வியாழன், ஜனவரி 14, 2010

குஷ்ட ரோக ( தோல் நோய்க்கான ) சிகிச்சைகள்

குஷ்டரோகசிகிச்சை

மஞ்சிஷ்டாதி கியாழம் :- மஞ்சிஷ்டி, வேப்பன் ஈர்க்கு, ரக்த சந்தனம், கோரைக்கிழங்கு, சீந்தில்கொடி, தும்மட்டி, ஆடா தோடை, கொத்துப்புங்கன், சிவதை, துண்டிகம், மஞ்சள், மரமஞ்சள், நிலவேம்பு, வட்டத்திரிப்பி, அதிவிடயம், கருங்காலி,  திரிபலை, திரிகடுகு, கடுகுரோகணி, வசம்பு, கார்போக அரிசி, வெட்பாலை, பற்பாடகம் இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து குடித்தால் நமைச்சல், மண்டலகுஷ்டம், புண்டரீகம் கிடிபகுஷ்டம், கிலாசம், தந்துருவு, இதமான கிருமிகளினால் வியாப்தமான மூக்கு, கை கால்களில் உண்டாகும் ரோகங்கள் யாவும் நிவர்த்தியாகும். இந்த கியாழத்தைக் குடித்தால் சகல ரோகங்கள் நீங்கி மன்மதனைப்போலிருப்பான்.

இலகுமஞ்சிஷ்டாதி கியாழம் :- மஞ்சிஷ்டி, வெட்பாலை,சீந்தில் கொடி, கோரைக்கிழங்கு, சுக்கு, மஞ்சள், மரமஞ்சள், நிலவேம்பு,  கண்டுபாரங்கி, பெருங்கடம்பை, வேம்பு, பேய்ப்புடல், தேவதாரு, வட்டத்
திரிப்பி, கருங்காலி, கொத்துப்புங்கன், திப்பிலி, கரிசனாங்கண்ணி மலைவேப்பம்பட்டை, கொன்னை, சாரணை, வேங்கை, கார்போக அருசி ரக்த சந்தனம், புங்கன், ஆடாதோடை, பற்பாடகம், வெள்ளைச்சாரணை, அதிவிடயம், பூனைக்காஞ்சொரி, தும்மட்டி, வெட்டிவேர் இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து குடித்தால் சருமதோஷம், பதினெட்டுவிதகுஷ்டவியாதிகள் யாவும் நிவர்த்தியாகும்.


சுண்டியாதி கியாழம் :- சுக்கு, வேம்பு, நிலவேம்பு, திப்பிலி,வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், கொத்துபுங்கன், திரிபலை, சீந்தில்கொடி, கோரைக்கிழங்கு, கடுகுரோகணி, ஆடாதோடை, வசம்பு, கண்டங்கத்திரி, மஞ்சிஷ்டி, அதிவிடையம், பூனைகாஞ்சொரி, மலைவேவ்விலை, சித்திரமூலம், மோடி, கொண்ணை, வெட்பாலை,
கண்டுபாரங்கி, யவதானியம், பெருங்கடம்பை, பேய்ப்புடல், இல வங்கபத்திரி, ரக்தசந்தனம், கடுக்காய், பற்பாடகம், நன்னாரிவேர், வாய்விளங்கம், கருங்காலி இவைகளை சமஎடையாக கோமூத்திரத்தில் போட்டு கியாழம் காய்ச்சி காலையில் குடித்தால் 18-வித குஷ்டரோகங்கள் நிவர்த்தியாகும்.

கபபித்த குஷ்டத்திற்கு திரிபலாதி கியாழம் :- திரிபலை, வேப்பன், பேய்ப்புடல், மஞ்சிஷ்டி, கடுகுரோகணி, வசம்பு, மஞ்சள், இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து சாப்பிட்டால் கபபித்த குஷ்டம் நிவர்த்தியாகும்.

காதிராரிஷ்ட கியாழம் :- கருங்காலி, கடுக்காய், தானிகாய், நெல்லிவற்றல், வேப்பம், பேய்ப்புடல், சீந்தில்கொடி, ஆடாதோடை இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து குடித்தால் குஷ்டங்கள், விஸ்போடகம், முதலியவை நிவர்த்தியாகும்.

குடூச்சியாதி கியாழம் :- சீந்தில்கொடி, மரமஞ்சள், திரிபலை, இவைகளை சமஎடையாக கியாழம் போட்டு அதில் குங்கிலிய சூர ணத்தை கலந்து ஒருமாதம் சாப்பிட்டால் சருமதோஷம், விரணசோபை குஷ்டம் இவைகள் நீங்கும்.

கபாலகுஷ்டத்திற்கு சோமேசுர ரசம் :- சுத்திசெய்த ரசம்,அப்பிரகபற்பம், சுத்திசெய்த கெந்தி, இவைகளை சமஎடையாக கல் வத்திலிட்டு நொச்சி இலைரசத்தினால் ஒருநாள் அரைத்து மூசையில் வைத்து அதின் வாயைமூடி, பூதரபுடமிட்டு ஆறியபிறகு எடுத்துகார்போக அரிசி தைலத்திலாவது அல்லது கியாழத்திலாவது ஒருநாள் வெய்யில்வைத்து பாவனைசெய்து 2-குன்றிஎடை ஔஷதத்தை கார்போக அரிசி, மணத்தக்காளி கீரை, திரிபலை இவைகளைசமஎடையாக சூரணித்து 1/4-பலம் சூரணித்தில் தேன் நெய் கலந்து இந்த அனுபானத்தில் புசித்தால் கபாலகுஷ்டம் விஷகுஷ்டம் இவைகள் நிவர்த்தியாகும்.

கந்தக ரசாயனம் :- நெல்லிக்காய் கெந்தகத்தை ஆட்டிபாலினால் பாசனாயந்திரத்தில் சுத்திசெய்து சூரணித்து உலர்த்தி கரும்பு சீந்தில்கொடி இவைகளின் ரசத்தினாலும் மேல்கூறிய பிரகாரம் சுத்திசெய்து சூரணித்து உலர்த்தி பிறகு ஒருநாள் நெய்யில் ஊறவைத்து உலர்த்தி பிற்கு நெருஞ்சில், நிலபனங்கிழங்கு இவைகளின் ரசம், அதிமதுரம், கோஷ்டம், இவைகளின் கியாழம், கரி சாலை இலைரசம், கடம்புசக்கை ரசம், தாழம்பூ ரசம் இவைகளில்தனித்தனியே சுத்திசெய்த பிறகு திப்பிலி, மோடி, இலவங்கம் சிறுநாகப்பூ, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், திரிகடுகு வாய்விளங்கம் இவையாவும் சமஎடையாய் சேர்த்து சூரணித்து
கந்தகசூரணத்திற்கு சமஎடை இந்தசூரணத்தைக்கலந்து சர்க்கரை அல்லது வெல்லம் கெந்தகத்திற்கு சமமாக சேர்த்து பிறகு பசுநெய் அல்லது தேனாவது கலந்து இரசாயனபாகமாகச்செய்து 1/4, 1/2 தோலாவீதம், காலை, மாலை 1 மண்டலம் சாப்பிட்டால் வாதத்தினால் உண்டாகும் கிரந்தி, சூலை, 18 வித குஷ்டங்
கள், சருமரோகங்கள், 84வித வாதங்கள், 20 பிரமேகங்கள்16 மூத்திரகிருச்சிரகங்கள், ராஜவிரணம், பகந்தரம், கபாலவிரணம் காதுகளில் விரணம், லிங்கவிரணம், யோனி விரணம், திமிர் குஷ்டம், ரத்தச்சிராவகம், சீழ்சிராவகம், ஜலசிராவகம் முதலியவைநிவர்த்தியாகும்.

வேற்முறை :- பசும்பாலினால் சுத்திசெய்த கெந்தகத்தைஇலவங்கம், இலவங்கப்பத்திரி, இலவங்கப்பட்டை, சீந்தில்
கொடி, ஏலக்காய், கடுக்காய்த்தோல், சுழற்சிப்பருப்பு, நெல்லிப்பருப்பு, சுக்கு, கரிசாலை, இஞ்சி இவைகளின் ரசத்தினால் ஒவ்வொரு 8 முறை பாவனை செய்து பிறகு கெந்திக்கு சமஎடை சர்க்கரை கலந்து வைத்துக்கொள்க.
இதில் 1/2 1 வராகனெடை இருவேளையாக அருந்திவரதாதுக்ஷயம், சூலை, சகலமேகம், 18 குஷ்டம், இவைகள்
நிவர்த்தியாகும்.சுத்திசெய்த கெந்தகம் 2 பலம், சுத்திசெய்த ரசம் 1 பலம்இவைகள் இரண்டையும் அரைத்து குப்பியிலிட்டு வாலுகாயந்திரத்தில் வைத்து எரித்து செந்தூரித்து குன்றி ஏடை தேன் நெய் இவைகளுடன் சாப்பிட்டால் கொடூரமான குஷ்ட வியாதிகள் நீங்கும்.


வராதிசூரணம் :- திரிபலை, வாய்விளங்கம், திப்பிலி இவைகளை, சமஎடை யாய் சூரணித்து தேனில் கலந்து சாப்பிட்டால் குஷ்டங்கள், மேகங்கள், நாடீபிரணம், பகந்தரம் இவைகள்  நிவர்த்தியாகும்.

பஞ்சநிம்பாதி சூரணம் : - வேப்பம்பழம், பூ, பட்டை, இலை வேர் இவ்வைந்துஞ்சமஎடையாய் சேர்த்து மைபோல் சூரணித்து  இந்தச்சூரணம் கருங்காலி, வேங்கை, இவைகளை எட்டொன்றாக கியாழம் வைத்து அந்த கியாழத்தில் பாவனை செய்து அதில் சித்திரமூலம், வாய்விலங்கம், கொன்னை, சர்க்கரை, சேராங்கொட்டை கடுக்காய்த்தோல், சுக்கு, நெல்லிவற்றல், நெரிஞ்சல், தகரம், கண்டங்கத்திரி, திப்பிலி, மஞ்சள் இவைகளின் சூரணம் காந்தசெந்தூரம் இவைகளை சமஎடையாய் எடுத்து கரிசாலை ரசத்தினால்பாவனை செய்து உலர்த்திநிம்ப சூரணத்திற்கு சமஎடையாய்சேர்த்து திரிகடிபிரமாணம் நெய்யுடனாவது அல்லது பசும்பாலி லாவது அல்லது கருங்காலி, வேங்கை இவைகளின் கியாழத்தி லாவது காலையில் மாத்திரம் மூன்று மாதங்கள் சாப்பிட்டால் சரும தோஷம், கருமேகம், மினுமினுப்பு 18-விதகுஷ்டம், க்ஷயம் இவைகள் யாவும் குணமாகும். இது அசுவனி தேவரால் சொல்லிய முறை, மிகவும் மேலானது.

விடங்காதி சூரணம் :- வாய்விளங்கம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், திப்பிலி இவைகளை சமஎடையாக சூரணித்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் குஷ்டம், கிருமி, மேகம், நாடீவிரணம், பகந்தரம் இவைகள் நிவர்த்தியாகும்.

குஞ்சாபலாதி சூரணம் :- குன்றிவிரை, சித்திரமூலம் இவைகளை சூரணித்து தேகத்திற்கு தடவினால் வெள்ளை குட்டம் நீங்கும்.

சிலாசத்து நாயுருவிவேர் இவைகளை நீர்விட்டரைத்து தடவினால் வெள்ளைகுஷ்டரோகம் நீங்கும்.

புடபத்திராதி சூரணம் :- புடபத்திரிவேர் 32-பலம், வட்டத்திருப்பிவேர், நன்னாரிவேர், ஈசுரமூலிவேர் இவைகள் வகைக்கு பலம்-6, கருங்காலிமரப்பட்டை 3-பலம், சீரகம் 6-பலம், கருஞ்சீரகம் 3-பலம், பறங்கிச்சக்கை 5-பலம், சித்திரமூலம் 3 1/2-பலம், நில ஆவாரைவேர் 3 1/2-பலம், கண்டுபாரங்கி, சுக்கு, திப்பிலி, மிளகு, குரோசாணியோமம், ஓமம், இலவங்கம் இவைகள் வகைக்கு 2-தோலா, ரேவல்சின்னி 3-பலம், மரமஞ்சள் 3-தோலா, மாசிக்காய் 6-பலம், இவை யாவையும் சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து சமன் பனவெல்லத்தை கலந்து கழற்சியளவு காலை மாலை சாப்பிட்டுஊக்குருவி இரத்தத்தை லேபனஞ்செய்தால் மண்டலகுஷ்டம், அவுதும்பரகுஷ்டம், புண்டரீகம், மண்டலகாரகுஷ்டம், இந்திரலுப்தம், சுவேதகுஷ்டம், மேஹமண்டலம் இவைகள் நிவர்த்தியாகும்.

பத்தியம், பழைய அரிசி சாதம், மோர், பச்சைபயறுகூட்டு,பசும்நெய், பெரியசோளம், பால சாதம் இவைகளைப் புசிக்கவேண்டியது.

சுவேதகுஷ்டத்திற்கு புடபத்திராதி சூரணம் :- புடபத்திரசமூலம், மிளகு, சீரகம், மாசிக்காய் இவைகளை சமஎடையாய்ச் சூரணித்து பசும்நெய்யில் சமைத்து ஒரு தோலா எடை விகிதம் காலை மாலை சாப்பிட்டால் சுவேதகுஷ்டம், அவதும்பரம், மண்டலம், புண்டரீகம் முதலிய சகல குஷ்டரோகங்கள் நிவர்த்தியாகும்.

பத்தியம், பெரியசோளம், அன்னம், பச்சைப்பயறு, குழம்பு பசும்நெய், பசுமோர், பால் சாதம் இவைகளை புசிக்கவேண்டியது.

ஷட்பலகெந்தக சூரணம் :- சுத்திசெய்த கெந்தி 6 பலம்,திரிபலை, வாய்விளங்கம், திரிகடுகு, திரிசாதம், கடலை, நன்கு சுத்திசெய்த சேராங்கொட்டை, சீரகம், சித்திரமூலவேர்ப்பட்டை, பறங்கிச்சக்கை இவையாவும் வகைக்கு பலம் 1 வீதம் சேர்த்து சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து சமன் சர்க்கரை கலந்து தேன்வெண்ணெய், வெந்நீர், வாழைப்பழம், சர்க்கரை, நெய் இவைகளின் ஏதேனுமொன்றில் தேகத்திற்கு தக்கபடி 1/2 முதல் 2 வராகனெடை வீதம் சாப்பிட்டு வந்தால் 18 வித குஷ்டரோகங்கள் 4 வித கிரகணி ரோகங்கள், மந்தாக்கினி, துர்ப்பலம், 5 வித குன்மரோகம் முதலியன நீங்கிவிடும்.

மஹாதிக்த கிருதம் :- வாழைக்கிழங்கு, அதிவிடயம், கொன்னை கடுகுரோகணி, வட்டத்திரிப்பி, கோரைக்கிழங்கு, வெட்டிவேர் திரிபலை, பேய்ப்புடல், புங்கன், வேப்பன், பற்பாடகம், கொத்தமல்லி பூனைக்காஞ்சொரி, ச்ந்தனம், திப்பிலி,தாமரைக்கிழங்கு, மஞ்சள் மரமஞ்சள், திப்பிலிமூலம், தும்மட்டி, தண்ணீர்விட்டான்கிழங்கு, பாலைவெட்பாலைவிரை, நன்னாரிவேர், ஆடாதாடா, பெருங்கடம்பவேர் சீந்தில்கொடி, சீமைநிலவேம்பு, அதிமதூரம் இவைகளை  சமஎடையாய் சேர்த்து இடித்து கற்கம் அல்லது கியாழம் விட்டு அதில் நாலுபங்கு மீறும்படி நெய்பதமாக காய்ச்சி காலை வேளையில் சாப்பிட்டால் குஷ்டரோகம், ரத்தபித்தம், மூலவியாதி, விசர்ப்பி ஆமலபித்தம், வாதரத்தம், பாண்டுரோகம், விஸ்போடகம், பாமா, உன்மாதம், காமாலை, சுரம், கண்டுரோகம், ஹிருதயரோகம், குன்மம், பருவுகள், பகந்தரம், கணடமாலை முதலிய பல வியாதிகள் நிவர்த்தியாகும்.

பஞ்சதிக்தக கிருதம் :- வேப்பன், பேய்புடல், கண்டங்கத்திரி, சீந்தில்கொடி, ஆடாதோடை, இவைகளை வகைக்கு 10 பலம் விகிதம் இடித்து 256 பலம் சலத்தில் கொட்டி நாலில் ஒரு பாகமாக கியாழத்தைச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் 20 பலம், நெய் கலந்து நெய்பதமாக காய்ச்சி காலை வேளை சாப்பிட்டால் குன்மரோகங்கள் 84 வித வாதரோகங்கள், 24 பித்தரோகங்கள் 20 வித பஷீரங்கள், துஷ்டமான விரணங்கள், கிருமிகள், மூலவியாதிகள், சகலவித காசங்கள் இவை யாவையும் நிவர்த்தியாகும்.நிவர்த்தியாகும்.

பஞ்சாதி கிருதம் :- கருங்காலிப்பட்டை 500 பலம்,இலவங்கப்பட்டை, முருங்கைபட்டை, இவைகள் வகைக்கு 100 பலம், வேப்பன், உப்பு, புளிவஞ்சி, பற்பாடகம், வெட்பாலை, ஆடாதோடை, வாய்விளங்கம், மஞ்சள், மரமஞ்சள், கொன்னை, சீந்தில்கொடு, திரிபலை, சிவதை, வாழைக்கிழங்கு, இவைகள் வகைக்கு பலம்-50 இவைகள் யாவும் இடித்து 2560-பலம் ஜலத்தில் போட்டு எட்டில் ஒருபாகம் மீறும்படியாக கியாழம் சுண்டக்காய்ச்சி அந்த கியாழத்திற்கு சமஎடை நெல்லிக்காய் ரசம், 64- பலம் நெய் கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி ஒருபல பிரமாணம் பானத்திற்கும் அப்பியங்க ஸ்நானத்திற்கும் உபயோகித்துவந்தால் சகல குஷ்டரோகங்கள் நிவர்த்தியாகும்.

திக்தஷட்பல கிருதம் :- வேப்பன், பேய்ப்புடல், மரமஞ்சள், பூனைகாஞ்சொரி, கடுகுரோகணி, நிலவேம்பு, திரிபலை, பற்பாடகம், கொத்துபுங்கன் இவைகள் வகைக்கு 1/2-பலம் விகிதம் இடித்து 64-பலம் ஜலத்தில் கொட்டி எட்டில் ஒருபாகம் கியாழம் காய்ச்சி  வடிகட்டி அதில் சந்தனம், சீமைநிலவேம்பு, திப்பிலி, புங்கன், கோரைக்கிழங்கு, வெட்பாலைவிரை இவைகளை வகைக்கு 1/8-பலம் விகிதம் சூரணித்து கலந்து அத்துடன் நெய் 10-பலம் விட்டு நெய்பதமாக காய்ச்சி குடித்துவர குஷ்டரோகம், சுரம், குன்மம், மூலவியாதி, கிறாணி, பாண்டு, விசர்ப்பிகை, பருவுகள், கண்டு, கண்டமாலை இவைகள் நிவர்த்தியாகும்.

கபாலகுஷ்டத்திற்கு வேல்வாதி லேபனம் :-வாய்விளங்கம், சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கோரைக்கிழங்கு, சித்திரமூலம், நாபி, வசம்பு, வெல்லம் இவைகளை
சமஎடையாக அரைத்து மூன்று தடவை லேபனஞ் செய்தால் கபால குஷ்டம் நிவர்த்தியாகும்.

மண்டலகுஷ்டத்திற்கு சித்திரகாதி லேபனம் :- சித்திரமூலத்தை அரைத்து லேபனஞ் செய்தாலும் அல்லது நொச்சிவிரையை அரைத்து லேபனஞ் செய்தாலும் மண்டலகுஷ்டம் நீங்கும்.

புண்டரீகத்திற்கு பிருங்கராஜாதி லேபனம் :- கரசனாங்கண்ணிவேர், கடுக்காய்வேர், இவைகளை சட்டியில் வைத்து வறுத்து காடி நீரில் லேபனஞ் செய்தால் வெள்ளைகுஷ்டம் நீங்கும்.

சித்மகுஷ்டத்திற்கு லாக்ஷ¡திலேபனம் :- அரக்கு, தேவதாரு பிசினில்செய்த தூபதிரவியங்கள், கோஷ்டம், மஞ்சள், வெள்ளைக்கடுகு, சுக்கு, திப்பிலி, மிளகு, முள்ளங்கிவிதை, தகரம் விரை இவைகளை சமஎடையாக சூரணித்தி லேபனஞ் செய்தால், சித்ம கடிப, தத்துரு இவைகள் நிவர்த்தியாகும்.

பாதரசம், வெங்காரம், கெந்தி இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டு முள்ளங்கி, இஞ்சி இவைகள் ரசத்தினால் ஒருநாள் அரைத்து லேபனஞ் செய்தால் மஹாற்புதமான சித்மகுஷ்டம் நிவர்த்தியாகும்.

தாளகம் 1 பாகம், கெந்தி 2- பாகம், கார்போகாருசி 3 - பாகம்,இவைகளை கோமூத்திரத்தில் அரைத்து ஒரு மாதம் லேபனம் செயதால் சித்மகுஷ்டம் நிவர்த்தியாகும்.

கஜசர்ம குஷ்டத்திற்கு லேபனம் :- குன்றி, சித்திரமூலம்சங்குபஸ்பம், மஞ்சள், அறுகம்புல், கடுக்காய், பொடுதலை, கள்ளி இந்துப்பு, கற்றாழை, கோரைக்கிழங்கு, எருக்கன், கெந்தி, பாதரசம் கார்போக அருசி, தகரை விரை, வாய்விளங்கம், மிளகு இவைகள் சமஎடையாய் தேன் விட்டு அரைத்து லேபனம் செய்தால், கஜசர்மம்
தத்ரு, கண்டு முதலியன குணமாகும்.

கிடிபகுஷ்டத்திற்கு பிப்பிலியாதி லேபனம் :- திப்பிலி, புங்கன், கோஷ்டம், காட்டுச்சீரகம், சித்திரமூலம், இவைகளை சமஎடை அரைத்து லேபனம் செய்தால், கிடிபகுஷ்டம் நீங்கும்.

தத்ருமண்டல குஷ்டத்திற்கு மூலிகை பீஜாதி லேபனம்:- முள்ளங்கி விதை, வெள்ளைக்கடுகு, அரக்கு, மஞ்சள், மரமஞ்சள், தகரை விரை, தேவதாரு, சரளதேவதாரு, சுக்கு, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம்
இவைகளை சமஎடையாய் ஆட்டு மூத்திரத்தில் அரைத்து லேபனஞ்செய்தால், தத்ரு, சித்ம, கிடிபகுஷ்டம், பாமைகுஷ்டம், விஷமமான கபாலகுஷ்டம் முதலியன குணமாகும்.

சர்மதள குஷ்டத்திற்கு ராஜிகாதி லேபனம் :- கடுகு, வெல்லம் இந்துப்பு இவைகளை சமஎடையாய் சூரணித்து லேபனஞ்செய்தால், சர்மதள குஷ்டம் நிவர்த்தியாகும்.

தத்ருகுஷ்டத்திற்கு தரதாதி லேபனம் :- லிங்கம், கெந்தி, ரசம், திப்பிலி, நாபி, மஞ்சள், வாய்விளங்கம், சித்திரமூலம், கடுக்காய், சுக்கு, கோரைக்கிழங்கு, கார்போக அருசி, கடுகுரோகணி கொன்னை, தகரைவிரை, இவைகளை சமஎடையாய் எலுமிச்சம்பழரசத்தில் அரைத்து லேபனம் செய்தால், தத்ரு, கண்டு விசர்ப்பம், பகந்தரம், மண்டலம் முதலியன குணமாகும்.

பாமாகுஷ்டத்திற்கு லேபனம் :- கார்போக அருசி தைலத்தையாவது, சரக்கொன்னை தைலத்தையாவது, புத்திரஜீவி தைலத்தையாவது, லேபனஞ் செய்தால் பாமாகுஷ்டம் நிவர்த்தியாகும்.

கச்சூகுஷ்டத்திற்கு சிந்தூராதி லேபனம் :- இரசச்செந்தூரம் சீரகம், கருஞ்சீரகம், மஞ்சள், மரமஞ்சள், மனோசிலை, மிளகு கெந்தி, ரசம் இவைகளை சமஎடையாய் நெய்யில் அரைத்து லேபனம்
செய்தால் கச்சூகுஷ்டம் நிவர்த்தியாகும்.

சதாருகுஷ்டத்திற்கு சிம்ஹாஸ்யதள லேபனம் :-ஆடாதோடை கொழுந்து, மஞ்சள் இவைகளை கோமூத்திரத்தில் அரைத்து லேபனம் செய்தால் சதாரு குஷ்டம் 3- தினத்திற்குள் நிவர்த்தி யாகும்.

விசர்ச்சிகாகுஷ்டத்திற்கு அவல்குஜாதி லேபனம் :- கார் போக அருசி, போயாவரை, தகரைவிரை, மஞ்சள், இந்துப்பு இவைகள் சமஎடையாய் காடியில் அரைத்து லேபனம் செய்தால் கண்கச்சூ இவைகள் சீக்கிரம் குணமாகும், இது சித்தயோகம்.

சிவித்திரகுஷ்டத்திற்கு திரிபலாதி லேபனம் :- திரிபலை அவுரி இலை, லோஹசூரணம், ரசாஞ்சனம், வெள்ளைக்குன்றி, ஆனை கொம்பு, பற்பம், மயில் துத்தம், கரிசனாங்கண்ணி இவைகளை ஆட்டுப்பாலுடன் அரைத்து சரீரத்திற்கு லேபனம் செய்தால் சிவித்த குஷ்டம் நிவர்த்தியாகும்.

தாளகாதி லேபனம் :- தாளகம் 28 குன்றி எடை, கார்போகஅருசி, 112 குன்றி இவைகளை கோமூத்திரத்தில் அரைத்து  லேபனம் செய்தால் சிவித்திரகுஷ்டம் குணமாகும்.

அயோரஜாதி லேபனம் :- இரும்புபற்பம், கரும்எள்ளு, ரசாஞ்சாணம், கார்போக அருசி, நெல்லிவற்றல் இவைகளை கரிசனாங்கண்ணி சாற்றினால் அரைத்து நாளுக்கு 1 முறை லேபனம் செய்தால் கிலாசகுஷ்டம் குணமாகும்.

குஷ்டரோக பத்தியங்கள் :- 15 நாளுக்கு ஒரு முறை வாந்தி செய்வித்தல், மாதம் ஒரு முறை விரேசனத்திற்கு கொடுத்தல் மூன்று நாளைக்கு ஒரு முறை நசியம் செய்தல், ஆறு மாதத்திற்கு ஒரு முறை குருதி வாங்கல், மேலும், கிருதம், லேபனம், பழைய யவதானியம், கோதுமை, சம்பா அருசி, பச்சைப்பயறு, துவரை,
சிறுகடலை, பேய்ப்புடல், கண்டங்கத்திரிப்பழம், மணத்தக்காளி வேப்பன் இலை, வெள்ளைப்பூண்டு, வெள்ளைச்சாரணை, கடுக்காய்ப்பூ தரா இலை, சேராங்கொட்டை, பனம்பழம், கருங்காலி, சித்திரமூலம்
திரிபலை, ஜாதிக்காய், சிறுநாகப்பூ, குங்குமப்பூ, பழையநெய், பீர்க்கங்காய், வெள்ளைக்கடுகு, வேப்பன், இலகுவான அன்னம், சரளதேவதாரு, அரோசகம், அகரு, இஐகளின் தைலங்கள், பசு, கழுதை ஒட்டகம், ஆடு, செம்மறிஆடு, இவைகளது மூத்திரம், கஸ்தூரி சந்தனம், கசப்பு பதார்த்தங்கள், க்ஷ¡ரங்கள் இவைகள் யாவும்
தோஷத்தின் பலாபலங்களை அறிந்து குஷ்டரோகத்திற்கு பத்திய மிடவேண்டியது.

அபத்தியம் :- புளிப்பு, உப்பு, காரங்கள், இவைகளுடன் கூடிய அன்னபானங்கள், தயிர், பால், வெல்லம், எள்ளு, உளுந்து, வியர்வை வாங்குதல், மாதர்புணர்ச்சி, வாந்தி வேகத்தை தடுத்தல், கரும்பு ரசம், ஜலத்திலிருக்கும் ஜந்துமாமிசம், தயிர், பால், கள், வெல்லம் இவைகளை குஷ்டரோகிகள் விடவேண்டியது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக