காமாலை கியாழம் :- இலுப்பைப்பூ, சீந்தில்கொடி, வேப்பன் ஈர்க்கு, ஆடாதோடை ஈர்க்கு, தேத்தான்கொட்டை, வெட்டிவேர் இவைகள் சமஎடை கியாழம்வைத்து சர்க்கரை, நெய், தேன் இவைகள் கலந்து குடித்தால் காமாலை ரோகங்கள் நாசமாகும்.
சிவதை சூரணம் 2 பலம் குளிர்ந்த ஜலத்திலாவது தேனிலாவது திரிபலை கியாழத்திலாவது கலந்து உட்கொண்டால் காமாலை நீங்கும்.
வெள்ளைசிவதை, சுக்கு, செம்முள்ளிவேர் இவைகளின் சூரணததுடன் பசும்பால் சர்க்கரை இவைகள் கலந்து கொடுத்தாலும் அல்லது திரிபலைகியாழம், சீந்தில்கொடிரசம், மரமஞ்சள்கியாழம்
வேப்பம்பட்டைகியாழம் இவைகளில் ஏதாவது ஒரு கியாழத்தில் மேற்கூறிய சூரணத்தைப்போட்டு பிரதி தினம் காலையில் தேன் கலந்து சாப்பிட்டாலும் காமாலை நிவர்த்தியாகும்.
கீழாநெல்லிசமூலம் 10 வராகனெடை, சுக்கு 2 வராகனெடை களை அரைத்து அல்லது கியாழம் வைத்து குடித்தாலும் அல்லது கடுக்காய், கீழாநெல்லி இவைகளை கியாழம் வைத்து அதில் சர்க்கரை கலந்து குடித்தாலும் காமாலை நீங்கும்.
பொன்னாங்கண்ணிவேர், கடுக்காய், அவுரிவேர், வெள்ளைப்பூசினி கொழுந்து இவைகளில் எதையாகிலும் ஆட்டுமோரினால் அரைத்து கொடுத்தாலும், அல்லது அதிமதூரம், சீந்தில்சர்க்கரை, தேத்தான் கொட்டை, சந்தனம் இவைகளை குளிர்ந்த ஜலத்தினால் அரைத்து சாப்பிட்டாலும் காமாலை ரோகம் நீங்கும்.
திரிபலைகியாழமாவது, சீந்தில்கொடிகியாழமாவது, மரமஞ்சள் கியாழமாவது, வேப்பன் ஈர்க்கு கியாழமாவது காலையில் தேன் கலந்து சாப்பிட்டால் காமாலைரோகம் நிவர்த்தியாகும்.
திரிபலை, வேப்பம்பட்டை, நிலவேம்பு, ஆடாதோடை, சீந்தில் கொடி இவைகளை கியாழம் வைத்து தேன்விட்டு கொடுத்தால் காமாலை பாண்டுரோகம் நீங்கும்.
கற்க்கங்கள் :- சீந்தில்கொடியிலை கற்கம் செய்து மோர்கலந்து சாப்பிட்டால் காமாலை நீங்கும். கீழாநெல்லியிலையை அரைத்து கற்கம் செய்து கழற்சியளவு மோரில் சாப்பிட்டாலும் காமாலை நீங்கும்.
குடுசிசுவரசம் :- சீந்தில்கொடிரசம், நெய், பால் கலந்துகாய்ச்சி கொடுத்தால் காமாலை நீங்கும்.
தாத்திரியாதிசூரணம் :- நெல்லித்தோல், சுக்கு, திப்பிலிமிளகு, மஞ்சள் இவைகளை சமஎடையாகச் சூரணித்து அதில் அயச்செந்தூரம் கூட்டி தேன் நெய், சர்க்கரை இவைகளில் கொடுத்தால் காமாலை நீங்கும்.
அயோரஜாதிசூரணம் :- சுக்கு, திப்பிலி,மிளகு, வாய்விளக்கம் மஞ்சள் திரிபலை இவைகள் சமஎடையாகச் சூரணித்து இத்துடன் சர்க்கரை கலந்தாவது அல்லது சிவதை சூரணத்தை சர்க்கரையுடன் கலந்தாவது சிறுதேக்கு சூரணம் சுக்குசூரணம் வெல்லத்துடன்கலந்தாவது அதில் அயன்செந்தூரம் கூட்டிக் கொடுத்துவர காமாலை ரோகம் நிவர்த்தியாகும்.
லோகாதி சூரணம் :- மண்டூரச் செந்தூரம், மஞ்சள், மரமஞ்சள், திரிப்பலை, கடுகுரோகணி இவைகள் சூரணித்து தேன் நெய்கலந்து அருந்திவர காமாலை நீங்கும்.
தார்வாதி சூரணம் :- மரமஞ்சள், திரிபலை, சுக்கு, திப்பிலி,மிளகு, வாய்விளங்கம் இவைகளைச் சமனெடையாக சூரணித்து அதில் அயச்செந்தூரம் கலந்து தேன் நெய் இவைகளில் அனுபானித்து கொடுத்துவர காமாலை பாண்டுரோகங்கள் குணமாகும்.
ஏலாதி சூரணம் :- ஏலக்காய், சீரகம், கீழாநெல்லி இவைகள் சமனெடையாக சூரணித்து சர்க்கரை கலந்து பசும்பாலில் காலையில் சாப்பிட்டால் காமாலை ரோகம் நிவர்த்தியாகும்.
ஹரித்திரா சூரணம் :- கால்பலம் மஞ்சள் சூரணம் 1-பலம் தயிரில் கலந்து சாப்பிட்டால் காமாலை நீங்கும்.
அயோ ரஜாதி சூரணம் :- அயச்செந்தூரம், கடுக்காய்ச் சூரணம், மஞ்சள் சூரணம் இவைகள் சமனெடையாக கலந்து தேன் நெய் இவைகளுடனாவது அல்லது வெல்லம் தேன் இவைகளுடனாவது கொடுத்துவர காமாலை நிவர்த்தியாகும்.
புனர்னவாதி லேகியம் :- வெள்ளைச்சாரணை 100-பலம், பெரு நெருஞ்சில், அமுக்கிறாங்கிழங்கு, மருதோன்றி, முருங்கன்கிழங்கு, தசமூலங்கள், சிற்றாமுட்டிவேர், கண்டுபாரங்கி, பூனைகாஞ்சொரிவேர், சித்திரமூலம், நிலவேம்பு, நாணல்வேர், அவுரிவேர், திரிபலை, தேவதாரு, வெள்ளை உப்பிலாங்கொடி, நொச்சி, கருநொச்சி, சிவதை, நார்த்தங்காய்வேர், கருப்பு உப்பிலாங்கொடி, ஆடாதோடடை, சிறு நெல்லிவேர், துளசி, நிலதுளசி, மரிமாங்காய், நெரிஞ்சில் இவைகள் வகைக்கு 10-பலம் சேர்த்து 4-மரக்கால் ஜலத்தில் போட்டு எட்டி
லொன்றாக கியாழஞ் சுண்டக்காய்ச்சி, அதில் பழையவெல்லம், 30-பலங் கலந்து பாகுபதத்தில் திரிகடுகு, திரிபலை, சன்னாரஷ்டம், கிரந்திதகரம், செவ்வியம், சித்திரமூலம், மோடி, தாளிசப்பத்திரி, ஜாபத்திரி, கிறாம்பு, கொத்தமல்லி, மரமஞ்சள், வாய்விளங்கம், ஓமம், இலவங்கபட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய், நாககேசரம், பெருங்காயம், தக்கோலம், ஜடாமாஞ்சி, கண்டுபாரங்கி, காந்தசெந்தூரம், லோஹசெந்தூரம், புஷ்க்கரமூலம், சீரகம், கருஞ்சீரகம், மண்டூரம், இந்துப்பு, ஆனைதிப்பிலி இவைகள் வகைக்கு 1/4-பலம் வீதம் சூரணித்து அதில் சேர்த்து அதற்கு போதுமளவு தேன் கலந்து லேகியபதமாகக் கிண்டி தானியப்புடமிட்டு அருந்திவர காமாலை, பாண்டு, காசங்கள், சுவாசங்கள், முறைக்காய்ச்சல்கள், புராணசுரங்கள், வீக்கம், சுரக்ஷயம், ரத்தபித்தம் இவைகளைநிவர்த்திசெய்யும்.
ஆமலக்கியாதி லேகியம் :- 256 பலம் யந்திர்த்தினால் எடுத்த சுத்தமான நெல்லிக்காய் ரசத்துடன் திப்பிலிச்சூரணம் 16 பலம், அதிமதூரம் 2 பலம், திரா¨க்ஷ 16 பலம், சுக்கு, மூங்கிலுப்பு வகைக்கு 2 பலம், சர்க்கரை 5 பலம் சேர்த்து லேகியபாகமாக சமைத்து அதில் 16 பலம் தேன் வார்த்து தானியபுடமிட்டு 1 பலம் விகிதம் சாப்பிட்டால் காமாலை பாண்டு இவைகள் நீங்கும்.
மண்டூரம் :- இரும்புச்சிட்டத்தை கருங்காலி விறகினால் செவ்வையாக காய்ச்சி கோமூத்திரத்தில் தோய்க்கவேண்டியது. இம்மாதிரி எட்டு தடவை செய்தபிறகு சூரணித்து தேனுடன் கொடுத்தால்
ஊதுகாமாலை பாண்டு இவைகள் நிவர்த்தியாகும்.
கிருதங்கள் :- மஞ்சள், திரிபலை, வேப்பன்வேர், சிற்றாமுட்டி வேர், அதிமதூரம் இவைகளைச்சூரணித்து ஆட்டுநெய்யும், அதற்குச்சமஎடை பால், நெய்க்கு நாலு பங்கு அதிகமாக ஜலம், நெய்க்கு நாலிலொன்று முன்முடித்த சூரணம் போட்டு நெய் பக்குவமாகக்காய்ச்சி கொடுத்தால் காமாலை நீங்கும்.
அமிருதாதிகிருதங்கள் :- சீந்தில்கொடிரசம், அல்லது கற்கம் அதற்குச்சமமாக ஆட்டுநெய், அந்த நெய்க்கு நாலு பங்கு அதிகம் பால், இவைகளை ஒன்றாகச்சேர்த்து நெய் பதமாகக் காய்ச்சி கொடுத்தால் காமாலை நீங்கும்.
காமாலைக்கு கீழ்காய்நெல்லிக்கியாழம் :- கீழ்காய்நெல்லிச்சமூலம், கரிசனாங்கண்ணியிலை, பேய்ப்புடல், வெண்மிளகு, சோம்பு வில்வவேர் இவைகளை வகைக்கு பலம் 1/4, கடுக்காய்தோல் பலம் 1/8
இவைகளைச் சதைத்து ஓர் பாண்டத்திலிட்டு 1/4 படி சலம் விட்டு 1/8 படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 2 3 அவுன்சு வீதம் தினம் ஒரு வேளையாக காலையில் கொடுத்து வர காமாலை குணமாகும். இந்தக்கியாழத்தை கொடுத்து வரும்போது கரிசாலையுடன் சிறிதுமிளகு சேர்த்து தினம் இரு வேளையாக அருந்திவர மிகவும் நன்மை தரும்.
கரிசாலைச்சூரணம் :- உலர்ந்தகரிசாலையில் சூரணம் பலம் 1, கடுக்காய்தோல் பலம் சூரணம் 1/2, மிளகுச்சூரணம் பலம் 1/4, மருதோன்றிவேர் சூரணம் பலம் 1/4 இவைகளை கல்வத்திலிட்டு mமெல்லியதூளாகும் பொருட்டு நன்கு அரைத்து வைத்துக்கொள்க.இதில் வேளைக்கு 1/2 வராகனெடை வீதம் எடுத்து அத்துடன் குன்றி எடை மண்டூரச்செந்தூரம் கூட்டி தினம் இரு வேளையாக மோரில் அருந்திவர 5 10 நாளில் காமாலை குணமாகும்.
மண்டூரக் காடி : - மண்டூரம் பலம் 10, கடுக்காய்த்தோல் பலம் 10, பனைவெல்லம் பலம் 10, கரிசாலைச்சாறு ஆழாக்கு, தென்னங்கள் படி 1 1/2, கடுக்காய்த்தோலையும், மண்டூரத்தையும் தனித்தனி இடித்துச் சூரணித்து மற்றவைகளுடன் கூட்டிக்கலந்து ஓர் பீங்கான் ஜாடியில் போட்டு வாய் மூடிவைத்து 40-நாள் சென்ற
பின்பு வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 1-2 அவுன்சு வீதம் தினம் 2-வேளை 10-நாள் கொடுக்க பாண்டு, சோபை, காமாலை, மகோதரம், முதலியன குணமாகும்.
காமாலைக்கு கீழ்காய்நெல்லி பிரயோகம் :-கீழ்காய்நெல்லி சமூலத்தை அரைத்த கற்கம் கொட்டைப்பாக்களவு எடுத்து அத்துடன் 1-2 குன்றிஎடை சங்குபற்பம் கூட்டி தினம் 1-வேளையாகக்
காலையில் மோருடன் அருந்தவும். இப்படி 3 அல்லது 5 நாள் உப்பில்லா பத்தியத்துடன் அருந்த காமாலை குணமாகும்.
சிலாஜித்து யோகம் :- சிலாஜித்தை கோமூத்திரத்தினால்அரைத்துக் கலக்கி சாப்பிட்டால் ஊதுகாமாலை நிவர்த்தியாகும்.
கடுயோகம் :- கடுகுரோகணியை அரைத்து சர்க்கரைகலந்து கொஞ்சம் உஷ்ணமாயிருக்கும் வெந்நீரினால் கொடுத்தாலும் அல்லது கடுக்காய் சூரணத்தில் தேன் கலந்து கொடுத்தாலும் காமாலை ரோகம் நிவர்த்தியாகும்.
ஹலீமகத்திற்கு அயோபஸ்பம் :- அயச் செந்தூரத்தைகோரைக்கிழங்கு சூரணத்துடன் கலந்து கருங்காலி கியாழத்தில் சாப்பிட்டால் ஹலீமம் நிவர்த்தியாகும்.
பாண்டு, காமாலை, ஊதுகாமாலை, ஹலீமகம் இவைகளுக்குப்பத்தியங்கள் :- வாந்தி செய்வித்தல், மலத்தைப் போக்கல், பழைய யவதானியம், கோதிமை 60-நாளில் பயிராகும் பழைய அரிசி, பச்சைப்பயிறு, துவரை, சிறுகடலை இவைகளது குழம்பு, காட்டில்வாழும் ஜந்துக்களின் இரைச்சிகள், புடங்காய், கலியாணபூசினிக்காய், வாழைக்காய்ச்சல், கரும்பு, பொன்னாங்கண்ணி கீரை, சீந்தில் கொடி, சிறிகீரை, வெள்ளைச்சாரணை, வேளைக்கீரை, கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, கடுக்காய், கோவை இலை, மான்மாமிசம், மீன், கோமூத்திரம், நெல்லிக்காய், மோர், நெய், கழுநீர், வெந்நீர், வெண்ணெய், சந்தனம், மஞ்சள், நாககேசரம், யவக்ஷ¡ரம், லோஹபஸ் பம், துவர்ப்பான பதார்த்தங்கள், குங்குமப்பூ இவைகள் பாண்டு ரோகங்களுக்கு பத்திய பதார்த்தங்களென்று அறியவேண்டியது.

0 comments:
கருத்துரையிடுக