ஞாயிறு, ஜனவரி 10, 2010

குய்ய ரோகம் - ரோக நிதானம்

குய்ய ரோகம்

தகாத நடைத்தை, மிகு போகம், நோயுள்ள மாதர்களின் சேர்க்கை முதலிய காரணங்களினால் வாதாதி தோஷங்கள் விகற்ப முற்று ஆண்குறியில் நின்று பலவித நோய்களை பிறப்பிக்கும். இதற்கு குய்ய நோய் அல்லது ஆண்குறி நோய் என்றும் கூறுவர்.
 

இது 23 வகைப்படும்.

1. உபதம்ஸம் :- இது ஆண்குறியில் விஷக்கடியால் உண்டாகும் குறிகுணங்களை போன்ற சகல குணங்களையும் உண்டாக்கலால் உபதம்ஸம் எனப்பட்டது. இது வாத பித்த
கப திரிதோஷசப்த உபதம்ஸம் என ஐவகைப்படும்.

வாதஉபதம்ஸம் :- இது ஆண்குறியின் துவாரத்தை அடைத்து உலர்த்தல் அவ்விடத்தில் மரத்தல், பலவிதநோய் சருமத்தின் மீது குறுகுறுவாகஎழுப்புதல் என்னும் இக்குணங்களை
உண்டாக்கும்.

பித்த உபதம்ஸம் :- இது முன்கூறிய உபதம்ஸ ரோக குணத்துடன் ஆண்குறியில் சிவத்த வீக்கத்தை உண்டாக்கும்.

சிலேஷ்ம உபதம்ஸம் :- இது ஆண்குறியை தடித்து கனத்து மினுமினுக்கச்செய்யும். இதனால் சீதழமும் அவ்விடத்தில் தினவும்
உண்டாகும்.

திரிதோஷ உபதம்ஸம் :- இது ஆண்குறியில் வாத முதலிய மூன்றுவித உபதம்ஸரோக குணங்களை உண்டாக்கும். இதனால்
இரண்டு அண்டங்களும் வீங்கும்.

ரத்த உபதம்ஸம் :- இது ஆண்குறியை கறுப்பாக்கி எந்நேரமும் சுரத்தை உண்டாக்கும். இவற்றில் வாதமுதல் மூன்று உபதம்ஸ ரோகம் சாத்தியம்.
ரத்த உபதம்ஸ ரோக கஷ்ட சாத்தியம், திரிதோஷ உபதம்ஸ ரோகம் அசாத்தியம்.

2. அரிசோ ரோகம் :- இது வாதபித்த கபங்கள் ரத்த மாமிசங்களை அனுசரிக்கும்போது பிறக்கும். அப்போது ஆண்குறியின் உள்ளிலாவது வெளியிலாவது நமைச்சல், அவ்விடங்களில் மூலரோக முளைகளைப்போலும், சிறு சிறு காளான் முளைகளைப்போலும் மாமி
சம் எழும்புதல், அவைகளில் மிகவும் வியர்வை கசிதல், ரத்தம் வடிதல் என்னும் குணங்கள் உண்டாகும். இதற்கு உடனே சிகிச்சை
செய்யாவிடில் இது சிக்கிலத்தைக் கெடுக்கும். ஸ்திரீகளுக்கு சோணி தத்தைக் கெடுக்கும்.

3. சரஷபிகம் :- இது சிலேஷ்மரத்தத்தினால் ஆண்குறியின் உள்ளிலாவது வெளியிலாவது கடுகைப்போல் அநேக கொப்புளங்களை யுண்டாக்கும்.

4. அவமந்தம் :- இது ஆண்குறியில் நீளவடிவா யநேக கொப்புளங்களை யுண்டாக்கும். அப்போது அவைகளின் நடிவில் கீறல் உண்டாக்கி சீழ் ரத்தம் ஒழுகுவதும், வேதனையும் உரோமச்சிலிர்ப்பும் உண்டாகும்.

5. கும்பிகம் 
:- இது பித்தத்தினாலாவது ரத்தத்தினாலாவது ஆண்குறியில் இலந்தைக் கொட்டையைப்போல் மாமிசக் கட்டியை
யுண்டாக்கும்.

6. அலசிகம் :- இது ஆண்குறியில் நின்று மேகத்தை விழச்செய்து விரணத்தை யுண்டாக்கும்.

7. உத்தபாகம் :- இது ஆண்குறியில் ரத்த பித்தத்தினால் சிறிதும் பெரிதுமான விரணங்களை எரிச்சலுடன் பிறப்பிக்கும்.

8. பிடகம் :- இது ஆண்குறியில் உழுந்து பயறு பிரமாணம் கொப்புளங்களைப் பிறப்பித்து அவைகளைச் சுற்றிலும் விஸ்தாரமாக
சிறு சிறு கொப்புளங்கள் உண்டாகும்படிச் செய்யும்.

9. புஷ்கரிகம் :- இது ஆண்குறியில் தாமரைக்காயைப்போல் தழும்பை எழுப்பி அதில் கொப்புளங்களை யுண்டாக்கும்.
 

10. சம்வியூடகம் இது ஆண்குறியின் மீது புள்ளாங்குழலைப் பிடிக்கும் விரல்களைப்போல் குறுக்காகத்தடித்து விரணத்தை யுண்டாக்கும்.

11. மிருதித விரணம் :- இது ஆண்குறியில் கையால் பிசைந்து வாழைப்பழத்தைப்போல் குழைத்து விரணத்தைப் பிறப்பிக்கும்.

12. அஸ்டீலிகம் :- இது ஆண்குறியில் விரணத்தைப் பிறப்பிக்கும். இது குழி விழுந்து கல்லைப்போல் கெட்டியாய்யிருக்கும்.

13. அவிபாடிதம் :- இது வாத பித்த சிலேஷ்மங்களினால் ஆண்குறியினது சருமத்தை யெல்லாம் மிகவும் தடிக்கச்செய்யும். பின்பு அத்தடிப்பைப் பிளக்கும்.

14. நிறுத்தமணி :- இது வாயுவினால் ஆண்குறியினது முனைச்சருமத்தை கையப்பண்ணி அம்மலரில் ஒட்டிக்கொள்ளச
்செய்யும் இதனால் அத்துவாரம் அடைபட்டாலும் வேதனை யில்லாமல் சன்னமாக மூத்திரம் இறங்கும். ஆனால் மலரை விட்டு அச்சருமத்தை மலர்த்தக்கூடாமையாயிருக்கும்.

15. கிரதிதம் :- இது கபத்தினால் கோசத்தைச்சுற்றிலும்
முள்ளை நிறைத்தது போல் சிறு சிறு கொப்புளங்களை நெருங்க
உண்டாக்கும்.

16. பரிசாஅணி :- இது ஆண்குறியின் மலரில் சிவந்து நிறத்தை உண்டாக்கி தொடக்கூடாத உபத்திரவத்தை பிறப்பிக்கும். இதனால் சுக்கிலம் வெளிப்படமாட்டாது.

17. சதபோனகம் :- இது ஆண்குறியில் முற்றிலும் சிறு சிறு துவாரங்களை உண்டாக்கும். இதனால் மூத்திரம் வரும்போதெல்லாம் எரிச்சல் அதிகரிக்கும்.

18. தொக்குப்பாகம் :- இது பித்தாதிக்கத்தினால் ஆண்குறியின் சருமத்தை பழுத்து கையும் படிச்செய்யும். இதனால் சுரமும்
வேதனையும் உண்டாகும்.

19. மாமிசபாகம் :- இது ஆண்குறியின் முனை மலரை கையச்செய்து பற்பல வேதனையை மேன்மேலும் உண்டாக்கும்.

20. ரத்தாற்புதம் :- இது ஆண்குறி முற்றிலும் ரத்தத்தினால் கருமை செம்மை நிறம் உள்ள கொப்புளங்களை பிறப்பிக்கும். இதனால் மிக்க வேதனையும் உண்டாகும்.

21. மாமிசாற்புதம் :- இது ஆண்குறி மலரில் மாமிச நிறமுள்ள கட்டிகளை பிறப்பிக்கும்.

22. வித்திரதி :- இது திரிதோஷத்தினால் ஆண்குறியின் நரம்புகளில் வீக்கத்தை உண்டாக்கும். அது கெட்டியாகி நான்கு பக்கங்
களிலும் பரவி விரணமாகும். இதனால் சகிக்ககூடாத குத்தல் உண்டாகும்.

23. திலகாலகம் :- இது திரிதோஷத்தினால் ஆண்குறிமுற்றி லும் எள்ளு மிளகு பிரமாணங்களாய் கறுத்த நிறத்துடன் மாமி
சத்தை மறுக்கள்போல திரட்டித் தொங்கும்படிச் செய்யும். அது உடைந்து விரணமாகும்.

குய்ய நோயில் சாத்திய சாத்தியம் :- மாமிசாற்புதம், மாமிசபாகம், வித்திரதி, திலகாலகம் ஆக இந் நான்கும் அசாத்தியம். மற்றது சாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக