குளிர்த்தாதி கியாழம் :- கொள்ளு, சுக்கு, கண்டங்கத்திரி,ஆடாதோடை இவைகளை கியாழம் வைத்து அதில் ஆமணக்கு வேர்சூரணத்தைப் போட்டு சாப்பிட்டால், விக்கல், மேல்மூச்சி இவைகள் நீங்கும்.
அபயாதி கல்கம் :- கடுக்காய், சுக்கு இவைகளை கல்கஞ் செய்தாவது அல்லது புஷ்க்கரமூலம் யவநானல், மிளகு இவைகளை கல்கஞ் செய்தாவது வெந்நீரில் சாப்பிட்டால், விக்கல், சுவாசம் இவைகள் நீங்கும்.
சந்திரசூர கியாழம் :- கோரைக்கிழங்கு விரை 1-பாகம்,8-பாகம் ஜலத்தில் கொட்டி விரைகள் மிருது ஆகிறவரையிலும் கக்ஷ¡யங் காய்ச்சி வடிகட்டி, ஒருபலம் விகிதம் அடிக்கடி குடித்து வந்தால் விக்கல் நீங்கும்.
குளித்தாதி கியாழம் (வேறு) :- கொள்ளு, யவதானியம்,இலந்தை, வெட்டிவேர், தசமூலங்கள், சிற்றாமுட்டி இவைகளை கியாழம் வைத்து சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், விக்கல் இவைகள் நீங்கும்.
தாத்தியாதி கியாழம் :- நெல்லிக்காய் தோல், திப்பிலி,சுக்கு இவைகளின் கியாழத்தில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், விக்கல் நீங்கும்.
தசமூலி கியாழம் :- தசமூல கியாழத்தில் தேன், காந்தபஸ்பம் இவைகளை கலந்து சாப்பிட்டால் ஐந்துவித விக்கல்கள் நீங்கும்.
சங்கதூள ரசம் :- பாதரசம், அப்பிரக பற்பம், சுவர்ண பற்பம், இவைகள் சமஎடை இவைகளுக்கு சமஎடை வைக்கிறாந்த பற்பம் இவைகளுக்கு ஐந்து பாகங்கள் அதிகமாய் சங்கு பற்பத்தைக்கலந்து அரைத்து 4-குன்றி எடை தேனுடன் சாப்பிட்டால் ஐந்து வித விக்கல்கள் நீங்கும்.
மேகடம்பர இரசம் :- சுத்திசெய்த பாதரசம், சுத்திசெய்தகெந்தி, சமஎடை இவைகளை சிறுகீரை வேர் ரசத்தினால் அரைத்து உருண்டை செய்து வஜ்ரமூசையில் வைத்து மணல் மறைவில் புடமிட்டு ஆறியபிறகு எடுத்து மறுபடியும், அதை தசமூல கியாழத்தால் இரண்டு ஜாமம் அரைத்து குன்றிஎடை அனுபானத்துடன் கொடுத்தால் விக்கல், சுவாசம், சுரம் இவைகள் நீங்கும்.
ஹரித்திராதி லேகியம் :- மஞ்சள், மிளகு, திரா¨க்ஷ, வெல் லம், சித்தரத்தை, திப்பிலி, கிச்சிலிக்கிழங்கு இவைகளைச் சூரணித்து எண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால் பிராணஹரமாகிய விக்கல், சுவாசங்கள் நிவர்த்தியாகும்.
சிகி லேகியம் :- மயிலிறகு சுட்ட சாம்பல், திப்பிலிசூரணம், இவைகளை தேனில் கலந்து, அடிக்கடி சாப்பிட்டால் பிரபலமான விக்கல், சுவாசங்கள், வாந்திகள் நீங்கும்.
பிப்பல்யாதி லேகியம் :- திப்பிலிமூலம், அதிமதுரம், வெல்லம், கோமயம், குதிரை லத்தி இவைகளை கியாழம் வைத்து வடிகட்டி தேன், நெய் கலந்து சாப்பிட்டால் விக்கல், காசம் இவைகள் நீங்கும்.
கோலமஜ்ஜாதி லேகியம் :- இலந்தைபழம் கொட்டை நீக்கியது, சுருமாகல், பொறிமாவு, கடுகுரோகணி, நாககேசரம், காவிக்கல், இவைகளை சூரணித்து தேனுடனாவதி அல்லது திப்பிலி, நெல்
லிக்காய் தோல், சர்க்கரை, சுக்கு, அன்னபேதி, தயிர் இவைகளை சூரணித்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும்.
யஷ்டியாதி சூரணம் :- அதிமதுர சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டாலும் அல்லது திப்பிலி சூரணத்தை சர்க்கரை கலந்து சாப்பிட்டாலும் அல்லது கொஞ்சம் சூடாயிருக்கும் பால், நெய் கரும்பு ரசம் இவைகளை கலந்து சாப்பிட்டாலும் ஐந்துவித விக்கல்கள் நீங்கும்.
விசுவா சூரணம் :- சுக்கு, கடுக்காய், திப்பிலி இவைகளின் சூரணத்தில் சர்க்கரை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்லது சிந்தில்கொடி சுக்கு இவைகளை சூரணித்து நசியஞ்செய்தாலும் விக்கல்ரோகம் நிவர்த்தியாகும்.
கிருஷ்ணா சூரணம் :- திப்பிலி, நெல்லிக்காய் தோல், சுக்கு இவைகளைச் சூரணித்து சர்க்கரை தேன் கலந்து அடிக்கடி சாப்பிட்டால் விக்கல் பெருமூச்சு இவைகள் நிவர்த்தியாகும்.
சுருங்கியாதி சூரணம் :- கடுக்காய்ப்பூ, சுக்கு, திப்பிலி, மிளகு கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கண்டங்கத்திரி, கண்டு பாரங்கி, புஷ்க்கரமூலம், ஜடாமாஞ்சி, இந்துப்பு இவைகளைச் சூரணித்து வெந்நீரில் கொடுத்தால் விக்கல், மேல்மூச்சு, ஊர்த்துவவாதம், காசம், அருசி, பீனசம், இவைகள் நிவர்த்தியாகும்.
பாரங்கியாதி சூரணம் :- கண்டுபாரங்கி, சுக்கு இவைகளைச் சூரணித்து வெந்நீரில் கொடுத்தாலும் அல்லது சர்க்கரையுடன் கொடுத்தாலும் விக்கல், மேல்மூச்சு இவைகள் நீங்கும்.
தசமூலாதியவாகு :- தசமூலங்கள், கிச்சிலிக்கிழங்கு, சிற்ற ரத்தை, சுக்கு, திப்பிலி, புஷ்க்கரமூலம், கடுக்காய்ப்பூ, கீழாநெல்லி, கண்டுபாரங்கி, சீந்திகொடி, கோரைக்கிழங்கு இவைகளின் சூரணத்தில் தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்லது இவைகளை கியாழம் போட்டு சாப்பிட்டாலும் மேல்மூச்சு, ஹிருதயரோகம், பாரிசசூலை
விக்கல் இவைகளை நிவர்த்திக்கச் செய்யும்.
பெருங்காயம், சவ்வர்ச்சலவணம். சீரகம், பிடாலவணம், புஷ்க் கரமூலம், சித்திரமூலம், கடுக்காய்பூ இவைகலை கியாழமிட்டுக் குடித்தாலும் விக்கல், சுவாசரோகம் இவைகள் நீங்கும்.
சாகதுக்த யோகம் :- ஆட்டுப்பாலில் சுக்கு சூரணத்தைப் போட்டு பக்குவஞ்செய்து சாப்பிட்டாலும் கொன்னைப்புளி சுரசத்தில் பொரிமாவு, இந்துப்பை கலந்து சாப்பிட்டாலும் விக்கல் நிவர்த்தியாகும்.
கொடிமாதுளம்பழ ரசத்தில் தேன், சவ்வர்ச்சலவணம் கலந்து சாப்பிட்டாலும் அல்லது சுக்கு, நெல்லிக்காய்த்தோல், திப்பிலி இவைகளின் சூரணத்தில் தேன் கலந்து சாப்பிட்டாலும் விக்கல் நிவர்த்தியாகும்.
ரக்தசந்தன யோகம் :- ரக்தசந்தனத்தை முலைப்பாலில் கலந்த கொஞ்சம் அனல் காண்பித்து இந்துப்பை கலந்து சாப்பிட்டாலும் அல்லது இந்துப்பை சலத்தில் அரைத்து நசியஞ் செய்தாலும் விக்கல் நீங்கும்.
விலாம்பழரசத்திலாகிலும் அல்லது நெல்லிக்காய் ரசத்தி லாவது திப்பிலி சூரணத்தை தேன்கலந்து சாப்பிட்டாலும் விக்கல், மேல்மூச்சி இவைகள் நீங்கும்.
மதுக நசியம் :- அதிமதுரம், தேன் அல்லது திப்பிலி,சர்க்கரை அல்லது சுக்கு, வெல்லம் இவைகளை பிரத்தியேகமாய் நசியஞ் செய்தால் விக்கல் நீங்கும்.
மாக்ஷ¢கா நசியம் :- ஈ மலத்தை முலைப்பாலில் கலந்து நசியஞ் செய்தாலும் அல்லது அரக்கு ஜலத்தில் அரைத்து நசியஞ் செய்தாலும் அல்லது முலைப்பாலில் சந்தனத்தைக் கலந்து நசியஞ் செய்தாலும் விக்கல் நீங்கும்.
ஹிங்குவாதி தூபம் :- பெருங்காயம், உளுந்து இவைகளைச்சூரணித்து புகையில்லாத நெருப்பில் போட்டு அந்த புகையைகுடித்தால் ஐந்துவித விக்கல்கள் நிற்கும்.
ஹேம மாத்திரைகள் :- சுவர்ணபற்பம், முத்துபற்பம், தாம் பிர பற்பம், காந்தபற்பம் இவைகளை யொன்றாகக் கலந்து 2-குன்றி எடை கொடிமாதுளம்பழ ரசத்தில் தேன், சவ்வர்ச்சலவணம் கலந்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும்.
பிப்பல்யாதி லோஹம் :- திப்பிலி, நெல்லிக்காய்தோல், திரா¨க்ஷ, இலந்தைக் கொட்டையின் பருப்பு, சர்க்கரை, வாய்விளங்கம், கோஷ்டம், இவைகளைச் சூரணித்து இந்த சூரணத்தில் காந்தச் செந்தூரம் கூட்டித்தேன் கலந்து சாப்பிட்டால் அசாத்தியமான வாந்தி, விக்கல், தாகம், இவைகள் மூன்று நாட்களில் நிவர்த்தியாகும்.
விக்கல்களில் பத்தியங்கள் :- கிச்சிலிக்கிழங்கு, புஷ்க்கரமூலம், திரிகடுகு, கொடிமாதுளம்பழம் 60-நாட்களில் பயிராகும் நெல், பழைய அரிசி, கோதுமை, யவதானியம், பச்சைபயறு, கொள்ளு, தூக்கம் இவைகள் விக்கல், இருமல், பெருமூச்சு, தாகம் இந்தரோகங்களில் பத்தியமானவை.
விக்கலுக்கு அபத்தியங்கள் :- மலத்தைபந்திக்கும் திரவியங்கள் கள்ளு, மிளகு முதலிய விதாஹகரதிரவியங்கள், ரூக்ஷகரமான திரவி யங்கள், கபகரதிரவியங்கள், மொச்சை, உளுந்து, புண்ணாக்கு, சலத்தில் உண்டாகும் திரவியங்கள், ஊற்றுபூமியில் உண்டான ஜந்திக்களின் மாமிசங்கள், பக்குவம் செய்யப்பட்ட திரவியங்கள், குச்சியினால் பல்துலக்கல், வஸ்திகருமம், மீன்கள், கடுகு, புளிப்பு, காய்கள், கிழங்குகள், எண்ணெயில் வறுக்கப்பட்ட பண்டங்கள், சீதளகர மான அன்னபானங்கள் இவைகளை விக்கல் உடையவர்கள் நிவர்த் திக்க வேண்டியது.
0 comments:
கருத்துரையிடுக