எண்ணெய், நெய், குங்கிலியம், தேன்மெழுகு, சித்தரத்தை வெல்லம், இந்துப்பு, காவிக்கல் இவைகளை சமஎடையாக சூர ணித்து காய்ச்சி உதடுகளின் மீது தடவினால் உதடுபிளப்பு நீங்கும்.
குங்கிலியம், வெல்லம், மெழுகு இவைகள் மூன்றும் சமஎடயாக எடுத்து நெய்யைவிட்டாவது அல்லது எண்ணெயைவிட்டவது காய்ச்சி தடவி வந்தால் சருமவிரணம், குத்தல், சீழ், இரத்தம் வடிதல் இவைகள் நிவர்த்தியாகும்.
பித்தவிகாரங்களுடைய உதடுவியாதிகளில் தலைவலி, வாந்தி, பேதி, காரமான இரசத்தை குடித்தல், இரசத்துடன் கூடிய போஜனம், சீதகரமான லேபனம், பித்தசமனங்களான கியாழங்களை அருந்தல் முதலிய உபசாரங்களை செய்யவேண்டியது.
உதடுபிளப்பு வியாதிகளுக்கு அந்தந்த தோஷங்களுக்கு தகுந்த சிகிச்சைகளை செய்யவேண்டியது.
விரணமாயிருந்தால் விரணசிகிச்சை செய்யவேண்டியது.
0 comments:
கருத்துரையிடுக