திங்கள், ஜனவரி 11, 2010

சுர சிகிச்சைகள்


சுர சிகிச்சை

வாதசுர கியாழம் :- சந்தனத்தூள், சீந்தில்கொடி, கோரைக் கிழங்கு, சுக்கு, சிவதை, பூனைக்காலிவேர், இவைகள் சம எடையாக இடித்து அரையடி ஜலம் சேர்த்து அதை ஆழாக்காகச் சுண்டக்காய்ச்சி கொடுத்துவர வாதசுரம் நீங்கும்.

ஆமணக்குவேர், சிற்றாமல்லிவேர், சுக்கு, தக்கோலவேர், செருப்படைவேர், இவை சம எடையாக கியாழம்வைத்து கொடுத்தால் வாதசுரம் நீங்கும்.

சீந்தில்கொடி, மோடி, சுக்கு இவைகளை கியாழம்வைத்து வாதசுர பிரகோபத்தில் ஏழுநாள் கொடுத்தால் வாதசுரம் குணமாகும்.

சீந்தில்கொடி, நன்னாரிப்பட்டை, திரா¨க்ஷ, சதாப்பிலை,வெள்ளைசாணைவேர், இவைகளை சம எடையாக கியாழம் வைத்து அதில் வெல்லம்போட்டு கொடுத்தால் வாதசுரம் குணமாகும்.

திரா¨க்ஷ, சீந்தில்கொடி, பூசனி, கொத்துபுங்கன், செவ்வியம் இவைகளை சமனாகக் கியாழம்வைத்து கொடுக்கலாம்.

சீந்தில்கொடி, சுக்கு, கொத்தமல்லி, வில்வவேர் இவை சம எடை கியாழம்வைத்து வெல்லம் கலந்து அருந்தினால் வாதசுரம் நீங்கும்.

திப்பிலி, நன்னாரிப்பட்டை, திரா¨க்ஷ, சதாப்பிலை, மிளகு இவைகளை கியாழம்வைத்து வெல்லத்துடன் குடித்தால் வாதசுரம் நீங்கும்.

காட்டுகஞ்சா இலை, சிற்றாமுட்டி, திரா¨க்ஷ, சீந்தில்கொடி
நன்னாரிவேர்பட்டை, இவைகளை சமனாகக் கியாழம்வைத்து சாப்பிட்டால் அதிதீவிரமான வாதசுரம் போகும்.
 

நிலப்பனங்கிழங்கு, நன்னாரிவேர்ப்பட்டை, திராஷை, கொத்து புங்கன், சீந்தில்கொடி இவைகளை கியாழம் வைத்து வெல்லத்துடன் சாப்பிட்டால் வாதசுரம் நீங்கும்.

கண்டங்கத்திரிவேர், சிற்றாமுட்டி, சுக்கு, கடுக்காய் தோல் இவைகளை சமனெடையாகத் தூக்கி முறைப்படி கியாழம் வைத்துக் கொடுத்தால் வாதசுரம் நீங்கும்.

நிலவேம்பு, உத்தாமணிவேர், திரிபலை, விஷ்ணுகிரந்தி, சுக்கு இவைகளை சமனெடையாக கியாழம் வைத்து அதில் திப்பிலி சூரணம் கலந்து கொடுத்தால் வாதசுரம் நீங்கும்.

ஆலம்விழுது, குருவேர், அவுரிவேர், தக்காளிவேர், மஞ்சள், சுக்கு, தானிக்காய் இவைகளை சமனெடையாக கியாழம் வைத்து சாப்பிட்டால் வாதசுரம் நீங்கும்.

பேரரத்தை, கொன்றைப்பட்டை, தேவதாறு, அதிமதூரம், திராஷை, திப்பிலி, காட்டுமிளகு, நன்னாரிவேர், வெள்ளைச்சாரணை வசம்பு, ஜடாமாஞ்சி, சதாப்பிலை, கோரைக்கிழங்கு, நிலப்பனங்கிழங்கு, கோஷ்டம், இலவம்பிசின், கொத்தமல்லி, ஆலம்விழுது, அவுரிவேர் , சுக்கு, இவைகளை கியாழம் வைத்து அதில் தேன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் வாதசுரம் நீங்கும்.

பித்தசுரகியாழம் :- நாட்டுப்பச்சைப்பயறு, கோரைக்கிழங்கு, குருவேர், சீந்தில்கொடி, சிற்றாமுட்டி, சுக்கு, போராமுட்டி, சீரகம் இவைகளை சமனெடையாக கியாழம் விட்டு சாப்பிட்டால் பித்தசுரம் போகும்.

பற்பாடகம், ஆடாதோடை, கடுகுரோகணி, சீமை நிலவேம்பு பூனைக்காஞ்சொறிவேர் இவைகளை சமனெடையாக கியாழம் வைத்த  அதில் சர்க்கரை போட்டு சாப்பிட்டால் தாகம், தாபம், பித்தாந்தம் இவைகளுடன் கலந்த பித்தசுரம் நீங்கும்.

பற்பாடகம், பேய்ப்புடல், சந்தணத்தூள், வேப்பம் ஈர்க்கு குருவேர், சுக்கு, இவைகளை யாவற்றையும் கியாழம் வைத்து சாப்பிட்டால் பித்தசுரம் நீங்கும்.

நிலவேம்பு, சீந்தில், பற்பாடகம், நெல்லிவற்றல் இவைகளை  சமனெடையாக கியாழம் காய்ச்சி அத்துடன் தேனும் சர்க்கரையும்கலந்து சாப்பிட்டால் பித்தசுரம் சூரியனைக்கண்ட பனிபோல் நீங்கும்.

பேரிச்சம்பழம், சந்தணத்தூள், திராஷை, நெல்லிவற்றல்  சீந்தில்கொடி, சமனெடையாக கியாழம் வைத்து சாப்பிட்டால் தாகம்அனலுடன் கூடிய பித்தசுரம் நீங்கும்.

சீந்தில்கொடி, கியாழம்வைத்து அதில் அதிமதுரசூரணத்தை சர்க் கரை இவைகளை கலந்து சாப்பிட்டால் பித்தசுரம் நீங்கும்.

சீந்தில்கொடி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, கோஷ்டம், சந்தனத்தூள், சுக்கு இவைகளை சம எடை கியாழம்வைத்து சாப்பிட்டால் பித்தசுரம் நீங்கும்.

உத்தாமணி, பேராமுட்டி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, சுக்கு, நெல்லிவற்றல், கொத்தமல்லி இவைகள் சம எடை கியாழ மிட்டு கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.

தண்ணீவிட்டான்கிழங்கு, கொத்தமல்லி, அதிமதுரம், தும்ப ராஷ்டகம், கோரைக்கிழங்கு, சதாப்புவிரை, முசுமுசுக்கை, சுக்கு, குறுவேர் இவைகளை சம எடை கியாழம்வைத்து கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.

முசுமுசுக்கை, பனிப்பயறு, சீந்தில்கொடி, ஜடாமாஞ்சி, கோரைக்கிழங்கு, சுக்கு, சிற்றாமுட்டி, அதிமதுரம் இவை சம எடை கியாழம்வைத்து கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.

சிறுகாஞ்சொரி, பற்பாடகம், நிலவேம்பு, ஆடாதோடை, கடுகு ரோகணி இவைகள் சம எடை கியாழம்வைத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் பித்தசுரம் நீங்கும்.

கோரைக்கிழங்கு, சந்தனத்தூள், குறுவேர், சீந்தில்கொடி, நன் னாரிவேர், சுக்கு, கோஷ்டம், நிலவேம்பு, இவைகள் சம எடையாகக் கியாழம்வைத்து கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.

சந்தனத்தூள், நன்னாரிவேர், வெட்டிவேர், கரும்பு, பூசனிக்கிழங்கு, பச்சைபயறு, ஏல்க்காய் இவைகள் சம எடை கியாழம் வைத்து கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.

திரா¨க்ஷ, பற்பாடகம், கொன்றைப்பட்டை, கடுகுரோகிணி,கோரைக்கிழங்கு, கடுக்காய்பிஞ்சு, இவைகள் சம எடை கியாழம் வைத்து கொடுத்தால் மூர்ச்சை, சோ¨க்ஷ, சரீர அனல், தாகம் பிதற்றல், சித்தப்பிரமை முதலியது கூடிய பித்தசுரம் நீங்கும்.

காஞ்சொரிவேர், அதிவிடயம், சீமைநிலவேம்பு, கடுகுரோகணி, ஆடாதோடை, பற்பாடகம், இவைகளை சம எடையாகக் கியாழம் வைத்து அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் ரத்தபித்தசுரம் போகும்.

சிலேத்துமசுர கியாழம் :- ஆடாதோடை ஈர்க்கு, வசம்பு, பிரண்டை, கண்டகத்திரிவேர், சுக்கு, கடுகுரோகிணி, இவைகள் சம எடையாகக் கியாழம்வைத்து திப்பிலிசூரணம் போட்டு தேன்கலந்து சாப்பிட்டால் கோழையுடன்கூடிய கபசுரம் போம்.

கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை ஈர்க்கு, வெற்றிலைவேர் பஞ்சகோலங்கள் இவைகளை கியாழம் வைத்து தேன் கலந்து கொடுத்தால் சூலையுடன் கூடிய சிலேஷ்மசுரம் நீங்கும்.

கண்டங்கத்திரிவேர், சீந்தில்கொடி, சுக்கு இவைகளை கியாழம் வைத்து திப்பிலிசூரணம் போட்டு சாப்பிட்டால் ரஜீணசுரம், அருசி காசம், சூலை, சுவாசம், அக்கினிமாந்தம், பீனசம் இவைகளப் போக்கும்.

கோஷ்டம், பெருங்குறும்பு, வெட்பாலை, பேய்ப்புடல், இவைகளை சமனெடையாக கியாழம் வைத்து மிளகு சூரணம் கலந்து சாப்பிட்டால் சிலேஷ்மசுரம் நீங்கும்.

நெல்லிவற்றல், சீந்தில்கொடி, கொன்றைவேர்ப்பட்டை, வேப்பன் ஈர்க்கு, பேய்ப்புடல், பெருங்குறும்பை, கடுகுரோகணி, கடுக்காய், கண்டங்கத்திரிவேர், மரமஞ்சள், மஞ்சள், இவைகளை சமனெடையாக  கியாழம் வைத்து திப்பிலிசூரணம் தேன் கலந்து சாப்பிட்டால் காசசுவாச சிலேஷ்மசுரம் நீங்கும்.

கண்டங்கத்திரி, கரசனாங்கன்னி, வெள்ளுள்ளி, பூசனி, வசம்பு சுக்கு, ஒமம் இவை சமனெடையாக கியாழம் போட்டு கொடுத்தால் சிலேஷ்மசுரம் நீங்கும்.

சீமைநிலவேம்பு, வேப்பம்பட்டை, திப்பிலி, கிச்சிலிகிழங்கு, சுக்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, சீந்தில்கொடி, சீறியகண்டங்கத்திரி, இவைகளை கியாழம் வைத்து கொடுத்தால் சிலேஷ்மசுரம் நீங்கும்.

கொடிமாதுளைவேர், கடிக்காய்பிஞ்சு, சுக்கு, மோடி, இவைக கள் சமனெடையாக கியாழம் வைத்து அதில் யவாஷாரம் கலந்து சுரம்கண்ட ப்ன்னிரண்டு நாட்களுக்கு கொடுத்தால் சிலேஷ்மசுரம் நீங்கும்.

பேய்ப்புடல், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கடுகு ரோகணி, கிச்சிலிக்கிழங்கு, ஆடாதோடை, சீந்தில்கொடி இவைகளை கியாழம் வைத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சிலேத்துமசுரம் நீங்கும்.

கண்டங்கத்திரிவேர், கொள்ளுக்காய்வேளைவேர், ஆடாதோடை ஈர்க்கு, விஷ்ணுகிரந்தி, சுக்கு, இவைகளை சமனெடையாக கியாழம் வைத்து திப்பிலிசூரணம் கலந்து கொடுத்தால் சிலேத்துமசுரம் நீங்கும்.

வாதபித்தசுரகியாழம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், இலவம்பிசின், வெற்றிலைவேர், கொன்னம்பட்டை, ஆடா தோடை, இவைகளை கியாழம்வைத்து கொடுத்தால் வாதபித்த
சுரம் நீங்கும்.

அதிவிடயம், கடுக்காய்பிஞ்சு, சீந்தில்கொடி, கோரைக்கிழங்கு, நிலவேம்பு, இவைகளை சம எடை கியாழம்வைத்து உட்கொண்டால் வாதபித்தசுரம் நீங்கும்.

பற்பாடகம், சீந்தில்கொடி, கோரைக்கிழங்கு, அதிவிடயம், நிலவேம்பு, இவைகளை கியாழம்வைத்து கொடுத்தால் வாதபித்த சுரம் நீங்கும். இதற்கு பஞ்சபத்திர கியாழமென்றும் பெயர்.

வாதசிலேத்தும சுரகியாழம் 
:- கொன்றைமரப்பட்டை, மோடி,கோரைக்கிழங்கு, கடுகுரோகணி, கடுக்காய்பிஞ்சு, இவைகளை கியாழம்வைத்து கொடுத்தால் வாதசிலேத்துமசுரம் நீங்கும். இதுஆமசூலையைபோக்கி பேதி, தீபனம், ஜீரணம் இவைகளை யுண்டுபண்ணும்.

சிற்றாமுட்டிவேர், குரட்டைவேர், சிறிய கண்டகத்திரிவேர்,பெரிய முள்ளங்கத்திரிவேர், நெருஞ்சிவேர், வில்வவேர், முன்னை வேர், பெருவாகைவேர், நிலபனங்கிழங்குவேர், பாதரிவேர, இவைகள் சமஎடை கியாழம்வைத்து திப்பிலிசூரணம் கலந்து சாப்பிட்டால் வாதசிலேத்துமசுரம் நீங்கும்.

பித்தசிலேத்தும சுரகியாழம் :- வெட்டிவேர், கொத்தமல்லி, நெல்லிப்பட்டை, நிலவிளா, ஈசுரமூலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், சுக்கு இவைகள் சமஎடை கியாழம் சாப்பிட்டால் பித்தசிலேத்துமசுரம் நீங்கும்.

சிகப்பு சந்தனம், தாமரைத்தண்டு, கொத்தமல்லி, சீந்தில்கொடி, வேப்பன் ஈர்க்கு, இவைகளை கியாழம்செய்து உண்டால் பித்த சிலேத்தும சுரம், அனல், தாகம், வாந்தி இவைகளைப் போக்குவ துடன் பசியையும் உண்டாக்கும்.

பேய்புடல் சிகப்பு சந்தனம், பெருங்குரும்பை, கடுகுரோகணி, சீந்தில்கொடி, இவைகள் சமஎடை கியாழம்வைத்து
சாப்பிட்டால் பித்தசிலேத்துமசுரம் நீங்கும்.

தொந்தசுர கியாழம் :- சீந்தில்கொடி, சுக்கு, கோரைக்கிழங்கு,நிலவேம்பு, பேராமுட்டி, சிற்றாமல்லி, அதிமதுரம், கடுக்காய், தானிக்காய், இவைகளை கியாழம்வைத்து கொடுத்தால் தொந்த சுரம் நீங்கும்.

அஜீரணசுர கியாழம் :
- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், சுக்கு, திப்பிலி, மிளகு, மோசடி, ஓமம், வசம்பு, சித்திரமூலம் இவைகளை சமஎடையாக கியாழமிட்டு சாப்பிட்டால் அசீரண சுரம் நீங்கும்.

முறைக்காய்ச்சல் கியாழம் :- போராமுட்டி, நிலவேம்பு, கடுக் காய், தானிக்காய், நெல்லிவற்றல், இரு விதபாலைவேர், சுக்கு சமஎடை கியாழம் வைத்திருக்க முறைசுரம் போம்.

துவாஹிகசுரகியாழம் :- பேய்ப்புடல், கோரைக்கிழங்கு,சுக்கு, தும்மட்டி, சீந்தில்கொடி, பற்பாடகம் இவைகளை சமஎடை கியாழம் போட்டு அதில் திப்பிலிசூரணம் கூட்டி சாப்பிட்டால் இரண்டு நாளுக்கு ஒருதரம் வரும் சுரம் நீங்கும்.

திரியாகிதசுரக்கியாழம் :- காட்டுத்துளசி, திராஷை, சுக்கு,கண்டுபாரங்கி, தும்மட்டிவேர், நெய்ச்சட்டி, சிற்றாமுட்டி, இவைகளை சமஎடை கியாழம் போட்டு சாப்பிட போம்.

சாதர்த்திகசுரக்கியாழம் :- பேய்ப்புடல், செவ்வியம், சுக்கு, துளசி, போரமுட்டி, விஷ்ணுகிரந்தி, வெட்பாலை இவை சமஎடை கியாழம் போட்டு சாப்பிட போம்.

பஞ்சாகிகசுரக்கியாழம் :- போராமுட்டி, சிற்றாமுட்டி, நாக முட்டி, நிலப்பனங்கிழங்கு, பாலை, சீந்தில்கொடி, கடுகுரோகணி மரமஞ்சள், மஞ்சள், இவை சமஎடை கியாழம் போட்டு சாப்பிட போம்.

சகலமுறைசுரங்கட்கும் கியாழம் :- போராமுட்டி, சிற்றாமுட்டி, சீந்தில், நிலவேப்பு, வேப்பன் ஈர்க்கு, சித்திரமூலம், நிலப்பனங்கிழங்கு, சுக்கு, இவைககளை சமனெடையாக கியாழம் வைத்து சாப்பிட்டால் சகல முறைக்காய்ச்சலும் நீங்கும்.

பேய்ப்புடல், வெட்பாலைப்பட்டை, தேவதாரு, திரிபலை,கோரைக்கிழங்கு, திராஷை, அதிமதூரம், ஆடாதோடை
இவைககளை சமனெடையாக கியாழம் வைத்து தேன் கலந்து சாப்பிட்டால் ஒரு நாள் விட்டுவருதல், நான்கு நாள் விட்டு வருதல், முதலிய விட்டு விட்டு வருகின்ற காய்ச்சல்கள் முதலியன யாவுந் தீரும்.

அந்தர்க்கதசுரக்கியாழம் :- பேய்ப்புடல், கடுகுரோகணிநிலவேப்பு, கோரைக்கிழங்கு, தும்மட்டிவேர், பற்பாடகம்
இவை கியாழம் வைத்து கொடுத்தால் அந்தர்க்கசுரம் நீங்கும்.

புராணசுரக்கியாழம் :- திராஷை, சீந்தில்கொடி, நிலவேப்பு நெய்ச்சட்டி, போராமுட்டி, திப்பிலி இவை கியாழம் வைத்து உட்கொண்டால் புராணசுரமென்ற நாட்பட்ட பழைய சுரம் நீங்கும்.

வெலுமசந்தி, சிற்றாமுட்டி, கண்டங்கத்திரிசமூலம், வசம்பு சுக்கு, மரமஞ்சள், மஞ்சள், இவை கியாழம் வைத்து கொடுத்தால் புராணசுரம் நீங்கும்.

ரக்த கதசுர கியாழம் :- தாமரை, நிலநீர்முள்ளி, அமுக்கிறா கிழங்கு, சித்திரமூலம், பேராமுட்டி, சுக்கு, வசம்பு இவை சமஎடை கியாழம்வைத்து உட்கொண்டால் ரக்த கதசுரம் நீங்கும்.

விஷமசுர கியாழம் :- கோரைக்கிழங்கு, சிறிய கண்டங்கத்திரிவேர், சீந்தில்கொடி, சுக்கு, நெல்லிக்காய்த்தோல் இவைகளை கியாழம் வைத்து திப்பிலிச் சூரணம் கலந்துட்கொண்டால் விஷம சுரம் நீங்கும்.

சித்திரமூலம், வெள்ளைப்பூண்டு, வட்டத்திருப்பி, பேய்ப்புடல், வேப்பன் ஈர்க்கு, பற்பாடகம், செவ்வியம், சுக்கு இவைகளை சம எடையாக கியாழம் வைத்து சாப்பிட விஷமசுரம் தீரும்.

நிலவேம்பு, சந்தனத்தூள், சுக்கு, அதிமதுரம், இவை சமஎடை கியாழம் வைத்து சாப்பிட விஷமசுரம் தீரும்.
அறுக்கன்வேர், சித்திரமூல வேர்ப்பட்டை, ஆடாதோடை ஈர்க்கு, நொச்சிவேர், கண்டகத்திரிவேர், சிறுகாஞ்சொறிவேர், சுக்கு, செவ்வியம் இவைகளை சமஎடையாக கியாழமிட்டருந்த விஷமசுரம் தீரும்.

சீதசுர கியாழம் :- அரசன்பட்டை, சுக்கு, வசம்பு, வேப்பன் ஈர்க்கு, பேராமுட்டி இவை சமஎடை கியாழமிட்டருந்த சீதசுரம் போம்.

விஷ்ணுகிரந்தி, சகதேவி, சுக்கு, நிலவேம்பு, பாலைபட்டை இவைகளை கியாழம்வைத்து தேன் திப்பிலிசூரணம் கலந்து சாப்பிட்டால் சீதசுரம் நீங்கும்.

இலந்தை இலை, பேராமுட்டி, சிற்றாமுட்டி, நாகமுட்டி, சுக்கு, பாலைபட்டை, கோரைகிழங்கு, பற்பாடகம் சகதேவி இவைகள் சமஎடை கியாழமிட்டருந்த சீதசுரம் நீங்கும்.

காட்டுத்துளசி, சுக்கு, விஷ்ணுகிராந்தி, தாமரைத்தண்டு, பேராமுட்டி இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து திப்பி லிச் சூரணம் கலந்து சாப்பிட்டால் சீதசுரம் நீங்கும்.

தோஷஹேது சுர கியாழம் :- சித்திரமூலம், வில்வவேர், வெள்ளை உப்பிலாங் கொடிவேர், நொச்சி இலை, சிற்றாமல்லி, நில மல்லி, சுக்கு இவை சமஎடை கியாழமிட்டருந்த தோஷசுரம் போம்.

அந்தர்தாஹ சுர கியாழம் :- அதிமதுரம், சீரகம், குறுவேர் வெட்டிவேர், கோஷ்டம், கொத்தமல்லி, சதாப்பிலை, சுக்கு இவை சமஎடை கியாழம்.

பாதிரிப்பூ, அதிமதுரம், தாமரைத்தண்டு, வெட்டிவேர், சந்தனத்தூள், நெல்லிப்பருப்பு, கோஷ்டம் இவை சமஎடை கியாழம்.
 

மா,அரசு, ஆல், இரளி, காவல், இவைகளின் பட்டை கொழுந்து, முதலியவைகளுடன் அதிமதூரம், சீரகம், இவை
சமஎடை கியாழம் .

விஷமசீதசுரகியாழம் :- சித்திரமூலம், போராமுட்டி, சிற்றாமுட்டி, வட்டத்திருப்பி, ஈசுரமூலி, சுக்கு, பாலைவேர், துளசி வேர்இவை சமஎடை கியாழம் .

தும்பராஷ்டம், அவுரிவேர், நொச்சியிலை, சிற்றாமுட்டி, நிலமல்லி, வசம்பு, சுக்கு இவை சமஎடை கியாழம் .

தோஷசுரக்கியாழம் :- திப்பிலி, மோடி, செவ்வியம், சித்திரமூலம், சுக்கு, இவைகளை சமஎடை கியாழம் விட்டு கொடுக்க தோஷ சுரம் தீரும். இதுதான் பஞ்சலோகக்கியாழம்.

மூன்றுவிதமுட்டிகள், நிலமல்லி, வில்வம், பெரியகண்டங்கத்திரிவேர், சிறிய கிகண்டங்கத்திரிவேர், சுக்கு இவை
சமஎடை கியாழம் .இதுதான் அஷ்டமூலக்கியாழம்.

அஷ்டாதசமூலகியாழம் :- சிறிய கண்டங்கத்திரி, பெரியகண்டங்கத்திரி, முன்னை, சிற்றாமுட்டி, வில்வம், பாதிரி, பெரியபூசினி, சிற்றாமல்லி, நிலமல்லி, சித்திரமூலம், பாலை, அருக்கண் நொச்சி, முருங்கன், கருப்பு, உப்பிலாங்கொடி, வெள்ளை உப்பி லாங்கொடி, இந்த மூலிகைகளை சமஎடை சேர்த்து கியாழம் வைத்து சாப்பிட்டால் தோஷசுரம் நீங்கும்.

சகலசுரக்கியாழம் :- நிலவேம்பு, பற்பாடகம், செவ்வியம்,பிரியங்கணப்பூ, சித்திரமூலம், கடுக்காய்ப்பிஞ்சு, முன்னைவேர், இஞ்சி, சுக்கு இவைகளை சமஎடை கியாழமிட்டருந்த சகல சுரமும் போம்.

பேய்ப்புடல், வெள்ளை உப்பிலாங்கொடி, கண்டங்கத்திரிபூசினி, செருப்படை, அருக்கன்வேர், பாலைவேர், சுக்கு இவை களை சமஎடை கியாழமிட்டருந்த சகல சுரமும் போம்.

கோரைக்கிழங்கு, பற்பாடகம், ஆமணக்குவேர், பிரியங்கணப்பூ, சிறுகீறை, வசம்பு, சித்திரமூலம், சுக்கு இவை
களை சமஎடை கியாழமிட்டருந்த சகல சுரமும் போம்.

கொன்றைப்பழம், சுக்கு, போயாவரைவேர், ஆடாதோடைஈர்க்கு, பேய்ப்புடல், கொத்தமல்லி, பேய்ப்புடல், கோரைக்கிழங்கு இவைகளை சமஎடை கியாழமிட்டருந்த சகல சுரமும் போம்.

நிலவேம்பு, சித்திரமூலம், செவ்வியம், முள்வேலன், சீந்தில்கொடி, விஷ்ணுகிராந்தி, சுக்கு, இவைகளை சமஎடை கியாழமிட் டருந்த சகல சுரமும் போம்.

சந்நியாசசுர கியாழம் :- நிலவேம்பு, திப்பிலி, கடுகுரோகணி, கண்டங்கத்திரிவேர், நெல்லிப்பருப்பு, பேய்ப்புடல், தும்மட்டிவேர்,ுக்கு சமனெடை கியாழமிட்டருந்தவும்.

இராத்திரிசுர கியாழம் 
:- விஷ்ணுகிராந்தி, பாலைவேர், சுக்கு, பேராமுட்டி, சிற்றாமுட்டி, நாகமுட்டி, கடுகுரோகணி, இவை சமனெடை கியாழமிட்டருந்தவும்.

தும்மட்டிவேர், நிலபாலைவேர், சுக்கு, சகதேவிவேர், பாலைவேர், பேராமுட்டி, மிளகு சமனெடை கியாழமிட்டருந்தவும்.

சரபேசுர ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி, நாபி, லிங்கம்,வெண்காரம் இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தால் அரைத்து வஜ்ரமூசையில் வைத்து வாலூகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறியப்பின் சூரணித்து குன்றிஎடை பிரமாணம் திரிகடுகுச் சூரணத்தில் கொடுக்க வாத பித்த கப சந்நிபாத சுரங்கள் குணமாகும்.

நரசிம்ம ரசம் :- சுத்திசெய்த பாதரசம், நாபி, கெந்தி, நேர்
வாளம் இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டு அருக்கன்வேர் கியாழத்தால் மூன்று ஜாமங்கள் அரைத்து டோலாயந்திரத்தில் ஒரு ஜாமம் எரித்து ஆறியப்பின் எடுத்து மறுபடியும் சூரணத்து குன்றி எடை அனுபானத்துடன் கொடுத்தால் சகல சுரங்களும் நிவர்த்தியாகும்.

கருட துவஜ ரசம் :- சுத்திசெய்த நாபி, சுத்திசெய்த ரசம்,சுத்திசெய்த அப்பிரகம், சுத்திசெய்த கெந்தி, சுக்கு, மிளகு, திப்பிலி, லிங்கம், சைந்தலவணம், இலவங்கம், திப்பிலிமூலம் இவைசமஎடை கல்வத்திலிட்டு செருப்பட்டை இலை சாற்றினால் ஒருநாள் முழுதும்அரைத்து அகலிடக்கி சீலைமண்செய்து குக்குடபுடமிட்டு சாங்க சீதளத்தில் எடுத்து பொடித்து இரண்டு குன்றி எடை அனுபானயுக்தமாக கொடுத்தால் சுரம் நிவர்த்தியாகும்.

நாராயண ரசம் :- சுத்திசெய்த இரசம், கெந்தி, சுக்கு, திப்பிலி, மிளகு, சுத்திசெய்த அப்பிரகம், கடுகுரோகணி, சுத்திசெய்த தாளகம் சமஎடையாக கல்வத்திலிட்டு பஞ்சகோல கியாழத்தில் இரண்டு நாள் அரைத்து காசிகுப்பியில் வைத்து சீலைசெய்து பூ புடமிட்டு சாங்க சீதளத்தில் எடுத்து மறுபடியும் நரி, மீன் இவைகள்
பித்தத்தால் இரண்டு நாள் அரைத்து குன்றி எடை பிரமாணம் வெற்றிலை சாற்றில் கொடுத்தால் சகல சுரங்கள், சந்நிபாத சுரங்கள், தோஷங்கள் இவைகள் எல்லாம் நிவர்த்தியாகும்.

வைஷ்ணவீ ரசம் :- சுத்திசெய்த லிங்கம், நாபி, கடுகுரோகணி,  சுக்கு, திப்பிலி, மிளகு, இவைசமஎடை கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தால் ஒரு ஜாமம் அரைத்து பிறகு அந்த கியாழத்தில் துலாயந்திரத்தில் ஒரு ஜாமம் எரிந்து சாங்கசீதளத்தில் இறங்கி இரண்டுகுன்றி பிரமாணம் இஞ்சிரசத்தில் கொடுத்தால் தொந்தசுரங்கள் சந்நிபாதங்கள், புராணசுரங்கள், விஷசுரங்கள், இவைகளெல்லாம் நிவர்த்தியாகும்.

சகலசுரங்களுக்கும்லக்ஷ்மிநாராயணரசம் :- கெந்தி, மயில் துத்தம், வெண்காரம், தாளகம், இவைகள் சுத்தி செய்து சமஎடை யாக எடுத்துக்கொண்டு கல்வத்திலிட்டு வெள்ளைச்சாரணை ரசத்தி னால் மூன்று ஜமங்கள் அரைத்து இந்த ரசத்திலேயே தோலா யந்திரத்தில் ஒரு ஜாமம் எரித்து ஆறிய பிறகு எடுத்து இரண்டு
அரிசி எடை அனுபானத்துடன் அருந்த சகல சுரங்கள் தோஷ சுரங்கள் இவை நிவர்த்தியாகும்.

சகலசுரங்களுக்கும் பூதேசுரரசம் :- சுத்தி செய்த ரசம்,
சுத்தி செய்த நாபி, சுத்தி செய்த கிரந்தி, சுத்தி செய்த நேர்வாளம் சுத்தி செய்த இலிங்கம் இவைகளை சமஎடையாக எடுத்துக்கொண்டு கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தால் அரைத்து பிறகு மீன் பீய்ச்சு நீரினால் ஒர்முறை அரைத்து பிறகு சதுரங்கள்ளிபாலால் ஒருமுறை அரைத்து அரை முதல் ஒரு குன்றி எடை இஞ்சி ரசத்தில் கொடுத்தால் சகல சுரங்களும் அருக்கன் வேர்கியாழத்தால் கொடுத்தால் சகல சந்நிபாதமும் நீக்கிவிடும். பத்தியம் தயிர்சாதம் தாகத்திற்கு மோர் கொடுக்கவேண்டியது.

சகலசுரங்களுக்கும் திருபுராந்தகசுரம் :- சுத்தி செய்த ரசம், சுத்தி செய்த கிரந்தி, சுத்தி செய்த அப்பிரகம், இம்முறையும் சமஎடையாக கல்வத்திலிட்டு கரிசலாங்கண்ணி சாற்றினால் ஒரு நாள்
முழுவதும் அரைத்து மாத்திரை செய்து ஆறவைத்து காசிகுப்பியில் வைத்து குக்குடபுடமிட ஆறிய பிறகு எடுத்து மீன் ஆடு, காட்டுப்பன்றி, இவைகளின் பித்தங்களினால், மூன்று ஜாமங்கள் அரைத்து குன்றி எடை இஞ்சி ரசத்தில் கொடுத்தால் வாத, பித்த சுரங்கள் நீங்கும். மேலும் திரிதோஷசுரம், தொந்தசுரம், இவைகளும் அனுபானபேதங்களில் நீங்கும். பத்தியம் தயிர்சாதம் தாகத்திற்கு பானகம் கொடுக்கவேண்டியது.

காலகண்டரசம் :- சுத்தி செய்த நாபி, சுத்தி செய்த மனோசிலை சுத்தி செய்த ரசம், சுத்தி செய்த கிரந்தி, சுத்தி செய்த வெண்காரம் திப்பிலி, ஊமத்தன்விரை, இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை ரசத்தால் அரைத்து பில்லைத்தட்டி அகலிலடக்கி சதுரங்கள்ளிபாலினால் ஒரு ஜாமம் அரைத்து பிறகு மீன் பித்தத்தினால் அரைத்துலர்த்தி குன்றி எடை அனுபானபேதங்களினால் கொடுத்தால் சகலசுரங்களும் நீங்கும். கரும்பு சாறு கொடுக்கவேண்டியது.

சாம்பவீ ரசம் 
:- சுத்திசெய்த ரசம், கெந்தி, வெங்காரம், சுக்கு கடுக்காய், ஆமணக்கு விரை, நேர்வாளம், கௌரிபாஷாணம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு எலுபிச்சபழச் சாற்றினால் மூன்று நாள் அரைத்து பில்லைதட்டி அகலிலி வைத்து மேலகல்மூடி சீலைமண் செய்து குக்கிடபுடமிட்டு, ஆறிய பிறகு எடுத்து ஆமணக்கெண்ணை யால் அரைத்து மருந்துக்கு பத்தாவது பாகம் மிளகு அதில் பாதிபாகம் நாபியை சேர்த்து மறுபடியும் அரைத்து குன்றி எடை அனிபானங்களுடன் கொடுத்தால் சகல சுரங்கள் நிவர்த்தியாகும்.
தயிர்சாதம் பத்தியம், இளநீர் தாகத்திற்கு கொடுக்கவேண்டியது.

சுரங்களுக்கு பத்திரகாளி ரசம் :- ரசம், நாபி, அப்பிரகம்,சுக்கு, திப்பிலி,மிளகு, கெந்தி, வெண்காரம், கருவூமத்தை விதை, சைந்தலவணம், இவைகள் சமஎடை எடுத்து, சூரணித்து வஜ்ர முசையில் வைத்து வாலூகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து மீன்பித்தத்தில் அரைத்து குன்றி எடை அனு பானங்களுடன் கொடுத்தால் தோஷசுரம் சகல சுரங்கள் நீங்கும்.

புவனேசுவர ரசம் :- கௌரிபாஷாணம், அப்பிரகம், வசநாபி, மனோசிலை, பாதரசம், கெந்தி, நேர்வாளம், இவைகள் சுத்தி செய்தது சமஎடையாக கல்வத்திலிட்டு பாகலிலை சாற்றினால் மூன்று நாள் அரைத்து பில்லைசெய்து அகலில் வைத்து மேலகல்மூடி சிலை மண் செய்து குக்கிடபுடமிட்டு ஆறிய பிறகு எடுத்து மறுபடியும்கல்வத்திலிட்டு இரண்டு ஜாமங்கள் அரைத்து குன்றி எடை இஞ்சி ரசத்திலாவது அல்லது திரிகடுகு கியாழத்திலாவது கொடுத்தால் சகல சுரங்கள் நீங்கும்.

உமாமஹேசுர ரசம் :-பாதரசம், அப்பிரகம், சுத்துசெய்து சமஎடை கல்வத்திலிட்டு ஒருநாள் வெலுமசந்தி கியாழத்தில் அரைத்து தோலாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் காடாக்கினியாய் எரித்து ஆறிய பிறகு எடுத்து மயில், கோழி இவைகளின் பித்தத்தினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து ஒரு குன்றி எடை இஞ்சிரசத்
தில் கொடுத்தால் சகல சுரங்கள் நீங்கும். பத்தியம் கத்திரிக்காய் தயிர்சாத மிடவும்.

உக்கிரசுரங்களுக்கு பிதாமஹாரசம் :- பாதரசம், நாபி, லிங்கம் இவைகள் சுத்தி செய்தது, கடுகுரோகணி, லோகபஸ்பம், தாம் பிரபஸ்பம், எழுகு பஸ்பம், தாளகம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு அறுக்கன் வேர் கியாழத்தில் மிருதுவாகும்படி அரைத்து குளிகைகள் செய்து காசிகுப்பியில் வைத்து சீலைசெய்து வாலுகாயந்
திரத்தில் மிருதுவாக்கினியால் மூன்று ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து குன்றி எடை அனுபான விசேஷமாய் கொடுத்தால் சகல சுரங்கள் நீங்கும்.

சகலசுரங்களுக்கும் பாரதி ரசம் :- வசம்பு, பாதரசம், சந்தணம், அப்பிரகம், நாபி இவை சமஎடை கல்வத்திலிட்டு சிவகரத்தை இலை ரசத்தில் ஒரு நாள் அரைத்து வஜ்ர மூசையில் வைத்து பூப்புட மிட்டு ஊர்குருவி பித்தத்தில் இரண்டு நாள் அரைத்து குன்றி எடை அனுபானத்துடன் கொடுத்தால் சகல சுரங்களும் நீங்கும்.

கல்யாண ரஸம் :- தாளகம், கெந்தி, சங்குசுன்னம் இவை  சமஎடை கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து தோலா யந்திரத்தில் எரித்து ஆறிய பிறகு எடுத்து சூரணித்து ஒரு குன்றி எடை அனுபானங்களுடன் கொடுத்தால் சகல சுரங்களும் நீங்கும்.

விஷமசுரங்களுக்கு பார்கவீரசம் :- சுத்தி செய்த பாதரசம் கெந்தி, இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு அரசம்பட்டை கியாழத்தால் அரைத்து அந்த கியாழத்தில் துலாயந்திரமாக ஒரு ஜாமம் எரித்து ஆறிய பிறகு எடுத்து ஒரு குன்றி எடை மாத்திரைகள் செய்து சர்க்கரை, திப்பிலி, சூரணம் முதலிய அனுபானங்களுடன்
கொடுத்தால் விஷமசுரங்கள், சகல சுரங்களும் நீங்கும்.

தோஷ சுரங்களுக்கு ரசேந்திரரசம் :- பாதரசம், அப்பிரகம், தாம்பிரபஸ்பம், வசநாபி, கெந்தி இவைகள் சுத்தி செய்தது சமஎடை எருக்கன் வேர் கியாழத்தில் அரைத்து மூசையில் வைத்து வாலுகா யந்திரதில் ஒரு நாள் மந்தாக்னியில் எரித்து ஆறிய பிறகு மிருதுவாக சூரணித்து ஒரு குன்றி எடை அனுபான பேதங்களுடன் கொடுத்தால் தோஷசுரங்கள், சந்நிபாத சுரங்கள், நீங்கும்.

தோஷ சுரங்களுக்கு விஸ்வம்பரரசம் :- சுத்தி செய்த ரசம், அப்பிரகம், விஸ்வம், தாளகம், லிங்கம், நாபி இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு செருப்படை கியாழத்தால் இரண்டு நாள் அரைத்து குக்குட புடமிட்டு ஆறிய பிறகு எடுத்து ஆமை, பன்றி, மீன் இவைகள் பித்தத்தினால் மூன்று நாள் அரைத்து குன்றி எடை அனுபானங்களுடன் கொடுத்தால் தோஷசுரங்கள், சந்நிபாத சுரங்கள், தீவிர சுரங்கள், நிவர்த்தியாகும். பத்தியம் இச்சாபத்தியம்.

அர்த்தநாரீசுர ரசம் :
- சுத்தி செய்த ரசம், நாபி, வங்கபஸ்பம் இவை சமஎடைகல்வத்திலிட்டு வெள்ளை அருக்கன்வேர் கியாழத்தால் மூன்று நாள் அரைத்து அந்த கியாழத்திலேயே ஒரு நாள் எரித்து தோலாயந்திரத்தில் மீந்தசாற்றினால் மேற்படி மருந்தை யரைத்துஒரு துளி காதில் விட பாரிச சுரம் நீங்கும்.

அஜீரணசுரங்களுக்கு ஹீதர்சனரசம் :- சுத்தி செய்த கோஷ்டம் கெந்தி, நாபி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லி வற்றல், இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு கரிசரலை சாற்றினால் அரைத்து உளுந்து அளவு மாத்திரை செய்து கொடுத்தால் அசீரண சுரம், சுவாசகாசம் முதலியன குணமாகும். அக்கினிதீபனம் ருசி
இவைகளை யுண்டுபண்ணும்.

சீதசுரத்திற்கு ராமபாணசுரம் :- சுத்திசெய்த லிங்கம், ரசம்,துத்தம் இவை சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தை இலை சாற்றினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து உளுந்தளவு மாத்திரைசெய்து பசும் பாலில் மூன்று நாள் சாப்பிட்டால் சீதசுரம் நிவர்த்தியாகும்.

திரிமூர்த்தி ரசம் :- சுத்திசெய்த துரிசு, பால்துத்தம், எலிபாஷாணம் இவைகள் சமஎடை தேனில் 1 ஜாமம் சுருக்கு கொடுத்து மறுபடியும் பாவக்காயிலைச்சாற்றினா லரைத்து தோலாயந்திரத்தில் ஒரு ஜாமம் எரித்து ஆறியபிறகு எடுத்து ஊமத்தன் இலை சாற்றில் அரைத்து 1-2 அரிசி எடை பசும்பாலில் கொடுத்தால் சீதசுரம் நீங்கும்.

சீதசுரங்களுக்கு சண்டபானு ரசம் :- சுத்திசெய்த பால்துத்தம் 1-பாகம், சுத்திசெய்த தாளகம் 2-பாகம், சிலாக்ஷ¡ரம் 4-பா கம் இவைகளை கல்வத்திலிட்டு காற்றாழைச் சாற்றினால் அரைத்து வஜ்ர மூசையில் வைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து வைத்துக்கொண்டு குன்றி எடை சீரகம் அனுபானத்தில் கலந்து
கொடுக்க சீதசுரம் நீங்கும். பத்தியம் பச்சைபயறு கஞ்சிகொடுக்க வேண்டியது.

சூரியபாவக ரசம் :- சுத்திசெய்த எலிபாஷாணம், கௌரிபாஷாணம், தொட்டிபாஷாணம், துருசு, பால்துத்தம், நேர்வாளம் தாளகம் இவை சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தன் இலை சாற்றினால் அரைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து காட்டுபன்றி பித்தத்தினால் அரைத்து ஒரு குன்றி எடை அனுபானத்துடன் கொடுக்க சீதசுரம் நீங்கும்.

சீத கஜாங்குஷம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்தநாபி 2-பாகம், சுத்திசெய்த துரிசு 3-பாகம், பலகறை 4 பாகம்இவைகளை கல்வத்திலிட்டு ஊமத்தன் இலை சாற்றில்அரைத்து தோலாயந்திரத்தில் எரித்து ஆறியபிறகு எடுத்து சூரணித்து குன்றிஎடை அனுபானத்துடன் கொடுக்க சீதசுரம் நீங்கும்.

சீதப்பஞ்சன இரசம் :- சுத்திசெய்த துரிசு, பால்துத்தம்,மிளகு, பாதரசம், எலிபாஷாணம், சுக்கு இவைகள் சமஎடை கல் வத்திலிட்டு பாகலிலைச் சாற்றினா லரைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து மறுபடியும் மீன்பிச்சியினா லரைத்து குன்றி எடை சர்க்கரை அனுபானத்தில் கொடுத்தால் சீதசுரம் நிவர்த்தியாகும்.

ஆஹிக அஸ்திகத சீதசுரங்களுக்கு பஞ்சமூர்த்திரசம் :-
சுத்தி செய்த நேர்வாளம், எலிபாஷாணம், துருசு, பால் துத்து, தாளகம் இவை சமஎடைகல்வத்திலிட்டு கற்றாழை சாற்றினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து தோலாயந்திரத்தில் ஒரு ஜாமம்  எரித்து ஆறிய பிறகு எடுத்து மீன் பிச்சியால் அரைத்து குன்றியளவு பசும்பாலில் கொடுத்தால் மேற்கூறிய சுரங்கள் நீங்கும்.

முறைக்காய்ச்சல்களுக்கு மஹாசுராங்குச ரசம் :- பாதரசம் 1-பாகம், நீர்விஷம் 1-பாகம், கெந்தி 1-பாகம், ஊமத்தன் விரை 3- பாகம், சுக்கு, திப்பிலி, மிளகு இவைகள் மூன்றும் 12- பாகம் இவை களை சுத்தி செய்து கல்வத்திலிட்டுஎலுமிச்சம்பழச்சாற்றிலும், இஞ்சி ரசத்தாலும் அரைத்து ஒன்றிரண்டு குன்றி எடை உட்
கொண்டால் சகலமுறைக்காய்ச்சல்கள், விஷமசுரங்கள், திரிதோஷ சுரங்கள் நீங்கும்.

ஆஹிக அஸ்திகத சுரங்களுக்கு நவநாதரசம் :- சுத்திசெய்த நாபி, எலிபாஷாணம், மயில்சத்து, பால்துத்தம், ரசம், தொட்டி பாஷணம், வசம்பு, தாளகம், கெந்தி இவைகள் சுத்திசெய்தது சம எடை எடுத்து வெள்ளைப்பூண்டுரசத்தாலரைத்து தோலாயந்திரத்தில்ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து நரி பிச்சியால் அரைத்து ஒரு குன்றி எடை ஆட்டுப்பாலில் கொடுத்தால் மேற்கூறிய சுரங்கள்  நீங்கும். பத்தியம் சர்க்கரைப்பால் நெய் கலந்த அன்னபானத்தை சாப்பிடவேண்டியது. தாகத்திற்கு குளிர்ந்தசலம், இளநீர்
சாப்பிடவேண்டியது.

அஷ்டசுரங்களுக்கு சந்திரகாச ரசம் :- பாதரசம் 2பாகம்சுத்திசெய்த நெல்லிக்காய் கெந்தி 6 பாகம், லிங்கம் 2பாகம்வெண்காரம் 4 பாகம், நாபி 2 பாகம், மனோசிலை 2 பாகம், சுரகாரம் 4 பாகம், ஏலக்காய் 3பாகம், ஜாதிகாய் 2 பாகம், நேர்வாளம் 2 பாகம் இவைகளை சுத்திசெய்து கல்வத்திலிட்டு பழச்சாற்றினால்  கரிசனாங்கன்னி, நொச்சி, வெற்றிலை, இஞ்சி இவைகளின் சாற்றினாலும், திரிபலைக் குடிநீராலும், ஒவ்வொன்றிலும் தனித்த்னியே மூன்று நாழிகை அரைத்து சிறு கடலையளவு மாத்திரை எடுத்துநிழலிலுலர்த்தி அனுபானங்களுடன் கொடுத்தால் எட்டு சுரங்கள் பதிமூன்று சந்நிபாதங்கள் முதலிய யாவும் நீங்கும்.

சகலசுரங்களுக்கு பேதிசுராங்குசம் :- இரசம், லிங்கம்நாபி இவைகள் தனித்தனியே 40 குன்றி எடை அல்லது நிஸ்கம், கெந்தி 2 நிஸ்கங்கள், வெண்காரம் 2- நிஸ்கங்கள், மிளகு 5 நிஸ் கங்கள், நேர்வாளம் 6- நிஸ்கங்கள், அல்லது 1/2 பலம், இவைகள் சுத்திசெய்து கல்வத்திலிட்டு கண்டங்கத்திரி பழச்சாற்றினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து இரண்டு குன்றி எடை மாத்திரை  செய்து நிழலிலுலர்த்தி இஞ்சிரசத்தில் கொடுத்தால் அசீரணமாக
இன்னும் சகல சுரங்கள் நீங்கும்.

நவசுரங்களுக்கு தூமகேது ரசம் :- இரசம், கெந்தி, லிங்கம், கடல்நுரை இவைகள் சுத்திசெய்து சமஎடை கல்வத்திலிட்டு இஞ்சி ரசத்தால் ஒரு ஜாமம் அரைத்து ஒரு குன்றிஎடை இஞ்சி ரசத்தில் கொடுத்தால் நவசுரங்கள் நீங்கும்.

நவசுரே பாங்குச ரசம் :- கெந்தி, வெங்காரம், பாதரசம்,மிளகு இவைகள் சுத்திசெய்து கல்வத்திலிட்டு மீன்பிச்சியால் மூன்று நாட்கள் அரைத்து தக்க அனுபானங்களில் குன்றிஎடை கொடுத்தால் சுரத்தைப் போக்கி வியர்வையை உண்டாக்கும். பத்தியம் கத்தரிக்காயுடன் மோர்கலந்த சாதத்தை இடவேண்டியது.

வாதசுரத்திற்கு பிப்பலாதி சூரணம் :- திப்பிலி, லிங்கம்,நாபி இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு அரைத்து இரண்டு குன்றி எடை தேனில் கொடுத்தால் வாதசுரம் நிவர்த்தியாகும்.

வாதசுர சூரணம் :- திரா¨க்ஷ, பூனைக்காஞ்சொரி, கடுக்காய் பிஞ்சு, கொட்டைப்பாக்கு இவைகள் சமஎடை சூரணித்து வெல்லத்தைச்சேர்த்துக் கொடுத்தால் வாதசுரம் நிவர்த்தியாகும்.

கபசுர சூரணம் :- வெட்பாலையரிசி, கடுகுரோகணி, மரமஞ்சள், சித்திரமூலம், திரிகடுகு, சிறுநாகப்பூ இவைகள் சமஎடை சூரணித்து திரிகடி பிரமாணம் வெந்நீரில் கொடுத்தால் கபசுரம் நீங்கும்.

கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், திப்பிலி இவைகளைச்சமஎடை சூரணித்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் கபசுரம் நீங்கும்.

கபசுரங்களுக்கு பிப்பலாதி சூரணம் :- திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் இவைகள் சமஎடை சூரணித்து அந்தச்சூரணத்துடன் தேன் கலந்து கொடுத்தால் கபசுரமும் நெய்யுடன் கொடுத்தால் காச சுவாசங்களும் நீங்கும்.

பித்தசுர சூரணம் :- ஒரு சிட்டிகை கடுகுரோகணி சூரணத்தில் சிறிது சர்க்கரை கலந்து வெந்நீரில் கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.

விஷமசுரத்திற்கு நிம்பாதி சூரணம் :- நிலவேம்பு, கடுக்காய் பிஞ்சு, கோரைக்கிழங்கு, கண்டங்கத்திரி, கொத்துபுங்கன், சுக்கு, பூனைக்காஞ்சொரி, கடுகுரோகணி, சிறுஆமணக்குவேர், கிச்சிலிக்கிழங்கு, திப்பிலி, பேய்ப்புடல், முள்ளங்கத்திரிவேர், குறுவேர், திப்பிலிமூலம், பற்பாடகம், இவைகள் சமஎடை சூரணித்துக் கொடுத்தால் சகல விஷமசுரங்கள் நிவர்த்தியாகும்.

விஷசுரத்திற்கு சூரணம் :- துளசி இலைச்சாற்றில் மிளகு சூரணத்தையாகிலும் அல்லது தும்பைப்பூ ரசத்தில் மிளகு சூரணத்தையாகிலும் கலந்து கொடுத்தால் விஷமசுரம் நீங்கும். சீரகப்பொடியை வெல்லத்துடன் கலந்து கொடுத்தால் விஷம சுரம், அக்கினி மாந்தம், வாதரோகம் இவைகள் நீங்கும்.

திப்பிலியாதி சூரணம் :- ஒமம், கடுக்காய், பெருங்காயம் சித்திரமூலம், சுக்கு, யவக்ஷ¡ரம், சர்ஜக்ஷ¡ரம், கருஞ்சீரகம், சீரகம் திப்பிலி, திரிபலை, பிடாலவ்ணம், சைந்தலவணம் இவைகளை சம எடை சூரணித்து கொடுத்தால், விஷமசுரம் நீங்கும்.

முறைசுரத்திற்கு நிம்பாதி சூரணம் :- வேப்பம்பட்டை(10) பலம், திரிகடுகு (3)பலம், திரிபலங்கள் (3) பலம், திரிலவணங்கள் (3) பலம், இருகாரங்கள் (5) பலம், ஒமம் (5)பலம், இவைகளை சூரணித்து வெருகடி பிரமாணம் காலையில் சாப்பிட்டுவந்தால் முறை காய்ச்சல்கள் யாவும் நீங்கும்.

சீதசுரத்திற்கு சூரணம் 
:- பாதிரிவேர், முன்னைவேர், இவை களை அரிசியில் கழுவிய நீரால் அரைத்து கொடுத்தாலும், அல்லது சுக்கு கியாழத்தை மிளகு சூரணத்தை கலந்து கொடுத்தாலும் சீதசுரம்
நீங்கும்.

ஜீரகாதிசூரணம் :- சீரகம், வெள்ளைப்பூண்டு, சுக்கு, திப்பிலி, மிளகு இவை சமஎடை வெந்நீரில் அரைத்து சுரத்திற்கு முன்பாகவே சர்க்கரையுடன் கொடுத்தால் சீதசுரம் நிவர்த்தியாகும்.

பத்தியாதி சூரணம் :- கடுக்காய், வெப்பலை இவைகளை சமஎடை சூரணித்து வெல்லத்துடன் கொடுத்தால் விஷம சீத சுரம் நிவர்த்தியாகும்.

தாளிசாதி சூரணம் :- தாளிசபத்திரி (1) பாகம், மிளகு (2) பாகம், சிக்கு (3) பாகம், திப்பிலி (4) பாகம், மூங்கிலுப்பு (5) பாகம், ஏலக்காய்(1/2) பாகம், இலவங்கப்பட்டை(1/2) பாகம், சர்க்கரை (32) பாகம், ருசி அக்கினிதீபனம், இவைகளை யுண்டாக்கி, காச சுவாசகரம், அதிசாரம்,சோபை, வயிறுப்பல், பீலிக கிராணி பாண்டு ரோகம் இவைகளை நிவர்த்தியாக்கும்.

திரிபலாதிசூரணம் :- திப்பிலி, திரிபலை இவைகளை சமஎடை சூரணித்து தேனுடன் கலந்து கொடுத்தால், பேதி
அக்கினிதீபனம் இவைகளை யுண்டாக்கும். காசசுவாசம் சுரம் முதலியன குணமாகும்.
 

லவங்காதி சூரணம் :- இலவங்கம், ஜாதிக்காய், திப்பிலி,இவைகள் வகைக்கி அரைக்கால் பலம் எடையாக சூரணித்து மிளகு சூரண்ம் (2) பலம், சுக்கு சூரண்ம் (4) பலம் கூட்டி மொத்த எடைக்கி சமமாக சர்க்கரை கலந்து கொடுத்தால் பிரபலமான ரோகங்கள் கபசுரம் அருசி, மேகம், குன்மம், சுவாசங்கள், அக்கினிமந்தம், கிறாணிதோஷங்கள் முதலியன நிவர்த்தியாகும்.

தருண சுரங்களுக்கு தனியாதி சூரணம் :- கொத்தமல்லி, இலவங்கம், சுக்கு இவைகளை சமஎடையாக சூரணித்து அந்த சூரணத்தை வெந்நீரில் கலந்து கொடுத்தால் தருணசுரம் நிவர்த்தியாகும்.

கோரோசனாதி சூரணம் :- கோரோசனம், மிளகு, சிற்றரத்தை, கோஷ்டம், திப்பிலி இவைகளை சமஎடையாக சூரணித்து வெந்நீரில் கொடுத்தால் சகல சுரங்கள் நிவர்த்தியாகும்.

சகல சுரங்களுக்கு சிதோபலாதி சூரணம் :- நர்க்கண்டு 1-பலம், மூங்கில் உப்பு 2-பலம், திப்பிலி 1-பலம், ஏலக்காய் 1/2 பலம், இலவங்கப்பட்டை 1/4 பலம் இவைகளை சூரணித்து தேன், நெய் இவைகளுடன் கொடுத்தால் காச சுவாசங்கள், கால் எரிச்சல், கை எரிச்சல், உடல் எரிச்சல், அக்கினிமந்தம், நாவரட்சி, பாரிசசூலை, அருசி, சுரம், ஊர்த்துவகத ரத்தவிகாரம், பித்தம் இவைகளை நாசஞ்செய்யும்.

அஷ்டவித சுரங்களுக்கு பாரங்கியாதி சூரணம் :- கண்டு பாரங்கி, கர்கடகசிங்கி, செவ்வியம், தாளிசப்பத்திரி, மிளகு, மோடி இவைகள் தினுசு 1-க்கு 2-பலம், சுக்கு-6பலம், திப்பிலி, ஆனைதிப்பிலி 2-பலம், இலவங்கப்பூ, இலவங்கப்பட்டை, நாககேசரம், ஏலம், வெட்டிவேர் இவைகள் தினுசு 1-க்கு 1 பலம், இவைகளை சூரணித்து
4-பலம் சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு முறைப்படி அருந்தி வர எட்டுவித சுரங்கள், காசசுவாசங்கள், வீக்கம், சூலை, உதரரோகம் தோஷத்திரயங்கள் இவைகள் எல்லாம் நீங்கும்.

விஷமசுரங்களுக்கு பஞ்சதிக்த கிருதம் :- ஆடாதோடை, வேப்பன், சீந்தில்கொடி, கண்டங்கத்திரி, பேய்ப்புடல் இவைகளின் கற்கத்தை எடுத்து அத்துடன் நெய்யை கலந்து அனவில் வைத்துக்காய்ச்சி லேபனஞ் செய்தால் விஷம சுரங்கள், பாண்டு ரோகங்கள் குஷ்டரோகங்கள் விசர்ப்பி இவைகள் நீங்கும். மூலரோகத்தையும் போக்கும்.

அமிருதாத்திய கிருதம் :- சீந்திகொடி, திரிபலை, பேய்ப்புடல், பூனைகாஞ்சொரி இவைகளின் கியாழத்தில் சமன் நெய்யை கலந்து காய்ச்சினால் அமிருதத்திய கிருதமெனப்படும். இதை உட்கொண்டால் விஷமசுரம், க்ஷயரோகம், அருசி, குன்மம், காமாலை இவைகளை போக்கும்.
 

சுண்டியாதி கிருதம் :- சுக்கு, திப்பிலி, மோடி, செவ்வியம்,சித்திரமூலம், யவாக்ஷ¡ரம் இவைகள தனித்தனி 1பலம் சேர்த்து கியாழம் வைத்து அத்துடன் 12 பலம் நெய், 12 பலம் இஞ்சி ரசம், நீர்மோர் 12 பலம் கலந்து, கிருதபக்குவமாக காய்ச்சி அருந்த விஷம சுரங்கள், ஜீரண சுரணங்கள், வருஷத்திய சுரங்கள் இவைகள் சகல
மும் நீங்கும்.

முறைக்காய்ச்சல்களுக்கு அமிருதஷட்பல கிருதம் :- சுக்கு, செவ்வியம், யாவக்ஷ¡ரம், திப்பிலிமூலம், சித்திரமூலம், திப்பிலி இவைகளை 1 பலமாக இடித்து கற்கம் செய்து அதில் நெய் 12 பலம் இஞ்சிரசம் 12 பலம், தேன் 12 பலம் சேர்த்து முறைப்படி காய்ச்சவும், இதை சாப்பிட்டால் முறைக்காய்ச்சல்கள் சகலமும் குணமாகும்.
தேகபுஷ்டிபலம் அக்கினி தீபனம் இவைகளை உண்டாக்கும்.

ஜீரணசுரங்களுக்கு வாதாதி கிருதம் :- ஆடாதோடை, சீந்தில்கொடி, திரிபலை, கொத்துபுங்கன், பூனைகாய்ஞ்சொறி இவைகள் சமஎடை கியாழம் வைத்து அந்த கியாழத்திற்கு சமன் பசு நெய்யும் இரண்டு பாகம் பசும்பாலை சேர்த்து திப்பிலி, கோரைக்கிழங்கு, திரா¨க்ஷ, சிகப்பு, சந்ந்தணம், தமரைத்தண்டு, சுக்கு, இவைகளை கல்கம் செய்து, மேற்படி திரவத்துடன் சேர்த்து காய்ச்சினால் வாசதி கிருதமெனப்படும், இதை சாப்பிட்டு வந்தால் ஜீரணசுரங்கள் நிவர்த்தியாகும்.

பிப்பலியாதிகிருதம் :- திப்பிலி, ரத்த சந்தணம், கோரைக்கிழங்கு, வெட்டிவேர், கடுகுரோகணி, வெட்பாலை, நெல்லிப்பட்டை நன்னாரிவேர், அதிவிடயம், சித்தாமல்லி, திரா¨க்ஷ, நெல்லி விதைகள் கொத்துபுங்கன், கண்டங்கத்திரி, இவைகள் சமஎடை கற்கம் செய்து அதில் பசு நெய் சேர்த்து காய்ச்ச அது பிப்பிலாது கிருதம்
என்று பெயர். இதை சாப்பிட்டு வந்தால் ஜீரணசுரம் அப்போதே நிவர்த்தியாகும்.

இலிங்கச்செந்தூரம் :- ஒரு பலம் எடையுள்ள லிங்கம் ஒரே கட்டியாக எடுத்து முலைப்பாலில் மூன்று நாள் ஊறவைத்து கழுவி யுலர்த்தி சுத்திசெய்து ஒரு பலம் கற்பூரம், ஒரு பலம் சாம்பிராணி இவையிரண்டையும் அரைத்து எட்டு பாகங்களாக பங்கிட்டு ஒவ்வொரு பங்கையும் இலிங்க கட்டிக்கு கவசம் செய்து கொளுத்தவும். இப்படியே எட்டு பாகங்களையு செய்த பின்பு 10 பலம் குரோசாணி யோமத்தை கொண்டு வந்து ஒரு சட்டியில் ஒரு பிடி யோமத்தைப்போட்டு அதன் மீது இலிங்கப்பட்டியை வைத்து மேலும் பிடி யோமத்தைப் போட்டு அடுப்பிலேற்றி எடுக்கவும். இப்படியே10-பலம் ஓமமும் தீரும் வரையில், லிங்கக் கட்டியானது ஓமத்தி னிடையிலேயே வறுபடும்படிச் செய்து, ஆறினப்பின் லிங்கக்கட்டியை மட்டும் எடுத்து அரைத்து வைத்துக்கொள்க.

இதில் வேளைக்கு 1/4-1/2 குன்றி வீதம் தினம் 2-வேளை இஞ்சிச்சாறு, தேன் முதலியவற்றுடன் கொடுக்க சுரம், சந்நிகளும், திரிகடுகு சூரணத்துடன் தேன்கூட்டிக் கொடுக்க வாதரோகங்களும் திப்பிலி சூரணத்துடன் தேன்கூட்டிக் கொடுக்க அஜீரண அதிசார பேதிகளும் குணமாகும்.

இலிங்க மாத்திரை :- சுத்திசெய்த லிங்கம் பலம்-1, மொட்டு நீங்கிய கிராம்பு பலம்-1, பொரித்த பெருங்காயம் பலம்-1, இவை களைப் பொடித்து கல்வத்திலிட்டு * வெள்ளைப்பூண்டு சாறுவிட்டு ஒரு ஜாமம் நன்கு அரைத்து உளுந்து, மிளகு அளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி பத்திரப்படுத்துக.

இதில் சிறுவர்கட்கு உளுந்தளவு மாத்திரையும், பெரியவர்கட்கு மிளகளவு மாத்திரையுமாக, வேளைக்கு 1-மாத்திரைவீதம் தினம் இரு வேளை தேன் அல்லது தக்க அனுபானங்களில் கொடுத்துவர சுரம், ஜலுப்பு, தலைவலி, காசசுவாசம், வாதசூலை முதலியன குணமாகும்.

பாஷாண பற்பம் :- கற்சுண்ணமும், அப்ளாகாரமும் சமஎடையாக எடுத்து நான்குபங்கு நீர்விட்டுக் கரைத்து ஓர் பானையில் பாதி பாகத்தில் அடங்கும்படிவிட்டு வாய்க்கு துணிகட்டி அதன் மீது சங்குபாஷாணக் கட்டியைவைத்து, பொருத்தமான மேல்சட்டி மூடி பொருந்த வாய்க்கு சீலைமண் செய்து அடுப்பிலேற்றி, முக்கால் பாகம் நீசுண்ட எரித்து, ஆறினபின்பு பாஷாணக்கட்டியை கழுவிஉலர்த்த சுத்தியாகும்.

இவ்வாறு சுத்திசெய்த பாஷாணக்கட்டியை ஓர் அகலில் வைத்து அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து பிரண்டைச்சாறு கொண்டு 4-ஜாமம் சுருக்கு கொடுத்து எடுக்கவும். பின்பு இதைப்பொடித்து கல்வத்திலிட்டு பிரண்டைச்சாறுவிட்டு இரண்டு ஜாமம் அரைத்து உலர்த்தவும். நன்றாய் உலர்ந்தபின்பு மீண்டும் பிரண்டைச்
சாறு விட்டரைத்து உலர்த்தவும். இப்படி ஒன்பதுமுறை செய்து கடைசியில் ஒரே வில்லையாகச் செய்து நன்குலர்த்தி அகலிடக்கிச்சீலைமண் செய்து உலர்த்தி 10-15 விறட்டியால் புடமிட பற்பமாகும். ஆறினபின் அரைத்து பத்திரப்படுத்துக.

இதில் வேளைக்கு 1/4-1/2 அரிசி பிரமாணம் எடுத்து அத்துடன் குன்றிஎடை அன்னபேதிச் செந்தூரமும், ஒரு சிட்டிக்கை வெள்ளை மிளகுச் சூரணமும்சேர்த்து தேனில் மத்தித்து தினம் 2-வேளையாக

* வெள்ளைப்பூண்டை தோல்நீக்கி அம்மிக்கல்லிலிட்டு அரைத்து மெல் லிய சீலையில் தடவி நெருப்பனலில் வாட்டிப் பிழிய சாறு கிடைக்கும்.

மூன்று நாள் கொடுக்க குளிர்சுரம், முறைசுரம், நாட்பட்டசுரம் முதலியன குணமாகும்.

இந்தப்பற்பத்துடன் குன்றி எடை பழைய பற்பமும் ஒரு சிட்டிகை திப்பிலி சூரணமும் சேர்த்து தேனில் அருந்த சுவாசம் காசம், எலிக்கடி விஷம், முதலியவைகளும், காந்தசெந்தூரமும் திரிகடுகு சூரண்மும் கூட்டி தேனில் அருந்த பாரிசவாதம் முதலிய வாதரோகங்களும் குணமாகும். மருந்து சாப்பிடும்போது புளித்தள்ளி இருத்தல் நன்று.

வஜ்ரகண்டிமாத்திரை :- சுத்தி செய்த லிங்கம், 8 வராக
னெடை சுத்தி செய்த இரசசெந்தூரம், 2 வராகனெடை சுத்திசெய்த பூரம், 1 வராகனெடை சுத்திசெய்த வீரம், 4 குன்றி எடை இவை களைப் பொடித்து கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாறு விட்டு இரண்டு ஜாமமும், இஞ்சிச்சாறு விட்டு இரண்டு ஜாமமும், நன்கு அரைத்து பயறளவு மாத்திரைகளாகச் செய்து நிழலிலுலர்த்தி பத்திரப்படுத்துக.

இதில் வேளைக்கு 1 மாத்திரை தினம் 2 அல்லது  3 வேளை திரிகடுகு சூரணத்துடன் கூட்டித் தேனில் கொடுத்து வரசுரம், சன்னி, வாதரோகங்கள் முதலியன குணமாகும்.

பூதசுரத்திற்கு மதூகநசியம் :- இலுப்பை, பிசின், மிளகு,சைந்தவலணம், திப்பிலி, வசம்பு, இவைகள் சமஎடை சூரணித்து நசியம் செய்தால் பூதசுரம் நீங்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, இவைகளை சூரணித்து எட்டு துளசி தளத்துடன் சேர்த்து நசியம் செய்தால் பூதசுரம் நீங்கும்.

தோஷசுரத்திற்கு நசியம் :- ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு விதைகள், மிளகு இவைகளை சேர்த்து நசியம் செய்தாலும், அல்லது தேன் மிளகு இவைகளை சேர்த்து நசியம் செய்தாலும், தோஷசுரம் நிவர்த்தியாகும்.

சைந்தவலணம், திப்பிலி, மிளகு, சுக்கு இவைகளை சூரணித்து அகத்தியிலை சாற்றிலாவது அல்லது முலைப்பாலிலாவது நசியம் செய்தால் தோஷசுரம் நிவர்த்தியாகும்.

சீதசுரநசியம் :- மலைக்காசினிவேர்ப்பட்டை மிளகு, வெள்ளைப் பூண்டு இவைகளை சமஎடை அரைத்து நசியம் செய்தால் சீதசுரமும் முறைக்காய்ச்சல்களும் நீங்கும்.

முறைக்காய்ச்சல் நசியம் :- எருக்கன் இலைப்பாலில் ஒமம், சைந்தவலணம், மிளகு, வெள்ளைப் பூண்டு இவைகளை சமஎடை அரைத்து நசியம் செய்தால் முறைக்காய்ச்சல்கள் நீங்கும்.
 

சாதுர்திகசுரங்களுக்கு ஹிங்கூ நசியம் :- பழைய நெய்யுடன் பெருங்காயத்தை அரைத்து நசியஞ் செய்தால் சாதுர்திக சுரம் நசிக்கும்.

அகத்திகீரைச்சாற்றை நசியஞ் செய்தால் சாதுர்திக முறைக்காய்ச்சல் நீங்கும்.

மூர்ச்சாசுரத்திற்கு அர்திதிகாதி நசியம் :- இஞ்சிரசத்தை நசியஞ் செய்தால் மூர்ச்சைசுரம் நசிக்கும்.

சுரஹர தூபங்கள் :- காட்டுதுளசி, வில்வபிசின், வெலும சந்தி, தர்ப்பை, மஞ்சள், கழுதைபுட்டை, காக்கை இறகு இவைகளை சேர்த்து தூபமிட்டால் சுரங்கள் நீங்கும்.

வெள்ளாள்ளி பொட்டு, ஓமம், பெருங்காயம், நாய்மலம் இவைகளை சேர்த்து தூபமிட்டால் சீதசுரம் நீங்கும்.

மைசாக்ஷ¢, வெள்ளைகடுகு, திப்பிலி, சீரகம், வெலுமசந்தி,எறுக்கன்பூ, தர்ப்பை, ஓமம், பெருங்காயம், கடுக்காய் இவைகளை சூரணித்து விளக்கெண்ணெயுடன் கலந்து தூபம்போட்டால் தோஷங்கள் நீங்கும்.

சுரங்களுக்கு அஜாதிதூபம் :- ஆட்டுமயிர், வசம்பு, கோஷ்டம், நெரிஞ்சல், வேப்பன இலை, தேன் இவைகளை சேர்த்து தூபமிட சுரங்கள் நீங்கும்.

விஷமசுரத்திற்கு வசாதிதூபம் :- வசம்பு, கடுக்காய், இவைகளை சூரணித்து நெய்யுடன் தூபமிட்டால் விஷமசுரம் நீங்கும்.

சகல சுரங்களுக்கு மசூராதூபம் :- சிறுகடலைப் பொட்டை தூபமிட்டால் சகல சுரங்கள் நீங்கும்.

குக்கிலாதி தூபம் :
- குங்கிலியம், வாசனைப்புல், வசம்பு, சர்ஜ்ஜ ரசம், வேப்ப இலை, எறுக்கன் இலை, ரத்த சந்தனம், தேவ தாறு இவைகளை சூரணித்து தூபமிட்டால் சகல சுரங்கள் நீங்கும்.

சாதுர்திகசுரத்திற்கு உலூகபக்ஷதூபம் :- கருப்புசீலை குங் கிலியம், ஆந்தை இறகு சேர்த்து தூபமிட்டால் சாதுர்திக சுரம் நிவர்த்தியாகும்.

சுர அனுபானங்கள் :- சீரகம், சுக்கு, திப்பிலி, மிளகு, நொச்சி கரிசாலை ஆடாதோடை, சீந்தில்கொடி, முருங்கைபட்டை, வெற்றி லைச்சாறு, சர்க்கரை, துளசி, இலவங்கம், வெள்ளைப்பூண்டு, கோரைக்
கிழங்கு இவைகள் சுர அனுபானங்களாகும்.

சுர சிகிச்சை விதிகள் :- தருணசுரத்தில் வாந்தி, லவங்கம், அதிகாலையில், வியர்வை உண்டாக்கல், காரம், கைப்பு, பதார்த்தத்தை கொடுத்தல் முதலியன செய்தல் வேண்டும். சந்நிபாத சுரத்திற்கும் மேற்கூறிய வைகளை செய்யவேண்டியது.

ஆமசுரத்தில் கப நாசன கிருத்தியங்கள், அஞ்செனம், நசியங்கள் கண்டெளதடம், வியர்வை யுண்டாக்கல் கஷாயம், இவைகள் செய்ய வேண்டியது.

மேலும் அஸ்தம் ஸ்தனங்கள், பாதங்கள், கண்டம் இவைகளிடத்திலும், தவடையிலும், வியர்வை யுண்டானால் கொள்ளை வருத்து சூரணித்து வியர்வை யுண்டாகும் இடங்களில் தேய்க்கவேண்டியது.

சுரபத்தியங்கள் :- 60 நாள் பயிறாகும் பழைய அரிசி சாதம், கத்தரிக்காய், முருங்கைப்பிஞ்சு, பாவற்க்காய், மூங்கில் முலைக்கன் மோச்சைக்காய், துவரைக்காய், கீரைக்காய், முள்ளங்கி, இவைகளின் கரிகள், பச்சைப்பயறு, சிறு கடலை கடலை, கொள்ளு, காட்டுப்பயறு இவைகளது தட்டு , சுக்கு, சீந்தில்கொடி, சிறுகீரை, திரா¨க்ஷ, விலாமாதுளை, இலகுவான மருந்து முதலியவைகளைக்கொடுக்கலாம்.

சிறுகீரை, இளமுள்ளங்கி, புடலைங்காய், சீந்தில்கொடி கீரைகள், அரைக்கீரை, சுக்கன் கீரை, ஆட்டுப்பால் கலந்த பாதார்த்தங்கள் இவைகளை காய்கரிகளின் மீது இஷ்டமுடைய சுர நோயாளிக்கு கொடுக்கலாம்..

மேலும் பயறு சிறு கடலை கொள்ளு, காட்டுப்பயறு இவை  களது தட்டுகள், இவைகளின் குழம்புமேல் இஷ்டமுடையவனுக்கு கொடுக்க வேண்டியது.

ஊக்குருவி, புறா, காடை, கவுதாரி, மான், வெள்ளாடு, முயல் இந்த இரைய்ச்சிகள் மாமிசம் தின்கிற சுர நோயாளிக்கு கொடுக்கலாம்..

கோழி, மயில் இந்த இரைய்ச்சியும் கொடுக்கலாம்..
கத்தரிக்காய், தோசக்காய், புடலைங்காய், பாவற்காய், பீர்க்கன் காய், இவைகளை நெய்யில் தாளித்து கொடுக்கலாம்.

ஒரு வருஷத்திற்கு பழகிய அரிசி அன்னத்தையும்கொடுக்கவேண்டியது. ரொட்டி கொடுக்க வேண்டுமானாலும் மேற்படி அரிசி மாவில் தானே செய்து கொடுக்கலம். கோதுமை மாவு ரொட்டி கொஞ்சமாக கொடுக்கவேண்டியது.

ஜீரணசுரபத்தியங்கள் :- பேதி, வாந்தி, அஞ்சனம், நசியம் தூபம், வியர்வை எடுத்தல், மலத்தை வெளிப்படுத்தல், மான், கவுதாரி, மயில், முயல், காடை, கோழி இவைகளது மாமிசம், பசும்பால் அல்லது ஆட்டுப்பால், நெய், கடுக்காய், ஊற்றுக்கீரை, ஆமணக்கு சந்தனம் இவைகள் ஜீரணசுர பீடிதலுக்கு சுகமான தென்று அறியவும்.
ஆகந்துகசுரத்தில் லங்கணம் கூடாது. அபிகாதசுரத்தில் நெய் குடித்தல், அபியங்கம், ரத்தத்தை யெடுத்தல், மதுபானம், மாமிசயுக்தமான போஜனம், முதலிய பத்தியங்கள் செய்யலாம்.

க்ஷதசுரம், விரணசுரம் முதலிய ஆகந்துக சுரங்களில் விரணங்களை அருப்பத்துடன் சிகிச்சையும் செய்தல் நன்று. கோபசுரத்தில் பித்தத்தை சமனம்செய்யும் கிரியைகளைசெய்து மிருதுவான இதவார்த்தைகளைக் கூறவேண்டும்.

கோபசுரத்தில் பித்தசமன சகிச்சையும், காமம், சோகம், பயம், இவைகளினால் உண்டான சுரங்களுக்கு வாதத்தை ஹரிக்கும் கிரியை களையும் செய்யவேண்டியது.

மனோசிந்தையால் உண்டான சுரத்திற்கு மனதை சாந்திசெய்யும்படியான சிகிச்சைகளை செய்யவேண்டியது.
விஷமசுரத்தில் வமனசிகிச்சையும், விரேசனசிகிச்சையும் செய்தல் நன்று.

தருணசுரங்களுக்கு அபத்தியங்கள் :- நீராடுதல், விரேசனம், மைதுனம், கஷாயம், திரிதல், எண்ணெய்விட்டுக்கொண்டு குளித்தல், பகல் நித்திரை, பால், நெய், பருப்பு, இரைச்சி, மோர், கள்ளு, இனிப்பு பதார்த்தங்கள், திரவ பதார்த்தங்கள், அன்னம், விசேஷ காற்று, திரிதல், கோபம் இவைகளைத் தருணசுரரோகி விட்டுவிட வேண்டியது.

சகலசுரங்களுக்கு அபத்தியங்கள் :- வாந்திசெய்தல், குச்சியினாயில் பற்களை சுத்திசெய்தல், விரோதமான பதார்த்தங்கள் சாப்பிடுதல், மிகவும் தாகத்தை உண்டாக்கும் பதார்த்தங்கள், கெட்டஜலம், காரம்,
புளிப்பு, கீரைகறிகள், பாசிப்பிடித்த ஜலம், தாம்பூலம், தருபூசனி பழம், பலா, அபத்திய மீன்கள், இலுப்பைக்கட்டி, புதிய தானியங்கள் மாவால்செய்த பக்ஷணங்கள், புஷ்டியை யுண்டாகும் பதார்த்தங்கள் இவைகளை சுரரோகபீடிதன் விடவேண்டியது.

அதிக சிரமத்தையுண்டாக்கும் தொழில்கள், மாதர்புணர்ச்சி, நீராடுதல், கிரீடைகள் முதலியது செய்யக்கூடாது.
  

Post Comment

0 comments:

கருத்துரையிடுக