கபத்தால் உண்டாகிய மேகங்களுக்கு லோத்திராதிகியாழம் :-
கடுக்காய், காய்பலம், கோரைக்கிழங்கு இவைகளின் கியாழத்திலாவது, வாய்விளங்கம், வட்டத்திருப்பி, மருதம்பட்டை, பூனைக்காஞ்சொரிவேர், இவைகள் கியாழத்திலாவது, இலவங்கப்பட்டை, மருதம்பட்டை, ஓமம் இவைகளின் கியாழத்திலாவது, வாய்விளங்கம், மரமஞ்சள், கோரைக்கிழங்கு, இலவம்பட்டை இவைகள் கியாழத்திலாவது, தேன் கலந்து சாப்பிட்டால் கபபிரமேகங்கள் நீங்கும்.
வேறு முறை :- மரமஞ்சள், வாய்விளங்கம், கருங்காலி,சக்கை, தவவிருக்ஷம் இவைகளின் கியாழத்திலாவது, தேவதாரு, கோஷ்டம், மருதம்பட்டை, சந்தனம் இவைகளின் கியாழத்திலாவது, மரமஞ்சள், கூரநெல்லிவேர், திரிபலை, வட்டத்திருப்பிவேர் இவைகளின் கியாழத்திலாவது, ஓமம், வெட்டிவேர், கடுக்காய், சீந்தில்கொடி இவைகளின் கியாழத்திலாவது, நாவல்சக்கை, நெல்லி தோல், சித்திரமூலம், வாழைக்கிழங்கு இவைகளின் கியாழத்திலா வது தேன் கலந்து சாப்பிட்டால் கிரமமாக கபத்தினால் உண்டான ஜலப்பிரமேகம், இக்ஷ£மேகம், சாந்திரமேகம், சுராமேகம், பிஷ்ட மேகம், சுக்கிலமேகம், சிகதாமேகம், சீதமேகம், சனைர்மேகம், லாலாமேகம் இந்த பத்து மேகங்கள் நிவர்த்தியாகும்.
பித்தமேக சாமானிய கியாழம் :- வில்வவேர்ப்பட்டை, மருத வேர்ப்பட்டை, வெட்டிவேர், ரத்தசந்தனம் இவைகளின் கியாழத்திலாவது, வேப்பன் ஈர்க்கு, குறுவேர், நெல்லிவற்றல், கடுக்காய் இவைகளின் கியாழத்திலாவது, நெல்லிவற்றல், மருதம்பட்டை, வேப்பன் ஈர்க்கு, வெட்பாலை இவைகளின் கியாழத்திலாவது, கரும் அல்லித் தண்டு, சீரகம், மஞ்சள், மருதம்வேர்பட்டை இவை
களின் கியாழத்திலாவது தேன் கலந்து சாப்பிட்டால் பித்தமேகங்கள் நீங்கும்.
வேறு முறை :- வெட்டிவேர், லோத்திரம், சந்தனம், இவை களின் கியாழம், வெட்டிவேர், நெல்லிவற்றல், கோரைக்கிழங்கு, கடுக்காய் இவைகளின் கியாழம், பேய்ப்புடல், வேப்பன் ஈர்க்கு, நெல்லிவற்றல், சீந்தில்கொடி இவைகளின் கியாழம், கோரைக் கிழங்கு, கடுக்காய், ஆமணக்கு வேர் இவைகளின் கியாழம், லோத்
திரம், குறுவேர், மரமஞ்சள், காட்டாத்திப்பூ இவைகளின் கியாழம், மன்ஜிஷ்டமேகம், ஹரித்திராமேகம், நீலமேகம், க்ஷ¡ரமேகம், கால மேகம், ரத்தமேகம் இந்த மேக ரோகிகளுக்குக் கொடுத்தால் நிவர்த்தியாகும்.
கபவாத மேகத்திற்கு கியாழம் :- கடுக்காய், தேவதாரு, நன்னாரி, லோத்திரம், ரத்தசந்தனம், வெட்டிவேர் இவைகள் கியாழம் போட்டு அதில் தேன் அல்லது மஞ்சள் சூரணமாவது கலந்து சாப்பிட்டால் மேகங்கள் நிவர்த்தியாகும்.
பித்தவாத மேகத்திற்கு கியாழம் :- வாய்விளங்கம், மஞ்சள், மரமஞ்சள், கருங்காலி, மரசக்கை, வெட்டிவேர், கொட்டைப்பாக்கு இவைகளின் கியாழத்தை காலையில் சாப்பிட்டுவந்தால் பித்தவாத மேகங்கள் நிவர்த்தியாகும்.
திரிபலாதி கியாழம் :- திரிபலை, மரமஞ்சள், கோரைக்கிழங்கு, இவைகளின் கியாழத்திடன் தேன் கலந்தாவது அல்லது சீந்தில் கொடி சுரசத்தில் தேன் கலந்தாவது சாப்பிட்டால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.
திரிபலாதி கியாழம் :- திரிபலை, மரமஞ்சள், தேவதாரு, பாப் பாரமுள்ளி, கோரைக்கிழங்கு இவைகளின் கியாழத்தில் மஞ்சள் தூள் தேன் கலந்து சாப்பிட்டால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.
பலாசபூ கியாழம் :-
கர்கட்யாதி சூரணம் :- வெள்ளரிக்காய்விரை, இந்துப்பு, திரி பலை இவைகளை சமஎடையாய் சூரணித்து, வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் மூத்திரநிரோதனம் நிவர்த்தியாகும்.
திரிபலாதி சூரணம் :- கடுக்காய் 1 பகம், தானிக்காய் 2 பாகம், நெல்லிக்காய் 4 பாகம் இவைகளை சூரணித்து நெய்தேன் கலந்து சாப்பிட்டால் மேகம், வெள்ளை, வெட்டை, நேத்திரரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.
தலபோடகசூரணம் :- ஆவாரைசமூலம், நிழலிலுலர்த்திச் சூரணித்து, சூரணத்திற்கு பேர் பாதி பாகம், நெல்லிக்காய்ச்சூரணம் நெல்லிக்காய்ச் சூரணத்திற்கு பேர் பாதி பாகம், மஞ்சள், மர மஞ்சள் இவைகள் சூரணம் இவைகள் எல்லாம் ஒன்றாக கலந்து தேனுடனாவது அல்லது மோருடனாவது சாப்பிட்டால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.
சிலாஜித்துச்சூரணம் : - ஏலக்காய், சுத்திசெய்த சிலாஜித்து சுத்திசெய்த ஹேமமாஷிகம், அதிமதூரம், திரிகடுகு, வாய்விளக்கம், திரிபலை இவைகளை சமஎடையாய் எடுத்துச் சூரணித்து, அந்தச்சூரணத்திற்குச் சமம் ஆவாரங்கொட்டை சூரணத்தை கலந்து 1/2 பலம் விகிதம் தேனுடன் சாப்பிட்டால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.
வெகு மூத்திரத்திற்கு தாலேசுவர ரசம் :- இரசபஸ்பம், வங்கபஸ்பம், லோஹபஸ்பம், அப்பிரகபஸ்பம், இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து தேன் விட்டு அரைத்து 2 குன்றி எடைமாத்திரை செய்து வைத்துக் கொள்ளவேண்டியது. இதில் ஒருமாத்திரை தேன் அனுபானத்துடன் சாப்பிட்டால் வெகு மூத்திரம்
சமனமாகும்.
சகலமேகங்களுக்கு வங்கேசுர ரசம் :- சுத்தரசம்1, சுத்த கெந்தி 1, வங்கபஸ்பம் 2 இவைகளை யொன்றாகச்சேர்த்து அரைத்து 2 குன்றி எடை தேன் சர்க்கரையுடன் சாப்பிடவும். பத்தியம் உப்பு புளிப்பு இவைகள் ஆகாது. கடும் பத்தியாமாக யிருக்க வேண்டியது.
பிரமேஹ பத்தரசம் :- ரசபற்பம், கசாந்தபற்பம், லோஹ பற்பம், சிவாஜித்துவபற்பம், துத்தபற்பம், லோஹமாஷிகபற்பம், மனோசிலைபற்பம், சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், தானிக்காய் நெல்லிப்பருப்பு, விலாம், மஞ்சள் இவைகள் யாவையும் சமஎடையாகச் சேர்த்து சூரணித்து கரிசனாங்கண்ணி சாற்றினால் 30 நாள்
அரைத்து உலர்த்தி தேன் அனுபானத்துடன் 2,3 குன்றி எடை மருந்தை கொடுத்தால் சமஸ்தை மேகங்கள் நிவர்த்தியாகும்.
மஹாநிம்ப பீஜங்கள்-6 சூரணித்து 1-பலம், அரிசி கழிநீரில் கலந்து 1/8-பலம் நெய் கலந்து சாப்பிட்டால் வெகு காலமாக யிருக்கும் மேஹங்கள் நிவர்த்தியாகும்.
ஹரிசங்கர ரசம் :- இரச பஸ்பம், அப்பிரபஸ்பம் இவைகள் சமஎடை நெல்லிக்காய் ரசத்தில் 7-நாள் அரைத்து சேவித்தால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.
மேகநாத ரசம் :- இரசபற்பம், காந்தபற்பம், கெந்தி, எழுகு பற்பம், ஹேமமாக்ஷ¢கபற்பம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிப்பருப்பு, சிலாசத்து, மனோசிலை, மஞ்சள், விலாம் இவைகளை சமஎடையாகச் சூரணித்து கரசனாங்கண்ணி இரசத்தில் 21-நாள் அரைத்து 2-3 குன்றிஎடை தேனுடன் கொடுத்தால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.
இலகுசந்திரோதய ரசம் :- அப்பிரகபற்பம், கெந்தி, பாதரசம், வங்கபற்பம், ஏலக்காய், சிலாஜித்து இவைகளை சமஎடையாகச் சூரணித்து வாழைக்கிழங்கு ரசத்தைவிட்டு இரண்டு நாள் (இரவும் பகலும்) அரைத்து வைத்துக்கொள்க. இதை அனுபான விசேஷ மாக கொடுத்தால் 20-மேகரோகங்கள், காமாலை, பித்தம் இவைகள் சூரியனைக்கண்ட இருளைப்போல மறைந்துவிடும். இதற்கு இங்கு சந்திரோதய மென்றுபெயர். இச்சாபத்த்யம் எண்ணை கடுகு வாயு பண்டம் மீன் முதலியது ஆகாது.
வங்ககேசுர ரசம் :- சுத்திசெய்த ரசம்-1, வங்கபற்பம்-3, சுத்தி செய்த கெந்தி-3 இவைகளை கல்வத்திலிட்டு கற்றாழை ரசத்தினால் ஒருநாள் அரைத்து மாத்திரைகள் செய்து காசிகுப்பியில் வைத்து சீலைமண் செய்து வாலுகாயந்திரத்தில் காடாக்கினியால் ஒருநாள் எரித்து ஆறியபிறகு எடுத்து திப்பிலி சூரணம், தேன் இந்த அனு பானத்துடன் சாப்பிட்டு பால்சாதம் சாப்பிட்டு உப்பில்லாத பத்தி யத்துடனிருந்தால் சகல மேகங்களும் நிவர்த்தியாகும்.
மேஹகுஞ்சர கேசரீரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபற்பம், லோஹபற்பம், ஈயபற்பம், வங்கபற்பம், சுவர்ணபற்பம், வஜ்ரபற்பம், முத்துபற்பம் இவைகளை சமஎடை யாக கல்வத்திலிட்டு தண்ணீர்விட்டான் கிழங்கு ரசத்தினால் அரை த்து பில்லைசெய்து உலர்த்தி மடக்கில்வைத்து மேல் மடக்கு மூடி காட்டு விரட்டியால் நாலுபுடமிட்டு, ஆறியபிறகு எடுத்து கல்வத்தி லிட்டு அரைத்து குப்பியில்வைத்து 2, 3 குன்றிஎடை சாப்பிட்டு பிறகு குளிர்ந்த ஜலம் சாப்பிடவேண்டியது. இம்மாதிரியாக ஒரு மாதகாலம் சாப்பிட்டுவந்தால் 18-வித பிரமேஹங்கள் நீங்கும். வீரியம், பலம், காந்தி, மேனி, அக்கினிதீபனம் இந்திரிய விருத்தி இவைகள் உண்டாகும்.
பஞ்சலோஹ ரசாயனம் :- அப்பிரகபற்பம் 1 பாகம், லோஹ பற்பம் 2 பாகம், நாகபற்பம் 3 பாகம், வங்கபற்பம் 4 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு ஆவாரைசமூலம், நிலப்பனை, தண்ணீவிட்டான் கிழங்கு, சந்தனம் இவைகளை கியாழங்களினால் தனித்தனி ஒவ்வொரு சாமம் அரைத்து கட¨லாளவு மாத்திரைகள் செய்து
காலையில் ஒரு மாத்திரையை வெண்ணையுடன் அருந்தி வாகு அரிசி, புடலங்காய், சிறுகீரை, சர்க்கரைவர்த்திக்கிழங்கு, பொன்னாங்கண்ணிக் கீரை, பச்சைப்பயறு, வாழைக்கச்சல் இவைகளை
சாப்பிட்டால் சகலமேகங்கள், கிரஹணிதோஷம், மூலவியாதி, மூத்திர கிருச்சரம், மூத்திர அடைப்பு, காமாலை, பாண்டு, சோபை, அபஸ் மாரம், க்ஷயம், ரத்தகாசம், இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
மஹாவங்கேசுர ரசம் :- வங்கபற்பம், அப்பிரகபற்பம், காந்த பற்பம், ஆவாரம்பூ இவைகள் சமஎடையாகச் சூரணித்து கற்றாழை ரசத்தினால் ஏழு நாள் அரைக்கவும் இதை சாப்பிட்டால் 20 மேகங்கள், மூத்திரகிருச்சரம், சோமரோகங்கள், பாண்டுரோகம், அஸ்மரீ ரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.
வசந்தகுசுமாகர ரசம் :- சுவர்ணபற்பம் 2 பாகம், வெள்ளி பற்பம் 2 பாகம், நாகபற்பம் 3 பாகம், வங்கபற்பம் 3 பாகம், லோஹபற்பம் 3 பாகம், பாதரசபற்பம் 4 பாகம், அப்பிரகபற்பம் 4 பாகம், பவழபற்பம் 4 பாகம், முத்துபற்பம் 4 பாகம், இவைகள் யாவையு கலந்து கல்வத்திலிட்டு, பசும்பால், கரும்புரசம்,ஆடாதோடை இலைரசம், சந்தனம், குருவேர், வெட்டிவேர், மஞ்சள், வாழைக்கிழங்கு தனித்தனி இவைகளின் கியாழங்கள், தாமரைப்பு ரசம்,இவைகளால் ஏழு நாட்கள் அரைத்து பிறகு கஸ்தூரி 1 பாகம் கலந்து அரைத்து வைத்துக் கொள்க. இதை தேன் சர்க்கரை இந்த அனுபானத்துடன் 2 குன்றி எடை சாப்பிட்டால் காசரோகம் மேல்மூச்சு, துஷ்டரத்தம், விஷம் பாண்டுரோகம், காசரோகம், மூத்திரகாதம், அஸ்மரீரோகம் இவைகளை நாசமாக்கும். சர்க்கரை சந்தனம் இவைகளின் சூரணத்துடன் கொடுத்தால் ஆமல பித்தம் நாசமாகும். தேகவலிவு, காமம், புஷ்டி, ஆயுசு, புத்தி புருஷர்களுக்கு சந்தானத்தை உண்டாக்கும். சாமர்த்தியம், காந்தி பலம், காமோத்தீபனம் இவைகளை உண்டுபணும். இந்த ஒளஷத்தை சாப்பிட்டு தகுந்தாற்போல் ஆகாரத்தை சாப்பிட்டு வந்தால் அளவு கடந்த தாதுவிரித்தியை உண்டாக்கும்.
ஜலஜாமிருக ரசம் :- தவஷீரி, சிலாசித்துபற்பம், வங்கபற்பம் சீந்தில் சர்க்கரை, ஆவாரைவிரை இவைகளை கல்வத்திலிட்டு வெள்ளைப் பூசினிக்கிழங்கு ரசம், பால்கீரை ரசம் இவைகளால் மூன்றுநாள் அரைத்து பணவெடை கற்கண்டுடன் சாப்பிட்டால் மேக கிருச்சிரங்கள் நிவர்த்தியாகும்.
மேஹாந்தக ரசம் :- இரசபற்பம் 3-பாகம், சுவர்ணபற்பம் 4-பாகம், வெள்ளிபற்பம், எழுகுபற்பம், தாம்பிரபற்பம், நாகபற்பம், வைகிறாந்தபற்பம், அப்பிரகபற்பம், சிலாசத்துபற்பம், கெந்திசூரணம் வகைக்கு 3-பாகம் இவைகளை எல்லாம் சுபமுகூர்த்தத்தில் கல் வத்திலிட்டு திரிபலை கியாழத்தினால் அரைத்து மாத்திரைசெய்து நிழலிலுலர்த்தி மூன்றுபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து வெட்டிவேர், சந்தனம் இவைகளின் கியாழத்தினால் நான்கு ஜாமம் அரைத்து 4-குன்றிஎடை சர்க்கரை, தேன் இவைகளுடன் சாப்பிட்டால் மது கம், இக்ஷ¢மேகம், தாகம், தாபம், உதகமேகம், சுக்கிலமேகம், லாலாமேகம், தந்திமேகம், க்ஷயமேகம், வாதமேகம், காசங்கள் சுவாசங்கள், அங்கதாகம், சிரோதாகம், நானாவித ரோகங்கள் நிவர்த்தியாகும். இதை மலடி சாப்பிட்டால் புத்திரவதியாவாள். வீரியவிருத்தி, பலம், புஷ்டி, காந்தி இவைகளை யுண்டாக்கும்.
மேஹமிருகாங்க ரசம் :- சுத்திசெய்த பாதரசம், கெந்திவங்கபற்பம், கஸ்தூரி, லிங்கம், கொத்தமல்லி, குங்குமப்பூ, நெல்லி வற்றல், ஏலக்காய், திரிகடுகு, கோரைக்கிழங்கு, பச்சைகற்பூரம் இவைகளை சமஎடையாகச் சேர்த்து சந்தனத்தூள் கியாழத்தினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து 2-குன்றிஎடை அனுபானயுக்தமாக கொடுத்தால் இரத்த மூத்திரம், சர்வமேகங்கள் நிவர்த்தியாகும்.சர்க்கரை, நெய் இந்த அனுபானத்துடன் கொடுத்தால் மஹாதாக ரோகம் நிவர்த்தியாகும்.
மேஹகஜசேகரீ ரசம் :- அப்பிரகபற்பம், காந்தபற்பம், எழுகு பற்பம், இரசபற்பம், இந்துப்பு, நாகபற்பம், வங்கபற்பம், மண்டூர செந்தூரம் இவை யாவும் சமஎடைகள், இவைகள் யாவற்றிற்கும் சமஎடை ஆவாரைவிரைச்சூரணம். இவைகளை யொன்றாய்கலந்து கடுக்காய், தானிக்காய், நெல்லிப்பருப்பு, ஆவாரைசமூலம், தேத்தான் கொட்டை இவைகளை தனித்தனி கியாழம்வைத்து இந்தக் கியாழங்களினால் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கியாழத்தினால் அரைத்து பசு மோரில் 3-குன்றிஎடை கொடுத்தால் இருபது மேகங்கள், மூத்திர காதம் இவை யாவும் நாசமாகும்.
நாரிகேள ரசாயணம் :- தேங்காய்நீர், பசும்பால், பூசினிக்காய் ரசம், தண்ணீர்விட்டான்கிழங்குரசம், பொன்னாங்காணி இலை ரசம், நெல்லிக்காய் ரசம், கரும்வாழைரசம், நிலப்பனைரசம், வாழைப்பழ
ரசம், அழவனைரசம், நெய் இவைகள் வகைக்கு 16-பலம் எடையாய்ச்சேர்த்துக் காய்ச்சி அதில் மஞ்சிஷ்டி, கோஷ்டம், கிரந்திதகரம், ஜாதிக்காய், குறுவேர், சந்தனம், ஏலக்காய், இலவங்கம், அதிமதுரம், தக்கோலம், கிச்சிலிக்கிழங்கு வெட்டிவேர், பற்பாடகம், கோரைக் கிழங்கு, தாமரைத்தண்டு, நன்னாரிவேர், குடச்சப்பாலை, இவைகள் வகைக்கு 4 பலம் சூரணீத்து 10 பலம் சர்க்கரை கலந்து ரசாயன பாகமாய் சமைத்து சாப்பிட்டால் சோமரோகம், பிரமேகம், மூத்திர கிருச்சரம், சரீரதாபம், இவைகள் நிவர்த்தியாகும். மெலிந்த மனிதன் புஷ்டியுளவனாவான்.
சைலூலாதி ரசாயனம் :- வில்வவேர், அதிமதூரம், திரா¨க்ஷ இவைகளை வகைக்கு 21 பலம் இடித்து 2 மரக்கால் ஜலத்தில் கொட்டி, எட்டில் ஒரு பாகம், மீறும்படியாய்ச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் பசுநெய் 1 வீசை, கற்கண்டு 1 வீசை, சேர்த்து மந்தாக்கினியால் பக்குவமாய் சமைத்து அதில் சந்தனம் ரத்தசந்தனம், கிறாம்பு, கொத்தமல்லி, சிறுநாகப்பூ, கிச்சிலிக் கிழங்கு, இலவங்கப்பத்திரி, அதிமதூரம், ஜாதிக்காய்,
திரிகடுகு, திரா¨க்ஷ, பேரிச்சம்பழம், குருவேர், வெட்டிவேர்
இவைகள் வகைக்கு 2 பலம் சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து அத்துடன் கலந்து ஆறிய பிறகு 20 பலம் தேன் கலந்து காயளவு சாப்பிட்டு வந்தால் ரத்தமேகம், சுராமேகம், முதலிய 20 மேகங்கள் மேகத்தினால் உண்டான தாகம், பெரும்பாடுரத்தபித்தம், ருதுசூலை, கைகால் உழைச்சல், விரணம், கிரந்தி வாதகாசங்கள், மூர்ச்சை, வித்திரதி, 20 க்ஷயரோகங்கள் வாய், நாக்கு, கண்டம், இவைகள் உலரல் நிவர்த்தியாகும்.
மதுக்கனஹீ ரசாயனம் :- திரிபலை, திரிகடுகு, திரிசாதம் ஓமம், குராசானி ஓமம், சித்திரமூலம், சீரகம், தும்பராஷ்டம் கண்டுபாரங்கி, திப்பிலி, செவ்வியம், கொத்தமல்லி, கடுகு, கருஞ் சீரகம், சடாமாஞ்சி, கோஷ்டம், வெட்டிவேர், இவைகளுக்குச் சமம் பரங்கிச்சக்கை சூரணம் சேர்த்து 30 பலம் சர்க்கரையை நீரில் கரைத்து கடாயிலிட்டு அடுப்பிலேறி எரித்து பாகுபதமாய் காய்ச்சி அதில் மேல் சொல்லிய சூரணத்தை கலந்து பசும்நெய் சேர்த்து பக்குவமாய் லேகியம்போல் சமைத்து அதில் 16 பலம் தேன் கலந்து சாப்பிட்டால் மேகபைத்தியாவாதம், குஷ்டங்கள் சூலை, குன்மம், இவைகளை நிவர்த்திக்கும். சப்ததாதுவிருத்தி தீபனம், காந்தி, சந்தோஷம் இவைகளை உண்டாக்கும்.
மேகத்திற்கு சிக்குரு புஷ்ப ரசாயனம் :- ஐந்து சேர் முருங்கைப்பு, 20 சேர் பசும்பாலில் போட்டு நாலில் ஒரு பாகம் மீறும் படியாகச் சுண்டக்காய்ச்சி அதில் நிலப்பூசினிக்கிழங்கு ரசம், வாழைப்பழரசம், தேங்காய்ச்சலம், நிலப்பனங்கிழங்குரசம், இவைகள் வகைக்கு 16-பலம், 16-பலம் சர்க்கரை, 12-பலம் பசும்நெய்,
கலந்து பக்குவமாக சமைத்து அதில் திரா¨க்ஷ, கர்சூரக்காய், ஏலக்காய், இலவங்கம், கெஞ்சா, ஓமம், அபினி, போஸ்தக்காய், பூசக்கரைகிழங்கு, கெசகெசா, சுக்கு, திப்பிலி, மிளகு, சாதிக்காய், சாதிப்பத்திரி, மதனக்காமபூவிரைகள், அசரன்விரை, நீர்முள்ளி விரை, முருங்கைவிரை இவைகளை தனித்தனி 1-தோலா விகிதம் சூரணித்துப் போட்டு லேகியம்போல் செய்து ஆறியபிறகு தேன் 12-பலம் கலந்து காலையில் கடுக்காயளவு சாப்பிட்டால் மேக்ரோகங்கள், வெகுமூத்திரம், மூத்திர கிருச்சிரம், பித்த மூத்திரம், இவைகள் நிவர்த்தியாகும். இந்திரிய தம்பனம், தேகபுஷ்டி, வீரிய விருத்தி இவைகளை உண்டாக்கும்.
மேகங்களுக்கு சனகயோகம் :- மஞ்சள், மரமஞ்சள், திரிபலை, இவைகளை கல்கஞ்செய்து மண்பாண்டத்தில் போட்டு மூன்று நாள் வெய்யில்வைத்து பிறகு அதில் ஒரு கவளம் கடலையை மூட்டை கட்டி துலாயந்திரத்தில் ஒரு இராபகல் வைத்து எறித்து பிறகு அதை எடுத்து பிரதிதினம் கிரமவிருத்தியாக சாப்பிட்டு வந்தால்
அசாத்திய மேகங்கள் நிவர்த்தியாகும்.
அங்கோலியாதி யோகம் :- அழிஞ்சில் நெல்லிவற்றல், மஞ்சள், இவைகளைச் சூரணித்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் 20-மேகஙகள் நிவர்த்தியாகும்.
சிலாஜித்து யோகம் :- சிலாஜித்து பற்பத்தை சர்க்கரை பால் கலந்து காலையில் பிரதிதினம் ஒருவேளை மாத்திரமாக 21-நாள் சாப்பிட்டால் சகல மேகரோகங்கள் நிவர்த்தியாகும்.
சுவர்ணமாக்ஷ¢க பஸ்பயோகம் :- பொன்னிமிளை பற்பத்தில் தேன் கலந்து சாப்பிட்டால் மேகங்கள் நீங்கும். சீந்தில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பித்தமேகம் நிவர்த்தியாகும்.
திரிபலாதி யோகம் :- திரிபலை, மூங்கில் இலை, கோரைக்கிழங்கு, வட்டத்திருப்பிவேர் இவைகளை கியாழம்வைத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டால் வெகுமூத்திரவியாதி நிவர்த்தியாகும்.
சந்திரகளா வடுகங்கள் :- ஏலக்காய், பச்சைக்கற்பூரம், சிலா சத்து, நெல்லிவற்றல், ஜாதிக்காய், நெரிஞ்சில், இலவம்பிசின், சுத்திசெய்த ரசம், வங்கபற்பம், இரும்புபற்பம் இவைகளை சமஎடையாய்ச் சேர்த்து சீந்தில்கொடி, இலவம்பட்டை இவைகளின் கியாழத்தால் அரைத்து 2-குன்றிஎடை பிரமாணம் மாத்திரைகள் செய்து தேனுடன் ஒவ்வொரு மாத்திரையாக சாப்பிட்டால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.
குக்குலு :- சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், தானிக்காய், நெல்லிபருப்பு, கோரைக்கிழங்கு, குங்கிலியம் இவைகள் சமஎடையாக, நெரிஞ்சல்வேர் கியாழத்தினால் அரைத்து மாத்திரைகள் செய்து தேகத்தையும், காலத்தையும், நோயின் பலாபலத்தையும் அறிந்து சாப்பிட்டால் மேகம், வாதரோகம் வாதசோணிதம், மூத்திரகாதம், மூத்திரதோஷம், பெரும்பாடு இவைகள்யாவும் நிவர்த்தியாகும். இதற்கு பத்தியம்-இச்சாபத்தியம்.
கோக்ஷ£ராதி குக்குலு :- நெரிஞ்சல்மூலம் 28-பலம், 164- பலம், ஜலத்தில்கொட்டி அரைபாகம் சுண்டும்படியாக காய்ச்சி வடிகட்டி அதில் 7-பலம் குங்கிலிய சூரணம்போட்டு குழம்பு பதம் வருகிறவரையிலும் காய்ச்சி அதில் திரிகடுகு, திரிபலை, கோரைக்கிழங்கு, இவைகளை வகைக்கு 1-பலம் விகிதஞ் சூரணித்துப்போட்டு கலக்கி மாத்திரைகள்செய்து சாப்பிட்டால் பிரமேகம்மூத்திர கிருச்சிரம், பெரும்பாடு, வெள்ளை, வெட்டை சுக்கில தோஷம் அஸ்மரீரோகம் இவைகள் யாவும் நாசமாகும்.
சந்தனாதி தைலம் :- சந்தனத்தூள், நன்னாரிவேர், கோரைக்கிழங்கு, அதிமதுரம், வெட்டிவேர், குறுவேர், பேராமுட்டி, நெல்லிவற்றல், தாழம்பூகொத்துரசம், சம்பங்கிமொக்கு, வாசனை புல், இவைகள்யாவும் சமஎடையாகச் சேர்த்து செவ்வையாகஇடித்து நான்கு மரக்கால் ஜலத்தில்கொட்டி எட்டில் ஒருபாகம் மீறும்படியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில், ஏலக்காய், இலவங்கப்பட்டை, நாககேசரம், தக்கோலம், பெரிய ஏலக்காய், கிரந்தி, தகரம், வெள்ளரிவிரை, சீந்தில்கொடி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், சுக்கு, மிளகு, திப்பிலி, ஆவாரைவேர், மாதுளம்விரை, தாமரைத்தண்டு, ரத்த சந்தனம், கோஷ்டம், புஷ்க்கரமூலம், தண்ணீர்விட்டான்கிழங்கு இவைகளை சமஎடையாகச் சூரணித்துப்போட்டு கியாழத்திற்கு சமஎடையாக பசும்பால், பால் எடைக்குசமஎடை நல்லெண்ணை கலக்கி காய்ச்சிய பிறகு கஸ்தூரி, ஜவ்வாது, குங்குமப்பூ, அகரு, பச்சைகற்பூரம் இவைகளை சூரணித்து சிறு அளவாக அதில் கலந்து பிறகு வாசனையுடைய நானாபுஷ்பங்களையுஞ் சேர்த்தால் தைலம் சித்தமாகும். இதை பானத்திற்கும் அப்பியங்கானத்திற்கும் லேபனத்திற்கும் உபயோகித்து வந்தால் சந்நிபாதத்தினால் உண்டாகிய மேகரோகங்கள், உள் எறிச்சல், மேல் எறிச்சல், மூத்திரம், பிரவாஹிகை, அங்க விரணங்கள், சுக்கிலமேகம், மூத்திரகிரிச்சிரம், கட்டிகள், ரத்த பித்தம், தலைவலி, பெரும்பாடு, சித்தப்பிரமை இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
அசுவகந்தாதி பாகம் :- அமுக்கிறாக்கிழங்கு சூரணம் 8-பலம், 6-சேர் பசும்பாலில் போட்டு மந்தாக்கினியால் பக்குவமாகிறவரை யிலும் கிளறிக்கொண்டு சமைத்து அதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கபத்திரி, நாசகேசரம் இவைகள் வகைக்கு 1/4-பலம், ஜாதிக்காய், குங்குமப்பூ, மூங்கிலுப்பு, இலவம்பிசின், ஜடாமாஞ்சி, சந்தனம், ரக்தசந்தனம், ஜாதிபத்திரி, திப்பிலி, திப்பிலிமூலம், இலவங்கம், ஒதியன், நெரிஞ்சல், ரசசிந்தூரம், நாகபஸ்பம், வங்கபஸ்பம், லோஹபஸ்பம், இவைகள் வகைக்கு 1/8-பலம் விகிதஞ் சூரணித்து
அதில் கலக்கி மந்தாக்கினியால் பக்குவமாக சமைத்து ஆறியபிறகு கொடுத்தால் சகலமேகங்கள், ஜீரணசுகங்கள், குன்மங்கள், பைத்திய விகாரங்கள், வாதங்கள் இவைகளை நிவர்த்திக்கும். சுக்கிலவிருத்தி, புஷ்டி, அக்கினிபந்தம், காந்தி இவைகளை உண்டுபண்ணும்.
சால்ம பாகம் :- 256-பலம் பசும்பாலில் 64-பலம் மருதம்பட் டைச் சூரணங்கலந்து அதில் 16-பலம் வெல்லத்தை கலக்கி மந்தாக்கினியால் சமைத்து அதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கபத்திரி, நாசகேசரம், இலவங்கம், ஜாதிக்காய், கோரைக்கிழங்கு, தவக்ஷ£ரி, கொத்தமல்லி, சுக்கு, மிளகு, திப்பிலி, அமுக்கிறாக்கிழங்கு, கடுக்காய்தோல், லோஹபற்பம் இவைகளை யாவும் சமஎடையாகச் சூரணித்துப்ப்போட்டு கலந்து சாப்பிட்டால் இருத்ரோகம் க்ஷயங்கள், வாதரோகம், விக்கல், 20-மேகங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
திராக்ஷ¡ பாகம் :- திரா¨க்ஷ, பால், சர்க்கரை இவைகள் வகைக்கு 16-பலம் விகிதம் சேர்த்து பக்குவமாக சமைத்து அதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கபத்திரி, நாசகேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி, கஸ்தூரி, லோஹபஸ்பம், அப்பிரகபஸ்பம், குங்குமப்பூ, ஜாதிபத்திரி, ஜாதிக்காய், பச்சைகற்ப்பூரம், வெள்ளி பற்பம், கொத்தமல்லி, சந்தனம் இவைகளை தனித்தனி சூரணித்து 1/2-பலம் விகிதஞ்சேர்த்து செவ்வையாகக் கலந்து காலையில் 1/8-பலம் விகிதம் சாப்பிட்டால் மேகங்கள், பித்தரோகம், மூத்திரகாதம், மலபந்தம், மூத்திரகிருச்சிரம், ரத்தபீடை, நேத்திரபீடை, மார்பு எரிச்சல், காலெரிச்சல், கை எரிச்சல் இவைகளை நிவர்த்திக்கும். சுக்கில விருத்தி உண்டாக்கும்.
வெள்ளை, வெட்டை, பிரமேகம் முதலியவைகட்கு சிகிச்சை :- சித்திரப்பாலாடை என்னும் சிறு அம்மான்பச்சரிசி சமூலத்தை யரைத்து கழற்சியளவு கற்கமாக்கி பாலில் தினம் ஒரு வேளையாக காலையில் மூன்றுநாள் உட்கொள்ள வெள்ளை, வெட்டை, பிரமேகம் முதலியன குணமாகும்.
வல்லாரையிலையை ஓர்பிடி எடுத்து பால்விட்டரைத்து பாலிலேயே கலக்கி மூன்று நாள் அருந்த குணமாகும்.
ஓரிலைத்தாமரைச் சாற்றில் அல்லது பருத்தியிலைச் சாற்றில் சீனி சேர்த்தருந்தலாம்.
ஆவாரை வேர்ப்பட்டையுடன் சமன் சீரகமும் சர்க்கரையுடன் சேர்த்து எலிமிச்சம்பழச்சாறு விட்டரைத்து காற்பலம் எடைக்கு அருந்தி வரலாம்.
சந்தனக்கட்டை, மான்கொம்பு இவைகளை நீர்விட்டு அரைத் தெடுத்த விழுது வகைக்கு ஒரு கொட்டைப்பாக்களவு வீதம் எடுத்து தேன் விட்டுக் குழைத்து அருந்திவர குணமாகும்.
கற்றாழைச் சோற்றுடன் பசுவெண்ணெய் சேர்த்தரைத்த கற்கம் சிறு எலிமிச்சம்பழ அளவுக்கு எடுத்து அதில் பொரித்த படிகாரம் அல்லது பொரித்த வெங்காரம் ஐந்து குன்றிஎடை சேர்த்து அருந்திவரலாம்.
இரத்தனபுருஷ் சமூலத்துடன் சமன் சீரகம் சேர்த்தரைத்து கொட்டைப்பாக்களவு மூன்றுநாள் அருந்தவும்.
நெல்லிவற்றல், தேற்றான்கொட்டை வகைக்கு வராகனெடை-1 இவைகளை இடித்து இளநீரில் ஓர் நாள் ஊறவைத்து, அரைத்து அத்துடன் கொட்டைப்பாக்களவு அரைத்து சந்தனத்தைச் சேர்த்து சர்க்கரை கலந்து அருந்தி வரலாம்.
படிகாரம் காவிக்கல் வகைக்குப் பலம் ஒன்றாகப் பொடித்துக்கலந்து வைத்துக்கொண்டு வேளைக்கு 5-குன்றிஎடை வீதம் தினம் 2-3 வேளையாக நீர் அல்லது வெண்ணெயில் அருந்திவர இரத்தப்பிரமேகம் முதலியன குணமாகும்.
படிகாரம், சீனாகற்கண்டு, நெல்லிவற்றல் இவைகளைச் சம எடையா யெடுத்து தனித்தனியே சூரணித்து பிறகு ஒன்றாய்க்கூட்டிக் கலந்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1/4-முதல் 1/2-வராகனெடை வீதம் தினமிருவேளை நீர், பால், வெண்ணெய் முதலிய அனுபானங்களில் அருந்திவர இரண்டு இரண்டு மூன்று நாட்களில் வெள்ளை, வெட்டை குசுமரோகம், பிரமேகம் முதலியன குணமாகும்.
முற்றின வேப்பம்பட்டை, சங்கம்வேர்பட்டை, சிவனார்வேம்பு வேர்பட்டை இவைகளைச் சமஎடையாய் நிறுத்தெடுத்து இடித்துச்சூரணஞ்செய்து வேளைக்கு திரிகடிபிரமாணம் சமன் சீனிக்கூட்டி தினமிருவேளை வீதம் பாலில் அருந்திவர பிரமேகம் குணமாகும்.
ஒரு வராகனெடை வெந்தயத்தை ஓர் இரவு இளநீரில் ஊறவைத்து காலையில் அரைத்து கற்கமாக்கி ஆவின்மோரில் கலக்கிக்குடிக்கவும். இப்படி மூன்று நாடகள் செய்ய வெட்டச்சூடு, சீழ்ப்பிரமேகம் முதலியன குணமாகும்.
அத்திப்பிஞ்சை தேங்காய்ப்பால்விட்டு இடித்துப் பிழிந்தசாற்றில் வேளைக்கு 2-3 அவுன்சு வீதம் தினம் ஒருவேளை காலையில் 5-முதல் 10-குன்றிஎடை வெள்ளைக்குங்கிலியத்தூளைச் சேர்த்தருந்தி
வர பிரமேகங்கள் தீரும்.
வாழைப்பூவில் மோர் தெளித்து இடித்துப் பிழிந்த சாற்றில் வேளைக்கு 1/4-அல்லது 1/2-ஆழாக்கு வீதம் பொரித்த படிகாரம் அல்லது வெங்காரம் சிறிது சேர்த்து கொடுத்துவர பிரமியங்கள் குணமாகும்.
பரங்கிச்சக்கை, சித்திரமூலவேர்ப்பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கப்பட்டை, சிறுநாகப்பூ இவைகளைச் சமஎடையாய் எடுத்துச் சூரணித்து சமன் சீனிகூட்டிக் கலந்து வைத்துக்கொண்டு வேளைக்குத் திரிகடிப்பிரமாணம் தினமிருவேளையாய் ஆவின்நெய் யில் அருந்திவர பிரமியங்கள் தீரும்.
நெல்லிக்காய் கந்தகத்தை பசுவின்பால், எலுமிச்சம்பழச்சாறு, கற்சுண்ணத்தெளிவுநீர் கற்றாழைச்சாறு இவைகள் ஒவ்வொன்றிலும் இரண்டுமூன்றுமுறை உருகிச் சாய்த்துக்கழுவி சுத்திசெய்து ஒரு பலம் எடைக்குத் தயார்செய்து இத்துடன் பரங்கிப்பட்டை, சீந்தில் சர்க்கரை வகைக்குப் பலம் ஒன்றுவீதம் கூட்டி இடிட்துச் சூரணஞ்செய்து சமன் சர்க்கரை கலந்து வேளைக்கு திரிகடிப் பிரமாணம் தினமிருவேளையாக வெந்நீரில் அருந்திவர சகல பிரமேகங்களும் குணமாகும்.
மேகராஜ சூரணம் :- வெட்டிவேர், சீரகம், இலவங்கப்பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி, கிராம்பு, கோஷ்டம், நெல்லிவற்றல், நிலப்பனங்கிழங்கு, அமுக்கிறாக்கிழங்கு, வால்மிளகு, சிறுநாகப்பூ,
தாமரைவளையம், பரங்கிச்சக்கை, சித்திரமூலவேர்ப்பட்டை, அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, வால்மிளகு, கற்கடகசிங்கி, தக்கோலம், நெற்பொரி, ஏலரிசி, சந்தனம், கூகைநீறு, சீந்திற்சர்க்கரை, கோசோசனை, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம், வகைக்குப் பலம்-1/2 இவைகளை முறைப்படி இடித்துச் சூரணித்து சமன் சர்க்கரைகலந்து
வைத்துக்கொள்ளவும். இதில் வேளைக்கு திரிகடிப்பிரமாணம் ஆவின் பால் அல்லது ஆவின் வெண்ணெயில் தினமிருவேளை வீதம் ஒரு மண்டலம் அருந்திவர கைகால் உடல் எரிச்சல், நீர்சுக்கு,
வெள்ளை, வெட்டை, நீர்தாரை எரிச்சல், சீழ்ப்பிரமேகம், தேக வரட்சி, உட்சுரம், மேககாங்கை முதலியன குணமாகும்.
வல்லாரைச் சூரணம் :- வல்லாரை இலைகளை ஆவின் பாலில் பிட்டவியலாக அவித்து உலர்த்தி இடித்து வஸ்திரகாயஞ் செய்த சூரணம் பலம்-10, கடுக்காய்த்தோல், நெல்லிவற்றல், தான்றிக்காய் தோல், ஏலரிசி, சாதிக்காய், சாதிப்பத்திரி, மாசிக்காய், தாளிசபத்திரி இலவங்கம், பரங்கிச்சக்கை வகைக்குப் பலம்-1 இவைகளை இள வறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து முன் முடித்து வைத்துள்ள வல்லாரைச் சூரணத்துடன் கலந்து மொத்த எடைக்குச் சமன் சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளவும் இதில் வேளைக்கு திரிகடிப்பிரமாணம் வெண்ணெய் அல்லது பாலில் தினமிருவேளை வீதம் ஒரு மண்டலம் அருந்திவர மேககாங்கை, வெள்ளை, வெட்டை,
பிரமேகம் முதலியன குணமாகும்.
சந்தனச் சூரணம் :- சந்தனம், கோஷ்டம், நன்னாரிவேர், கடுகு ரோகணி, கற்பூரம், சீந்திற்சர்க்க்ரை, கோரைக்கிழங்கு, மஞ்சள், இலுப்பைப்பூ, அதிமதுரம், தாமரைக்கிழங்கு, நெய்தற்கிழங்கு, மர மஞ்சள், பூலாங்கிழங்கு, ஏலம், விலாமிச்சவேர், நெல்லிவற்றல், கீழ்காய்நெல்லிசமூலம் உலர்ந்தது வகைக்கு பலம்-1, இவற்றுள் சீந்திற்சர்க்க்ரை நீங்கலாக மற்றச் சரக்குகளை நன்கு உலர்த்தியா
வது அல்லது சிறிது வெதுப்பியாவது கல்லுரலிட்டு இடித்துச்சூரணித்துப் பிறகு சீந்திற்சர்க்க்ரையைச் சேர்த்துக்கலந்து மொத்த எடைக்கு சமன் சர்க்கரை கலந்து வைத்துகொள்ளவும். இதில் வேளைக்கு திரிகடிப்பிரமாணம் தினம் இருவேளை வீதம் ஆவின்பால், ஆவின் வெண்ணெய் முதலிய அனுபானங்களில் ஒரு மண்டலம் அருந்திவர இருபத்தொறுவகை மேகங்களும் குணமாகும்.
அமுர்தாதிச் சூரணம் :- சீந்திற்சர்க்க்ரை பலம்-1, சாதிக்காய், சாதிப்பத்திரி, வால்மிளகு, ஏலரிசி, கிராம்பு, கசகசா, தாளிசபத்திரி, மாசிக்காய் வகைக்கு கழஞ்சி-1 இவற்றுள் சீந்தில் சர்க்கரை நீங்கலாக மற்றச் சரக்குகளை நன்கு இடித்துச் சூரணஞ்செய்து பிறகு அத்துடன் சீந்தில் சர்க்கரையை சேர்த்து மொத்த எடைக்குச் சமன் சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு வேளைக்கு திரி கடிப்பிரமாணம் தினம் இருவேளை வீதம் தனியாகவாவது அல்லது இத்துடன் குன்றிஎடை அப்பிரகபற்பம், காந்தச்செந்தூரம், கருவங்கச்செந்தூரம் முதலியவைகளைக் கூட்டியாவது நெய் அல்லது வெண்ணெயில் அரை அல்லது ஒரு மண்டலம் அருந்திவர மேகநீர், பிரமே கம், மதுமேகம், வெள்ளை, வெட்டை, முதலியன குணமாகும்.
ஆவாரை நெய் :- ஆவாரைவேர்ப்பட்டை, தென்னங்குரும்பை வகைக்குப் பலம்-20, நாவல்பட்டை, அத்திப்பட்டை, நீர்ப்பூலாவேர் வகைக்குப் பலம்-10 இவைகளை இடித்து 20-படி நீரில் போட்டு எட்டொன்றாய்ச் சுண்டக்காய்ச்சி வடிகட்டிய கியாழத்தில் ஆவின் நெய் படி-2, இஞ்சிச்சாறு படி-1/4, முசுமுசுக்கைச்சாறு படி-1/2 விட்டு அதிமதுரம், சீரகம், மிளகு, துத்திவேர், பழம்பாசி வேர், நாகமல்லிவேர் வகைக்குப் பலம்-1, செங்கழுநீர்க்கிழங்கு,
தாமரைக்கிழங்கு, கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி, சிறுகீரைவேர், பசலைக்கீரைவேர், நெல்லிவற்றல், ஏலம் வகைக்குப் பலம்-1/2, புளியங்கொட்டைத்தோல், ஆவாரையரிசி, வரட்பூலாகொழுந்து வகைக்
குப் பலம்-2, கருவேலம்பிசின், வெள்வேலம்பிசின், விலாம்பிசின், வேப்பம்பிசின், மாம்பிசின், வெட்டிவேர், விலாமிச்சவேர், அருகன் கிழங்கு வகைக்குப் பலம்-1/4, இவைகளை அரைத்துக் கற்கமாக்கிக் கரைத்து ஓர் தைலபாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாய் எரித்து கிருதபக்குவமாய் காய்ச்சி வடித்து அதில் திப்பிலிச்
சூரணம் பலம்-1/4, சர்க்கரை பலம்-2, தேன் படி-1/4 இவைகளைச்சேர்த்துக் கலந்துவைத்துக் கொள்ளவும். இதில் வேளைக்கு ஒரு கரண்டி வீதம் தினம் 1 அல்லது 2 வேளையாக ஒரு மண்டலம் அருந்திவர பிரமேகங்கள் சகலமேக ரோகங்கள், நீரிழிவு, மூத்திர கிருச்சிரம், வெட்டைச்சூடு முதலியன குணமாகும்.
பொன்னாங்காணி நெய் :- பொன்னாங்காணி, மஞ்சள், கரிசலாங்கண்ணி இவைகளின் சாறு, ஆவின்பால், ஆவின்நெய், வகைக்குப் படி-1, எலுமிச்சம்பழச்சாறுபடி-1/2, இவைகளை ஓர் பாண்டத்திலிட்டு அதில் 2-பலம் அதிமதுரத்தைப் பால்விட்டரைத்துக் கலக்கி அடுப்பிலேற்றி கிருதபக்குவமாய் காய்ச்சி வடித்து அதில்
கற்கண்டு, கோரோசனை, சாதிக்காய், சாதிபத்திரி வகைக்குக்கழஞ்சு-1 பொடித்துச் சேர்த்துக் கலக்கி வேளைக்கு ஒரு கரண்டி வீதம் அருந்திவர மேககாங்கை, மேக ஊரல், பிரமேகங்கள் முதலியன குணமாகும்.
இளநீர் கிருதம் :- சிற்றாமணக்கெண்ணெய், ஆவின் நெய் வகைக்குப் படி-1, இளநீர், தென்னம்பூச்சாறு வகைக்குப் படி-2, துளசி, நெல்லி, முசுமுசுக்கை, சீந்தில், முடக்கத்தான், கற்றாழை, சதாவரி, கரிசாலை, பொற்றலைக்கையாந்தகரை, கற்பூரவள்ளி, சிறு கீரை இவைகளின் சாறு வகைக்குப் படி-1/2, இவைகளை ஒன்றாய்க்கலந்து ஓர் தைலபாண்டத்திலிட்டு அதில் நிலப்பனை, நன்னாரி, வெட்டிவேர், விலாமிச்சவேர், கோரைக்கிழங்கு, அசுவகந்தி, செவ்வல்லிக்கொடி, நெய்தற்கிழங்கு, கோஷ்டம், கடுக்காய், நெல்லிக்
காய், தான்றிக்காய், சுக்கு, மிளகு, துப்பிலி, தாமரைவளையம், சிற்றரத்தை, ஏலம், அதிமதுரம், சீரகம், கருஞ்சீரகம், இலவங்கப் பட்டை, இலவங்கபத்திரி, இலவங்கம், வெந்தயம், சீனாகற்கண்டு வகைக்குக் கழஞ்சு-1 வீதம் அரைத்துச் சேர்த்துக் கலக்கி அடுப்பி லேற்றிச் சிறுதீயில் மூன்றுநாட்கள் வரையில் காய்ச்சி மூன்றாம் நாள் கிருதபதத்தில் வடித்து ஒரு மண்டலம் நெற்புடத்தில் வைத்து எடுத்து வேளைக்கு ஒரு கரண்டி வீதம் தினமிருவேளையாக உண்டு வர பிரமியம், வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, மூத்திரகிருச்சாரம்,
மேககாங்கை முதலியன குணமாகும்.
தேத்தான் கொட்டை லேகியம் :- காற்படி தேற்றாங்கொட்டையை நன்றாக தேய்த்துக்கழுவி சுத்தஞ்செய்து ஒன்றிரண்டாய்ப் பொடித்து ஆவின்பால் மூன்றுநாள் ஊறப்போடவும். தினந்தோறும் கழுவி எடுத்து புதிய பாலில் போடவும். இப்படி மூன்று நாள் ஊறவைத்துப் பிறகு ஆட்டுக்கல்லிலிட்டு ஆட்டி வெண்ணெய்
போல் ஆக்கி அதற்குச் சமன் ஆவின் வெண்ணெய் கூட்டிப்பிசைந்து இதற்குச்சமன் ஆவின்நெய் சேர்த்து கடாயிலிட்டு அடுப்பிலேற்றி வேகவைத்து கிளறிக் கொடுத்துகொண்டு வந்து பொன் நிறமாக வருஞ்சமயத்தில் சீரகம், ஏலரிசி வகைக்குக் கழஞ்சு-2, சாதிக்காய், சாதிபத்திரி, குங்குமப்பூ, கிராம்பு, சிறுநாகப்பூ, தாளிச
பத்திரி, அதிமதுரம், கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, சதகுப்பை, சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு வராகனெடை-5, இடித்து வஸ்திர காயஞ்செய்த சூரணத்தையும், மூன்று பலம் கற்கண்டுத் தூளையும் தூவிக் கிண்டி லேகியம்போல் கிளறி வைத்துகொண்டு வேளைக்கு கொட்டைப்பாக்களவு தினம் இருவேளைவீதம் அருந்திவர வெள்ளை, வெட்டை, பிரமேகம் முதலியன குணமாகும்.
மேகணாதி எண்ணெய் :- புங்கம்பட்டை, பிராயன்பட்டை, மாம்பட்டை, இலுப்பைப்பட்டை, அழிஞ்சில்பட்டை, எட்டிப் பட்டை, ஒதியம்பட்டை, குவளைப்பட்டை, புரசம்பட்டை,, ஊழ லாற்றிமரப்பட்டை, வேப்பம்பட்டை, பூவரசம்பட்டை, நிலவிளாப்பட்டை, சிவனார்வேம்பு வேர்ப்பட்டை இவைகளை வகைக்குப் பலம்-10 வீதம் நிறுத்தெடுத்துச் சதைத்து ஓர் பெரிய மட்கடத்திலிட்டு, 16-படி தண்ணீர்விட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாயெரித்து
எட்டிலொன்றாய்ச் சுண்டக் கியாழங் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
ஆடுதீண்டாப்பாளை, வெள்ளறுகு, கழற்சியிலை, சங்கங்குப்பியிலை, செருப்படை, கொட்டைக்கரந்தையிலை, பொடுதலையிலை இவைகளின் சாறு வகைக்குப் படி-1/4 வீதம் எடுத்துக் கலந்துவைத்துக் கொள்ளவும். பிறகு இத்துடன் முன் காய்ச்சி வைத்துள்ள பட்டை தினுசுக்களின் குடிநீரைச் சேர்த்துக் கலக்கி ஓர் தைலபாண்
டத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாயெரித்து குழம்புபதமாய் வரும்போது அதில் நல்லெண்ணெய் படி-2, பரங்கிச்சக்கைச் சூரணம் பலம்-2 சேர்த்து தைலபதத்தில் காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும்.
இதில் வேளைக்கு உச்சிகரண்டி வீதம் தினம் இருவேளையாக 10-நாள் சாப்பிடலாம். பிறகு சிலநாள் விட்டுவைத்து மீண்டும் முன்போல் 10-நாள் சாப்பிடலாம். இப்படி விட்டுவிட்டு இரண்டு மூன்று முறைகள் சாப்பிட்டுவரமேகரோகங்கள், பிரமேகம், முதலி யன யாவும் குணமாகும். இச்சாபத்தியம்.
குங்கிலிய பற்பம் :- தேவையான அளவு வெள்ளைக் குங்கிலியத்தைப் பொடித்து ஓர் பாண்டத்திலிட்டு மூழ்க இளநீர் விட்டு அடுப்பிலேற்றி எடுத்துவர குங்கிலியம் உருகி கட்டியாகி நிற்கும். இளநீரில் பாதிக்குமேல் சுண்டிவருஞ் சமயத்தில் வடித்து குங்கிலி யத்தை எடுத்துக்கொள்ளவும். இப்படி 2, 3 முறை செய்தெடுக்க குங்கிலியம் நல்ல சுத்தியாகும். பின்பு இதைக் கல்வத்திலிட்டு பொடித்து வைத்துகொள்க. இதில் வேளைக்கு 2 முதல் 5 குன்றி எடைவீதம் ஆவின் வெண்ணெய் அல்லது பாலில் அருந்திவர
வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, மூத்திரநாள ரணம் முதலியன குணமாகும். இத்துடன் சிலாசத்துபற்பம் சமன் சேர்த்து வழங்க நல்ல பலனைத் தரும்.
குங்கிலிய வெண்ணை :- வெள்ளைக் குங்கிலியம் ஒரு பலம் பொடித்து ஓர் இரும்பு கரண்டியிலிட்டு அதில் பசுநெய் 2 1/2-பலம் விட்டு கரிநெருப்பணலில் வைக்க குங்கிலியம் உருகி நெய்யுடன் உரவாகி நிற்கும். அத்தருணம் அதை இளநீரில் சாய்க்கவும். பின்பு இதை கையினால் நன்கு அடித்துக் கழுவியாவது அல்லது மத்திட்டுக் கடைந்தாவதுவர வெண்ணெய்போல் திரண்டுவரும். இதை எடுத்து புதிய இளநீரிலிட்டு முன்போல் மீண்டும் கடைந்து கழுவி வரவும். இப்படி மூன்றுமுறை செய்தெடுக்க தூய வெண்ணெய் போல் கிடைக்கும். இதில் வேளைக்கு கொட்டைபாக்களவு வீதம் தினம் இருவேளையாக அருந்திவர வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு,
எரிச்சல், பிரமேகம் முதலியன குணமாகும்.
சிலாசத்து பற்பம் :- இளநீரில் போட்டு கொதிக்கவைத்து கழுவி சுத்தஞ்செய்த கற்பூர சிலாசத்து ஓர் பலம் எடுத்து அதற்கு கற்சுண்ணத்தைக் கவசஞ்செய்து ஓர் அகலிலடக்கி மேலகல் மூடிச்சீலைமண் செய்து 50 வறட்டியில் புடமிட சிலாசத்து வெளுத்து இருக்கும். இதைப் பொடித்துக் கல்வத்திலிட்டு கற்றாழைச் சாறுவிட்டு ஒரு சாமம் அரைத்து வில்லை செய்துலர்த்தி அகலிலடக்கிச் சீலைமண் செய்து மீண்டும் முன்போல் ஒரு புடமிட நல்ல பற்பமாகும். அரைத்து வைத்துக்கொளக.
இதில் வேளைக்கு 2, 3 குன்றிஎடை வீதம் தினம் இருவேளையாக நெய், வெண்ணெய், பால், இளநீர் முதலிய அனுபானங்களில் அருந்திவர வெள்ளை, வெட்டைச்சூடு, பிரமேகம் முதலியன குணமாகும். இச் சிலாசத்து பற்பத்துடன் சமன் சீந்தில் சர்க்கரை, பொரித்த வெங்காரம் இவைகளைச் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு வேளைக்கு 5 முதல் 10 குன்றிஎடை வீதம் தினம் இருவேளையாக வெண்ணெயில் அருந்திவர முற்கூறிய நோய்களில் மிக்க நல்லபலனைத் தரும்.
தங்க உரம் :- இரசம், கந்தகம், வெள்வங்கம், நவாச்சாரம் வகைக்குப் பலம்-1, முதலில் வங்கத்தை ஓர் இரும்புக் கரண்டியிலிட்டு உருக்கி, சூடாறுவதற்கு முன்பு இரசத்தை அதில் தொந்தித்து சாய்க்க வெட்டையாகும். இதைக் கல்வத்திலிட்டுப் பொடித்து அத்துடன் கந்தகத்தை சேர்த்து ஒருமணிநேரம் நன்கு அரைத்து கடைசியி நவாச்சாரத்தைச்சேர்த்து வெடியுப்புத் திராவகம்விட்டு இரண்டு ஜாமம் நன்கு அரைத்து உலர்த்தி குப்பியிலிட்டு சீலைமண் செய்து முறைப்படி வாலுகாயந்திரத்தில் வைத்து 4 ஜாமம் எரித்தெடுக்கவும். ஆறினபின்பு குப்பியிலுள்ள மருந்தை அரைத்து வைத்துக்கொள்க. இது பார்வைக்கு தங்கப்பொடிபோல் காணும், இதுவே தங்க உரமெனபடும். இதில் வேளைக்கு 1/2 முதல் 1 குன்றி எடை வீதம் தினம் இருவேளையாக நெய் வெண்ணெய் முதலிய அனுபானங்களில் கொடுத்துவர வெள்ளை, வெட்டை, பிரமேகம், மேக நோய்கள், கிரகணி, பெரும்பாடு முதலியன குணமாகும். இச்சா பத்தியமாக இருந்து வருதல் நன்று.
படிகார பற்பம் :- தேவையான அளவு படிகாரத்தைப் பொடித்துக் கல்வத்திலிட்டு ஆவின்பால் விட்டரைத்து வில்லை செய்துலர்த்தி அகலிலடக்கிச் சீலைமண்செய்து 40, 50 விறட்டியில் புடமிடவும். இப்படி ஆவின்பால் விட்டரைத்து இரண்டு மூன்று புடங்களிட பற்பமாகும். பொடித்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு
1, 2 குன்றிஎடை வீதம் வெண்ணெயில் அருந்திவர வெள்ளை, வெட்டை, வயிற்றுவலி, பேதி முதலியன குணமாகும்.
வெங்கார பற்பம் :- தேவையான அளவு வெங்காரத்தைப் பொடித்துக் கல்வத்திலிட்டு கோழிமிட்டை வெண்கருவிட்டரைத்து வில்லை செய்துலர்த்தி 30, 40 விறட்டியில் புடமிடவும். இப்படி 4, 5 புடமிட நல்ல பற்பமாகும். அரைத்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 2, 3 குன்றிஎடை வீதம் தினம் இருவேளையாக, வெண்ணெய், நெய் முதலிய அனுபானங்களில் கொடுத்துவர வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, பிரமேகம் முதலியன குணமாகும்.
கல்நார் பற்பம் :- கல்நாரை நீரில் சிலமணிநேரம் ஊறவைத்து கழுவி எடுத்து இளநீர்விட்டு கொதிக்கவைத்து கழுவியெடுக்க சுத்தி யாகும். பிறகு இதைப் பொடித்துக் கல்வத்திலிட்டு மூக்குத்திப்பூண்டுசாறு அல்லது முள்ளங்கிக் கிழங்குசாறு விட்டரைத்து வில்லை செய்துலர்த்தி அகலிலடக்கிச் சீலைமண்செய்து புடமிட பற்பமாகும். இதில் வேளைக்கு 1, 2 குன்றிஎடை வீதம் நெய், வெண்ணெய், முதலிய அனுபானங்களில் கொடுத்துவர வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, பிரமேகம் முதலியன குணமாகும்.
சீந்தில் சர்க்கரை செய்முறை :- சீந்தில் கொடியில், கிழங்குடன் கூடிய முற்றிய கொடிகளாகப் பார்த்துக் கொண்டுவந்து அவைகளை நன்கு சதைத்து தண்ணீரில் சிலமணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக பிசைந்து திப்பிலிகளை நீக்கிவிட்டு சிறிதுநேரம், தெளிய விட்டு, தெளிவுநீரை வடித்துவிட்டு அடியில் நிற்கும் வண்டலில் மீண்டும் புதிய நீர்விட்டு ஊறவைத்து பின்பு பிசைந்து திப்பியை நீக்கி, தெளியவிட்டு, நீரை வடித்துவிட்டு மீண்டும் புதிய நீர் விடவும்,இப்படியே மூன்றுமுறை செய்து பிறகு கடைசியில் கிடைக்கும் வண்டலை பீங்கான் தட்டிகளிலிட்டு வெய்யலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொள்க. இது பார்வைக்கு கூகைநீறுபோல வெணமை
நிறமுள்ள தூளாக இருக்கும். சில சமயம் சிறிது பழுப்பு நிறங்கலந்ததாகவும் காணும். இதுவே சீந்தில் சர்க்கரை அல்லது சீந்தில் சத்து எனப்படும். இதற்கு கைப்பு சுவையுண்டு. இதில் வேளைக்கு 5-முதல் 10-குன்றிஎடை வீதம் தக்க அனுபானங்களில் கொடுத்துவர சுரத்திற்குப்பின் காணும் பலயீனம், அசதி, நாட்பட்ட சுரம், மண்ணிரல் வீக்கம், காமாலை, பித்தாதிக்கம், இருமல், உட்சுரம், வெள்ளை, வெட்டை, பிரமேகம், மூத்திர நாளப் புண்கள், மது மேகம் முதலியன குணமாகும். இதைப் பெரும்பாலும் சூரணம் லேகியம் முதலியவைகளில் சேர்த்து வழங்குவதுண்டு.
மேகரோகத்திற்கு பத்தியங்கள் :- பழைய அரிசி, கோதுமை, மாமிசரசம், புண்ணாக்கு, மோர், வெண்ணெய், பச்சைபயறு, சீந்தில்கொடி, நெல்லிக்காய், புடலங்காய், வெட்பாலைகாய், அத்திக்காய், வாழைக்கச்சல், வாழைப்பூ, புளி, பாவல், கசப்பு பதார்த் தங்கள், சஞ்சாரம், நீராடுதல் இவைகள் மேகரோகத்திற்கு பத்தியங்கள்.
அபத்தியங்கள் :- தயிர், கள்ளு, வெல்லம், நெய், பால், புளிப்பு, பெருங்காயம், உப்பு, வெள்ளைப்பூண்டு, பகல்தூக்கம், மாதர்புணர்ச்சி, மீன், எள்ளு, கடுகு, சுக்கு, தேங்காய் எண்ணெய் பக்ஷணங்கள், கத்திரிக்காய், பலாப்பழம், கருணைக்கிழங்கு இவைகள் மேகரோகங்களுக்கு அபத்தியங்கள்.
0 comments:
கருத்துரையிடுக