ஞாயிறு, ஜனவரி 10, 2010

அதி தூல ரோகம்,அதி சுட்க ரோகம்,உளமாந்தை ரோகம் -ரோக நிதானம்


ஆதிதூல ரோகம்

இந்நோயில் உடலில் இயற்கையாய் உள்ள மாமிச அணுக்கள் அதிகரித்து வளருங்காரணத்தினால், உடல் பருப்பதுடன், மார்பு வ்யிறு தொடை, பிருஷ்டம் இவைகள் ளவுக்கு மிஞ்சிபருத்து அசைவற்று கடினமாகவும் இருக்கும். இதனால் உடலை விருப்பப்படி இயக்க முடியாமை சந்தோஷக்குறைவு அறிவு மங்கல், நடந்தால் அவ்விடத்து சதைகளெல்லாம் குலுங்கல், ஆயாசம், இரைப்பு, கபாதிக்கம் அற்ப இருமல், மேல் சுவாசம் முதலிய துர்க்க குணங்கள் உண்டாகும். இது சுக்கில சோணித தோஷத்தை உண்டாக்கில் கருப்ப நாசத்தைச்
செய்யும்.

அதிசுட்கரோகம்

இந்நோயில் சமாக்கினியின் குறைவால் செழித்து வளர்ந்த
மாமிசங்களானவை சுட்கித்து உடலை இளைக்கச்செய்யும் நரம்புகளும் கீல்களும், கழுத்தும், வயறும், தொடைகளும் தாடைகளும், புயங்களும் உலர்ந்து மெலியும். அப்போது ஆயாசமும் துர்பலமும், தேவாங்கு என்னும் ஒருவித மிருகத்தை யொத்த  உருவமும் உண்டாகும்.

உளமாந்தை

க்ஷயரோகத்தின் பிரிவாகிய இந்த ரோகம் அக்கினிமாந்தம் உள்ளபோது போஜனம் செய்தல், இரவில் விழித்தல், பகலில் உறங்கல் புலாலையே மிகவும் புசித்தல், இது வாத உளமாந்தை, பித்தஉளமாந்தைசிலேஷ்மஉளமாந்தை, தொந்தஉளமாந்தை என நான்கு வகைப்படும்.

1. வாத உளமாந்தை :- இது நெஞ்சு அழுவெலும்பு பக்கம், இவை விம்மல், நினைவழிதல், தொனியோடு நொந்து இருமல் அற்ப சுரம், உள்ளில் கட்டிகள் உண்டாகி பழுத்து உடைந்து சீழ் முதலியது வாயால் விழுதல், கைகால் எரிவு என்னும் குணங்களை உண்டாக்கும்.

2. பித்தஉளமாந்தை :-
 இது மிகத்திரண்டு கீழ் வயிற்றில் கட்டிகளுடன் மிகப்பொருமி, புண்போல் நொந்து, சர்வாங்கமும்உளைச்சலோடு தலைவலி, இருமல் இளைப்பு, மிடறு விரணமாதல் மயக்கம், புரட்டல், வாயால் சீழ் விழுதல் என்னும் இக்குணங்கள  யுண்டாக்கும்.
 
3. சிலேஷ்ம உளமாந்தை :- இது உடல் உருகி தேகமெல்லாம் புண்போல் நோதல், வாயால் சீழ் விழுதல், மனக்கலக்கம், வாந்தி, மயக்கம், சிலேஷ்மாதிக்கம், நடுக்கல், பஞ்சுபோல் தேகம் வெளிறல்என்னும் குணங்களை உண்டாக்கும்.

4. தொந்த உளமாந்தை :- இது தலைவலி, சுரம், இருமல், கோழை, அசதி, மிகு உறக்கம், துர்வாசனையுடன் வாயால் சீழ்விழுதல், சர்வாங்கமும் தினவு, பசிமந்தம் என்னும் குணங்களை உண்டாக்கும்.

உளமாந்தைரோக சாத்தியா சாத்தியம் :- பித்த உளமாந்தை பலவித சிகிச்சைகளினால் சாத்தியம். வாத, சிலேஷ்ம உளமாந்தைகள் சிகிச்சைகளுக்கு வசப்படாவிட்டால் அசாத்தியம். தொந்தஉளமாந்தை அசாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக