ஞாயிறு, ஜனவரி 10, 2010

பாத வன்மீகம் ரோகம் - ரோக நிதானம்





பாதவன்மீகம்

நெய்தல் நில வாசம், மலசலம் ஊறிய பதார்த்தம் சிலேத்தும பிரதானவஸ்து இவைகளை புசித்தலினாலும், அதிகசை யோகத்தினாலும் அதோகாயமான இரண்டு தொடைகளிலிருக்கின்றநரம்புகளில் சிலேத்தும நீரானது நிரப்பபடும். அக்காலத்தில் வாதமும் பித்தமும்
பாதத்தில் வியாபித்து அதைப்புற்றுபோல் கொஞ்சம் கொஞ்சமாக துர்மாமிசத்தை சேர்த்து அதைப்புற்றுப்போல் பருக்கப்பண்ணும். அம்மாமிசம் அதிகரிக்க அரோசக முதலிய துர்குணங்கள் பிறக்கும். இதுவே பாதவன்மீகம். இதனை சீலிபதரோகமென்றும் யானைக்கால் என்றும் கூறுவர்.
இது மூன்று வகைப்படும்.

1. வாதபாதவன்மீகம் :- இது ஒரு பாதத்திலாவது இரண்டி
லாவது நாளுக்குநாள் விருத்தியடைகின்ற வீக்கத்தையுண்டாக்கும். அப்போது அதிலுள்ள துர்மாமிசம் கறுத்து உண்டையும் உருளையு மாக கருணைக்கிழங்கு முளைகளைப்போல் எழும்பி கெட்டிப்பட்டு சொற சொறத்து மினு மினுத்தில்லாமல் சிலவேளை நோயைத்
தருவதாயிருக்கும்.

2. பித்தவாத வன்மீகம் :- இது தொடைநரம்புகளில் பித்தநீர் கலந்து இறங்கலால் உண்டாகும். அப்போது அரையில் நெறிகட்டு தல், பாதத்தில் மஞ்சள் நிறமான வீக்கம், மேலில் எரிச்சல், சுரம், பிதற்றல், கண்ணீர்பீ தவன்னம், வாந்தி, சிலவேளை பேதி அல்லது
மலக்கட்டு என்னுங் குணங்களை யுடையது.

3. சிலேஷ்ம பாதவன்மீகம் :- பாதத்தில் மினுமினுப்புடன்
குளிர்ச்சியும் வெளுவெளுப்புமுள்ள வீக்கத்தை உண்டாக்கும். ஆனால் அவ்வீக்கத்தின்மீது புத்தெழும்புவதுபோல் சிறிதும் பெரிதுமாக துர்மாமிசம் வளர்ந்து முழங்காலுக்கு மேலும் உயர்ந்துநோயில்
லாமல் தளதளப்பாக யிருக்கும்.

பாதவன்மீக நோயில் சாத்தியா சாத்தியம் :- எந்த யானைக்காலாவது நூதனமாக பிறந்து ஒரு வருடத்திற்குள் முதிராமல் அற்பமாயிருக்கில் சாத்தியமாம். பாதப்பிரமான த்திற்கு மீறி
இரண்டு பக்கங்களிலும் அதிகமாகப் பிதுங்கி ஆள்வள்ளிக்கிழங்கு, புற்று, தூண், யானைக்கால் முதலிய பிரமாணங்களைப் பெற்று விருத்தி அடைந்த வீக்கம் அசாத்தியமாம். தேசபேதங்களினால் கை, உதடு, செவி, மூக்கு முதலிய அவய வங்களில் பாதவன்மீகம்போல் வீங்குமாயின், அவைகளை அவ்வவ்விடப் பெயர்பெற்ற புற்றுகளென்று வழங்கப்படும்.



Post Comment

0 comments:

கருத்துரையிடுக