புதன், ஜனவரி 13, 2010

மேதோ ரோக சிகிச்சைகள்

மேதோரோக சிகிச்சை 

மேதோரோகத்திற்கு சவ்வியாதி சூரணம் :- செவ்வியம், சுக்கு, சீரகம், சுக்கு, திப்பிலி, மிளகு, பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், சித்திரமூலம், இவைகளை சூரணித்து,வ்தேனுடன் கலந்து சாப்பிட்டால்
மேதோரோகம் நிவர்த்தியாகும்.

பலதிரிகாதி சூரணம் :- திரிபலை, திரிகடுகு, இந்துப்பு இவைகளை சூரணித்து கலந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டால் கபமேதோரோகங்கள், வாதம் இவைகள் நிவர்த்தியாகும்.

திரிகடுகாதி சூரணம் :- திரிகடுகு, கடுகுரோகணி, முள்ளங்கத்திரி, கண்டங்கத்திரி, சிற்றாமல்லி, போராமல்லி, நிலப்பனங்கிழங்கு, சவ்வர்ச்சலவணம், மஞ்சள், மரமஞ்சள், அதிவிடயம்,  பெருங்காயம், வெட்பாலை, சீரகம், கருஞ்சீரகம், வாய்விளங்கம் சிவகரந்தை, கொத்தமல்லி இவைகள் சமஎடையாகச் சூரணித்து இதற்கு சமஎடை லோஹபற்பம் கலந்து தேனுடன் சாப்பிட்டால்மேதோரோகத்தினால் உண்டான குணங்கள் நிவர்த்தியாகும்.

ஸ்தூலகந்தக ரசம் :- தாளகபற்பம், கந்தகபற்பம், இவைகளைச் சமஎடையாகக் கல்வத்திலிட்டு முடக்கொத்தான் இலைரசத்தில் 3 நாள் அரைத்து 2 குன்றி அளவு தேனுடன் கலந்து சாப்பிட்ட பிறகு உப்புநீர் சாப்பிட்டால் மேதோரோகம் நிவர்த்தியாகும்.

திரிமூர்த்திரசம் :- சுத்திசெய்தரசம், அயச்செந்தூரம்இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டு நொச்சியிலைரசம், நிலப்பனங்கிழங்குரசம், இவைகளால் அரைத்து 2 குன்றி எடை மருந்தை தேனில் கலந்து சாப்பிட்டு சுக்கு, மிளகு, திப்பிலி, மோடி, செவ்வியம், சித்திரமூலம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், பஞ்சலவணங்கள், கார்போக அருசி இவைகளை சூரணித்து இதில் திரிகடிப்பிரமாணம் வீதம் அருந்திவர மேதோரோகம், அக்னிமந்தம் ஆமவாதம், சிலேஷ்மரோகம், இவைகள் நிவர்த்தியாகும்.

தியூஷணாதி லோஹம் :- திரிகடுகு,திரிபலை, சித்திரமூலம், செவ்வியம், பீடாலவணம், சவுட்டுப்பு, கார்போக அருசி, இந்துப்பு, சவ்வர்ச்சலவணம், அயச்செந்தூரம் இவைகளை சமஎடையாகசூரணித்து 2 குன்றி எடை மருந்தை நெய், தேன் இவைகளுடன் சாப்பிட்டால் அதிஷ்தூலரோகம், மேகம், மேககுஷ்டம், சிலேஷ்ம வியாதி, இவைகள் நிவர்த்தியாகும். அக்கினிதீபனம் உண்டாகும்.பத்தியம் இச்சாபத்தியம்.

ரசபஸ்பயோகம் :- ரசபஸ்பம் குன்றி எடை தேனுடன் கலந்து சாப்பிட்டு பிறகு கொஞ்சம், உஸ்ணமாயிருக்கும் சலத்தில் தேன் கலந்து சாப்பிட்டால் மேதசூனால் உண்டாகிய ஸ்தெளவியம் நிவர்த்தியாகும்.

தாம்பிரபஸ்ப யோகம் :- தாம்பிரபஸ்பத்தை திப்பிலி சூரணத்துடன் கூட்டித் தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஸ்தெளவியரோகம் நிவர்த்தியாகும்.

கந்தகயோகம் :- சுத்திசெய்த கெந்தியை இலுப்ப எண்ணெய்யால் அரைத்து முறைப்படி சாப்பிட்டால் மேதோரோகம், வாதரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.

திரிபலாதித்தைலம் :- திரிபலை, அதிவிடயம், பெருங்குரும்பை சிவதை, சித்திரமூலம், ஆடாதோடை, வேப்பன், கொன்னை வசம்பு, வாழைக்கிழங்கு, மரமஞ்சள், சீந்தில்கொடி, வெட்பாலை, திப்பிலி, கோஷ்டம், கடுகு, சுக்கு இவைகளை கற்கமாக்கி எண்ணெயில் கலந்து நொச்சிச் சாறும் கூட்டி எரித்து தைலபதத்தில் காய்ச்சி வடித்து வைத்துகொண்டு உள்ளுக்கு அருந்துவதுடன்தலைக்கு தேய்த்துக் கொள்ளுதல் கண்டூஷதன் நசியம் வஸ்திகர்மம் இவைகளையுஞ் செய்தால் தூலத்துவம், கண்டு கபரோகம் இவைகள் நீங்கும்.

மேதோரோகத்திற்கு பத்தியங்கள் :- சிந்தை, அதிகவேலை செய்வதால் உண்டான அலுப்பு, ஜாகரணை, மாதர்புணர்ச்சி, நலுங்கு வைத்துகொள்ளல், லங்கனம், வெய்யில், ஆனை, குதிரை இவைகளின் மீது சவாரி செய்தல், விரேசனம், வாந்தி, தற்பணம், பழையமூங்கில் அரிசி, வருகுஅரிசி, சோளம், யவதானியம், கொள்ளு,கடலை, சிறுகடலை, பச்சைபயறு, துவரை, தேன், பொரி, காரம், கசப்பு துவர்ப்பு இவைகளுடைய ரசங்கள், மோர், மீன்கள், வறுத்த கத்திரிக்காய், திரிபலை, குங்கிலியம், திரிகடுகு, பாயாசம், வெள்ளை
கடுகு, எண்ணெய், ஏலக்காய், சகல க்ஷ¡ரங்கள், கெச்சக்கா எண்ணெய், காய், இலைகறிகள், அகில் சந்தனம் முதலிய வாசனைப்பொருட்களை தடவிக்கொள்ளுதல், ஓமம், வெந்நீர் சிலாசத்து இவைகளை உபயோகிப்பதினால் மேதோரோகம் நிவர்த்தியாகும்.

அபத்தியங்கள் :- குளித்தல், ரசாயனம், அரிசி, கோதுமை,பால், கரும்பினால் ஆகும் பதார்த்தங்கள், உளுந்து திருப்திகரமான பக்ஷணங்கள், வியர்வை வாங்கல், மச்சங்கள், மாமிசங்கள், பகல் நித்திரை, கசந்த பதார்த்தங்கள், மதுரமான அன்னம், பழையஅன்னம், வாந்தி இவைகள் மேதோரோகத்திற்கு அபத்தியங்கள்.

 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக