புதன், ஜனவரி 13, 2010

ஆம வாத ரோக (முடக்கு வாத நோய்க்கு ) சிகிச்சைகள்

ராஸ்னாதிகியாழம் :- சிற்றரத்தை, தேவதாரு, சரக்கொனறைப்புளி, சுக்கு, திப்பிலி. ஆமணக்குவேர், மிளகு, வெள்ளைச்சாரணை, சீந்தில்கொடி இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் சுக்கு கற்கத்தை கலந்து குடித்தால் ஆமவாதம் நிவர்த்தியாகும்.

வேறுவிதம் :- சிற்றரத்தை, சுக்கு, சீந்தில்கொடி, ஆமணக்கு வேர், மரமஞ்சள் இவைகளை சமஎடையாய  கியாழம்வைத்து அதில ஆமணக்கெண்ணெய் கலந்து அருந்தச்செய்தால் ஆமவாதம் நிவர்த்தியாகும்.

மஹவுஷதாதி கியாழம் :- தும்பராஷ்டம் 3 பாகம், ஆமணக்குவேர், ஆடாதோடை ஈர்க்கு, பூனைக்காஞ்சொரிவேர், கிச்சிலிக்கிழங்கு, சிற்றாமுட்டிவேர், மரமஞ்சள், கோரைக்கிழங்கு, சுக்கு
அதிவிடயம், கடுக்காய்த்தோல், நெரிஞ்சல், வெள்ளைச்சாரணை, திப்பிலி, சீந்தில்கொடி, தண்ணீர்விட்டான்கிழங்கு, வசம்பு, அழவணைசெவ்வியம், கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி இவைகள்வகைக்கு 1 பாகம், இவை யாவையும் நறுக்கி ஒன்றாய்ப்போட்டு கியாழங்காய்ச்சி வடிகட்டி, அதில் சுக்கு சூரணத்தை கலந்து தோஷபலத்தை அறிந்து குடித்தால் சகலவாதரோகங்கள், ஆமவாதம், பக்ஷகாதம், அர்திதம், கம்பவாதம், சந்திகதவாதம், ஜானுவாதம், சங்கூவாதம், அஸ்திவாதம், காக்கைவலி, ஹனுஷ்தம பவாதம், வூருஸ்தம்பவாதம், வாதரத்தம், விசுவாசீவாதம், கோஷ்டூசிரஷகவாதம், ஹிருதயவாதம், மூலவியாதி  யோனிரோகம், சுக்கிலரோகம், மேட்ரத்தவாதம், வாந்திரோகம் இவையாவும் நிவர்த்தியாகும்.

ராஸ்னாதி கியாழம் :- பேரரத்தை, சரக்கொன்றைப்புளி,தேவதாரு, வெள்ளைச்சாரணை, சீந்தில்கொடி, நெரிஞ்சில், ஆமணக்குவேர் இவைகளை சமஎடையாய் கியாழம்வைத்து அதில் சுக்குச் சூரணத்தைக் கலந்து குடித்தால் பூட்டுகளில் பாதையை உண்டுபண்ணும் ஆமவாதம் நிவர்த்தியாகும்.

ராஸ்னாதுவாதச கியாழம் :- பேரரத்தை, தண்ணீர்விட்டான் கிழங்கு, ஆடாதோடை ஈர்க்கு, சீந்தில்கொடி, அதிவிடயம், கடுக்காய்த்தோல், சுக்கு, பூனைகாஞ்சொரிவேர், ஆமணக்குவேர், தேவதாரு, வசம்பு கோரைக்கிழங்கு இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து குடித்தால் இடுப்பு, துடை, புட்டம், பாதம், கண்டச்
சதை, மண்டை, முழங்கால் முதலிய விடங்களிலிருக்கும் ஆமவாதம நிவர்த்தியாகும்.

சுண்டியாதி கியாழம்
 :- சுக்கு, நெரிஞ்சில் இவைகளை கியாழம்வைத்து அதிகாலையில் பிரதிதினமும் குடித்துவந்தால் ஆமவாதம், இடுப்புநோய் இவைகள் நீங்கி ஜீரணத்தை யுண்டாக்கும்.

சட்யாதி கியாழம் :- கிச்சிலிக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்தோல் வசம்பு, தேவதாரு, அதிவிடயம், சீந்தில்கொடி இவைகளை கியாழம் வைத்து குடித்து உஷ்ண பதார்த்தங்களை சாப்பிட்டால் ஆமவாதம்
நிவர்த்தியாகும். பசி தீபனம் உண்டாகும்.

தசமூலாதி கியாழம
் :- தசமூல கியாழத்திலாவது சுக்கு கியாழத்திலாவது, ஆமணக்கெண்ணெயை கலந்து குடித்துவந்தால் இடுப்பு சூலை, அடிவயிறு சூலை இவை நிவர்த்தியாகும்.

ஓமாதி சூரணம் :- ஓமம், வாய்விளங்கம், இந்துப்பு, தேவ தாரு, சித்திரமூலம், மோடி, சோம்பு, திப்பிலி, மிளகு இவைகளை வகைக்கு 1/4-பலம், கடுக்காய்பிஞ்சு 1 1/4-பலம், பெரிய மரசக்கை 1 1/4-பலம், சுக்கு 2 1/2-பலம், இவைகள் யாவையுஞ் சூரணித்தி கொஞ்சம் உஷ்ணமான வெந்நீர் அனுபானத்துடன் சாப்பிட்டால் வீக்கம்,
ஆமவாதம், சந்திரசூலை, காக்கைவலி, இடுப்புசூலை, பிருஷ்டவாதம், குதவாதம், கண்டச்சதையிலுள்ள குத்தல், கபவாதம் இவைகள் நிவர்த்தியாகும்.

பஞ்சம சூரணம்
 :- சுக்கு, கடுக்காய்ப்பிஞ்சு, சிவதைவேர், திப்பிலி சவ்வர்ச்சலவணம் இவைகளை சமஎடையாகச்சூரணித்து  சாப்பிட்டால் சூலை, வயிறுப்பல், உதிரரோகம், மூலவியாதி, ஆமவாதம் இவைகள் நிவர்த்தியாகும்.

திரிபலாதிசூரணம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிப் பருப்பு இவைகளைச் சூரணித்து நீர் அல்லது மோரில் சாப்
பிட்டால் ஆமவாதம் சந்துக்களில் இருக்கும் வீக்கம் இவைகள நீங்கும்.

புனர்னவாதிசூரணம்
 :- வெள்ளைச்சாரணை, சீந்தில்கொடி, தண்ணீர்விட்டான்கிழங்கு, சிவகரந்தை, கிச்சிலிக்கிழங்கு, தேவதாரு, சுக்கு இவைகளைச் சூரணித்து சாப்பிட்டால் கொடூரமான ஆமவாதம், கொஞ்சகாலமாய் இருக்கும் காக்கைவலி இவைகள் நீங்கும்.

வைஸ்வாநர சூரணம்
 :- இந்துப்பு 2 பாகம், யாவாக்ஷ¡ரம் 2 பாகம், சுக்கு 5 பாகம், ஓமம் 5 பாகம், கடுக்காய் 10 பாகம் இவைகளைச் சூரணித்து மோர், வெந்நீர், கோமூத்திரம் இவைகளில் எத்துடனாவது சாப்பிட்டால் ஆமாவாதம், குன்மம், இதரோகம் அடிவயிற்றுவலி, பிலீகை, சூலை, வயிறுப்பல், மூலவியாதி இவைகள் நிவர்த்தியாகும். வாதத்தை சமனம் செய்யும்.

சித்திரகாதி சூரணம் :- சித்திரமூலம், கடுகுரோகணி, வட்டத் திருப்பி, வெட்பாலை, அதிவிடயம், சீந்தில்கொடி, தேவதாரு,  வசம்பு, கோரைக்கிழங்கு,  சுக்கு,கடுக்காய்த்தோல் இவைகளை சம எடையாய் சூரணித்து வெந்நீருடன் சாப்பிட்டால் ஆமவாதம் நிவர்த்தியாகும்.

ஆமவாதாரி தும்சரசம் :- சுத்திசெய்தரசம் 1 பாகம், சுத்திசெய்த கெந்தி1 பாகம், இவைகளுக்கு பதினாறில் ஒருபங்கு சுத்திசெய்த நாபி, இவைகளை கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தால் அரைத்து குன்றி எடை சாப்பிட்டால் வாதங்கள், அபஸ்மாரங்கள், உன்மாதம், சர்வாங்கப்பாதை, ஏகாந்தவதம், ஆமவாதம்,
ஹனுஸ்தம்பவாதம், சீதளம் இவை யாவும் நிவர்த்தியாகும்.

உதயபாஸ்கர ரசம் :- சுத்திசெய்தரசம், கெந்தி, சுக்கு மிளகு, திப்பிலி, யவக்ஷ¡ரம், சக்திக்ஷ¡ரம், பஞ்சலவணங்கள், சுட்ட வெங்காரம், இவைகள் சமஎடை, இவைகள் யாவும் சமஎடை நேர்வாளம் சேர்த்து கல்வத்திலிட்டு கொடிமாதுழம்பழத்தில் அரைத்து பாவனைசெய்து பிறகு உலர்த்திச் சூரணித்து அதில் 2 குன்றி அளவு சாப்பிட்டால் ஆமவாதம் நிவர்த்தியாகும். பத்தியம் பசும்பால் பச்சைப்பயறு, இத்துடன் கலந்த அன்னத்தைச் சாப்பிடும்படி செய்யவேண்டியது.

அபயாதி மாத்திரைகள் 
:- கடுக்காய்தோல், இந்துப்பு, கொன்னைச்சதை, பாபரமுள்ளிவேர், சுக்கு இவைகளை சமஎடையாக அரைத்து லோஹபாண்டத்தில் போட்டு அடுபேற்றி மந்தாக்கினியால் சமைத்து இலந்தைபழம் அளவு மாத்திரைகள் செய்து தோஷபலானுசாரமாய் வெந்நீரில் சாப்பிட்டால் ஆமரோகம்  நிவர்த்தியாகும். பத்தியம் தயிர்சாதம்.

ஏரண்டாதி மாத்திரைகள் :- ஆமணக்கு பருப்பு, சுக்கு சூரணம், சர்க்கரை இவைகளை சமஎடையாய் அரைத்து மாத்திரைகள் செய்து அதிகாலையில் சாப்பிட்டால் ஆமவாதம் நிவர்த்தியாகும்.

ஹரீதகீ குக்குலு :- கடுக்காய்தோல், சுக்கு, பெரியமரம் சக்கை இவைகள் சமஎடை, இவைகளுக்கு இரண்டு பங்கு அதிகம் குங்கிலியம் இவைகள் யாவையுஞ் சூரணித்து ஆமணக்கெண்ணையில் ஒருநாள் அரைத்து சாப்பிட்டால் ஆமவாதம் நிவர்த்தியாகும்.

யோகராஜகுக்குலு :- சித்திரமூலம், திப்பிலிமூலம், ஓமம், சோம்பு, வாய்விளங்கம், சீரகம், தேவதாரு, செவ்வியம், ஏலக்காய், இந்துப்பு, கோஷ்டம், சித்தரத்தை, நெரிஞ்சில், கொத்தமல்லி, திரிபலை, கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப்பத்திரி இவைகளை சமஎடையாகச் சூரணித்து இந்த சூரணத்திற்குசமன் குங்கிலியச் சூரணம் கலந்து நெய்விட்டு ஒருநாள் அரைத்து நெய்யில் ஊரிய பானையில்வைத்து பிறகு 1/4-பலம் வீதம் சாப்பிட்டுதனக்கு வேண்டுமளவு ஆகாரத்தைச் சாப்பிட்டுவர பிலீகை, குன்மம், சூலை, மகோதரம், ஆமவாதம் இவைகள் சூரியனைக்கண்ட பனிபோல் நிவர்த்தியாகும். அக்கினிதீபனம், தேஜசு பலம் இவைகள் உண்டாகும்.

பிருஹத்சைந்தவாதி தயிலம் :- இந்துப்பு, கடுக்காய்தோல், சித்தரத்தை, பெரிய சதாப்பிலை, ஓமம், சர்ஜக்ஷ¡ரம், மிளகு, கோஷ்டம், சுக்கு, சவ்வர்ச்சலவணம், பிடாலவணம், வசம்பு, குரோசோணியோமம், சீரகம், புஷ்க்கரமூலம், அதிமதுரம், திப்பிலி இவைகள் வகைக்கு பலம்-1/2, சூரணித்து ஆமணக்கெண்ணெய் 16-பலம்
பெரிய சதாப்பிலை 16-பலம், காடி 32-பலம், தயிர்மீது தேட்ட 64-பலம் இவைகளை எல்லாம் ஒன்றாய்க் கலந்து மந்தாக்கினியால் வேகவைத்து தைலபக்குவமான பிறகு இறக்கிக் கொள்ளவும்.

பிறகு இவை பானம், அப்பியங்கனம், வஸ்திகர்மம், இவை களில் மேல்கூறிய மருந்தை உபயோகித்தால் ஆமவாதம், வாதசூலை சந்துக்களிலுள்ளபாதை, முட்டிகள், இடுப்பு இவைகளில் உள்ளநோய், முழங்காலில் உள்ளகுத்தல், தொடைகளில் உள்ளகுத்தல், சந்திசூலை, ஹிருதயசூலை, பாரிசசூலை, கபரோகம், இதர வாத



ரோகங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும். அக்கினி தீபனம உண்டாகும்.

ஆமவாதத்திற்கு மேதீபாகம் :- வெந்நியம் 8 பலம், சுக்கு 8  பலம் இவைகளைச் சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து அந்த சூரணத்தை 64 பலம் பாலில் கொட்டி பிறகு 8 பலம் நெய் கலந்து கட்டியாகிறவரையிலும் வேகவைத்து அதில் 64 பலம் சர்க்கரை கலந்து மறுபடியும் பக்குவமாக மந்தாக்கினியால் சமைத்து பாகத்தை அறிந்து இறக்கிக்கொண்டு அதில் மிளகு, சுக்கு, திப்பிலி, திப்பிலிமூலம், சித்திரமூலம், ஓமம், சீரகம், கொத்தமல்லி, கருஞ்சீரகம் இலவங்கப்பத்திரி, கோரைக்கிழங்கு இவைகள் வகைக்கு 1 பலம்சுக்கு 1 1/2 பலம்,மிளகு 1 1/2 பலம், இவைகள் யாவையுஞ் சூரணித்து அதில் கொட்டி செவ்வையாக கிளறி வைத்துக்கொள்ளவும்.

இதை தேகதத்துவத்தையும் அக்கினிதத்துவத்தையும் அறிந்து வேளைக்கு ஒரு பலம் விகிதம் சாப்பிட்டுவந்தால் ஆமவாதம், சகலவியாதிகள், விஷமசுரம், பாண்டுரோகங்கள், காமாலை, உன்மாதம் அபஸ்மாரம், பிரமேகம், வாதரத்தம், ஆமலபித்தம், தலைவலி நாசாரோகம், நேந்திரரோகம், பெரும்பாடு, சூதிகாரோகம் இவைகள் நிவர்த்தியாகும். சரீரத்திற்கு வீரியம், புஷ்டி, பலம் இவைகளை உண்டாக்கும்.

சவுபாக்கிய கண்டீபாகம் :- தோல்சீவிய சுக்குச் சூரணம் 8 பலம், நெய் 20 பலம், பசும்பால் 32 பலம், சர்க்கரை 50 பலம், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப்பத்திரி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், இவைகளை ஒன்றாக கலந்து பாகமாக காய்ச்சி, இறக்கிக்கொள்ளவும், இதைக்கொடுத்தால் ஆமவாதம் நிவர்த்தியாகும்.

தபுஷ்பாதி லேபனம் :- சதாப்பலை, சுக்கு, வசம்பு, நெரிஞ் சல், உலிமிடிப்பட்டை, வெள்ளைச்சாரணை, தேவதாரு, கிச்சிலிக் கிழங்கு, சிவகரந்தை, முதியார்கூந்தல்வேர், முன்னை, ஊமத்தன்காய் இவைகளை நீர்விட்டு அரைத்து கொஞ்சம் உஸ்ணம்செய்து லேபனம் செய்தால் ஆமவாதம் நிவர்த்தியாகும்.

ஆமவாதத்திற்கு பத்தியங்கள் :- ரூஷை, இலங்கனம், சுவேதம் சிநேஹபானம், வஸ்திகர்மம், லேபனம், குதவர்த்தி, ரேசனம் ஒருவருஷம் சென்ற நெல் அரிசி, கொள்ளு, வாத சிலேத்துமஹாங் கங்களான பதார்த்தங்கள்முருங்கைக்காய், வெந்நீர், மந்தாரம்நெரிஞ்சல், விருத்ததேவதரு, சேராங்கொட்டை, கோமூத்திரம், இஞ்சிகாரம் துவர்ப்புடைய பதார்த்தங்கள் இவைகள் ஆமவாதத்திற்குஹிதகரங்கள்.

அபத்தியங்கள் :- தயிர், மீன், வெல்லம், பசலீகீரை, உளுந்தமாவு, கெட்டசலம், கீழ்காற்று, விருத்தமான அன்னங்கள், தனக்குப் பிடியாத பதார்த்தங்கள், மலமூத்திரநிரோதனம், இவைகளை ஆமவாதரோகிகள் விடவேண்டியது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக