ஞாயிறு, ஜனவரி 10, 2010

பெரும்பாடு -நோய் நிதானம் & சிகிட்சைகள்

பெரும்பாடு

அதிக உஸ்ண வீரியப் பொருள்கள் அதிதிண்டி அசீரணம், கருப்ப அழற்சி, அதிசையோகம், மலை முதலியவை ஏறுதல், அதிக நடைஅதிதுக்கம், தடி முதலியவைகளால் அடிபடல், பகல் நித்திரை என்பவைகளினால் இந்த விரத ரோகமென்னும் பெரும்பாடு நோய் ஏற்படும்.

இது வாத பெரும்பாடு, பித்த பெரும்பாடு, சிலேஷ்ம பெரும்பாடு, சந்நிபாத பெரும்பாடு என நான்கு வகைப்படும்.

பெரும்பாட்டின் இலக்கணம் :- ஸ்திரீகட்கு மாதாந்த ருது காலத்தில் வெளியாகும் உதிரமானது இயற்கைக்கு மாறாக அதிகமாகவும், நிறம் மாறியும் காணுதல், நீடித்து இருத்தல், வயிற்றில் அற்பவலி, துர்பலம் முதலிய குணங்களைப் பெற்றிருக்கும். மேலும்இந்நோய் அதிகரிக்கின், துர்ப்பலம், சங்கடம், மூர்ச்சை, தாகம், தாபம், மதம், பிரலாபம், தேகம் வெளிரல், நமைச்சல், வாந்தி என்னும் இக்குணங்கள் உண்டாவதுடன் சில வாத ரோகங்களும் சனிக்கும்.

1. வாதப்பெரும்பாடு :- இதில் வெளியாகும் உதிரமானது அற்பமாயும் சிவப்பாயும் இருத்தல், நுரையுண்டாகுதல், வாதரோகஉபதிரவம், புலால் கழுவிய சலத்தைப்போல் கொஞ்சங் கொஞ்ச சமாக வெளியாகுதல் என்னுங் குணங்கள் உண்டாகும்.

பரிகாரம் :- இதற்கு சவ்வர்ச்சலவணம், சீரகம், அதிமதுரம், கரும் அல்லிப்பூ இவைகளை தயிர்விட்டு அரைத்து கற்கமாகச் செய்து தேன்விட்டுக் கொடுக்கவும்.

சுக்கு, அதிமதுரம், இவைகளை சம எடையாகச் சூரணித்து அதில் நல்லெண்ணை, சர்க்கரை இவைகளை சம எடையாகக் கலந்துயாவையும் ஒன்றாகும்படிக் கலந்து கொடுத்துவரலாம்.

ஏலக்காய், தனியா திரா¨க்ஷ, வெட்டிவேர், கடுகுரோகிணி, சந்தனம், கருப்புப்பு, நன்னாரிவேர், லோத்திரப்பட்டை, இவைகளை சம எடையாக அரைத்து தயிர்விட்டு கலக்கிக்கொடுக்கலாம்.

2. பித்தப் பெரும்பாடு :- 
இதில் மஞ்சள், கருப்பு, சிவப்பு நிறங்களாகவும் அதி உஷ்ணமாகவும் பித்த வேதனையுடன் அதிவேகமாக இரத்தம் வெளியாகுதல், என்னுங் குணங்களுண்டாகும்.

பரிகாரம் :- ஆடாதோடாயிலை ரசமாவது, சீந்தில் கொடிரசமாவது, தண்ணீர் விட்டான் கிழங்கு ரசமாவது, தேனுடன் கலந்துகொடுத்தால் பித்தத்தினால் உண்டான பெரும்பாடு நிவர்த்தியாகும்.

அதிமதுரம், கால்பலம் எடுத்து கழுநீரால் அரைத்து கற்கம் செய்து அத்துடன் சர்க்கரை 1-பலம் போட்டு சாப்பிடலாம்.

3. சிலேஷ்ம பெரும்பாடு :- 
ஆமத்தைப்போலும், சீதத் தைப்போலும், கொஞ்சம் வெண்ணிறமாகியும், சாதம் வடித்த நீர் போல் உதிரம் வெளியானால் அது சிலேஷ்ம பெரும்பாடென்று அறியவேண்டியது.

பரிகாரம் :- இதற்கு கரும் அத்திப்பழ ரசத்தை குடித்தல் அல்லது காகிஜெங்காரசத்தில் லோத்திரபட்டைச் சூரணம், தேன் இவைகள் கலந்துகொடித்தல் நன்று.

4. திரிதோஷ பெரும்பாடு :- தேன், நெய், அரிதாளம் இவை களின் நிறத்தைப் பெற்றதும், கொழுப்பைபோல் காந்தியுடைய தாயும், துர்கந்தமாகியும், இரத்தம் வெளியானால் அதை திரி தோஷ பெரும்பாடு என்று சொல்லுவார்கள்.

பரிகாரம் :- தருப்பைவேரை அரிசி கழுநீரால் அரைத்து கற்கம் செய்து மூன்றுநாள் கொடுக்கவும்.

கருப்பு அத்திப்பழ ரசத்தில் தேன்கலந்து 7-நாள் கொடுக்கவும். பத்தியம்-பசும்பால், சர்க்கரை, அன்னம் மற்றது கூடாது.

கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய், சுக்கு, மரமஞ்சள் இவைகளைக் கியாழம்வைத்து அதில் லோத்திரப்பட்டைச் சூரணம், தேன் கலந்து சாப்பிடலாம்.

ஆடாதோடையிலை சாறாவது, சீந்தில்கொடி ரசமாவது, முள் முருக்கன்வேர் ரசமாவது பானஞ் செய்தால் வெள்ளை, பெரும்பாடு முதலியன குணமாகும்.

திரிபலை, தேவதாறு, வசம்பு, ஆடாதோடை, நெற்பொறி, அருகன்வேர், சிற்றாமுட்டி இவைகளை கியாழம் வைத்து தேன் கலந்து குடித்தால் மாதர்களுக்குண்டாகும் சகல பெரும்பாடு நோயும் சாந்தியாகும்.

அசோக விருஷத்தின் பட்டையை பாலில் போட்டு கொஞ்சம் ஜலம் விட்டு பால் மீறும்படியாக கியாழம் காய்ச்சி ஆறியபிறகுஅதை குடித்துவர கொடுங்கோரமான ரத்த பெரும்பாடு நீங்கும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக