புதன், ஜனவரி 13, 2010

மகோதர ரோகதிற்க்கு ( ascities நோய்க்கு ) சிகிச்சைகள்

மகோதர சிகிச்சை

வாதோதரத்திற்கு சூரண கியாழம் :- தசமூல சூரணத்தை ஆமணக்கெண்ணெயில் கலந்தாவது திரிபலை சூரணத்தை கோமூத் திரத்துடன் சேர்த்தாவது தசமூல கியாழத்தில் கோமூத்திரம் கலந்தாவது குடித்தால் வாதமகோதரம் சூலை இவைகள் நிவர்த்தி யாகும்.

பிலீஹோதரத்திற்கு சரபுங்கா கல்கம் :-கொள்ளுக்காய்வேளை வேரை கற்கஞ்செய்து மோரில் கலந்து குடிக்கச்செய்தால் வெகு நாளாக யிருக்கும் பிலீகோதரம் நிவர்த்தியாகும்.

வேறுவிதம் :- கோங்கிலவமரபட்டை, கடுக்காய் இவைகளை கற்கஞ்செய்து கோமூத்திரத்துடன் கலந்து பானஞ்செய்தால் சகல உதர ரோகங்கள் பிலீகை, மேகம், மூலவியாதி, கிருமி, குன்மம், இவைகள் நீங்கும்.

பிப்பல்யாதி கியாழம் :- முருங்கன்வேர்ப்பட்டை, திப்பிலி, மிளகு, சரக்கொன்றைப்புளி இவைகளை கியாழம் வைத்து அதில் இந்துப்பு கலந்து கொடுக்க வீக்கம், பிலீகோதரம் இவைகள் நிவர்த்தியாகும்.

யக்ருதால்புதரத்திற்கு பிப்பலீ கலகம் :- திப்பிலியை கல்கஞ்செய்து அதற்கு நான்கு பாகம் அதிகமாக நெய் பால் கலந்து காய்ச்சி ஆறவைத்து பானஞ்செய்தால் யக்ருதால்யுதரம் நிவர்த்தி யாகும். அக்கினி தீபனம் உண்டாகும்.

சோபோதரத்திற்கு ஹரீதக்யாதி கியாழம் :-கடுக்காய்த்தோல்சுக்கு, தேவதாருசக்கை, வெள்ளைசாரணைவேர், சீந்தில்கொடி, இவைகளை கியாழம் வைத்து அதில் குங்குகிலியச் சூரணத்தைப்
போட்டு கோமூத்திரத்தில் கலக்கி கொடுத்துவர சோபை மகோதரம் நிவர்த்தியாகும்.

புனர்னவாதி கியாழம் :- வெள்ளைசாரணைவேர், வேப்பன் ஈர்க்கு, பேய்ப்புடல், சுக்கு, சீமைநிலவேம்பு, சீந்தில்கொடி, மர மஞ்சள், கடுக்காய் இவைகளை கியாழம் வைத்து குடித்தால் சகல அவயவங்களிலிருக்கும் வீக்கம், இருமல், சூலை, பாண்டு இவைகள் நிவர்த்தியாகும்.

வாதோதரத்திற்கு சாமுத்திராதி சூரணம் :- கடலுப்பு, சவ்வர்ச்சலவணம், இந்துப்பு, யவக்ஷ¡ரம், ஓமம், திப்பிலி, சித்திரமூலம், சுக்கு, பெருங்காயம், வாய்விளங்கம் இவைகள் சமஎடையாய்ச்சூரணித்து சாப்பிடும்போது அன்னத்துடன் கலந்து நெய்விட்டு முதற்கவளம் சாப்பிட்டால் மகோதரம், குன்மம், அசீரணம், வாத
பிரகோபம், கொடூரமான கிராணி, மூலவியாதிகள், பாண்டுரோகம், பகந்தரம் இவைகள் நிவர்த்தியாகும்.

பிளீகோதரத்திற்கு விடங்காதி சூரணம் :- வாய்விளங்கம் ஓமம், சித்திரமூலம் இவைகள் வகைக்கு பலம் 1, தேவதாரு, சுக்கு வெள்ளைச்சாரணை இவைகள் வகைக்கு பலம் 2, சுத்திசெய்த சிவதை வேர் இவைகள் யாவையும் இடித்துச் சூரணித்து கொஞ்சம்உஷ்ணமாயிருக்கும் பாலுடனாவது வெந்நீருடனாவது பானஞ்செய்தாலும் அல்லது இவைகளை சூரணித்து ஆட்டு மூத்திரத்தில் கலந்து குடித்தாலும் உதரரோகம், பீலிகம் இவைகள் நீங்கும்.

ஹபுஷாதி சூரணம் 
:- சிவகரந்தை, திரிபலை, கொத்துப்புங்கன் திப்பிலி, கோஷ்டம், சிவதை, கடுகுரோகணி, வசம்பு, அவுரிவேர் இந்துப்பு, திப்பிலி, சவ்வர்ச்சலவணம், இவைகளை சூரணித்து வெந்நிரு
டனாவது கோமூத்திரனுடனாவது அல்லது மாதுழம்பழரசத்துடனாவது திரிபலை கியாழத்துடனாவது மாமிசத்துடனாவது தகுந்த அளவு சாப்பிட்டால் அஜீரணம், பீலிகை, குன்மம், மூலவியாதி வீக்கம், விஷமாக்கினி, சூலை, காமாலை, பாண்டு, குஷ்டரோகம்அக்கினிமாந்தம், உதரரோகம் இவையாவும் நீங்கும்.

பிலீஹகுல்மோதரத்திற்கு உதராவர ரசம் :- இரசபற்பம், வங்க பற்பம், தாம்பிரபற்பம், சுத்திசெய்தகெந்தி இவைகள் வகைக்கு 1 பலம், இவைகள் யாவையும் கல்வத்திலிட்டு எருக்கன் பாலுடன் ஒருநாள் அரைத்து உருண்டைசெய்து மடக்கில்வைத்து மேல்மடக்குமூடி, சீலைமண்செய்து பூதரபுடமிட்டு, ஆறிய பிறகு
எடுத்து இரண்டு குன்றி எடை நெய்யுடனாகிலும், வெள்ளைச்சாரணை சூரணத்துடனாவது சாப்பிட்டால் பிலீகை, குன்மோதரம் இவைகள் நீங்கும்.

ஜலோதரத்திற்கு த்ரைலோக்கியடம்பர ரசம் :- சுத்திசெய்த ரசம் கெந்தி, தாம்பிரபஸ்பம், லோஹபஸ்பம், அப்பிரஹபஸ்பம்,  சுத்திசெய்தநாபி, வெங்காரம், சர்ஜஷாரம்,லிங்கம், பலகறை பற்பம் இவைகளை சமஏடையாக கல்வத்திலிட்டு எருக்கன் பால்,சதுரக்களி பால், நொச்சிரசம், கரிசனாங்கண்ணீஇலைரசம், இஞ்சிரசம் இவைகளை பிரத்தியேகமாக ஒவ்வொரு நாள் அரைத்து 2 குன்றி எடை யுக்தானு பானத்துடன் 21 நாள் சாப்பிட்டால் குன்மம், ஜலோதரம், வீக்கம், பாண்டு, க்ஷயம், வீக்கம், சூலை, பேதி இவைகள் நீங்கும்.

ஜலோதர விரேசன ரசம் :- வெண்காரம், மிளகு, சுத்திசெய்த ரசம், இவைகள் வகைக்கு 1 பலம், சுத்திசெய்த கெந்தி 2 பலம், திப்பிலி 2 பலம், சுக்கு 2 பலம், இவைகளைச் சூரணித்து இதற்குச் சமஎடை சுத்திசெய்த நேர்வாளம் சேர்த்து நன்கு அரைத்து குன்றி எடை கொடுத்தால் பேதி ஆவதுடன் உதரரோகத்தையும் குணமாக்கும்.

இச்சாபேதி ரசம் :- சுக்கு, மிளகு, சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கெந்தி, பொரித்த வெங்காரம் இவைகள் வகைக்குப் பலம்-1, சுத்திசெய்த நேர்வாளம் 3-பலம் சேர்த்து இடித்து நன்கு அரைத்து வைத்துகொள்ளவும். இதில் தேகத்திடத்திற்கு தக்கபடி ஒன்று இரண்டு குன்றிஎடை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு சிறிது சலம் சாப்பிட பேதியாகும். பத்தியம் மோர் சாதம்.

வாதோதர கிருதம் :- தசமூலங்கள், சிற்றரத்தை, சுக்குதேவதாரு, வெள்ளைச்சாரணை, சிகப்புச்சாரணை இவைகளின் கியாழத்துடன் நெய்கலந்து கிருதபக்குவமாய் காய்ச்சிய கிருதத்தை பானஞ்செய்தால் வாதோதரம் நிவர்த்தியாகும்.

ரோஹிதக கிருதம் 
:- கொங்குமரம் 100-பலம், இலந்தை 64- பலம் இவைகளை இடித்து 256-பலம் சலத்தில் போட்டு நாலில் ஒருபாகம் மீறும்படியாகச் சுண்டக் கியாழங் காய்ச்சி வடிகட்டி அதில் நெய் 20-பலம், 80-பலம் ஆட்டுப்பால், திரிகடுகு, திரிபலை, பெருங்காயம், ஓமம், கொத்தமல்லி, பிடாலவணம், வாய்விளங்கம்,
சித்திரமூலம், சிவகரந்தை, செவ்வியம், வசம்பு, சீரகம், கருப்புப்பு, மாதுளம்பழத்தோல், தேவதாரு, வெள்ளைச்சாரணை, பாபரவேர், யவக்ஷ¡ரம், புஷ்க்கரமூலம் இவைகள் வகைக்கு 1/4-பலம் எடை குடித்
தால் சகல உதர ரோகங்கள், சூலை, அக்கினிமந்தம், குக்ஷ¢சூலை, பாரிசசூலை, கடிசூலை, அருசி, விபந்தசூலை, பாண்டுரோகம், காமாலை, வாந்தி, அதிசாரம், நமை, சுரம், பிலீஹோதரம் இவைகள் நிவர்த்தியாகும்.

சித்திரகாதி கிருதம் :- சித்திரமூலம் 160-பலம் போட்டு கியாழமிட்டு வடிகட்டி அதில் 20-பலம் நெய், காஞ்சிகம் 32-பலம், தயிர் சலம் 64-பலம், பஞ்சகோலங்கள் அதாவது (சுக்கு, திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம்) தாளிசப்பத்திரி, யவக்ஷ¡ரம், வெங்காரம், பஞ்சலவணங்கள், ஓமம், குரோசோணி ஓமம், சீரகம், கருஞ்சீரகம், மிளகு இவை யாவையும் வகைக்கு 1/4-பலம் சூரணித்துகலந்து நெய்பதமாய்ச் சமைத்து காலையில் சரீரத்திற்கு தகுந்தபடி சாப்பிட்டால் பிலீஹை, சோபோதரம், மூலவியாதி இவைகள் நிவர்த்தியாவதுடன் அக்கினிதீபனம் உண்டாகும்.

க்ஷ¡ராதி யோகம் :- புங்கன்க்ஷ¡ரத்தில் பிடாலவணம், திப்பிலி சூரணங்கலந்து சலத்தோடு அதிகாலையில் பலானுசாரமாய்ச் சாப்பிட்டால் யக்ருத்பிலீஹோதரம் நிவர்த்தியாகும்.

அக்கினிமுக லவணங்கள் :- சித்திரமூலம், சிவதைவேர், தந்தி பீஜங்கள், திரிபலை, சவ்வர்ச்சலவணம் இவைகள் சமஎடையாய்ச்சூரணித்து இதற்கு சமம் இந்துப்பைக்கலந்து சதுரக்கள்ளிபாலினால் அரைத்து உருண்டைசெய்து சதுரக்கள்ளி மரத்தில் துளைசெய்து அதில்வைத்து மேல்மூடி சீலைசெய்து நெருப்பில் வைத்து சுட்டு செவ்வையாக எரித்தபிறகு பக்குவமாய் எடுத்துச் சூரணித்துஅந்தச் சூரணத்தின் தேகபலத்தை அறிந்து மோரில் கலந்து
சாப்பிட்டால் யக்கிருத்பிலீஹோதரம் நீங்கும். அக்கினிதீபனம் உண்டாகும். இதற்கு அக்கினிமுக லவணம் என்று பெயர்.

வர்த்தமான பிப்பலி :- திப்பிலிகளை 3-5-7-10 இம்மாதிரிநாள்களுக்குள் அதிகமாய்ச் சாப்பிட்டுக்கொண்டு வருபவனுக்கு சுவாசரோகம், காசரோகம், உதரரோகம், சுரரோகம், ரத்தமூலம் வாதரத்தம், க்ஷயங்கள், இந்தரோகங்கள் அருகில் நெருங்காது.இதற்கு வர்த்தமான பிப்பிலி என்று பெயர்.

சோபோதரத்திற்கு புனர்னவாதி யோகம் :-வெள்ளைச்சாரணை வேர், தேவதாரு, சுக்கு, இவைகளை கோமூத்திரத்தில் கலந்து காய்ச்சி பானஞ்செய்தால் வீக்கம் நீங்கும்.

திப்பிலி, சுக்கு இவைகளை சூரணித்து வெல்லத்தைக்கலந்து சாப்பிட்டால் சோபை, ஆமை, அஜீரணம் இவைகள் நீங்கும். திரிபலை சூரணத்தை பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் சோபோதரம் நிவர்த்தியாகும்.

கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் இவைகளின் சூரணத்தை ஆட்டுப்பாலுடனாவது அல்லது எருமைப்பாலுடனாவது கலந்து  குடித்தால் சோபோதரங்கள் நிவர்த்தியாகும்.

தரோகத்திற்கு பத்தியங்கள் :- விரேசன சிகிச்சை, புசிக்காமலிருத்தல், வருஷங்கழித்த கொள்ளு, பச்சைப்பயறு, சிகப்பு நெல், யவதானியம், காட்டுமிருகங்கள், காட்டுப்பஷிகள் இவைகளின் மாமிசம் தேன், இந்துப்பு, பீடாலவணம், மோர், வெங்காயம், ஆமணக்கெண்ணெய், இஞ்சி, இலைகள், புடலங்காய், பாகற்காய்
வெள்ளைச்சாரணை இலை, முருங்கைக்காய், கடுக்காய், தாம்பூலம், ஏலக்காய், யவக்ஷ¡ரம், லோஹம், ஆடு, பசு, ஒட்டகம், எருமை இவைகளின் பால்கள், மூத்திரங்கள், லகுபதார்த்தங்கள், காரமான பதார்த்தங்கள்
அக்கினி தீபன பதார்த்தங்கள், இவைகள் உதரரோகமுடையவர்களுக்கு பத்தியங்கள்.

அபத்தியங்கள் 
:- சிநேஹம், புகைபிடித்தல், முகுசலத்தைஅருந்தல், வாந்தி, திரிதல், பகல்நித்திரை, மாப்பண்டங்கள், சலத்திலிருக்கும் மீன்கள், முதலிய ஜந்துகள், காய்கறிகள், எள்ளு, உஸ்ணமான அன்னங்கள், உப்புடன் கலந்த அன்னம், விருத்த அன்னம் கடினமான உணவு, மலபந்த உணவு, வியர்வையடக்குதல், மலபந்தனம் இவைகளை உதரோகி நிவர்த்திக்கவேண்டியது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக