புதன், ஜனவரி 13, 2010

கிருமி ரோக சிகிச்சைகள்


தாடியாதிக் கியாழம் :- மாதுழம்பட்டைக் கியாழத்தில் எண்ணெய் தடவி கலந்து மூன்று நாள் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் கிருமிகள் விழுந்து விடும்.

நியமநாதிகியாழம
் :- வேப்பன் ஈர்க்கு, கடுக்காய், தானிக்காய் நெல்லிவற்றல், வெட்பாலைப்பட்டை, வசம்பு, சுக்கு, திப்பிலி, மிளகுகருங்காலி, வெள்ளைச்சிவதை இவைகள் கோமூத்திரத்துடன் கியாழம் காய்ச்சி 7- நாள் குடித்தால் கிருமிகள் நாசமாகும்.

விடங்காதி கியாழம்
 :- வாய்விளங்கம் கியாழம் வைத்து அதில்  வாய்விளங்கஞ் சூரணத்தை கலந்து குடித்தால் சகலகிருமிகள் நாசமாகும்.

முஸ்தாதிகியாழம் :- கோரைக்கிழங்கு, எலிக்காது இலைவெட்பாலைவிதை, தேவதாரு, முருங்கன்வேர்ப்பட்டை இவைகளை  கியாழம் வைத்து அதில் திப்பிலி, வாய்விளங்கம் இவைகளின் சூரணத்தைக்கலந்து குடித்தால் கிருமிரோகங்கள் நாசமாகும்.

கதிராதி கியாழம் :- கருங்காலிப்பட்டை, வெட்பாலை, வேப்பன் ஈர்க்கு, வசம்பு, சுக்கு, திப்பிலி, மிளகு, திரிபலை, சிவதைவேர், இவைகளைச் சமஎடையாகச் சூரணித்து கோமூத்திரத்துடன் ஏழுநாள் சாப்பிட்டாலும் அல்லது கியாழம் வைத்து குடித்தாலும் கிருமிகூட்டங்கள் கும்பல்கும்பலாக வெளிப்படும்.

கிருமிமூத்திர ரசம் :- பாதரசம் 1, கெந்தி 2, ஓமம் 3, வாய்விளங்கம் 4, சுத்திசெய்த எட்டிவிதை 5, பலாசுவித்து 6, பாகங்களாக சேர்த்து சூரணித்து 5 குன்றி எடை தேனில் கலந்து  சாப்பிட்டு பிறகு கோரைக்கிழங்கு கியாழத்தைக் குடித்தால் கிருமிகள் நாசமாகி வெளியில் விழுந்து விடும்.

விடங்காதி சூரணம் :- வாய்விளங்கம், இந்துப்பு, பெருங்காயம் கடுக்காய், பலாசுவித்து, சவ்வர்ச்சலவணம், திப்பிலி இவைகளைச் சமஎடையாகச் சூரணித்து கொஞ்சம் உஷ்ணமாயிருக்கும் சலத்துடன் சாப்பிட்டால் கிருமிகள் நிவர்த்தியாகும்.

ஆகுபரிணியாதி சூரணம் :- எலிக்காது இலையை அரைத்து உருண்டைசெய்து அதைச் சாப்பிட்டு பிறகு புளித்தநீர் குடித்தால் கிருமிகள் நிவர்த்தியாகும்.

சுவர்ச்சகாதி சூரணம் :- சர்ஜக்ஷ¡ரம், பெருங்காயம், ஜாபத்திரி, வாய்விளங்கம், குங்குமப்பு, திப்பிலி, சித்திரமூலம், சுக்கு, ஓமம், திப்பிலிமூலம், கோரைக்கிழங்கு இவைகளைச் சமஎடையாகச் சூரணித்து மோருடன் சாப்பிட்டால் கிருமிகள் நிவர்த்தியாகும்.

நிம்பாதி சூரணம் :
- வேப்பன், வெட்பாலை, வாய்விளங்கம், பெருங்காயம் இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேனுடன் கலந்து சாப்பிட்டாலும் அல்லது வேப்பன் இலை ஓமம், இவைகளை சூரணித்து தேனுடன் கலந்து சாப்பிட்டாலும் கிருமிரோகம்
நிவர்த்தியாகும்.

ஹரீதகீ சூரணம் :- கடுக்காய்த்தோல், மஞ்சள், சவ்வர்ச்சல வணம், இவைகளை சமஎடையாகச் சூரணித்து பாபரமுள்ளிவேர் கியாழத்தினால் பாவனைசெய்து சாப்பிட்டால் கிருமிகள் நாசமாகும்.

சாவித்திரி வடுகங்கள் :- முருக்கன் விரை 2-பலம், லோஹபற்பம் 2-பலம், கடுக்காய், சீந்தில்கொடி, தானிக்காய், நெல்லிவற்றல் இவைகள் வகைக்கு 1-பலம், புங்கன், செவ்வியம், சுக்கு, திப்பிலி, மிளகு, சித்திரமூலம், ஓமம், வாய்விளங்கம் இவைகள் வகைக்கு  1/2-பலம், எள்ளெண்ணெய் 2-பலம், திரிபலைகியாழம் 16-பலம், கற்
கண்டு 32-பலம், இவைகள் யாவையும் ஒன்றாகச் சேர்த்து அடுப்பு மீது ஏற்றி, ஜலங்கள், ரசங்கள் சுண்டுகிறவரையிலும் வேகவைத்து இலவங்கப்பத்திரி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், சிறுநாகப்பூ, இவைகளைச் சூரணித்து போட்டு சகலமும் ஒன்றாகும்படி கிளறிகழற்சிக்காய் அளவு மாத்திரைகள் செய்து உலர்த்தி அக்கினி பலத்தை அறிந்து சாப்பிட்டால் கிருமிகள், கோஷ்டம், அக்கினி மந்தம், வீக்கம், குன்மம், உதரம், விரணம், காமாலை, பாண்டுரோகம், மூலவியாதி, பகந்தரம் இவைகள் நீங்கும்.

விடங்க கிருதம் :- கடுக்காய் 48-பலம், வாய்விளங்கம் 16-பலம், தசமூலங்கள் வகைக்கு 2 1/2-பலம் வீதம் சேகரித்து இடித்து 256-பலம் சலத்தில் கொட்டி, 64-பலம் கியாழம் மீறும்வரையிலும் சுண்டக்காய்ச்சி வடிகட்டி, அதில் 16-பலம் நெய், இந்துப்பு சிறிது சேர்த்து நெய் பதத்திற்கு சுண்டக்காய்ச்சவும். இத்துடன் சர்க்கரை கலந்து குடித்தால் சகலமான கிருமிரோகங்கள் நீங்கும்.

விடங்காதி யோகம் :- வாய்விளங்க சூரணமாவது வேப்பன் கொழுந்து சூரணமாவது, முருக்கன்விரை சூரணமாவது, அல்லது வேப்பன் இலை, பெருங்காயம் இரண்டும் அரைத்து தேனுடன் கலந்தாவது சாப்பிட்டால் கிருமிரோகம் நிவர்த்தியாகும்.

மிருமிரோகிக்கு பத்தியங்கள் :- பலாசுவித்து, குப்பைமேனி கீரை, புகைப்போடுதல், கபநாகசர பதார்த்தங்கள், சரீரத்தை சோதித்தல், பழய மூங்கில் அரிசி, பழய நெல் அரிசி, பேய்ப்புடல், வெள்ளைப்பூண்டு, சித்திரமூலம், மந்தார இலை, கடுகு, திக்தபதார்த்தங்கள், தண்டுள்ள செடிகளின் எலிக்காது இலை, உளுந்து, வாய் விளங்கம், வேப்பன் இலை, எள் எண்ணெய், கடுகு எண்ணை, தேன், கோமூத்திரம், தாம்பூலம், கள்ளு, கஸ்தூரி, ஒட்டகத்தின் மூத்திரம், நெய், பால், பெருங்காயக்ஷ¡ரம், ஓமம், கறுங்காலி, வெட்பாலை,


எலுமிச்சம்பழரசம், கருஞ்சீரகம், குரோசாணியோமம், தேவதாரு அசோரு, கசப்பு, துவர்ப்பு, காரம், இந்தரசங்கள் இவைகள் கிருமி ரோகமுடையவர்களுக்கு பத்தியங்களென்று அறிய வேண்டியது.

அபத்தியங்கள் :- வாந்தி செய்தல், வாந்தியின் வேகத்தை தடுத்தல், விருத்தமான அன்னபானங்கள், பகல் நித்திரை, திரவ பதார்த்தங்கள், கருகருத்த அன்னம், அஜீரணமான போஜனம், நெய் தயிர், உளுந்து, இலைகரி பதார்த்தங்கள், மாமிசம், பால்,  புளிப்பு, மதுரசம், இவைகளை கிருமிரோகிகள் விடவேண்டியது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக