சனி, மே 16, 2020

உடலின் மொழி அறிந்தால்...*


உடலின் மொழி அறிந்தால்...*டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்
நோய் என்று வந்துவிட்டால் நம் மனம் தேடுவது உடனே நோயை சரிசெய்திடும் மருந்தை தான்..அத்தகைய மருந்திற்கு அந்நோயை சரிசெய்ய என்னென்ன தகுதிகள் உள்ளது.. என்னென்ன பாதகங்களை அது ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பதுமில்லை, நமக்கு பொறுமையும் இல்லை...உடல் நிலை அதன் நலனை எந்த அளவு நோயின் பிடியில் கொடுத்துள்ளது என்பதை எத்தனை பேரால் அறிந்துகொள்ள முடியும்... உடலில் நோயுற்றபோது அதன் மொழியில் சொல்வது நீர் வேண்டாம், உணவு வேண்டாம் கண்களை மூடி படுத்துக்கொள்ள என்பதுமட்டுமே..


ஆனால் உடலில் மொழி புரியாமல் நோயை சரிசெய்கிறோம் என்று மாத்திரைகளை விழுங்குவது, ஊசி போட்டுக்கொள்வது, ட்ரிப்ஸ் ஏற்றுவது, டானிக் எடுத்துக்கொள்வது போன்றவற்றை செய்து விடுகின்றோம்...சற்றே சிந்தியுங்கள்... சோர்வுண்ட குழந்தையோ அல்லது துவண்டு இருக்கும் பறவையோ, வளர்க்கும் விலங்கோ குதூகலப்படுத்த என்ன செய்வோம்?... அதற்கு பிடித்தவற்றை பிடித்தவாறு அவர்களிடத்தில் செய்து உற்சாக படுத்துவோமா...? இல்லை உனக்கு பிடித்ததைதானே தருகிறேன் இந்தா பெற்றுக்கொள் என்று எரிந்துவிழுவோமா...?முதலாவதை அனைவரும் ஆமோதிக்கிறீர்கள் என்று நம்புகிறேன்... காரணம்... அதிலிருந்துதான் முழுமையான, மகிழ்ச்சியான தீர்வு கிடைக்கும்...அப்படியானால் உங்கள் உடலால் இயலாத நிலையில்... அதாவது செரிக்கும், உரிந்துகொள்ளும் சக்தி இல்லாத உடலை அதனை மேலும் வருத்தும் விதமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சரிதானா?மாத்திரைகளை செரித்து நலம்பெறு என்றும், ஊசிகளை போட்டுகொண்டு மீண்டேறு என்பதை மனம் நன்மைக்குத்தானே என்று ஏற்றுக்கொண்டாலும் உங்களின் உடல் இயல்பான நிலைக்கு திரும்பாது... அதனால் தான் காய்ச்சலோ, சளியோ, தலைவலியோ, வயிறுவலியோ நோய் தீர்ந்த அடுத்த இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு சோர்வாக, அசௌகரியமாக உணர்வு ஏற்படுகிறது.. பக்கவிளைவுகளாக அல்சர் போன்றவைகளும் உண்டாகிறது...இயல்பான நிலைக்கு திருப்ப தேவை உடல் இழந்த செரிமான சக்தி, உரிந்துகொள்ளும் சக்தியை தாமாக பெறுவதே... மருந்து மனதிற்கு எளிதாக இருப்பதை விட உடல் எளிதாய் செரித்துக்கொள்ள ஏதுவான வகையில் இருத்தல் வேண்டும்..*மருந்துகளில் கசாயத்திற்கு மட்டுமே அந்த தகுதி உள்ளது...*உலகில் உள்ள எந்த நோய்க்கும் கஷாயம் கொடுக்கலாம்...ஒரு பகுதி மூலிகையுடன் எட்டு பகுதி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு நான்கில் ஒரு பங்காக வற்றிய பின் வடிகட்டி கிடைப்பது கஷாயம்..கஷாயத்தை தனி சிறப்பு என்னவென்றால் ஒரு பொருள் உமிழ்நீரில் கலந்து, உணவுக்குழாய் வழி இரைப்பையை அடைந்து, பித்தம் மற்றும் அமிலத்துடன் கலந்து செரிக்க எடுத்துக்கொள்ளும் ஒன்னரை மணி நேர செயலை கோப்பையில் இருக்கும் கஷாயம் தம்மிடையே ரெடியாக வைத்திருப்பது தான்...சிறிது நேரம் 100° C கொதிநிலையில் இந்த தகுதியை கஷாயம் பெற்றுவிடுகிறது.பொதுவாக எந்த நோய்க்கு நாம் கஷாயம் எடுத்துக்கொண்டாலும் நோய் குணமாவதுடன் இலவச இணைப்பாக நாம் பெறுவது நோயெதிர்ப்பு ஆற்றல், போஷாக்கு, கழிவு வெளியேற்றம், பசி தூண்டுவிப்பு, செரிமானம் மேலும் கசாயத்தில் இருக்கும் antioxidant property வயதுமுதிர்வதை தடுப்பதாக பல ஆராய்ச்சிகளும் உள்ளது.மேலும் நாமே வீட்டில் தயார் செய்துகொள்ளும் கசாயத்தில் contamination கிருமி ஒட்டிருக்கும் என்ற பயம் இருக்காது, மற்ற மருந்துகளில் சேர்க்கப்படும் preservatives பதப்படுத்தும் மருந்து சேர்க்கப்பட்டிருக்காது, காலாவதி பயம் இருக்காது, பக்க விளைவுகள் இருக்காது, கைதேர்ந்த மருத்துவரை போன்றொரு திருப்தி கிடைக்கும்.கஷாயம் கசக்கும் என்ற மாயையை குழந்தைகள் மனதில் பதியவைக்காமல் கஷாயத்திற்கு கட்டுப்படாத நோயில்லை என்று கூறி வளர்த்தால் எதிர்காலத்தில் கொரோனா போன்று எந்த நோயும் அவர்களை அணுகமுடியாது..சந்தேகங்களுக்கு அணுகவும்...


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000.

ஆயுர்வேதமும் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

கொரோனாவுடன் வாழ பழகுங்கள்..


கொரோனாவுடன் வாழ பழகுங்கள்..


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்இறைவன் உலகை அனைத்து ஜீவராசிகளும் இயற்கையுடன் ஒன்றாக வாழவே படைத்துள்ளான்..


இது ஓரறிவுள்ள புற்கள், தாவரங்கள் முதல், எறும்புகள், பறவைகள், விலங்குகள், ஆறறிவுள்ள மனிதர்கள் வரை மட்டுமல்ல கண்களுக்கு புலப்படாத பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றிற்கும் பொருந்தும்.. இவை ஒவ்வொன்றும் அதன் வரையறைக்குள் வாழ வித்திட்டிருந்தாலும் உணவு சங்கிலியை பிளக்க இயலாது... அதாவது ஒன்றுக்கொன்று உணவாவதை தவிர்க்க முடியாது. ஆனால் ஒன்றை மற்றொன்று ஆக்கிரமித்து மிகையாகும் போது பாதுகாப்பு சுவரானது (கொரோனாவிடம் இருந்து தப்பிக்க ஆரோக்கியத்தின் தரம் ) பலப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்...


ஒரு நோய்க்கு மருந்து இல்லாமல் வாழ்வது நமக்கு புதிதல்ல... எய்ட்ஸ் வைரஸ்சிற்கு இன்னும் மருந்து கண்டுபிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை...


அதுமட்டுமல்லாமல் கொரோனாவை விட பல மடங்கு கொடிய வகை வைரஸ்களும் இனி உலகை தாக்கும் அபாயமும் எதிர்பாக்கப்படும் ஒன்றே...


உலக சுகாதார துறை இரவு பகலாக போராடியும் கொரோனா வைரஸை அழிக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்று கைவிரித்த நிலையில் நாம் நம்மை, நம் குடும்பத்தை, சமூகத்தை காப்பாற்ற பயத்தை விடுத்து துணிவு கொள்ளவேண்டும்.


கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்வது எப்படி...?*

கொரோனாவுடன் வாழ பழகவேண்டிய சூழ்நிலையில் நாம் முக்கியமான நான்கு விஷயங்களை அறிந்திருத்தல் அவசியம்.


முதல் இரண்டு தடுக்கும் முறைகளான

1.நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு. 
2.கோரோனோ கிருமியிடமிருந்து விலகியிருப்பு.


அடுத்த இரண்டு கிருமி தாகத்திற்கு பிறகு செய்யவேண்டியது

1.பதறாமல் முதற்கட்ட அறிகுறியில் தனிமைப்படுத்திக்கொள்வதுடன் உடனடி மருத்துவரை அணுகுவது.

2.நோயிலிருந்து குணமடைந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தை தொடர்வது.

முதலாவது கட்டத்தில்  நோயெதிர்ப்பு சக்தி என்பது ஒரு கணப்பொழுதில் தோற்றுவிப்பது அல்ல.. சப்த தாதுக்களை (ரச, இரக்தம், மாம்சம், கொழுப்பு , எலும்பு, எலும்பு மஜ்ஜை, விந்து /கருமுட்டை) கடந்து ஓஜஸ் உருவாகிறது... நோயெதிர்ப்பு ஆற்றலானது ப்ரம்மமுகூர்த்தத்தில் கண் விழிப்பதிலிருந்து துவங்குகிறது.. உடற்பயிற்சி, பாரம்பரிய சரிவிகித உணவு, சோம்பல் விடுப்பு என பல வாழ்க்கை விதிமுறைகள் உள்ளது.. அதனுடன் ரசாயன, காயகல்ப மருந்துகளுடன் உணவை முடிக்கும் பழக்கத்திற்கு வருவோம்... ஏழாம் தாதுவான சுக்ரம் (விந்து /கருமுட்டை) முழுமையடைந்திருந்தால் நோயெதிர்ப்பு சக்தியுடனே குழந்தை பிறக்கும். எனவே இத்தருணத்தில் நாம் செய்பவையே எதிர்காத்தில் பிரதிபலிக்கும். கொரோனா வைரஸிடமிருந்து விலகி இருக்க சமூக இடைவெளியும், கரங்கள் மற்றும் தனிமனித சுகாதாரத்தையும் பின்பற்றுவோம்.
இதனை நாம் ஒவ்வொருவரும் முடிந்தவரை தவம்போல் செய்து முடிக்க வேண்டும்.அடுத்த கட்டத்தில் ஆரம்ப அறிகுறியுடன் மனதில் சந்தேகம் எழுந்தால் உடனடியாக குடும்பத்தினரிடமிருந்தும், சமூகத்திலிருந்தும் விலகி சாதாரண நோய்போல் எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
தொற்று உறுதிசெய்யப்பட்டால் தன்னம்பிக்கையுடன் மருந்துகளை உண்டு, குணமடைந்த பின்னரும் மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகளை பின்பற்றல் வேண்டும்...


வாழ்க்கைமுறை மாற்றம் ஒன்றே தீர்வு... தீர்வை நோக்கி பயணிக்க வாழ்க்கைமுறையை இன்றே மாற்றி அமைக்க முயன்றிடுவோம்..
ஒழுக்கம் நிறைந்த வாழ்வில் மகிழ்ச்சி காண்போம்..


பொருளாதார ரீதியான பயம் உள்ளவர்களுக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் தரும் மருந்தை தர அல்ஷபா ஆயுஷ் மருத்துவமனை முன்வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*AL SHIFA AYUSH HOSPITAL*

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000.

ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

இதை புரிந்துகொண்டால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும நீங்களே மருத்துவராகலாம் ..*


இதை புரிந்துகொண்டால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும நீங்களே மருத்துவராகலாம் ..*டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்
மூலிகை ஞானம், உடற்கூறு ஞானம், பரிசோதனை அறிவு இது எதுவுமே தேவை இல்லை... இந்த மூன்று உணவுகளை முறையாக பயன்படுத்த தெரிந்தால் போதும்... உங்களின் குடும்ப ஆரோக்கியத்திற்கு மருத்துவர் நீங்கள் தான்..


உலகில் உள்ள அனைத்து மருந்துகளின் முன்னோடிகள் தான் இந்த மூன்று உணவுகளும்... அவை எண்ணெய், நெய் மற்றும் தேன்....நமது உடலில் முடி முதல் நகம் வரை ஒவ்வொன்றையும் ஆக்கிரமித்திருப்பது மூன்று தோஷங்கள் எனப்படும் வாதம், பித்தம், கபம் என்பவையே...வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் தன் நிலையிலிருந்து மாறுபடும் போது... அதாவது ஒவ்வொன்றும் தனக்குரிய இடத்திலிருந்து, தனக்குரிய அளவிலிருந்து மாறுபடும் போது அதற்கு தக்கவாறான உடல் உபாதைகள் தோன்றுகின்றன... இந்நிலையை கையாள, மாற்றமடைந்து வாதம், பித்தம், கப தோஷங்களை சீராக்க மூன்று உணவுகள் போதுமானது...

1.எண்ணெய்...*

பெரும்பாலான தைலங்கள் (எண்ணெய்) கொட்டைகளில் இருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படுகிறது...
எண்ணெய் வகைளில் உன்னத பலன் கொடுப்பது திலத்தைலம் (நல்லெண்ணெய் / எள் எண்ணெய்).

தைலம் தனக்கென பல நல்ல குணங்களை கொண்டுள்ளது..


1.வாதத்தை குறைப்பதற்கு தைலத்திற்கு நிகரான ஒன்று வேறில்லை.


2.உடல் பலத்தை... அதாவது தசை, நரம்புகள், முடி, சவ்வுகள், எலும்புகள், மூட்டுப்பகுதிகள் என அனைத்திற்கான பலத்தை கூட்ட வல்லது.


3.சரும பொலிவிற்கு moisture எனப்படும் இளமை, மென்மையை தைலத்தால் மட்டுமே சிறப்பாக தர முடியும்.


4.உடலில் அனுஷ்னமாக (அதிக உஷ்ணம், அதிக குளிர்ச்சி இரண்டும் இல்லாத நடுநிலை) செயல்படுகிறது.


5.நல்லெண்ணெயை உடல் பருமன், அடிக்கடி அஜீரணம் உள்ளவர்களும் உணவில் சேர்த்துக்கொள்வதினால் ஆரோக்கியமே தவிர உபாதைகளை உண்டாக்காது.


6.குடல்புழு, மலசிக்கல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் சிறந்தது.எப்போது_பயன்படுத்தலாம்...*


உடல் மெலிவு, சோர்வு, குளிர், நடுக்கம், பதற்றம், மனஅழுத்தம், வலிகள், தலைசுற்றல், புலன்கள் தொய்வு, தூக்கமின்மை, சரும வறட்சி, மலசிக்கல், வயிற்று பொருமல் வாதம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கான அறிகுறிகள்... இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் வெறும் வயிற்றில் குடிப்பது, எண்ணெய் தேய்த்து குளிப்பது நற்பலனை தரும்.

2.நெய்...*

நெய் தயாரிக்கபடுவது பசுவின் பாலிலிருந்து. வெள்ளாடு, எருமை, செம்மறி ஆடுகளின் பாலிலிருந்தும் நெய் கிடைக்கப்பெற்றாலும் பசுவின் நெய் அமிர்தத்திற்கு நிகரான தனி தன்மையை பெற்றுள்ளது.


ஆயுர்வேதம் சினேக (moisture) வகைகளுள் பசுநெய்க்கு முதலிடத்தை தந்துள்ளது. பசுநெய் வாதம், பித்தம் என இரண்டு தோஷங்களை சமநிலைப்படுத்த பணிபுரிந்தாலும் பித்தத்தை குறைப்பதில் சிறப்பான முறையில் செயலறுகிறது.பசுநெய்யின் நற்குணங்கள்...


1.உடல் ஆற்றலை கூட்டுகிறதுக்கு... உழைப்பின் அசதி உடலை தாக்காமல் பாதுகாக்கிறது.

2.புத்தி கூர்மை, ஞாபக திறனை அதிகரிக்க செய்கிறது.
3.ஆயுள்காலத்தை நீடிக்கிறது.
4.கண் பார்வை திறனை குன்றாமல் பாதுகாத்து வளர்கிறது.
5.பெண்மை, ஆண்மை தன்மையை வளர்த்து நல்ல ஆரோக்கியமான சந்ததியினரை பெற உதவுகிறது.
6.செரிமான சக்தியை, பசியை தூண்டுகிறது.எப்போது பயன்படுத்தலாம்...*


சிறுநீர், மலம் கழிப்பதில் எரிச்சல் மற்றும் இரத்தப்போக்கு, கண் மற்றும் சருமத்தில் உஷ்ண உணர்வு, அதிக தாகம், பசி, வயிற்று புண், நெஞ்செரிச்சல், அதிக வியர்வை, இளநரை, மயக்கம் இவையனைத்தும் பித்தம் சம்மந்த கோளாறுகளின் அறிகுறிகள். இரண்டு ஸ்பூன் பசுநெய் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் எளிதில் குணமடையலாம்.
3.தேன்...*
இயற்கையான தேன் தரும் நன்மைகள் எண்ணில் அடங்காதவை.
உடலில் உள்ள தேவையற்ற அத்தனையையும் துண்டித்து வெளியேற்றும் திறன் தேனிற்கு மட்டுமே உள்ளது. தேவையற்ற நச்சு, வேண்டாத சதை, அதிகப்படியான கொழுப்பு என அனைத்தையும் அறுப்பது தேன்.

தேன் தரும் நன்மைகளுள் சில.

1.குமட்டல், வாந்தி, பேதி போன்றவற்றை உடனடியாக நிறுத்தும்.
2.இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.
3.சிறுநீர் கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்ய வல்லது.
4.தீராத தாகம், கிருமி தொற்றிற்கு சிறந்த தீர்வு தருகிறது.
5.சர்க்கரை வியாதி உள்ள நோயாளிகள் பயன்படுத்த ஏற்றது.
6.இரத்த சோகை முதலான இரத்த அணுக்கள் குறைப்பாட்டிற்கு முழுமையான தீர்வு தருகிறது.
7.நல்ல குரல் வளத்தை தருகிறது.


எப்போது பயன்படுத்தலாம்...*


பசியின்மை, சுவையின்மை, உடல் பாரம், உடல் பருமன், சோம்பல், குமட்டல், வாந்தி, பேதி, அதிக தூக்கம், சோர்வு, ஆறாத புண்கள், கிருமி தாக்கம் போன்றநிலைகளில் பயன்படுத்துவதால் கபம் சீராகி நிவாரணம் தரும். இரண்டு ஸ்பூன் தேன் தினமும் சாப்பிடுவதால் சிறந்த பலனை பெறலாம்.

சிறிய அறிகுறிகள் முதல் எவ்வளவு பெரிய நாள்பட்ட நோயாக இருப்பினும் மூன்று தோஷங்களை நன்குணர்ந்து நோய்க்கான தீர்வை நோக்கி பயணிக்கும் வகையில் எந்த பாதகமும், பக்கவிளைவும் இல்லாத தைலம், நெய் மற்றும் தேன் பயன்படுத்தினால் தோல்வியே கிடையாது...சந்தேகங்களுக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

இனி ஒளிந்துகொள்ள வேண்டாம்...


இனி ஒளிந்துகொள்ள வேண்டாம்...டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்உடல் ஆரோக்கியம் அல்லது போஷாக்கிற்காக குழந்தை, பெண்கள், இளைஞர், வயோதிகர் என அனைவரும் ஒரு ஊட்டச்சத்து பானம் எடுத்துக்கொள்கிறோம்.வளரும் குழந்தைகளுக்கு Complan, junior horlicks, பெண்கள், கர்பிணிகளுக்கு womens horlicks, இளைஞர்களுக்கு boost, maylo இன்னும் பலவகையான போஷாக்கிற்கான பானம், அதற்கான விளம்பரங்கள் மனதை மயக்கும் பிளேவர்களில் வந்தவண்ணமே உள்ளது. பழகிவிட்டால் இதுவும் ஒருவகை போதை அடிமையே...அப்படி எடுத்துக்கொள்ளும் குழந்தைகளும், பெண்களும், இளம்வயதினரும், முதியோரும் எந்த நோயுமின்றி ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா என்றால்...கண்டிப்பாக இல்லை.குழந்தைகள்  நோயெதிர்ப்பு சக்தியின்றி, பெண்கள் எழுப்புகள் பலமின்றி, ஆண்கள் நரம்பு பலமின்றி, முதியோர்கள் தங்களது சுயவேலைகளை தானே செய்துகொள்ளும் உடல் ஆற்றல் கூட இல்லாம உள்ளனர்.


குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் போஷாக்கிற்காக, ஊட்டச்சத்திற்காக, நோயெதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளவேண்டியது அஸ்வகந்தா மட்டுமே...


அஸ்வகந்தா என்ற பெயர்வர காரணம் சுறுசுறுப்பு, பலம் இரண்டிற்கும் பெயர்பெற்றது குதிரை.. அஸ்வ என்றால் குதிரை... இம்மருந்தை உண்டால் குதிரைக்கு இணையான பலம் பெறலாம் என்றொரு குறிப்பு உள்ளது.


ஆராய்ட்சி ரீதியாக பார்ப்போம்...


அஸ்வகந்தா பற்றிய ஆராய்ட்சி கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அதன் முடிவுகள் ஆராய்ச்சியாளர்களே ஆச்சரியப்படும் வகையில் வந்துள்ளது.


Isopelletierine, Anaterine, Cuseohygrine, Anahygrine, withanolides, withaferins, Saponils ஆகிய வேதிப்பொருட்கள் அஸ்வகந்தாவில் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக sitoindosides, Acylserylglucosides (மனஅழுத்தத்தை குறைக்கும் வேதிபொருள்கள்) இருப்பதையும் கொண்டு முதற்கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டது.ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா ரசாயனம் மருத்துவத்தில் முதலிடம் பிடித்துள்ளதின் பேரில் அதன் மீதான ஆராய்ச்சிகள் முதலில் வயதுமுதிர்வை தடுக்க, நரம்பு தளர்ச்சி சரிசெய்ய, மனஅழுத்தத்திற்கு என மூன்று பிரிவுகளில் முறையாக மக்களிடம் கொடுத்து கண்காணிக்கபட்டது...


விளைவாக கிடைத்த ஆபாரமான சாதகமுடிவுகள் மேலும் ஆராய்ச்சியாளர்களை வியப்பூட்ட இன்னும் ஆர்வமாக பல கோணங்களில் மக்களுக்கு கொடுக்கப்பட்டு ஆராய்ச்சி வலுவுற்றது... இந்த முறை குழந்தைகளுக்கான மூளை திறன், பெண்களுக்கான கருப்பை கோளாறுகள், புற்றுநோய், கிருமிதொற்று, விஷமுறிவு என பல பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி சிறிதும் தோல்வியின்றி நூறு சதவீத வெற்றியில் முடிவுற்றது.வியக்கத்தக்க இம்மருந்தை சரியாக தேர்வுசெய்து ஆயுர்வேதத்தில் பயன்படுத்திருக்கும் ஞானத்தை கட்டுரை வடிவில் வெளியீடு செய்தனர்.


மேலும் ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு அஸ்வகந்தா எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு இருந்த வயிற்று புண், சருமநோய்கள், மலசிக்கல், தூக்கமின்மை, தைராய்டு பாதிப்புகள் போன்ற நாள்பட்ட நோய்களோடு, காய்ச்சல், வீக்கம், வயிற்றுப்போக்கு, முகப்பரு, குடல்புழு போன்றவைகளும் தாமாக குணமடைந்தன.


பெரும்பாலும் முதுவயதினரை தாக்கும் எலும்பு, மூட்டு தேய்வுகளும், parkinson's, Huntington's, Alzeimer's ( மூளை செல்கள், நரம்புகள் சிதைவால் உண்டாகும் ஞாபக மறதி ) எனப்படும் நோய்களுக்கும் சிறந்த தீர்வாக அமைந்தது. சர்க்கரை வியாதி, இரத்தஅழுத்தமும் கட்டுக்குள் வரச்செய்தன.
சிறுநீரக தொற்று உட்பட கொரோனா போன்ற நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இம்மருந்திற்கு உண்டு.


அஸ்வகந்தா முதியோர்களுக்கு ஏற்ற மாத்திரை வடிவில், சூர்ண வடிவில், குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதினருக்கு ஏற்ற டானிக் வடிவில், லேகியம் வடிவில் என பயன்படுத்த எளிய வகைகளில் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கிறது.

சுவைக்காக கார்பொரேட்களின் தேவையற்றவைகளை உண்பதை தவிர்த்து ஆரோக்கியம் தரும் பக்கவிளைவற்ற இந்திய மூலிகைகளை மருந்தாகவோ, உணவாகவோ உண்பதினால் கொரோனாவிற்கு மட்டுமல்ல எந்த நோய்க்கும் பயந்து ஒளியாமல் வாழலாம்.


குறிப்பு ..தலைப்பின் சாராம்சம் வேறு...
நிச்சயமாக அரசு சொல்கிற சமூக இடைவேளையை பின்பற்றிட நிச்சயம் வேண்டும்..கொரோனாவுக்கு அரசு சொல்கிற எந்த விதிமுறையையும் மீற சொல்லவில்லை..

பொதுநலன் கருதி வெளியிடுவோர்...

*AL SHIFA AYUSH HOSPITAL*

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727 7577
சென்னை 9043336000.

ஆயுர்வேத அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

வஜ்ரம் ( வைரம்) போன்ற உடலை பெற....*


வஜ்ரம் ( வைரம்போன்ற உடலை பெற....*


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்
நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை..

பஞ்சகர்ம சிகிச்சைகளுள் (வமனம், விரேசனம், நஸ்யம், வஸ்தி, ரக்தமோக்ஷணம்) தினமும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவது (தினச்சரியை அத்யாயம் மூலம்) நஸ்ய சிகிச்சை மட்டுமே ...நாசி துவாரம் வழியாக கொடுக்கப்படும் சிகிச்சை நஸ்யம்... அதாவது எண்ணெய் துளிகள் / மூலிகை சாறு / மூலிகை பொடி / தூமம் (herbal smoke) போன்றவற்றை நாசி துவாரம் வழியாக செலுத்துவது.கழுத்து மற்றும் சிரசில் உள்ள நோய்களை சரிசெய்ய ஆயுர்வேத ஆச்சார்யாக்கள் (முனிவர்கள்) கையாண்ட குறுக்குவழி என்றே கூறலாம்.ப்ரதிமர்ஷ நஸ்யம் என கூறப்படும் எளிய முறை நஸ்ய சிகிச்சையை அனைவரும் அவரவர் வீடுகளில் சுயமாகவே எடுத்துக்கொள்ளலாம்.. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைத்துவயதினரும் எல்லா காலங்களிலும் வெறும் பத்தே நிமிடங்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்துகொள்ளலாம்...
சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முறை...*


அதிக காற்றோட்டம் இல்லாத அறையை தேர்வு செய்துகொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதியை தைலம் (தன்வந்தர தைலம் அல்லது கற்பூராதி தைலம் சிறந்தது) கொண்டு மிதமான அழுத்தத்துடன் மசாஜ் செய்துகொள்ளவேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான மசாஜ்க்கு பின் சுடு நீரில் முக்கி பிழியப்பட்ட பருத்தித்துணியினால் முகத்தை ஒற்றி எடுக்கவேண்டும். சௌகரியமாக படுத்துக்கொண்ட நிலையில் கழுத்தை உயர்த்தி தலையை சற்று தாழ்வாக வைத்துக்கொண்டு இரண்டு நாசிகளிலும் இரண்டு துளிகள் வீதம் தைலத்தை (அணு தைலம் சிறந்தது) விடவேண்டும். தைலம் நாசி துவாரத்தின் உள்சென்றதை உறுதிசெய்த பின் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து கொள்ளவேண்டும்.கிடைக்கும் பலன்கள்...*


நாள்பட்ட நோய்கள் அதாவது முகவாதம், தலைவலி, ஒவ்வாமை, வலிப்பு, பற்கள் சம்மந்தமான அனைத்து பாதிப்புகள், முகத்தில் உண்டாகும் வீக்கம், காது சம்மந்தமான அனைத்து பாதிப்புகள், இளநரை, கண் புறை முதலான அணைத்து கண் நோய்கள், மன நோய், நாசியில் உண்டாகும் தொந்தரவுகள், கழுத்து வலி, டான்சில், தோள்பட்டை வலி, புற்றுநோய், திக்குவாய், புலன்களின் தொய்வு, தூக்கமின்மை, மனஅழுத்தம், பயம், க்ரோதம், சோகம் போன்ற மனம் சார்ந்த பாதிப்புகள், காய்ச்சல், முடியுதிர்வு...இன்னும் பலவற்றிற்கு தீர்வு .நாசித்துவாராம் வழியாக செலுத்தப்பட்ட மருந்து எளிதாக நரம்பு மண்டலத்தை அடைவதால் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பலம் பெறுகின்றன, இரத்த ஓட்ட அதிகரிப்பால் பொலிவான சருமத்துடன் எந்த நோயும் நம்மை நெருங்காது வைரம் போன்ற உடலுடன் ஆயுட்காலம் நீளுகிறது.நோயின்றி ஆரோக்கியமானவர்களும் இச்சிகிச்சைக்கு தகுதியானவர்களே... நோய் அல்லது உடல் உபாதைகளால் பீடிக்கப்பட்டவர்கள் அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவரை அணுகுவதால் நோய்க்கான ஆலோசனை மற்றும் சிறந்த தைலத்தை பரிந்துரைக்கப்பெறலாம்...குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இச்சிகிச்சையை பின்பற்றுவது சுவாசம் வழியாக செல்லும் வைரஸ்களை தாக்கி அளித்துவிடுவதால் பாதிப்பிலிருந்து தப்பித்துவிடலாம்.ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

அடங்(க்)காமை நன்மை தரும்...


அடங்(க்)காமை நன்மை தரும்...

அடங்காமை நன்மை தரும்


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்
ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகளுள் ஒன்று த்ரிமலா... அதாவது மூன்று உடல் கழிவுகளை அடக்காமல் வெளியேற்றுவது நம்மை நோயிலிருந்து பாதுகாக்கும்...


நோய்களுக்கான அறிகுறிகளை காண ஆயுர்வேதம் மூன்று பெரிய தொகுப்புகளை வழங்குகின்றது அவை....


1.திரிதோஷம் (வாதம், பித்தம், கபம் )
2.சப்ததாது (ரசா, ரக்த/குருதி , மாம்ச/தசை , மேதஸ்/கொழுப்பு , அஸ்த்தி/எலும்பு , மஜ்ஜா/எலும்பு மஜ்ஜை , சுக்ர/விந்து, கருமுட்டை)
3.த்ரிமலா (மூத்திரம், புரீசம் /மலம், ஸ்வேதம் /வியர்வை ).


மூன்றாவது தொகுப்பான த்ரிமலா... மூன்று வகை உடல் கழிவுகளை வெளியேற்றாமல் அடக்குவதால் மிகுதியான நோய்கள் உடலில் உண்டாகின்றன...


பொதுவாக பலரும் அறிந்த ஒன்று சிறுநீர் அடக்குவதால் சிறுநீரக கற்களும், மலத்தை அடக்குவதால் மூலம் போன்ற நோய் வரும் என்பது... ஆனால் இப்பதிவில் கூறவருவது அதுக்கும் மேல...


ஒரு உதாரணம் ... வீட்டிற்கு வெளிய உள்ள கழிவுநீர் கால்வாய் அடைபட்டால் என்னவாகும்...? கழிவுநீர் கால்வாய் நிரம்பி அதற்கான பாதையை விட்டு வெளியேறி வீட்டை சுற்றி நிறையும், அதோடு வீட்டின் உள்ளே இருக்கும் அனைத்து வடிகால் வழியாக கழிவுநீர் வீடு முழுக்க நிரம்ப ஆரம்பித்துவிடும்... மொத்தத்தில் துர்நாற்றம், கிருமி, விஷஜந்துக்கள் என வீடே நாசமாகிவிடும்...அதே போன்ற நிகழ்வுகள் தான் நம் உடலிலும்..

நினைத்துக்கூட பார்த்திடாத பல நோய்களும் இந்த மூன்று கழிவுகளை அடக்குவதால் உண்டாகிறது... ஒவ்வொன்றாய் காண்போம்...


*1.சிறுநீர்...*

சிறுநீர் வெளியேறுவதற்கான காரணம்.. உடலில் உள்ள இரத்தம் சுமார் ஏழு முறை சிறுநீரகத்தால் சுத்தீகரிக்கப்பட்டு சிறுநீர் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீர், உப்புச்சத்து, நச்சுக்களை வெளியேற்றி பாதுகாக்கிறது... அதனால் தான் சரியான இரத்தஅழுத்தத்துடன் உடல் சீராய் இயங்கமுடிகிறது...


சீறுநீர் பையில் தேங்கியிருக்கும் சீறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதால் சிறுநீரகம், சிறுநீரக குழாய், சிறுநீர்பை முதலியவற்றில் கற்கள் உண்டாவதோடு, சிறுநீரக செயலிழப்பு, நீர்க்கட்டி, நோய்த்தொற்று போன்றவை தோன்றுகிறது. மேலும் சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல், முகம் மற்றும் உடல் முழுவதும் வீக்கம், பிராணவாயு பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், இரத்தஅழுத்தம் பாதிக்கப்பட்டு தலைசுற்றல், சில சரும வியாதிகளும் உண்டாகிறது.2.மலம்...*

மலம் வெளியேறுவதற்கான காரணம்... நாம் உண்ணும் உணவில் இருக்கும் உடலுக்கு தேவையானவற்றை சிறுகுடல் உரிந்துகொண்ட பிறகு எஞ்சி இருக்கும் வேண்டாதவற்றை பெருங்குடலுக்கு தள்ளி அங்கே மறுபடியும் நீர்சத்து, எலெக்ட்ரோலைட்ஸ், சில வைட்டமின்கள் (vit k, vit D) பெருங்குடலால் உரியப்பட்டு வெறும் நார் நிறைந்த மலமாக வெளியேறுகிறது...

மலமானது rectum, anus வழியாக வெளியேற வேண்டும்.. வெளியேற்றாமல் அடக்குவதால் மூலம், பௌந்தரம் போன்றவை உண்டாவதோடு, கிருமிகள் உருவாவதினால் வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்றுபொருமல், பசியின்மை, செரியாமை, சுவையின்மை தோன்றுகிறது. மேலும் செரிமான பாதிப்பால் சிறுகுடல் செயல்பாடுகள் பாதிப்படைந்து சத்துக்களை உரிந்துகொள்ள முடியாமல் உடல் பலவீனம் அடைகிறது, பிராணவாயு பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், தலைசுற்றல் உண்டாகிறது. Metabolism பாதிக்கப்படுவதால் தேவையற்ற இடங்களில் கொழுப்பு படிவது, தொந்தி /தொப்பை உண்டாவதற்கு காரணமும் இதுவே.

3.வியர்வை...*
வியர்வை வெளியேற காரணம்....முக்கிய காரணம் நமது உடல் தட்பவெட்பத்தை சீராக வைத்துக்கொள்வதற்கே. வியர்வையில் உப்புடன் நீர் மட்டுமே வெளியேறுகிறது. இதனால் சரிவிகித நீர் மற்றும் உப்பு சத்துடன் இரத்த ஓட்டம் சீராகிறது. வியர்வையால் உண்டாகும் எண்ணெய் தன்மை மாசு, கிருமிகளிடமிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.


வியர்வையை எப்படி அடக்கமுடியும் என யோசிக்கிறீர்களா?... பலரும் அவரவருக்கு தெரியாமலேயே வியர்வை வெளியேறுவதை தவிர்க்கிறார்கள். ஏ.சி பயன்பாடு வியர்வை வெளியேறுவதை தடுக்கிறது. இவ்வாறு வியர்வை வெளியேறுவதை தடுப்பதினால் சருமம் பாதிப்படைகிறது. சருமம் வறட்சியால் பொலிவை, மிருதுதன்மையை இழக்கிறது. பல சரும நோய்களும் உண்டாகிறது.


பணியிடங்களில் ஏ.சி பயன்பாட்டை தவிர்க்கமுடியாது என்பது உண்மையே... ஆனால் வீட்டில் ஏ.சி தவிர்த்து, சரியான உடற்பயிச்சி மேற்கொண்டு வியர்வை வெளியேற்றுவதால் இத்தகைய பாதிப்புகளை தவிர்க்கலாம்.


இந்த மூன்று மலங்கள் நாள்தோறும் வெளியேறியாகவேண்டும்... வேலை நிமித்தமாக நீங்கலாக அடக்குவதும், உபாதையாக மலங்கள் வெளியேறாமல் அடங்கியிருப்பது ஆரோக்கியத்தை சீர்குலைத்து நோயின் வாசலில் கொண்டுநிறுத்தும். தக்க மருத்துவ ஆலோசனையுடன் மலச்சிக்கல்களை நீக்க இன்றே முனைந்திடுவீர்...

ஆலோசனைக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே..

Post Comment

மனிதகுலம் நோயின்றி தழைக்க இது ஒன்று போதும்...


மனிதகுலம் நோயின்றி தழைக்க இது ஒன்று போதும்...


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்


ரசாயன சிகிச்சை என்றால் என்ன  ?

ரசாயனம் என்ற சமஸ்க்ருத வார்த்தையின் பொருள் - நோய் தவிர்த்து, இளமையை நீடித்து, புலன்களை சீராகி, வீர்யத்தை ஊக்கப்படுத்தும் சிகிச்சை....என்பதாகும். இன்னும் சுருக்கமாக சொன்னால் அமிர்தம்.


*எதற்காக இச்சிகிச்சை?*

நாம் அனைவருமே வாழ்க்கை போராட்ட களத்தில் போராடிக்கொண்டிருப்பவர்களே... இதற்கிடையில் நாம் செய்யும் தவறுகள் ஆதாவது ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், ஓய்வின்மை, உணவு பொருட்களின் கலப்படத்தால் உடலில் சேரும் நச்சு, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறியினால் உடலில் சேரும் விஷம், இரவு நேர வேலை (தூக்கமின்மை ), பகல்தூக்கம், உடற்பயிற்சியின்மை, கவலை, கோபம், பயம், மனஅழுத்தம் போன்றவற்றால் நரம்புகள் தளர்ந்து, எலும்புகள் தேய்ந்து, எழுப்பு மஜ்ஜை வற்றி, தசைகள் வலுவிழந்து, அதிக கொழுப்பு, இரத்தகுழாய் அடைப்பு, கருத்தரிப்பின்மை, விந்து குறைபாடு, சோர்வு, இயலாமை, மறதி, பொலிவின்மை முதலான பல நோய்களுக்கு ஆளாகின்றோம்... இதனாலேயே பலருக்கும் அகால மரணம் ஏற்படுகிறது... இத்தகைய காரணங்களால் ஏற்படும் வயது முதிர்வு, நோய்த்தாக்கம், அகால மரணத்தை தவிர்க்கவே கூறப்பட்டுள்ளது ரசாயன சிகிச்சை...


என்ன பயன்?*

ரசாயன மருத்துவதினால் நரம்புகள், எலும்புகள், தசைகள், எலும்புமஜ்ஜை அனைத்தும் வலுப்பெறுகிறது, அதிக கொழுப்பு, இரத்தக்குழாய் அடைப்பை சீர்செய்கிறது, பெண்மை, ஆண்மை குறைபாட்டை நீக்கி சிறந்த ஆரோக்கியமான சந்ததியினரை பெற வழிசெய்கிறது, புத்திகூர்மை, பகுத்தாய்வு திறன் மேம்பட்டு நிம்மதியை தருகிறது... இவை எல்லாவற்றால் வயது முதிர்வு தடுக்கப்பட்டு, வாழ்நாட்கள் நீடிக்கப்படுகிறது...


சிகிச்சையை_எவ்வாறு_பெறலாம் ?*

ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒன்றாக விவரிக்கப்பட்டுள்ளது ரசாயன மருத்துவம்.


குடிப்பிரவேசிக ரசாயனம், ஆச்சார ரசாயனம், அசார ரசாயனம், திரவ்ய ரசாயனம் என பலவாறாக பின்பற்றப்படும் ரசாயன மருத்துவம் வகைகளுள் பின்பற்ற எளிதாய் இருப்பவை திரவ்ய ரசாயன மருத்துவம்.


குறிப்பிட்ட சில ஆயுர்வேத மருந்துகளை (அமிர்தத்திற்கு நிகரான மேன்மை குணங்களை கொண்ட மூலிகைகளால் செய்யப்பட்ட ) நாள்தோறும் குறிப்பிட்ட அளவு உண்பதினால் ரசாயன மருத்துவத்தின் பலன்களை எளிதாக பெறலாம்..


அவ்வாறான ஆயுர்வேத ரசாயன மருந்துகள்...
ச்யவனப்ராஷம்
ஹரிதகி ரசாயனம்
ப்ரம்ம ரசாயனம்
விடங்காவலேகம்
பிப்பலி ரசாயனம்
சிலாஜது ரசாயனம் மகரத்துவஜ ரஸ்
வசந்தககூஸ்மாரா ரஸ்


குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ?*

பிரத்யேகமாக குழந்தைகளுக்கு பரிந்துரைக்கபடுபவை..
சரஸ்வதாரிஷ்டம்
வல்லாரை கீரை சாறு
அதிமதுர சூர்ணம்
சீந்தில்கொடி சாறு
சங்குபுஷ்பி சூர்ணம்


குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ரசாயன மருத்துவதினால் அவர்களின் ஞாபக திறன், திறமை, உடல் ஆற்றல், இளமை, பொலிவு, கவர்ச்சி, குரல் வளம், புலன் ஆரோக்கியம், மனோபலம், நேர்மை, தீய பழக்கங்களுக்கு செல்லாதிருத்தல், வாழ்நாள் போன்றவை அதிகரித்து நீள்கிறது...


எந்த வயதினருக்கும் பொருந்தும் இம்மருத்துவம் கொரோனா போன்ற நோய்த்தொற்று காலங்களில் பின்பற்றுவதால் சிறந்த நோயெதிர்ப்பு ஆற்றலை பெறுவதோடு ஆரோகியமான சமுதாயத்திற்கு துணைசெய்யலாம்... ஒவ்வொரு தனி மனித ஆரோக்கியமே நாட்டை வல்லரசு பாதைக்கு கூட்டிசெல்லும்.


எந்த மருத்துவமும் மருத்துவர் ஆலோசனைக்கு உட்பட்டு எடுப்பதே சிறந்தது...

மருத்துவ ஆலோசனைக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

காய்ச்சலை சரிசெய்யும் உணவு....


காய்ச்சலை சரிசெய்யும் உணவு....


காய்ச்சலில் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத கஞ்சிகளின் வகைகள்..
டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


நம் அனைவருக்கும் காய்ச்சல் வந்து சாரியாவதுண்டு... காய்ச்சலுக்கு பொதுவாக மருத்துவர் பரிந்துரைப்பது அல்லது நமக்கு கொடுக்கப்படும் உணவு எண்ணெய், காரம் இல்லாத எளிமையான உணவாக இருக்கும்...


இன்றும் எனக்கு நினைவில் உள்ளது சிறுபிராயத்தில் காய்ச்சலின் போது அம்மா பாக்கெட்டுகளில் வரும் ப்ரெட் அல்லது பண் (ரொட்டி ) வாங்கி பாலில் முக்கி ஊட்டுவார்... இது பொதுவாக அனைவரின் வீட்டிலும் நடந்திருக்கும்... சிலர் இடியாப்பம், இட்லி, ஆப்பம், பிஸ்கட் போன்ற உணவுகளையும் காய்ச்சலின் போது உணவாக எடுக்கும் பழக்கமாக வைத்திருப்பர்...

அப்போது யாரும் இதனை அறிந்திருக்கவில்லை... காய்ச்சலுக்கு சிறந்த உணவு நவரைஅரிசியினால் (சிவப்பரிசி) செய்யப்படும் கஞ்சி என்பது...

சிவபரிசியில் உள்ள சத்துக்கள்...
இரும்பு சத்து, மினரல், கால்சியம், நியாசின், தையமின், ரிபோஃளேவின் போன்ற புரதசத்து, நார்சத்து முதலானவை..

கஞ்சியை பல முறைகளாக தயார் செய்வதை பற்றி ஆயுர்வேதம் க்ரித்தண்ண வர்கம் என்னும் தலைப்பில் விவரித்துள்ளது...

மந்த, பேய, யவாகு, விலேபி, லாஜாமண்ட என்று அரிசி கொண்டு செய்யப்படும் கஞ்சி வகைகளை நோயாளியின் உடல் தகுதிக்கு, நோய்த்தன்மைக்கு ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளனர்...

இம்மாதிரியான உணவுகளினால் ஆமாத்தினால் உண்டாகும் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா என எந்த வகை காய்ச்சலானாலும் நொடி பொழுதில் நீங்குவது உறுதி.. நோய்கிருமியினால் (கொரோனா உட்பட ) உண்டாகும் காய்ச்சல்மட்டுமின்றி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு என அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது...

கஞ்சி தயாரிக்கும் முறைகளை காண்போம்...

மந்த* : ஒரு பங்கு சிவப்பரிசி பதினான்கு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அல்ஷிபா அரிசி நன்கு வெந்ததும் மீதமுள்ள தண்ணீரை தனியாக வடித்து பிரித்தவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகவேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, கிருமியினால் உண்டாகும் காய்ச்சல் போன்றவற்றிக்கு சிறந்த உணவு. உடல் இழந்த நீர் சத்தை பெறுவதுடன் பசியை தூண்டுவித்து, நரம்புகளுக்கு சக்தியளிக்கும்.


பேய* : ஒரு பங்கு சிவப்பரிசி, எட்டு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அரிசி மிருதுவாக வெந்தவுடன் நீரை பிரிக்காமல் உப்பு மற்றும் மிளகு பொடி சேர்த்து மிதமான சூட்டுடன் உண்ண வேண்டும்.


முந்தைய நீராகாரம் (மந்த) பருகிய இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களில் நோயாளியால் நல்ல பசியை உணர முடியும்... அப்போது இந்த (பேய) வகை கஞ்சியை உண்ண செய்வதால் உடலில் உள்ள சோர்வு, நாவறட்சி, தாகம் நீங்கி ஊக்கம் பெறுவர்.


யாவாகு* : ஒரு பங்கு சிவப்பரிசியுடன், ஆறு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அரிசி நன்றாக வெந்தவுடன் அவற்றில் உப்பு, துருவப்பட்ட இஞ்சி, மிளகு தூள் சேர்த்து கடைந்து உண்ண வேண்டும்.

இது மூன்றாவது நிலையில் கொடுக்கும் கஞ்சி... சோர்வு நீங்கிய நோயாளி இந்த கஞ்சியை உண்பதினால் மலம், ஜலம், காற்று, வியர்வை வெளியேறும். உடல் பாரம் நீங்கி இலகுவாக இருப்பதை உணரமுடியும்.


விலேபி* : ஒரு பங்கு சிவபரிசியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அரிசி மிருதுவானதும் உப்பு, துருவப்பட்ட இஞ்சி, பொடி செய்யப்பட்ட ஜீரகம், சோம்பு, மஞ்சள், கொத்தமல்லி, மிளகு சேர்த்து உண்ண வேண்டும்.

நோயாளிக்கு மலஜலங்கள் வெளியேறியதால் உணவின் சுவையை உணர முடியும். உணவின் நறுமணம் பசியை தூண்டி உற்சாகம் அடைவர். பசுநெய் சேர்த்தும் பரிமாறலாம்.

லாஜாமந்த* : நெற்பொரி, தண்ணீர் சேர்த்து சமைக்கபட்ட கஞ்சி வகை.. சிறந்த உடல் ஆற்றலை தரும்..

முறையாக இரண்டு அல்லது மூன்று மணி நேர இடைவெளியில் கொடுக்கப்படும் இந்த கஞ்சி வகைகளால் உடல் எந்த மருந்தின் உதவியின்றி பிணியிலிருந்து மீண்டுவிடும். செரிமான தொந்தரவு உள்ளவர்கள், நோம்பு நாட்களிலும் இந்த கஞ்சி வகைகளை பின்பற்றுவதால் வயிற்று தொந்தரவுகளின்றி உடல் சீராக இருக்கும்.

இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு இருக்கும் தாய்மார்களுக்கு கஞ்சி என்ற ஒன்றை தயார்செய்வது பற்றியும், காய்ச்சலின் போது அதை பயன்படுத்துவது பற்றியும் தெரியாமல் போய்விடும் அளவிற்கு பாரம்பரியம் அழித்துக்கொண்டு வருகிறது... இப்பொழுதே விழித்துக்கொண்டு மீட்டெடுப்போம்... பயனடைந்து, பிறர் பயன்பெற பகிர்வோம்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000
பகிர்ந்து மகிழ்வோம்..
ஆயுர்வேதம் பரப்புவோம்...

Post Comment

பதினெட்டு விதி அறிந்து நடந்தால் பதினாறு செல்வத்துடன் மருந்தில்லாமல் வாழலாம்..

பதினெட்டு விதி அறிந்து நடந்தால் பதினாறு செல்வத்துடன் மருந்தில்லாமல் வாழலாம்..


சாப்பிட கூடாத உணவு வகைகள்...

டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்

உண்பதெல்லாம் விஷமாகிட காரணங்கள் பதினெட்டு.

நோய்க்கான காரணிகளாக முதலில் வைக்கப்படுவது உணவு...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆயுர்வேதத்தில் தவிர்க்கவேண்டிய உணவுகளை பற்றி வ்ருத்த ஆகாரங்கள் (incompatible food ) என்ற பெயரில் விவரித்துள்ளது...

பலரும் செய்திதாள்களில், தொலைக்காட்சிகளில் கண்டிருப்பீர்கள்...

Kurkure என்னும் தின்பண்டம் சாப்பிட்ட பின் eno என்னும் அஜீரணம் நீக்கும் பானம் குடித்த இளைஞர் மரணமடைந்தார் என்ற செய்தி...

Kurkure விரும்பி சாப்பிடும் பல குழந்தைகளை பார்த்திருக்கிறோம்... eno எடுத்துக்கொள்ளும் பலருக்கும் எந்த அபாயமும் நிகழ்ந்ததில்லை.. ஆனால் இரண்டையும் ஒன்றாக உண்ணும்போது உடனடி மரணமா?

இதற்கான காரணம் இவற்றில் இருக்கும் வேதிபொருள் ஒன்றாக சேரும்போது சைனைடுக்கு இணையான விஷத்தன்மை இரைப்பையில் உருவாகி உயிரிழப்பு ஏற்படுகிறது...

ஏதோ ஒரு வேதி பொருள் நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் உள்ளது.. அதன் தேவை உடலை, உயிரை வளர்க்க தான்.. ஆரோக்கியமான உடலுக்கு அவற்றின் பங்கு இருக்கிறது என்பதனால் மட்டுமே உண்கின்றோம்...


அப்படிஇருக்க நாம் உண்ணும் உணவு நமக்கு பாதகத்தை ஏற்படுத்தினால்...?
ஆயுர்வேதம் கூறும் வ்ருத்த ஆகாரங்களை தவிற்பதினால் இத்தகைய பாதகங்களை தவிர்க்க முடிகிறது...

மொத்தம் பதினெட்டு வகையான உணவு கலவையை / சேர்த்து உண்ணுவதை தவிர்க்க விவரிக்கபட்டுள்ளது..

1) தேச வ்ருத்த* - வாழும் இடத்திற்கு (குறிஞ்சி /முல்லை/மருதம் /நெய்தல் /பாலை நிலம்) தகாத உணவை உண்ண கூடாது.... உதாரணம் : பாலை நில மக்கள் அதிக உப்பு, காரம் தவிர்க்க வேண்டும்.

2) கால வ்ருத்த* - பருவகாலத்திற்கு இணையான வீர்யம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.அல்ஷிபா ஆயுஷ் உதாரணம் : மழையில் கூழ், எலுமிச்சை சாறு ; கோடையில் சூடான, காரமான உணவு தவறாகும்.

3) அக்னி வ்ருத்த* - பசி தன்மைக்கு எதிராக உணவு உட்கொள்ள கூடாது. உதாரணம் : வயிற்று போக்கு இருக்கும் போது பிரியாணி ; கடுமையான பசியில் கஞ்சி உண்பது தவறாகும்.

4) மாத்ரா வ்ருத்த* - சில உணவுகளை சமமான அளவில் உண்ண கூடாது.அல்ஷிபா. உதாரணம் : நெய் மற்றும் தேன் சம அளவில் உண்ண கூடாது.

5) சாத்மிய வ்ருத்த* - வழக்கமான உணவிலிருந்து மாறுபட்டு உண்ண கூடாது. உதாரணம் : அதிக காரம் பழக்கப்படாத ஒருவன் அந்த உணவை தவிர்க்க வேண்டும்.

6) தோஷ வ்ருத்த* - உடலின் இயற்கையான வாகிற்கு ஒத்துப்போகும் உணவை தவிர்க்கவேண்டும். உதாரணம் : உடல் பருமன் உடையவர்கள் எண்ணெய் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

7) சம்ஸ்கார வ்ருத்த* - அல்ஷிபா.சில உணவுகளை ஒருசேர சமைக்க கூடாது. உதாரணம் : இறைச்சியை விளக்கெண்ணெயில் சமைக்க கூடாது.

8) வீரிய வ்ருத்த* - எதிரெதிர் குணம் (உஷ்ணம் /குளிர்ச்சி ) கொண்ட உணவுகளை ஒன்றாக உண்ண கூடாது. உதாரணம் : பால், தயிர் ஒன்றாக உண்ண கூடாது.

9) கோஷ்ட வ்ருத்த* - கோஷ்டம் என்பது இரைப்பை. இலகுவான இரைப்பை உள்ளவன் அதிக வீரியமான ஒன்றை தவிர்க்க வேண்டும். அல்ஷிபா .உதாரணம் : அதிக கரும்பு சாறு பருகுவது இலகுவான இரைப்பையில் சேரும்போது வயிற்று போக்கை உண்டாகும்.

10) அவஸ்தா வ்ருத்த* - உடல் உழைப்பிற்கு முரணான உணவை உண்ண கூடாது. உதாரணம் : உடல் உஷ்ணம் அதிகமாகும் வேளை செய்பவர்கள் உஷ்ணத்தை அதிக படுத்தும் உணவை தவிர்க்க வேண்டும்.

11) க்ரம வ்ருத்த* - பசி இல்லாமல் அல்லது மலம், ஜலம் வெளியேறாமல் இருக்கும் நிலையில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். 

12) பரிகார வ்ருத்த* - தொடர்ந்து ஒரே குணம் (உஷ்ணம் /சீதம் )உடைய உணவை தவிர்க்க வேண்டும். உதாரணம் : தயிர் உணவுக்கு பின் அன்னாசி, பப்பாளி பலன்கள் உணபது தவறு.

13) உபசார வ்ருத்த* - அல்ஷிபா.உணவை அளவுக்கு அதிகமாகவோ, அரைகுறையாகவோ சமைத்து உண்ண கூடாது. உதாரணம் :ஆப்ஃபாயில்.

14) பாக்க வ்ருத்* - கெட்டு போன உணவுகளை, காலாவதியான உண்ணவுகளை உண்ண கூடாது.

15)  சம்யோக வ்ருத்த* - புளித்த உணவுகளை பாலுடன் உண்ண கூடாது. உதாரணம் : திராட்சை பழத்தை பாலுடன் உண்பது தவறு.

16) ஹ்ருத் வ்ருத்த* - மனதிற்க்கு விருப்பம் அல்லாத உண்ணவுகளை உண்ண கூடாது.

17) சம்பத் வ்ருத்த* - அதிகம் பழுத்த அல்லது முற்றிய பழம், காய்கறிகளை உண்ண கூடாது, மிக பிஞ்சு பழம், காய்கறிகளையும் உண்பது தவறு.

18) விதி வ்ருத்த* - உணவு உண்ணும் விதிகளை (புதிதாக சமைக்கப்பட்ட, நெய்ப்பு தன்மை கொண்ட, சுத்தமா இடத்தில், பசி உண்டான பிறகு, சரியான அளவில், மற்றவற்றில் கவனம் சிதறாமல், பிறருக்கு பகிர்ந்து ) பின்பற்றது உண்ண கூடாது.மேலும் விவரம் அறிய அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை, அல்லது அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகுங்கள்

எனவே நாம் உண்ணும் உணவுகளில் உள்ளவற்றை அறிந்துவைத்திருப்பது அவசியமான ஒன்றாகிறது...உலகில் உள்ள அனைத்தையும் தெரிந்துகொள்வதை விட பெரும்பாலும் நம் உணவில் இடம் பெறுபவைகளை பற்றி அறிந்து கொள்வது சிறந்த ஆரோக்கியத்தை தரும்.

சந்தேகங்களுக்கு அணுகவும்..
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000
பிடித்திருந்தால் பகிர்ந்து உதவலாமே..

Post Comment