் இலவமுட்களைப்போன்ற முட்களை யுண்டாக்கும். இதற்கு நாய்முள் என்று பெயர்.
இனி பாலர்கட்கு காணும் இதர நோய்களைக் கூறப்படும்.
குழந்தைகளின் நோய்களைக் கண்டறியும் உபாயம் :- வைத்தியன் சிசுக்களுக்கு ரோகங்கள் இருக்கிறதும் இல்லாததும் சிசு அழுகிற குறலைக்கண்டு கவனிக்கவேண்டியது. குழந்தை எந்த இடத்தை பல தடவை தொடுகின்றதோ, எந்த இடத்தை தொட்ட மாத்திரத்தில் வீறிட்டு அழுகிறதோ அந்த இடத்தில் குழந்தைக்கு நோய் உண்டென்றும், கண்கள் பலதடவை மூடிக்கொண்டால் சிரசில் நோய் உண்டென்றும், மலமூத்திரபந்தம், கக்கல், ஸ்தனத்தை கடித்தல், குடலில் கூச்சல், வயிறுப்பல் முதுகைவளைத்தல், பலதட வை பக்கங்கள் எடுத்துப்போடுதல் இந்த லக்ஷணங்களில் வயிற்றில் நோய் உண்டென்றும், பயப்படும்படி பலதடவை திசைகள் பார்ப்பதினால் அடிவயிறு குய்யம் இவைகளில் நோய் உண்டென்றும் அறியவேண்டியது.
பிள்ளைகளின் பத்திய கிரமம் :- சிசுவுக்கு நோய் உண்டானால் தாயானவள் சகல அபத்திய பதார்த்தங்களை விடவேண்டியது.சாதம் சாப்பிடும் சிசுவுக்கும், முலைப்பாலும் அன்னமும் சாப்பிடும் சிசுவுக்கும் அபத்திய அன்னம் ஊட்டக்கூடாது. ஆனால் முலைப்பாலை மாத்திரம் நிவர்த்திக்ககூடாது. லங்கணம் செய்யவேண்டுமானால் தாயார் அல்லது பால்கொடுப்பவளை லங்கணம் செய்விக்க வேண்டியது. இப்படிசெய்வது சிசுவுக்கு லங்கணமென்று அறிய வேண்டியது.
சிசுகளுக்கு அவுடத கிரமம் :- காய்ச்சல் முதலிய நோய் களுக்கு பெரியவர்களுக்கு எந்த அவுடதங்கள் கொடுக்கும்படியாக வைத்திய நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறதோ அவைகளைத் தான் சிசுகளுக்கும் உபயோகப்படுத்தவேண்டியது. ஆனால் வியர்வை பிடித்தல், தலைக்குப்பத்துபோடல், விரேசனம் முதலியது செய்யக்கூடாது. அதிக கஷ்டசாத்திய ரோகங்களில் விரேசனவமனங்கள் மாத்திரம் உபயோகிக்கவேண்டியது.
பிள்ளைகளுக்கு மாத்திரை பிரமாணம் :- குழந்தைகள் பிறந்த வுடன் வாயுவிளங்கபிரமாணம் கொடுக்கவேண்டியது. இந்த பிரமாணமாக பிரதிமாதத்திலும் கொஞ்சங் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டியது.
குகூணக பால ரோக நிதானம் :- குழந்தைக்கு பாலரோ ஷத்தினால் குகூணகமென்கிற ரோகம் உண்டாகும். அப்போது கண்களில் நமைச்சல் நீர்வடிதல் கண்கள், தலை, மூக்கு இவைகளை தேய்த்துக்கொள்ளுதல், கண்கள் திறக்கக்கூடாமை, சூரியகாந்தியை பார்க்கக்கூடாமை என்னும் குணங்களுண்டாகும்.
குகூணக பால ரோக சிகிச்சை :- கடுக்காய், தானிக்காய் நெல்லிவற்றல், லோத்திரச்சக்கை, வெள்ளைச்சாரணை, இஞ்சி, சிறிய முள்ளங்கத்திரி, பெரிய முள்ளங்கத்திரி, இவைகளை அரைத்து வேகவைத்து கொஞ்சம் வெப்பமாக தேகத்திற்கு லேபனஞ்செய் தால் அது சிலேத்துமத்தை தணிக்கச்செய்து குகூணக ரோகத்தை நிவர்த்திசெய்யும்,
பாரிகர்ப்பிகநிதானம் :- கர்ப்பிணியாய் யிருக்கும் தாயாரின் தன்னியத்தை குழந்தை பானஞ்செய்வதால் இருமல், அக்கினிமாந்தம், நமைச்சல், வாந்தி, காசம், அருசி, பிரமை, இவைகளுண்டாகி பிள்ளையின் வயிறும் சூணாவயிறாகும். இதற்கு பாரிகர்ப்பம் என்றுபெயர். இதை நிவர்த்தி செய்ய அக்கினி தீபன மருந்துகள் கொடுக்கவேண்டியது.
தாலுபாகநிதானம்:- குழந்தைகளுக்கு சிலேஷ்ம பிரகோபத்தினால் தாடையிலுள்ள மாமிசத்தில் தாலுகண்டக மென்கிற ரோகம் உண்டாகும். அப்போது தாடைகளில் பள்ளங்கூட விழும். அதனால் தாடையில் சிறிய கட்டிகள் பால் குடியாமை, இவைகளுண்டாகி கண்கள் கழுத்து, முகம் இவைகளில் உண்டாகும் நோயினால்
கழுத்து நிற்காமல் போவதுடன் குடித்த பாலும் கக்கும். இதற்கு தாலுபாக ரோகம் என்று பெயர்.
தாலுபாக சிகிச்சை :- கடுக்காய், வசம்பு, கோஷ்டம், இவைகளை கல்கம் செய்து அதில் தேன் முலைப்பாலும் விட்டு கலக்கி பானஞ்செய்வித்தால் தாலுகண்டரோகம் நிவர்த்தியாகும்.
விசர்ப்பரோக நிதானம்:- சிறிய குழந்தைகளுக்கு திரிதோஷத்தினால் தலை அல்லது அடிவயிறு இவைகளில் சிறிய தாமரை கொழுந்தைப்போல் விசர்ப்பமென்கிற ரோகமுண்டாகி முடிச்சுகளிலும் ஹிருதயஸ்தானத்திலும் அடிவயிற்றிலும் குதபிரதேசத்திலும் சிரமமாக பிரவேசிக்கும். இதனால் சுசு மரணமடையும். இது மகா பத்மகரோகமென்று அறிய வேண்டியது.
உல்பகரோகம் :- பிரசவித்த மருமாதருதுகாலத்திலேயே புருஷ்னைச்சேர்ந்து மறு கர்ப்பத்தைகொண்ட வாலிந்தி என்ற ஸ்திரீகளுக்கு கர்ப்பசாயத்தில் பிண்டோற்பத்திற்குகாரணமானகருப்பசலனத்தினால் கண்டகமென்கிற சிலேஷ்மம் இருக்கின்றபையானது விருத்தியடையும்போது அன்னரசமானது சிசு போஷ கங்களான நாடிமார்க்கங்களில் விருத்தியடையும் இதனால் முன்பு பிறந்திருக்கிற சிசுவானது மயக்கத்துடன் கைகளை முஷ்டிபந்தமாக மூடிக்கொள்ளும். அன்றியும் மார்புநோய், கால் கைகளை சொறதல், இருமல், இரைப்பு, வாந்தி, சுரம் முதலிய குணங்களுடன் நாளுக்கு நாள் இளைக்கும். இது தாயினது கர்ப்பகாலத்தில் முலை மார்க்க சலத்தால் ஏற்பட்டு சிசுவை மூடுதலால் உல்பகரோகம் எனப் பெயர் பெற்றது. இதற்கு வேறு முலைப்பால் ஊட்டுவது தவிர, அப்பிரசவம் ஆகும்வரையில் சிசுவை பாதுகாக்கவேண்டும்.
பால விசர்ப்பிரோகம் :- பாலர்களுக்கு கொப்புளமாவது கீழ் வயிற்றிலும், தலையிலும் வியாபிக்கில் மரணத்தைக்கொடுக்கும். திரிதோஷத்தினால் உண்டான விசர்ப்பி கொப்புளங்கள் செந்தாமரை இதழை யொத்திருப்பதால் இதற்கு மகாபதும விசர்ப்பி என்று பெயர். இது முதல் முதல் நரம்பின் வழியாக நெற்றியில் கனத்து மார்பிலிறங்கும். பின்பு மார்ப்பிலிருந்து குதஸ்தானத்திலிறங்கும்.
இப்படியே அதோ முகமாக இந்த ரோகம் இறங்கி இறங்கிச் சுற்று வதால் அசாத்தியமாம்.
மிருத்திகாபஷண ரோகம் :- தினந்தினமும் மண்ணைத்திண்ணுகின்ற சிசுகளுக்கு தேகம் வெளிறலுடன் வீக்கம், இருமல், இரைப்பு, பேதி, வயிற்றிற்கிருமி சேருதல், வாந்தி, மூர்ச்சை, மந்தாக்கினி, முலைப்பாலில் விருப்பமின்மை, சரீரநோய், பிரமை முதலிய குணங்கள் உண்டாகும்.
பாரிகர்க்கிக ரோகம் :- கருப்ப ஸ்திரீகளின் பாலை குடிக்கும் சிசுகளுக்கு இருமல், மந்தாக்கினி, அரோசகம், வாந்தி, சோம்பல், இளைத்தல், பிரமை என்னுங் குணங்கள் உண்டாகி வயிறும் பெருகும். இன்னும் சர்வாங்கத்திலும் உபத்திரவத்தைச் செய்யும்.
0 comments:
கருத்துரையிடுக