வியாழன், ஜனவரி 14, 2010

அர்புத ரோக (கட்டிகள் )சிகிச்சைகள்



அற்புதத்திற்கு ரௌத்திர ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்தி செய்த கெந்தி இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு 4-சாமங்கள் மிருதுவாக அரைத்து சமன் திப்பிலிச் சூரணத்தைக் கலந்து வெற்றிலை காம்புரசம், சிற்றாமுட்டி ரசம், சிறுகீரை ரசம், வெள்ளைச்சாட்டரணைரசம், கோமுத்திரம் இவைகளினால் 4-ஜாமங்கள் அரைத்துஅகலி லடக்கி மணல் மறைவில் இலகுபுடமிட்டு குன்றிஎடை வீதம் தேனுடன் காலை மாலை சாப்பிட்டு வருவதுடன் பாரிஜாத இலை கோரைக்கிழங்கு பேயாவரை இலை, வேப்பன் இலை இவைகளை அரைத்து மேலுக்கு போட்டுவர கட்டிகள் விரைவில் குணமாகும்.

யவக்ஷ¡ராதி லேபனம் :- யவக்ஷ¡ரம், வாய்விளங்கம் இவைகளை கல்வத்திலிட்டு வெண்ணெயுடன் அரைத்து ஓணான் ரத்தத்துடன் கலந்துதடவினால் அற்புதம் அதிசீக்கிரமாக நிவர்த்தியாகும்.

கெந்தகாதி லேபனம்
 :- கெந்தி, மனோசிலை, சுக்கு, வாய்விளங்கம், நாகபற்பம் இவைகளை சமஎடையாக சூரணித்துக் கலந்து சிறிது எடுத்து ஓணான் ரத்தத்துடன் கலந்து லேபனஞ் செய்தால் அற்புதரோகம் நிவர்த்தியாகும்.

ஹரித்திராதி லேபனம் :- மஞ்சள், லோத்திரம், ரசகற்பூரம், வெல்லம், சாம்பிராணி, மனோசிலை இவைகளை சமஎடையாக கல் வத்திலிட்டு சூரணித்து தேனுடன் கலந்து லேபனஞ் செய்தால் அற்புதரோகங்கள் நிவர்த்தியாகும். இந்த முறை சகலமான அற்புதங்களுக்கும் தடவ உதவும்.களகண்டம், கண்டமாலை, அபசி, கிரந்தி, அற்புதம் இவைகளுக்கு பத்தியங்கள் :-பழைய நெய்யை குடித்தல், பழைய சிகப்பு நெல்லரிசி, யவதானியம், பச்சைபயறு, புடலங்காய், பாவக்காய்,பொன்னாங்கண்ணி கீரைகள், ரூக்ஷ பதார்த்தங்கள், காரபதார்த்தங்கள், தீபன பதார்த்தங்கள், குங்லிலியம், சிலாசத்து இவைகள் பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- பால், கரும்புரசம், சர்க்கரை, வெல்லம்,ஐந்து மாமிசங்கள், பழயசாதம், புளிப்பு, தித்தீப்பு, குருபதார்த்தங்கள், இவைகள் ஆகாது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக