வெள்ளி, ஜனவரி 15, 2010

நேத்ர ரோக(கண் நோய்க்கான ) சிகிச்சைகள்

நேத்திரரோகசிகிச்சை

திலபுஷ்பாஞ்சனம் :- மிளகு 2 பாகம், சுத்திசெய்த பலகறை 4 பாகம், எள்ளுப்பூ 8 பாகம், இவைகள் யாவையும் ஒன்றாக கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழரசத்தில் அரைத்து மாத்திரைகள்  செய்து ஜலம் விட்டு அரைத்து கண்களுக்கு கலிக்கமிட, திமிரங்கள் கண்புரை, நமைச்சல், அர்புதரோகம், துர்மாமிசம், கண்சிகப்பு முதலியன நிவர்த்தியாகும்.

மரீசாஞ்சனம் :- மிளகு 1 பாகம், நெல்லிவற்றல் 2 பாகம்புங்கன்விரை 3 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு கரிசனாங் கண்ணி சாற்றினால் அரைத்து மாத்திரைகள் செய்து கண்களுக்கு கலிக்கமிட்டுக்கொண்டால் பார்வை இல்லாத கண்கள் புரைகள் காசம் இவைகள் நிவர்த்தியாகும்.

தார்வியாத் யஞ்சனம் :- ரசாஞ்சனம் கண்களுக்குகலிக்கமிட்டால் கண் புரை காசம் சிகப்பு அர்புதம் சலம் வடிதல்
அர்மரோகம், மாலைக்கண், நமைச்சல் கண்கள் ஒட்டிக்கொள்ளுதல் இவைகள் நிவர்த்தியாகும்.

காட்டுமல்லியை அரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் கண்நோய், வர்த்துமரோகம், கண்பூ இவைகள் நிவர்த்தியாகும்.

கிரிகர்ணிகாத் யஞ்சனம் :- வெள்ளைச்சுக்கட்டான்வேர்அதன்விரைகள், பூக்கள், சுட்டசங்கு, மஞ்சள், கடுக்காய், சுக்கு இவைகள் சமஎடையாய் சேர்த்து காக்கட்டான் வேர் ரசத்தினால்  அரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் பார்வையற்றுப்போன கண்களுக்கு மறுபடியும் பார்வை யுண்டாகும்.

நாரிகே ளாஞ்சனம் :- மரமஞ்சள், கடுக்காய், தானிக்காய்நெல்லிவற்றல் அதிமதூரம் இவைகள் வகைக்கு 1 பலம் விகிதம் சேர்த்து இடித்து ஒரு படி தேங்காய் ஜலத்தில் போட்டு எட்டில் ஒரு பாகம் மீறும்படி கியாழம் காய்ச்சி மற்றொரு பானையில் வார்த்து மந்தாக்கினியால் ஒரு ஆழாக்கு மீறும்படியாக காய்ச்சி  ஆறவைத்து அதி 1/2 ரூபாய் எடை பச்சைக்கற்பூரம் 1 ரூபாய் எடை இந்துப்பு, 15 குன்றி எடை தேன் விட்டரைத்து கண்க ளுக்குகலிக்க மிட சகலமான கண்நோய்கள் சுவஸ்தமாகும்.

மகாநாரிகே ளாஞ்சனம் :- மரமஞ்சள், கடுக்காய், தானிக்காய் நெல்லிவற்றல் அதிமதூரம் இவைகள் வகைக்கு 1 பலம் விகிதம் சேர்த்து இடித்து 16 பலம் இளநீர் விட்டு எட்டில்ஒரு பாகம் மீறும்படிகியாழம் சுண்டக்காய்ச்சி மற்றொரு பானையில் வைத்து  ந்தாக்கினியில் மறுபடியும் காய்ச்சி 5-பலமாக சுண்டக்காய்ச்சி
இறக்கிகொண்டு ஆறவைத்து பிறகு அதில் சுத்திசெய்த மயில்துத்தம், பச்சைகற்பூரம், கடல்நுரை, காவிக்கல், இந்துப்பு, ரசாஞ்சனம், மிளகு இவைகள் சூரணத்தை வகைக்கு 1/8-பலம் விகித்ங்கலந்து தேன் 1 1/2-தோலா கலந்து கண்களுக்குப்போட்டால் 96-நேத்திரரோகம் நிவர்த்தியாகும்.

புஷ்ப்பாஞ்சனம் :- மஞ்சிஷ்டி, அதிமதுரம், கரும் அல்லிப்பூ, தயிர், திப்பிலி, இலவங்கப்பட்டை, செவ்வியம், கோரோசனம், ஜடாமாஞ்சி, சந்தனம், சுட்டசங்கு, காவிக்கல், சுத்திசெய்த மயில் துத்தம், புஷ்ப்பாஞ்சன்ம், இவைகள் சமஎடையாக அரைத்து நேத்திரத்தில் சதாப்போட்டுக் கொண்டிருந்தால் சகல கண்வியாதிகள்
நிவர்த்தியாகும்.

திராத் யஞ்சனம் 
:- நெல்லிக்காய், கடுக்காய், தானிக்காய்,இவைகளின் பருப்புகளை சூரணித்து எலுமிச்சம்பழ ரசம்விட்டு அரைத்து மாத்திரை செய்து கண்களுக்கு கலிக்கம்போட்டால் கண்களில் சலம்வடிதல், திமிரம் முதலியன நிவர்த்தியாகும்.

வடக்ஷ£ராதி யஞ்சனம் :- பச்சைகற்பூரத்தை ஆலன்பாலினால் அரைத்து கண்களுக்கு இரண்டு மாதக்காலம் கலிக்கமிட்டால் கண்களின்பூ நிவர்த்தியாகும்.

பிப்பல்யஞ்சனம் :- திப்பிலி, சமுத்திரநிரை, இந்துப்பு இவைகளைச் சூரணித்து வெங்கல பாத்திரத்தில் வைத்து தேனினால் அரைத்து அஞ்சனமிட்டால் சுக்கிரரோகம் நிவர்த்தியாகும்.

காஸ்மரியாத் யஞ்சனம் :- பூசினிப்பூ, அதிமதுரம், மரமஞ்சள், லோத்திரம், ரசாஞ்சனம் இவைகளை சமஎடையாய்ச் சூரணித்து தேனுடன் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் பித்தநேத்திர
வியாதி நிவர்த்தியாகும்.

நக்தாந்தியத்திற்கு கணாத்யஞ்சனம் :- திப்பிலியை ஆட்டுமலத்தின் நடுவில்வைத்து பக்குவம்செய்து அந்த ஆட்டுமலத்தின் ரசத்தினாலரைத்து கலிக்கமிட்டால் நக்தாந்தியம் நிவர்த்தியாகும். சுக்கு, திப்பிலி, மிளகு தேனுடன் அரைத்து கலிக்கமிட்டால் நக்தாந்தியம் நிவர்த்தியாகும்.

ரசாஞ்சனாத்யஞ்சனம்
 :- ரசாஞ்சனம், சுட்டசங்கு, தேவதாரு, இவைகளை ஜாதீபத்திர ரசத்தினால் அரைத்து தேன்கலந்து கண்க ளுக்கு கலிக்கமிட ரக்தாந்தியம் நிவர்த்தியாகும்.

பிப்பல்யாத்யஞ்சனம் :- திப்பிலி, திரிபலை, அரக்கு, லோத்திரரம், இந்துப்பு இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு கரினாங்கண்ணி ரசத்தினால் அரைத்து மாத்திரைசெய்து கண்களுக்கு கலிக்கமிட்டால் அர்மரோகம், திமிரம், காசம், நமைச்சல், லக்கிலம்,அர்சூனம், இன்னும் ம்ற்றநேத்திரரோகங்கள் யாவும் நிவர்த்
தியாகும்.

துளசியாத் யஞ்சனம் :- துளசிஇலை ரசம், வில்வஇலைரசம் இவைகள் சமஎடை, இவைகளுக்கு சமஎடை முலைப்பால் இந்த மூன்றையும் வெங்கல பாத்திரத்தில் வைத்து அரைத்து அத்துடன் ஆனைத்
திப்பிலி சூரணத்தைக் கலந்து செப்புச் செம்பினால் ஒருஜாம அரைத்து கூழு போல் செய்து கண்களுக்குகலிக்க மிட்டால் நேத்திரரோகம்பாகத்தினாலுண்டான நேத்திரசூலை முதலியன நிவர்த்தியாகும்.

கதகாத்யஞ்சனம் :- தேத்தாங்கொட்டை, சங்கு, இந்துப்புசுக்கு, திப்பிலி, மிளகு, சர்க்கரை, கடல்நுரை, ரசாஞ்சனம், தேன் வாய்விளங்கம், சுட்டசங்கு, இவை யாவும் சமஎடையாய் கல்வத்திலிட்டு முலைப்பால் விட்டரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் திமிரம், படலம், காசம், அர்வம், நேந்திரசுக்கிரம் நமைச்சல், குத்தல், அர்ப்புதம், மலம், ஊளை முதலியன நிவர்த்தியாகும்.


புனர்னவாத் யஞ்சனம் :- சுத்திசெய்த வெள்ளைச்சாரணை வேரை பாலிலரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் நமைச்சலும் தேனுடன் கலந்து போட்டால் கண்ணிர் வடிதலும், நெய்யுடன் அரைத்து கலிக்க மிட்டால் திமிரமும், காஞ்சிகத்தில் அரைத்து போட்டால் மாலைக்கண் முதலியனவும் குணமாகும்.

உத்பலாத் யஞ்சனம் :- அல்லிப்பு, இந்துப்பு, ரத்தசந்தனம்திரிபலை இவைகளை எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து அஞ்சனமிட்டால், மாலைக்கண், திமிர், கண்புரை, முதலியன நிவர்த்தியாகும்.

சர்வநேத்திர ரோகத்திற்கு சவ்வீராஞ்சனம் :- கருமாக்கல்லை நெருப்பிலி சுட்டு திரிபலை கியாழத்தில் ஏழுமுறையும் முலைப்பாலில் ஏழுமுறையும் தேய்த்து எடுத்து வாஇத்துக்கொள்ளவும். இம்மாதிரி
செய்தபிறகு அந்த கருமாக்கல்லை மைபோலரைத்து கண்களுக்கு மையிட்டால் சகலநேத்திரரோகங்கள் நிவர்த்தியாகி கண்களுக்கு மிகவும் ஹிதமாயிருக்கும்.

சகல நேத்திர ரோகங்களுக்கு மிருது சூரணாஞ்சனம் :- கல்கப்பரியை மைபோல் அரைத்து ஜலத்தில் கலந்து அதன்மீதுள்ள தேட்டைநீரை எடுத்துக்கொண்டு அடியிலிருக்கும் சூரணத்தைப்போட்டுவிட்டு அந்த தேட்டைநீர் கண்டுகிற வரையிலும் காய்ச்சினால் அடியில் பில்லைப்போல் நிற்கும். அந்த பில்லையை திரிபலைகியாழத்தினால் மூன்றுமுறைஅரைத்து மூன்று புடமிட்டு பிறகு சூரணித்து இதற்கு பத்தாவது பாகம் பச்சைக்கற்பூரம் கலந்து கண்களுக்கு கலிக்கமிட்டால் சகல நேத்திரரோகம் நிவர்த்தியாகும்.

மஞ்சிஷ்டாத் யஞ்சனம் :- மஞ்சிஷ்டி, அதிமதுரம், அல்லிக் கிழங்கு, திப்பிலி, கடல்நுரை, இலவங்கசக்கை, வெட்டிவேர், கோரோசனம், ஜடாமாஞ்சி, ரத்தசந்தனம், சங்கு, இலவங்கப்பத்திரி, புஷ்பாஞ்சனம் இவைகளை சமஎடையாக ஜலம்விட்டரைத்து மாத்திரைசெய்து நிழலிலுலர்த்தி அரைத்து கண்களுக்கு இட்டால்
நமைச்சல், ஒட்டிக்கொள்ளுதல், கண்மலம், ஜலம்வடிதல், சிவப்பு வலி, பில்லை, ஊரிகிறது, சுக்கிரம் முதலியன நிவர்த்தியாகும்.

அன்யன்னய நாமிருதம் :- இந்துப்பு, சுத்திசெய்த பால்துத்தம், கடல்நுரை, ரசாஞ்சனம், வெங்காரம், மிளகு இவைகள் சம எடையாக தாம்பிரபாத்திரத்தில் வைத்து எலுமிச்சம்பழரசத்தினால் மூன்றுநாள் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் காசம், அர்மம்,புரைகள், நமச்சல், விரணம் முதலியன குணமாகும்.

திமிரபடலத்திற்கு வர்த்தி :- தானிக்காய் பருப்பு, அதிமதுரம், நெல்லிபருப்பு, மிளகு, பால்துத்தம் இவைகளை சமஎடையாக  ஜலம்விட்டரைத்து வத்திப்போல் செய்து நிழலிலுலர்த்தி ஜலத்தில் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் திமிரம் நிவர்த்தி யாகும்.

பத்தியாதி வர்த்தி :- கடுக்காய்ப்பிஞ்சி 3-பாகம், தானிக்காய் 2- பாகம், நெல்லிபருப்பு 1-பாகம் இவைகள் யாவையும் ஒன்றாக ஜலம்விட்டரைத்து வத்திகள்செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொள்ளவேண்டியது. அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் கண் ஜலம்விட்டு நோய்கள் யாவும் நிவர்த்தியாகும்.

கண்பூ முதலியவைகளுக்கு லேகனவர்த்தி :- புங்கன்விரை சூரணத்தை முருக்கன்பூரசத்தில் பலதடவை பாவனைச்செய்து மைப்போல் அரைத்து வர்த்தி செய்து அவைகளை ஜலத்தில் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டுக்கொண்டால் கண்பூ, மாமிசவிருத்திநஞ்சு முதலிய ரோகங்கள் சஸ்திரத்தினால் சேதிப்பதுபோல் நிவர்த்தியாகும்.

திமிர்களுக்கு ரோபணரச கிரியைகள்
 :- 1/4-பலம் சீந்தில்கொடி ரசத்தில், 1/4-பலம் தேனும், இந்துப்பு 1/4-பலமும் சேர்த்தரைத்து நேத்திரங்களுக்கு அஞ்சனமிட்டால் பில்லம், அர்மம், திமிரம், காசபிந்து, நமை, லிங்க நாசனம், வெள்ளை அண்டம் இவைகளில் உண்டாகும் ரோகங்கள் நிவர்த்தியாகும்.
 

நேத்திரசிராவங்களுக்கு ரோபணீ ரசகிரியைகள் :-கரும் வேலன் இலையை கியாழம் காய்ச்சி அதில் கொஞ்சம் தேன் விட்டு அரைத்து கண்களுக்கு அஞ்சனம் போட்டால் நேத்திரசிராவம், நீர் வடிதல் சந்தேகமின்றி நிவர்த்தியாகும்.

நேத்திரரோகத்திற்கு பற்றுகள் :- முருங்க இலை ரசத்தில் தேன் கலந்து கண்களுக்கு பற்று போட்டால் சகலமான கண் நோய்கள் நிவர்த்தியாகும்.

குருவிக்கல், சூரத்துக்கடுக்காய், இந்துப்பு, மரமஞ்சள் இவைகள் சுத்தஜலத்தில் அரைத்து கண்களைச்சுற்றி பற்று போட்டால் நேத்திரரோகம் நிவர்த்தியாகும்.

கர்பூரசிலாசித்து, கடுக்காய், மரமஞ்சள், நாவிக்கல், இந்துப்பு, இவைகளை சமஎடையாக ஜலத்தில் அரைத்து கண்களைச்சுற்றி பற்று போட்டால் சகலநேத்திரரோகங்களையும் நிவர்த்தியாகும்.

அதிமதூரம், நாவிக்கல், இந்துப்பு, மரமஞ்சள், கல்கபரி இவைகளை சமஎடையாக ஜலத்தில் அரைத்து கண்களைச்சுற்றிலும் லேபனம் செய்தால் அபிஸ்யந்தாதி ரோகங்கள் நிவர்த்தியாகும்.

ரசாஞ்சனம், சுக்கு, இலவங்கப்பத்திரி அல்லது கடுக்காய்இவைகளையாவது கற்றாழை, சித்திரமூலம்இலை இவைகளையாவது மாதுழம்பழதுளிராவது , வசம்பு, மஞ்சள், சுக்கு, நாவிக்கல் இவைகளையாவது ஜலம் விட்டு அரைத்து கண்களுக்கு லேபனம் செய்தால் கண்ரோகங்கள் நிவர்த்தியாகும்.

இந்துப்பு, லோத்திரச்சக்கை இவைகளை வறுத்து அத்துடன்மொழுக்கையையும் நெய்யையும் கலந்து அரைத்து கண்கள்  சுற்றிலும் பற்று போட்டாலும் அஞ்சனமிட்டாலும் நேத்திரரோகம் அந்த க்ஷணமே நிவர்த்தியாகும்.

இருப்பு பாத்திரத்தில் எலுமிச்சம்பழச்சாற்றை விட்டு கொஞ்சம் சுண்டுகிற வரையிலும் இரும்புப்பால் அரைத்து கண்களைச்சுற்றிலும் பற்றுப்போட்டால் நேத்திரரோகம் முழுவதும் நிவர்த்தியாகும்.

மிளகை கரிசனாங்கண்ணிசாற்றினால் அரைத்து கண்களைச்சுற்றிலும் பற்றுப்போட்டால் அதிமாமிச அர்மரோகம் முதலியநேத்திர டோகங்களுடன் சேர்ந்திருக்கும் அர்மரோகம் நிவர்த்தியாகும்.

நேத்திர பிந்து :- நந்தியாவட்டை பூவின் இதழ்கள் பலம்1சிறு களாப்பூவின் இதழ்கள் பலம்1, எள்ளை சுத்தமாக கழுவி யுலர்த்தி செக்கில் ஆட்டிஎடுத்த சுத்தமான நல்லெண்ணெய் பலம் 10 இவைகளை ஒரு சுத்தமான சீசாவிலிட்டு கார்கிட்டு அடைத்து அல்லது மெழுகினால் அல்லது அரக்கினால் சீல் செய்து பசுவின
தொழுவத்தின் பூமியில் குழிதோண்டி புதைத்துவைத்து 40 நாட்கள் சென்றபின்பு எடுத்து சூரியபுடமாக 21-நாள் வைத்து பின்பு சுத்தமான சீலையில் வடிகட்டி வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 1-2
துளிவீதம் தினம் இருவேளையாக கண்களில் விட்டுவர கண்களில் பூ விழுதல், சதை வளர்ச்சி, பார்வைமந்தம், நீர்ப்படலம், ரத்தபடலம், சதை படலம் முதலிய பல நேத்திரபிணிகள் குணமாகும்.

சகல நேத்திரரோகங்களுக்கும் சிகிச்சை :- ஓர் கோழிமுட்டையை வேகவைத்து குறுக்கே இரண்டாக அரிந்து மஞ்சட்கருவை நீக்கிவிட்டு வெள்ளைக் கருவிலுள்ள பள்ளத்தில் சீனாக்கற்கண்டை
பொடித்து வைத்து இரண்டு துண்டுகளையும் மூடி நூலால் கட்டி ஒரு எனாமில்தட்டு அல்லது பேசனில் வைத்து பனியில் வைத்து எடுக்க கற்கண்டானது முட்டையின் சத்துடன் ஊறிக் கரைந்து ஜெயநீர்போல் இறங்கும். இதைச் சேகரித்து சிறிது லேசாக வெதுப்பி சுத்தமான சீலையில் வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்துக. இதில் வேளைக்கு 1-2துளிவீதம் தினம் இருவேளையாக கண்களில் விட்டுவர சகலகண்ரோகங்களும் குணமாகும்.

நேத்திரரோகங்களுக்கு பத்தியங்கள் :- நெல் அரிசி கோதுமை, பச்சைபயறு, இந்துப்பு, பசும்நெய், பசும்பால், கற்கண்டு, தேன் இவைகள் நேத்திரரோகத்தின் பத்தியங்கள்.

நேத்திரரோகங்களுக்கு அபத்தியங்கள் :-சிறுகீரை, கரிசாலை, பொன்னாங்கண்ணி, வெள்ளைச்சாரணை இவைகள் தவிர மற்றகீரை தினுசுக்கள், கள்ளு, தயிர், பெருங்காயம், உப்பு, இலுப்பைக்கட்டி பக்ஷணங்கள், நீராடுதல், திரிதல், சலபானம், தாம்பூலம், கோபம்,வெய்யிலைப் பார்க்குதல், அக்கினிசுவாலை இவைகள் அபத்தியங்கள்.

Post Comment

1 comments:

Dinesh Nataraj சொன்னது…

வணக்கம். கண்புரை பாதிப்பை குணப்படுத்த இயலுமா??
நன்றி.

கருத்துரையிடுக