ஞாயிறு, ஜனவரி 10, 2010

கீடாதி பேதம் ரோகம் - ரோக நிதானம்

கீடாதி பேதம்

உலகத்தில் கீடம் என்பது காலபேதங்களினாலும், தேசபேதங்
களினாலும், உருவபேதங்களினாலும், குணபேதங்களினாலும் அனந்த கோடி வகையாகயிருந்தாலும் அவைகள் வாயுகீடம், அக்கினிகீடம், சோமகீடம், சங்கீரணகீடம் என நான்கு வகைக்குள் அடங்கி 67 வகைப்படும். அவையாவன :- வாயுகீடம் 18-வகை, அக்கினிகீடம் 24-வகை, சோமகீடம் 13-வகை, சங்கீரணகீடம் 12-வகை என்பவையாம். இந்த 67-ம் சுத்த கீடங்களாம். தொந்தகீடங்களுக்கு கணக்கில்லை. இவற்றுள் மகாவிஷகீடம் 4-வகைப்படும். (கீடம் என்பது புழு.)
 

1. வாயுகீடம் :- இது 18 வகைப்படும். இவைகள் வாத பிரகோபமாய்யிருக்கும். இவ்விஷத்தினால் அவ்விடத்தில் அதிக நோயும் சரீரம்முழுவதும் குத்தப்பட்டது போல் வேதனையும் உண்டாகும்.

2. அக்கினிகீடம் :- இது 24 வகைப்படும். இவைகள் பித்த பிரகோபமாய்யிருக்கும். இவ்விஷத்தினால் கடிவாயில் ரத்தங்கம்மி
இலுப்பைப்பூ, பேரிச்சங்காய் இவைகளைப்போல் கொப்புளம் எழும்புதலும், எரிச்சலும் பேதியும் உண்டாகும்.

3. சோமகீடம் :
- இது 13 வகைப்படும். இவைகள் சிலேஷ்ம பிரகோபம். இவ்விஷத்தினால் கடிவாயில் அத்திப்பழம் போல்
கொப்புளமும் அதில் அற்பநோயும் உண்டாகும்.

4. சங்கீரண கீடம் :- இது 12 வகைப்படும். இவைகள் திரிதோஷபிரகோபம். இது பிராணநாசத்தையும் செய்யும். இவ்விஷத்
தினால் வாதகீடம் ஆதியாக சோமகீடம் ஈறாகச்சொல்லிய மூன்று விதகீடக விஷகுணங்கள் கொப்புளங்களும் வேதனைகளும் மிசிரம மாக ஒரே காலத்திலுண்டாகி அவ்விடத்தில் வீங்குவதும், நமைச்சலோடு துர்கந்தரத்தம் ஒழுகுவதுமா யிருக்கும். அன்றியும் சிரசும் கண்களும் கனத்தல், மூர்ச்சை, பிரமை, இரைப்பு, இருமல், சுரம், அரோசகம், அதிகவேதனை என்னுங் குணங்களுண்டாகும். இவை
கள் சாமானிய கீடக விஷங்கள். இவைகள் வாதாதி மூன்றுதோஷ சனனங்களாகவும் திரிதோஷசனனங்களாகவும் இருக்கும்.

மகாவிஷ கீடம் :- சர்ப்பங்களின் மலமூத்திரங்களிலும் சுக்கிலத்திலும், முட்டைகள் உடைந்துநனைந்த இடங்களிலும் அச்சர்ப்பங்கள் இறந்து அழிந்த உடலிலும் பிறக்கின்ற கீடம் நாலுபேதமாம்.

அஷ்டகீடம் :- இது ஒந்தி, தவளை, அடவி ஈ, வீட்டுப்பல்லிகாட்டுகொசு, குளவி, மலையெறும்பு, சிலந்தி முதலிய எண்வகைக்
கீடங்களாம்.

1. ஓணான் :- இது கடித்தால் அங்கு பிறையைப்போல்காயம் உண்டாகும். அப்போது வீக்கம், நமைச்சல், குத்தல், நோய், சோருதல், மலத்தில் பலநிறம் என்னுங் குணங்கள் உண்டாகும்.

2. தவளை :- இது கடிக்கில் அதிக சோம்பலான நித்திரை, மூர்ச்சை, கறுத்துப் பறவுகின்ற சொறி உண்டாகும்.

3. அடவி ஈ :- இது கடிக்கில் அதிக நித்திரையும், மிகு மூர்ச்சையும் உண்டாகும்.

4. வீட்டுப் பல்லி :- இது கடிக்கில் நோய், வியர்வை, வீக்கம், எரிச்சல், மார்பு வேதனை, பொடிச்சிரங்கு என்னுங் குணங்கள்
உண்டாகும்.

5. காட்டு மசகம் :- இது கடிக்கில் அவ்விடத்தில் நமைச்சல், அற்பவீக்கம், வேதனை யுண்டாகும். இது அசாத்தியம். (மசகம்
என்பது கொசு.)

6. மக்ஷ¢கா :- இது கடித்தாலும் கொட்டினாலும் அவ்விடத்தில் வீக்கம், நமைச்சல், எரிச்சல் முதலிய குணங்கள் உடனே உண்டாகி அடங்கிப் பின்பு தடித்த உபதிரவம் உண்டாவதுடன்
அத்தடிப்பில் மாறாது சிலைத் தண்ணீரும் வடியும். (மக்ஷ¢கா என்பது குளவி. )

7. மலைப் பிபீலிகா :- இது கடிக்கில் அவ்விடத்தில் நீர்த்துளியைப்போல் தடித்தல், அதிகநோய், நெருப்பால் சுட்டதுபோல்
எரிச்சல், நமைச்சல், தேகத்தில் அழலை என்னுங் குணங்களுண்டாகும். (பிபீலிகா என்பது எறும்பு.)

8. சிலந்திப்பூச்சி :- சிலந்திப்பூச்சி 28-வகைப்படும். வாதத்தில் -7, பித்தத்தில் -7, சிலேஷ்மத்தில் -7, சங்கிரணத்தில் -7 ஆக
இருபத்தெட்டாம். அன்றியும் பிரத்தியேக சிலந்தி என்பதும் ஒன்று உண்டு.

சிலந்திப்பூச்சி பெரும்பாலும் சுக்கிலபக்ஷதிதிகளில் சாயங்கால
வேளையிற் கடிக்கும். இவ்விஷங்களினால் கடித்தவாயில் வெளுப்பு, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் என்னும் நிறமாகவும் பலவித நிறமாகவும்
இருப்பதன்றி அவ்விடத்தில் மிருதுவாக உயர்ந்து தடித்து அத் தடிப்பைச் சுற்றிலும் சிறுசிறு கொப்புளங்கள் உண்டாகும். அக்கொப்புளச் சலம்பட்ட இடமெல்லாம் கொப்பளிக்கும். இதனால் விசாப்பி ரோகத்திலும் சோபை ரோகத்திலும் உண்டாகின்ற வருத்தமும் சுரமும் வியர்வையும் உண்டாகும்.

சிலந்தியின் சப்தவேகவிஷ நிதானம் :- விஷமானது தேகத்தில் வியாபித்த முதல் நாளில் அவ்விடத்தில் நிறம் தோற்றாமல்
கொஞ்சம் தினவு, 2-வது நாளில் இயற்கை நிறத்துடன் தடித்து தினவோடுகூடிய சிறிய கட்டிகளெழும்புதல் 3-வது நாளில் அகல் கவிழ்த்
ததுபோல் தடித்துச் சிவந்து அவ்விடத்திலுள்ள உரோமங்கள் சிலிர்ப்பதுமன்றி அந்த மயிர்க்கால்களில் இரத்தம் கம்மி சுரமுண்டாகு
தல், 4-வது நாளில் அங்கு வீக்கம், எரிச்சல், இரைப்பு, பிரமை, இவை உண்டாகுதல், 5-வது நாளில் விஷ துர்க்குணங்களெல்லாம்
அதிகரிக்குதல், 6-வது நாளில் அவ்விஷம் மர்மஸ்தானங்களில் வியாபிக்குதல், 7-வது நாளில் உயிருக்கு அபாயம் வருகுதல் முதலி
யனவாம்.

சர்வசிலந்திகளின் சாமானியவிஷ லக்ஷணம் :- சிலந்திப்பூச்சிகளின் விஷம் ஏறினால் அவ்விடத்தில் எழும்புகின்ற விரணங்களில் சிலது கொப்புளங்களாயும் சிலது மண்டலாகாரமாகியும் சிலது சுவேத நிறமாயும், சிலது சிவந்த நிறமாயும், சிலது மஞ்சள் நிறமா
யும், சிலது நீல நிறமாயு, சிலது மிருதுவாயும், சிலது கடினமாயும் இருக்கும். எட்டுக்கால் பூச்சியும் இந்த சிலந்தி பூச்சிகளின் பேதமே
யாம்.

சிலந்தியின் அஷ்டவிஷ பேதம் :-

சிலந்தி பூச்சிகளின் சுவாசம், பல், மலம், மூத்திரம், சுக்கிலம், வாய், வாய்நீர், ஸ்பரிசம் என்னும் எட்டு ஸ்தானங்களில் விஷங்கள்
பிறக்கும். அவைகள் மனிதர்மீது பட சகல துர்க்குணங்களு முண்டாகும்.

1. சிலந்தியின் சுவாசம் :- இது சுரத்தையும் தாகத்தையும் உண்டாக்கும்.

2. சிலந்தியின் பல் :- இது அழுந்திய இடத்தில் பிறக்கின்ற விரணம் நிறமுபேதமும் கடினமும் ஸ்திரமும் உள்ளதாயிருக்கும். இதனால் சரீரத்தில் வீக்கம், எரிச்சல், வேதனை, வியர்வை தாகம் என்னும் இக் குணங்கள் உண்டாகும்.

3. சிலந்தியின் மலம் :-
 இது பட்டவிடத்தில் இலுப்பைப்பழம் போல் வெளுத்த விரணம் பிறந்து அதில் துர்க்கந்தமும் எரிவும் தினவு முண்டாகும்.

4. சிலந்தியின் மூத்திரம் :- இது பட்டவிடத்தின் நடுவில் கறுத்தும் உயர்ந்தும் சுற்றிலும் வாடியும் புஷ்பம்போல் மலர்ந்தும்
இருக்கின்ற விரணம் பிறக்கும். அதில் துர்க்கந்தமும் எரிச்சலும் மாறாது உண்டாகும்.

5. சிலந்தியின் சுக்கிலம் :- இது பட்டவிடத்தில் கடினமான கொப்புளமும் நோயும் உண்டாகும்.

6. சிலந்தியின் வாய் :-
 இது பட்டவிடத்தில் முருக்கம்பூவைப்போல் நிறமுள்ள விரணம் பிறந்து அதில் குத்தலும் ஊரலும் உண்
டாகும்.

7. சிலந்தியின் வாய்நீர் :- இது பட்டவிடத்தில் புங்கின்பூவைப்போல் நிறமுள்ள விரணம் பிறக்கும். அவ்விரணத்தின் பக்கங்களிற்
பூச்சி ஊருவது போல் பரபரத்தலும் குத்தலும் எரிச்சலும் உண்டாகும்.

8. சிலந்தியின் ஸ்பரிசம் :- இது தேகத்தில் பட்டாலும் இப்பரிசத்தைப் பெற்ற வஸ்திரம் பட்டாலும் முற்கூறிய குணங்களெல்
லாம் விரைவில் உண்டாகும்.
 

மீன் :- சில மீன்கள் கடித்தால் நோயும் எரிச்சலும் உண்டாகும். நீர் வண்டு, சுழல் வண்டு, பாசிவண்டு, எரிவண்டு முதலிய சில
விஷமுள்ளவைகள் கடிக்கில், அவ்விடத்தில் வீக்கம், நமைச்சல், நோய் நுரைத்த பேதி, சரீரத்தில் தடிப்பு என்னும் இக்குணங்கள் உண்டாகும்.

நாட்டுமரவெட்டை :- இது கடிக்கில் வியர்வை, நோய், சரீரம் தடித்தல், வீக்கம், கறுப்பகத்திப்பூநிறம்போல் பொடி சிரங்குகள்
எழும்புதல், பிரமை என்னும் இக்குணங்கள் உண்டாகும்.

விருக்ஷ¢கம் (தேள்) :- இது சர்ப்பங்கள் செத்தழிந்த இடத்திலும் சாணம், கோணிப்பட்டை முதலியவை மக்கிய இடத்திலும், மயானத்தின் சாம்பலிலும் பிறக்கும். இது முறையே வெளுத்தும் கறுத்தும் சிவந்தும் இருக்கும். இவற்றின் விஷம் ஏறினால், நா
தடித்தல், தேகம் மரத்தல், அதிகநோய், நாசியால் ரத்தம் விழுதல், சர்வாங்கத்திலும் வியர்வை, மூர்ச்சை, வாயுலரல் என்னும் குணங்க
ளுண்டாக்கும். (விருக்ஷ¢கம் என்பது தேள்)

தேள்கள் நான்குவகைப்படும். அன்றியும் நண்டுவாய்க்காலி என்று ஒன்றும் உண்டு.

1. உச்சிலிங்கத் தேள் :- இது பகல்காலத்தில் கொட்டும். இவ்விஷத்தினால் அவ்விடத்தில் வீக்கம், நரம்புகளில் மிகுவேதனை,
உரோமச்சிலிர்ப்பு, அதிக சீதளம் என்னும் குணங்களுண்டாகும். இது மந்திரத்தால் வசப்படும்.

2. வாதத் தேள் :- இது மார்புநோய், மேல்சுவாசம், எலும்பு நரம்பு, கீல் இவைகளில் நோய், தேகங்கறுத்தல், கூச்சல், புரளல்
முதலிய குணங்களை யுண்டாக்கும்.

3. பித்தத் தேள் :- இது அறிவு நீங்குதல், சுடுகையான மேல் மூச்சு, வாயானது காரமாயிருத்தல், முகத்தில் எண்ணெய் தடவி
னதுப்போல் பளபளப்பு, மாமிசங் கறைதல், கோழை என்னும் குணங்களை யுண்டாக்கும்.

4. சிலேஷ்ம தேள் :- இது வாந்தி, அரோசகம், மார்பு அதிரல், வாயில் சலம்வடிதல், பீநசம், சரீரம் முற்றிலும் வாழைத்தண்டைஒத்த சீதளம், வாயினிப்பு என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

கறுந்தேள், செந்தேள், சிறியதேள், இராஜத்தேள் என பல வகை தேள்கள் உண்டு. அவைகளின் விஷகுணங்கள் மேற்கூறிய நான்கு வகைகளின் குணங்களையே பெரும்பாலும் ஒத்துயிருக்கும்.

நண்டுவாய்க்காலி :
- இது கொட்டினால் வியர்வையும், நெறி கட்டுதலும், வீக்கமும், கடுப்பும், குடைச்சலும், எரிச்சலும், குமுற
லும், வாயில் நுரையும் உண்டாகும்.

மூஷிகம் (எலி) :- மூஷிகம் என்பது 18 வகைப்படும். லாலஜம் சபளம், புண்டரம், ஹரிதம், சிகுரம், அசிதம், கசாயந்தம், குககம்,
கபிலம், கோகுலம், கிருஷ்ணம், சபலம், சுவேதம், கபோதம், உந்துரு பலினி,ரசாலம், என்பவையாம் அன்றியும் சுந்தரி என்பது
ஒன்றுண்டு இதுவே மூஞ்சுறு.

எலிகள் கடிக்கில் அந்த இடத்தில் ரத்தம் வடிதல், கிரந்தி வீக்கம், மச்சங்கள் எழும்புதல், பிரமை, அரோசகம், குளிர்க்காய்ச்சல், நடுக்கல், கீல்நோய், உரோமச்சிலிர்ப்பு, மூர்ச்சை, சிலேஷ்மாதிக்கம், இருமல், இரைப்பு, வாந்தி, தாகம் முதலிய குணங்கள் உண்டாகும்.

எந்த எலியின் கடியினாலாவது மூர்ச்சை தேகவீக்கம், மாற்றுருவம், வியர்வை, சாதுமந்தம், சுரம், தலைநோய், வாய் நீருறல்,
ரத்தவாந்தி என்னும் இக்குணங்களை உண்டாக்கில் அசாத்தியம்.

பேய்நாய் :- இது கடித்தால் அந்த இடத்தில் விரணம் பிறக்கும். இதனால் தாதுநஷ்டம், வாய்நீர் ஊறல், கண்மயக்கம், காதுமந்தம்
தேஜசுகுன்றல், தாள்பிடிப்பு, சிரோபாரம், தூங்கும்போது அவ்விரணத்தில் கறுத்த ரத்தம் வடிதல், மார்புநோய், சுரம், தேகம், மாந்தல், தாகம், மூர்ச்சை என்னும் இக்குணங்கள் உண்டாகும்.

சகலமிருகசெந்துக்களின் விஷ நிதானம் :- குதிரை, புலி கரடி, காட்டுப்பன்னி, கோனாய், நரி, பூனை, மாயப்பூனை, குரங்கு கீரி, முதலை முதலிய செந்துக்கள் கடிக்கில் அந்த கோரை தந்தங்களில் இருக்கின்ற விஷத்தினால் தினவு, உருவபேதம், நோய், நித்தி ரையில் வியர்வை ஒழுகுதல், சுரம், பிரமை, தாகம், வீக்கம், மூர்ச்சை கடிவாயில் மச்சமும், அதன் மேல் கொப்புளமும் எழும்பிப் புடைத்தல்
அநேகரோகமும் பிறக்குதல் என்னும் இக்குணங்கள் உண்டாகும்.

தந்தநகவிஷநிதானம் : - பசு முதலிய மாடுகளுக்கும், மனி தர்களுக்கும் பல், நகம் இவைகளில் விஷமுண்டு. அவைகள் பட்டு
விரணம் பிறந்தால் அதில் வீக்கத்துடன் ரத்தம் வடியும். இதனால் சுரமுண்டாகும். இது சாத்தியம்.

சகலவிஷஉபத்திரவ நிதானம் :- சகல விஷங்களுக்கும்,சுரம் இருமல், வாந்தி, விக்கல், இரைப்பு, மூர்ச்சை, தாகம், சரீரத்தில்
கடினத்துவம், வயிறுப்புசம், அடிவயிறும் தலையும் நோதல், வீக்கம் துர்க்கந்தரத்தம் வடிகின்ற விரணம், இதுவே விஷ உபத்திரவம். இந்த குணங்கள் உண்டாவதற்கு முன்பே தகுந்த சிகிச்சைகளை செய்யில் சாத்தியமாம். நீடிக்கில் கஷ்ட சாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக