சீத பேதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீத பேதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 17, 2013

கழிச்சலை குணபடுத்தும் -லசுனாதிவடி Lasunadhi Vati

கழிச்சலை குணபடுத்தும் -லசுனாதிவடி   Lasunadhi Vati                                                           
  (ஆதாரம் -லோலம்பராஜீயம் - விக்ஷூசிகாசிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            தோல் நீக்கிக் கல்வத்திலிட்டு நன்கு
       அரைத்து விழுதாக்கிய பூண்டு / லசுன             10 கிராமுடன்
2.            சீரகம் – ஜீரக                                     10 கிராம்
3.            சுக்கு – சுந்தீ                                     10           “
4.            திப்பிலி – பிப்பலீ                                 10           “
5.            மிளகு – மரீச்ச                                   10           “

இவைகளை நன்கு பொடித்துச் சலித்த சூர்ணம்

6.            சுத்தி செய்த கந்தகம் (பொடித்தது) – ஷோதித கந்தக      10           “
7.            இந்துப்பு (பொடித்தது) – ஸைந்தவ லவண                10           “
8.            பால் பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) – ஹிங்கு     10           “

இவற்றைச் சேர்த்து நன்கு கலந்த அரைத்துப் பின்னர் அவற்றை எலுமிச்சம்பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) கொண்டு ஏழு நாட்கள் அரைத்துப் பதத்தில் 200 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
குறிப்பு:    எலுமிச்சம்பழச்சாறுக்கு பதில் வேப்பம் பட்டைக் கஷாயம் உபயோகிப்பதும் உண்டு.

அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகளுக்கு வெந்நீர் அல்லது மோருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 


பேதி (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), வாந்திபேதி (விஷூஸிகா) எனும் காலரா, பசியின்மை (அக்னிமாந்த்ய), வயிற்றுப்புசம் (ஆனாக) மற்றும் பலவித ஜீரணக் கோளாறுகள், இந்நிலைகளில் இது அஜமோதார்க்க அல்லது கற்பூராத்யர்க்கத்துடன் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
1. சீத பேதி முதல் -புட் பாய்சன் வரை -கிராணி கழிச்சல் முதல் -காலரா வரை -பேதிக்கு நல்ல பலன்  தரும் மருந்து இது 



Post Comment

ஞாயிறு, ஜூலை 22, 2012

கிராணிக்கும் ,பேதிக்கும் ..காலராவுக்கும் மருந்தாகும் அஷ்டாக்ஷரீ குடிகா-Astaksheeri Gutika


கிராணிக்கும் ,பேதிக்கும் ..காலராவுக்கும் மருந்தாகும்
அஷ்டாக்ஷரீ குடிகா-Astaksheeri Gutika
(ref-ஆரோக்ய கல்பத்ருமம் – க்ரஹணீ சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அபின் – அஹிபேன                        10 கிராம்
2.            சந்தனம் – சந்தன                           10           “
3.            செஞ்சந்தனம் – ரக்தசந்தன                   10           “
4.            ஜாதிக்காய் – ஜாதீபல                        10           “
5.            சுத்தி செய்த லிங்கம் – ஷோதித ஹிங்குள    10           “
6.            திப்பிலி – பிப்பலீ                            10           “
7.            பொரித்த பெருங்காயம் – ஹிங்கு           10           “
8.            அதிவிடயம் – அதிவிஷா                   10           “

இவைகளை அபின், இலிங்கம் நீங்கலாகப் பொடித்துச் சலிக்கவும். பின்னர் கல்வத்திலிட்டுப் பொடித்துச் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தறைத்த லிங்கத்துடன் க்ஷெ சூரணத்தைச் சேர்த்து,

1.            வில்வமூலம் – பில்வமூல
2.            சுக்கு – சுந்தீ
3.            சீரகம் – ஜீரக
4.            சிறுகாஞ்சூரிவேர் – துராலபா
5.            கோரைக்கிழங்கு – முஸ்தா
6.            ஓமம் – அஜமோதா
7.            கொத்தமல்லி விதை – தான்யக

இவைகளைக் கொண்டு தயாரித்த கஷாயம் விட்டரைத்து விழுதானவுடன் அபினியைச் சிறு, சிறு துண்டுகளாக்கிச் சேர்த்து நன்கு கரைய அரைத்துப் பின்னர் எலுமிச்சம்பழச் சாறு (ஜம்பீரஸ்வரஸ) விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அபினி பொடிக்க முடியாத ஒரு பொருளாகையால் அதை மேலே கூறிய கஷாயத்தை விட்டு நன்கு கரைத்தோ அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சிறிது கஷாயம் விட்டு நன்கு அரைத்தோ சேர்க்க வேண்டும்.

அளவும் அனுபானமும்:      

ஒரு மாத்திரை வீதம் இரண்டு அல்லது மூன்று வேளைகள். தயிர், மோர், தண்ணீர் அல்லது தேனுடன் கொடுக்கவும்

.
தீரும் நோய்கள்:  


பேதி (அதிஸாரம்), சீதபேதி (அ) சீதக்கடுப்பு (ப்ரவாஹிஹ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), ரத்தமூலம் (ரக்தார்ஷ), இரத்தக் கொதிப்பு.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. அபின் இப்போது கிடைப்பது அரிது ..அரசு நெறிமுறைப்படி மருந்து கம்பெனிகள் வாங்கி சேர்ப்பது மிக மிக கஷ்டம் ...
  2. இந்த மருந்தும் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை ..

Post Comment

வெள்ளி, ஜூன் 15, 2012

உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு - ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras


புட் பாய்சனிங் என்னும் உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு -
ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras
   (ref-பஸவராஜீயம் - ஜ்வராதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த லிங்கம் (ஷோதித ஹிங்குள) 30 கிராம் எடுத்துப்போதுமான அளவு துருஞ்சிப் பழச்சாறு (மாதுலங்கஸ்வ ரஸ) விட்டறைத்து அத்துடன் பொடித்துச் சலித்த  
1.                சுக்கு – சுந்தீ                     10 கிராம்                        
2.            மிளகு – மரீச்ச                   40           “                            
3.            திப்பிலி – பிப்பலீ                40           “
4.            பொரித்த வெங்காரம் – டங்கண    30           “
                           
  இவைகளின் சூரணம்
5.            தனியே சிறிது துருஞ்சிப்பழச் சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சுத்தி செய்த நாபி (ஷோதித வத்ஸ நாபி) 30 கிராம்
இவைகளைச் சேர்த்து மேலும் சிறிது துருஞ்சிப் பழச்சாறு விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    துருஞ்சிப் பழச்சாற்றுக்கு பதிலாக எலுமிச்சம்பழச்சாறு உபயோகிப்பது சம்பிரதாயம்.

அளவு:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது இஞ்சி சாற்றுடன் கொடுக்கவும். மற்ற பொருத்தமான அனுபானங்களுடனும் கொடுக்கலாம்.
தீரும் நோய்கள்:  



காய்ச்சல் (ஜ்வர), கழிச்சல்காய்ச்சல் (ஜ்வராதிஸார), ஆமவாதம் (ஆமவாத), பசியின்மை (அக்னி மாந்த்ய), செரியாமை (அஜீர்ண), உடல்வலியுடன் கூடிய காய்ச்சல், பேதி (அதிஸார), சீத பேதி (ப்ரவாஹிஹ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ).
  • பேதி, சீதபேதி, பெருங்கழிச்சல் போன்ற நிலைகளில் இது குடசப்பாளைவித்து (இந்த்ரயவ), லவங்கப்பட்டை (லவங்கத்வக்), சீரகம் (ஜீரக) ஆகியவற்றின் சூரணத்துடன் தரப்படுகிறது.
  • காய்ச்சல், செரியாமை, பசியின்மை, உடல்வலியுடன் கூடிய காய்ச்சல் போன்ற நிலைகளில் இது தேன் திரிகடுகுச் சூரணத்துடனோ அல்லது இஞ்சிச் சாற்றுடனோ அல்லது கொத்துமல்லி (தான்யக), மிளகு (மரீச்ச), பர்பாடகம் (பர்பாடக), சீந்தில் (குடூசி) மற்றும் லவங்கப்பட்டை (லவங்கத்வக்) ஆகியவற்றின் சூரணத்துடனோ தரப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆம அதிசாரம் என்னும் -சளியோடு சேர்ந்த சீத பேதிக்கு சிறந்த மருந்து இது ...
  2. உணவு விஷமாதல் என்னும் புட் பாய்சனிங் என்னும் நிலையில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. ஆமம் அதிகமாக உள்ள காய்ச்சலிலும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  4. நாள் பட்ட கிராணி கழிச்சளுக்கும் இந்த மருந்தை நம்பிக்கையோடு பயன்படுத்தலாம் ...
  5. மார்கெட்டில் மிக எளிதாக கிடைக்கிறது ..ஒரு மாத்திரை ஒரு ரூபாய்க்குள் தான் இருக்கிறது ..

Post Comment