வியாழன், ஜனவரி 14, 2010

தாஹ ரோக சிகிச்சைகள்

தாகரோகசிகிச்சை

பில்வாதி கியாழம் :- வில்வம்பழம், துவரை, காட்டாத்திப்பூ சுக்கு, மிளகு, திப்பிலி, செவ்வியம், சித்திரமூலம், தர்ப்பைவேர் அல்லது எள்ளுத்தண்டு, இவைகளை கியாழம் வைத்து குடித்தாலும் அல்லது வாந்தி செய்வித்தாலும் கபத்தினால் உண்டாகிய தாகம் நிவர்த்தியாகும்.

ஆமிராதிகியாழம் :- மா, நாவல் இவைகளின் பட்டையை சமஎடையாய் கியாழம் வைத்து தேன் கலந்து குடித்தால் வாந்தி தாகம் இவைகள் நிவர்த்தியாகும்.

கசேர்வாதிகியாழம் :- கிச்சிலிக்கிழங்கு, நெல்லிவற்றல் தாமரைவிதைகள், தாமரைத்தண்டு, கரும்பு இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் கற்கண்டைப்போட்டு குடித்தால் பித்தத்தினால் உண்டான தாகம் நிவர்த்தியாகும்.

காஸ்மரியாதி கியாழம் :- நிலப்புசினி, கற்கண்டு, சந்தனம், வெட்டிவேர், தாமரைத்தண்டு, திரா¨க்ஷ, அதிமதூரம் இவைகள் சமஎடையாய் கியாழம் வைத்து குடித்தால் பித்தத்தினால் உண்டான தாகம் நிவர்த்தியாகும்.

குஷ்டாதிசூரணம் :- கோஷ்டம், காசதர்ப்பைவேர், அதிமதூரம் இவைகளை சூரணித்து சலத்துடன் கலந்து குடித்தால் கொஞ்சகாலமாயிருக்கும் தாகரோகம் நிவர்த்தியாகும்.

கண்டூஷம் :- சந்தனம், தாமரைத்தண்டு, கோரைக்கிழங்கு கொத்தமல்லி, வேப்பன்பட்டை, கலியாண பூசினி, கருங்காலிப்பட்டை வெள்ளைச்சாரணை, வெள்ளை ஊமத்தன் இவைகளை சமஎடையாய்கியாழம் வைத்து எட்டில் ஒரு பாகம் மீறும்படியாய் சுண்டக்காய்ச்சி கண்டூஷம் செய்தால் தாகம் நிவர்த்தியாகும்.

வடுகங்கள் :- கருப்பு, அல்லி, தேன், நெற்பொரி, ஆலம் விழுதுமுளைகள், கோஷ்டம் இவைகளை சமஎடையாய் அரைத்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் தாகநோய் தீரும். கர்ஜீரம், திரா¨க்ஷ, அதிமதுரம், கற்கண்டு இவைகள்
வகைக்கு 4-தோலா, திப்பிலி, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகள் வகைக்கு 2-தோலா இவை யாவையும் தேன்கூட்டி அரைத்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் தாகம், ரத்தபித்தம் நிவர்த்தியாகும்.

கருப்பு அல்லி, கோரைக்கிழங்கு, நெற்பொறி, ஆலம்விழுது முனைகள் இவை யாவையுஞ் சமஎடையாய் சூரணித்து தேன்கலந்து மாத்திரைகள் செய்து அருந்த தாகநோயை சமனஞ்செய்யும்.

உபசர்க்க சாமானியவிதி :- அதிக தாகத்தினால் சலத்தைகுடித்து வயிறு நிரம்பியிருந்தால் திப்பிலி கியாழத்தினால் வாந்தி செய்விக்க வேண்டியது. வாதானுலோம சஞ்சாரத்திற்கு மாதுளம்பழம், காசிக்கீரை, கொடிமாதுளம்பழம் இவைகள் கலந்த ஔஷதத்தை கொடுக்கவேண்டியது.

பாநாத்யயஜதிருஷ்ணா சிகிச்சை :- ஆட்டு இரைச்சிரகம், நெய், சர்க்கரை, தேன் இவைகளை கலந்து குடித்தால், கஷ்டமான தாகரோகம், மூர்ச்சை, வாந்தி, மதாத்தியம் இவைகள் நிவர்த்தியாகும்.

தாகரோகத்திற்கு பத்தியங்கள் :- வாந்தி, நித்திரை, நீராடுதல், கவளதாரணம், நெல், கஞ்சி, பொரிமாவு, நீர்க்கஞ்சி, நிர்ஜல தேசத்தின் மிருக பக்ஷ¢ மாமிசரசங்கள், சர்க்கரை, தேன், தித்தீப்பான தயிர், வருத்தபச்சைபயறு, சிறிய கடலை, கடலை இவைகளின் ரசங்கள், வாழைப்பூ, பர்பாடகம், மோர், திரா¨க்ஷ, வெட்டிவேர், விளாம்பழம், இலந்தை, கலியாணப்பூசினிக்காய், பேரீச்சம்பழம், மாதுளம்பழம், நெல்லிக்காய், வெள்ளரிக்காய், ஓடும்நீர், எலுமிச்சம்பழம், கரிவேப்பிலை  கொடிமாதுளம்பழம்,  பசும்பால் இலுப்பைப்பூ, குறுவேர், கசப்பு மதுரம் இந்த ரசங்கள், நுங்கின் ஜலம், குளிர்ந்த ஜலம், பால், பானகம், தேன், குளத்தின் ஜலம், தண்ணீர்விட்டான்கிழங்கு, சிறுநாகப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், கொத்தமல்லி, ரக்தசந்தனம், பச்சைக்கற்பூரம்,
கிச்சிலிக்கிழங்கு, நிலா, குளிர்ந்தகாற்று, சந்தனம் பூசிகொண்ட மாதரை ஆலிங்கனம் செய்தல், முத்துமாலைகள் அணிந்துகொள்ளல், ஆற்றில் நீராடுதல், லேபனம் இவைகள் தாகரோகிக்கு பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- சிநேஹம், அஞ்சனம், வியர்வைவாங்கல், புகைக்குடித்தல், நசியஞ்செய்தல், வெய்யில், குச்சியால் பல்துலக்கல், பழைய அன்னம், புளிப்பு, காரம், உப்பு, கெட்டஜலம், காரமுள்ள பதார்த்தங்கள் இவைகள் தாகரோகிக்கு ஆகாது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக