கல்லீரல் வீக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்லீரல் வீக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

காக்க காக்க கல்லீரல் காக்க | இது வரை எந்த யூடியூப் வீடியாவிலும் பார்க்க...


காக்க காக்க கல்லீரல் காக்க |

இது வரை எந்த யூடியூப் வீடியாவிலும் பார்க்காத தகவல்கள் ..

ஆயுர்வேதத்தில் ஆதாரப்படி உள்ள தகவல்கள்- இது கதை அல்ல நிஜம்

கல்லீரலை பாதிக்கும் செயல்களும் அதற்க்கு முழுமையான ஆயுஷ் தீர்வுகளும்

 

கல்லீரலின்  அற்புத வேலைகள்

ஆயுவேதத்தில் கல்லீரலை பற்றி என்ன குறிப்புகள் உள்ளது

கல்லீரலை நாம் எப்படி பாதுகாப்பது

பித்தத்தை எப்படி சம நிலை படுத்துத்துவது

என்ன சுவை கல்லீரலை பாதிக்கும் .. எது குணப்படுத்தும்

என்ன உணவுகள் கல்லீரலுக்கு நல்லது

என்ன செய்ய கூடாது

ஆயுர்வதத்தில் கல்லீரல் நோயை நீக்கும் சிகிச்சை சூத்திரம் என்ன ?

கல்லீரல் நோய்க்கு என்ன யோகா பயிற்சி

முழுமையாக பார்த்து பலன் பெறுங்கள் ..

 

நமது கல்லீரல்  மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும் நுரையீரல் மற்றும் இதயம் இரண்டாவதாக இருக்கலாம். நாம் ஒரு சிறுநீரகம் அல்லது ஒரு நுரையீரலுடன் மட்டுமே வாழ முடியும், மேலும் மண்ணீரல் இல்லாமல் நாம் முழுமையாக இருக்க முடியும். ஆனால் செயல்படும் கல்லீரல் இல்லாமல் நாம் வாழ முடியாது. கல்லீரலால் செய்யப்படும் மொத்த செயல்பாடுகளின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறு வரம்பில் உள்ளது. கல்லீரல் முடிவில்லாமல் இரத்தத்தை வடிகட்டுகிறது மற்றும் நச்சுத்தன்மையாக்குகிறது மற்றும் இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் கல்லீரல் புரதத்தையும் ஒருங்கிணைக்கிறது,  முக்கியமான என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்குகிறது, சோர்வுற்ற இரத்த அணுக்களை உடைத்து மறுசுழற்சி செய்கிறது மற்றும் கிளைகோஜன் சேமிப்பை ஒழுங்குபடுத்துகிறது. நச்சுத்தன்மையின் முதன்மை உறுப்பு என்ற வகையில், கல்லீரலில் ஆழமான திசுக்களை இரத்தத்தில் உள்ள அசுத்தங்களிலிருந்து பாதுகாக்கும் முக்கியமான வேலை உள்ளது, அது தீங்கு விளைவிக்கும். இருப்பினும், ஆல்கஹால், பரிந்துரைக்கப்பட்ட  மருந்துகள், சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள் போன்ற நச்சுகளை அதிகமாக வெளிப்படுத்துவது கல்லீரலை மோசமாக பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

 

அதிர்ஷ்டவசமாக, கல்லீரல் தன்னைக் குணப்படுத்தவும் புத்துயிர் பெறவும் ஒரு குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளது. இது கல்லீரலை மற்ற உறுப்புகள் மற்றும் திசுக்களில் இருந்து ஒதுக்கி வைக்கும் . ஆனால் கல்லீரல் தன்னை திறமையாக சரிசெய்ய வேண்டுமென்றால், நாம் அவ்வப்போது ஓய்வெடுக்க வேண்டும். இந்த வளமானது கல்லீரலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் எவ்வாறு ஊக்குவிப்பது என்பதற்கான சில நடைமுறை வழிகாட்டுதல்களை காணொலியில் காணலாம்.

 

Facebook id https://www.facebook.com/drsaleem.ayush​

Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S...

​ Facebook  Group Link https://www.facebook.com/groups/22238...​

youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...​

 Instagram link https://instagram.com/drsaleemayush?i...​

Twitter link https://twitter.com/AyushDrsaleem​

Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

 

 

#liverdetox

#detoxandcleanseyourliver

#removetoxinsfromliver

#livercleansing

#LIVER

#ayurveda

#ayurvedatreatment

#BAMS

#अग्नि


Post Comment

செவ்வாய், மே 23, 2017

கல்லீரலை காப்பாற்ற ஆயுஷ் மருத்துவம்

கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்புப்படிதல் மற்றும் கல்லீரல் சுருங்குதலுக்கு ஆயுர்வேத சிறப்பு சிகிச்சை

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure)., BAMS.,M.Sc.,MBA

            ஆயுர்வேதத்தின் படி கல்லீரல் என்பது பித்தாஷயம் அதாவது பித்தத்தின் இடம். பித்தம் என்பது உஷ்ணத்தின் அம்சமாகும். சக்தி எல்லாவற்றிலும் மாற்றத்திற்குக் காரணமாக உள்ளதே கல்லீரல் .அப்படியே நம் உடலிலும் சூரியனுக்குச் சமமாக எல்லா மாற்றங்களும் நிகழ்வது கல்லீரலீன் செயல்பாடுகளால்தான்.



கல்லீரலில் பல்வேறு வைரஸ்  மற்றும் கல்லீரல் நச்சுக்களால் Hepatitis என்னும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. கல்லீரல் சுருங்குதல் பெரும்பாலும் மது அருந்துவதால் ஏற்படுகிறது. இதில் கல்லீரல் ஒரு  கடின  திசுக்களாக மாறிவிடுகிறது.


இதில் இரண்டு நிலைகள் உண்டு .

  • ஒன்று கல்லீரல் சிறுத்து சுருங்கி  விடும். இதை LALNIC ATROPLINC CIRRHOSIS  என்பர்.


  • இரண்டாவது நிலையில் கல்லீரலின் இணைப்பு இழையகங்கள் (CONNECTIVE TISSUES) மிக அதிகமடைந்து கல்லீரல் பெருத்து மிருதுவாகிவிடும். இதை FATTY CIRRHOSIS LIVER என்பர்.


வியாதி பல ஆண்டுகளாக உடலில் வேரூன்றி உடல்கூறு ரீதியாக மாறுதலை ஏற்படுத்தும் நன்மை படைத்தது.  கல்லீரல் கொழுப்பு- மது அருந்துவதாலும் அல்லது அருந்தாமலும் அதாவது அதிக உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக்குறைபாடுகளிலும் ஏற்படலாம். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கே இது தாக்கும்.குடிகாரர்களில் சுமார் 100 க்கு 70 பேர் இந்த சிரோசிஸ் உபாதையால் சாகிறார்கள்.

மதுபானம் குடிப்பவர்களுக்கு பெருங்குடலில் புண்கள் ஏற்பட்டு ஊட்டசத்து குறைந்து கல்லீரல் கல் போல் கடினமடையும்..உடற்கூறு ரீதியில் கல்லீரலில் உயிர் அணுக்களின் உற்பத்திக்குறையும் அழிவு ஏற்படுவதாலேயே வியாதி வருகிறது.மேக கிரந்தி நோய் {SYPHILIS},தொற்று வியாதிகள் ,பித்தப்பை பாதையில் அடைப்பு ,கணைய நோய் {RICKETS},மலேரியா போன்ற காரணங்களாலும் ,சைவ உணவு உண்பவர்க்கும் இது வர வாய்ப்புள்ளது.  


கல்லீரல் பழுதுபட்டிருப்பதற்கான அறிகுறிகள்:
  • ·         பசியின்மை
  • ·         குமட்டல்
  • ·         வாந்தி
  • ·         தொடர்ந்து உடல் எடை குறைந்து கொண்டே வருதல்              
  • ·         வயிறு உப்புசம்                                            
  • ·         கல்லீரல்,மண்ணீரல்,தொடும் போது விரைப்பாகவும்,வலியுடனும் காணப்படும் ..
  • ·         நாடி வேகமாக  துடிக்கும்.
  • ·         கல்லீரல் நாளங்களில் அதிக இரத்த அழுத்தம் .
  • ·         கண்கள் மஞ்சல் நிறமடைதல்.                              
  • ·         வயிற்றில் நிறைந்த விறைத்த கல்லீரல் பகுதியில் உள்ள எட்டுகால் பூச்சி உணர்வு போன்ற அமைப்புள்ள அசுத்த இரத்த குழாய் வீங்கி பெருத்துவிடுதல்  RASCULAR SPIDERS


                                                                               
சிகிச்சை முறை :

                மஞ்சள்காமாலை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கீழாநெல்லியே .கல்லீரல் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் ஆயுர்வேத ,சித்த மூலிகைகளுக்கு மட்டுமே உண்டு.
வாசா குரூச்யாதி கஷாயம், புனர்நவாதி கஷாயம், ஆரோக்ய வர்தினிவடி  முதலிய மருந்துகள் கல்லீரலின் செயல்பாடுகளை சரிசெய்பவை ஆகும்.


எப்படிப்பட்ட கல்லீரல் நோயாக இருந்தாலும் ஆயுர்வேதத்தில் வர்த்தமான பிப்பலி என்கிற சிகிச்சை முறைகள், புட பாக சுரச சிகிச்சைகள் ,பஞ்ச கர்ம சிகிச்சை முறையில் விரேசன சிகிச்சை முறைகள் போன்ற சிறப்பு சிகிச்சைகள் பல உண்டு .





இரத்தம் அணுக்களை வலுப்பெறச், செய்து, நோயினை வேருடன் அறுத்து புதியதாக  ஆரோக்கியமுடன் உடலை வாழவழி செய்யும் . எங்கள் மருத்துவ மையத்தில் பல ஆண்டுகள் கல்லீரல் கோளாறுகளை சரிசெய்து, சாதனை படைத்து வருகிறது. பக்கவிளைவுகள் கிடையாது  நோயிலிருந்து முழு நிவாரணம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  9042225333
திருநெல்வேலி  9042225999
ராஜபாளையம்  9043336888
சென்னை  9043336000( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


அடுத்த கட்டுரை –மதுப்பழக்கம் இல்லாதவர்க்கு ஏற்படுகிற கல்லீரல் கொழுப்பு –Non Alcoholic Fatty Liver






Post Comment

செவ்வாய், செப்டம்பர் 25, 2012

அசைட்டீஸ் என்னும் உதர நோயில் பயன்படும் -துக்தவடீ Dhughdha vati


அசைட்டீஸ் என்னும் உதர நோயில் பயன்படும் -துக்தவடீ Dhughdha vati
 (refபைஷஜ்யரத்னாவளி - சோதோரோகசிகித்ஸா)

தேவையான மருந்துகள்:

1.            சுத்தி செய்த நாபி – ஷோதித வத்சநாபி                 10 கிராம்
2.            சுத்தி செய்த ஊமத்தன் விதை – ஷோதித தத்தூரபீஜ     10           “

செய்முறை:     

 இவற்றைத் தனித்தனியே சிறிது ஊமத்தன் இலைச் சாற்றில் ஊற வைத்து அறைத்து நுண்ணிய விழுதாக்கி ஊமத்தன் இலைச்சாறு கொண்டே கல்வத்தில் நன்கு அறைத்த சுத்தி செய்த இலிங்கம் (ஷோஷிதஹிங்குள) 10 கிராம் உடன் சேர்த்து எல்லாவற்றையும் ஊமத்தன் இலைச்சாறு (தத்தூர பத்ர ஸ்வரஸ) கொண்டே ஒன்று பட அரைத்துப் பதத்தில் 25 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை பால் அல்லது தேனுடன் தினமும் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 பெருவயிறு (உதர), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்க நோய்கள் (ஸோத ரோக).




தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. மேலே கூறிய எல்லா மருந்துகளையும் ஆயுர்வேத சாஸ்திரங்கள் சொன்ன படி சுத்தம் செய்து முக்கியம் ( சுத்தம் -சோதன முறைகள் பற்றி பின் தனி கட்டுரைகள் எழுதுகிறேன் )
  2. லிவர் சிர்ரோசிஸ் என்னும் கல்லீரல் சுருக்க நோய் மற்றும் அதனால் வரும் அசைட்டீஸ் என்னும் வயிறு வீக்கத்திற்கும் இந்த மருந்தை தக்க கவனத்துடன் பயன் படுத்த நல்ல பலன் கிடைக்கும்
  3. பூனை மீசை ,விஷ நாராயணி போன்ற கிட்னி பெயிலியருக்கு பயன்படும் மருந்துகளின் சூரணங்கள் உடன் மிக மிக குறைந்த அளவு இந்த மருந்தை பயன்படுத்தி வீக்கத்தை குறைக்கலாம் ..கிட்னி பெயியரிலும் மிக மிக கவனத்துடன் கொடுக்கலாம் ..
  4. வீக்கங்களில் நல்ல பலன் அளிக்கும்

Post Comment

வியாழன், ஜூலை 26, 2012

அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodhaya Rasa


அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodahya Rasa
 (ref -பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக        30           “


இவைகளை நன்கு அரைத்துக் கறுத்த கஜ்ஜளி செய்து அத்துடன்,
1.            தாமிரபற்பம் – தாம்பர பஸ்ம      20 கிராம்
2.            அயபற்பம் – லோஹ பஸ்ம       20           “
3.            அப்பிரக பற்பம் – அப்ரக பஸ்ம    50           “

இவைகளைச் சேர்த்தரைத்துப் பின்னர்,


1.            பொடித்துச் சலித்த மிளகு – மரீச்ச                  165 கிராம்
2.            பொரித்துப் பொடித்த பெருங்காயம் – ஹிங்கு        5              “
3.            எலுமிச்சம் பழச்சாறு விட்டரைத்து விழுதாக்கிய
       நாபி – ஷோதித வத்ஸநாபி                      30           “

                                இவைகளைச் சேர்த்து எலுமிச்சம்பழச்சாறு, அத்திப்பட்டைக் கஷாயம் (உதும்பரத்வக் கஷாய), லவங்க கஷாயம் (லவங்க கஷாய) இவைகளை விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.


அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  



காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாக சுரத்தல் (அம்லபித்தம்), ரத்த சோகை (பாண்டு), காமாலை (காமில), கல்லீரல், மண்ணீரல் பெருத்தல் (யக்ருத் ப்லீஹ வ்ருத்தி), ரத்தப் போக்கு (அஸ்ரஸ்ருதி), சூதக சூலை (ஆர்த்தவசூல), பெரும்பாடு (அஸ்ரிக்தர), கருப்பை நோய் (யோனி ரோக)

  •  காய்ச்சலில் சுக்கு, கொத்தமல்லி, மிளகுக்கஷாயத்துடன்  இது வழங்கப்படுகிறது. 

  • பாண்டு, காமாலை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் போன்றவற்றில் திரிகடுகுச் சூர்ணம், அன்னபேதிச் செந்தூரம், கரிசலாங்கண்ணித்தழை ஆகியவர்றுடன் தரப்படுகிறது. 

  • அமுக்கராச் சூரணத்துடன் கலந்து இதனை ரத்தப்போக்கு, சூதக சூலை, பெரும்பாடு, கருப்பைக் கோளாறு போன்றவற்றுக்கு தருவது வழக்கம்.
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ரக்த வஹ  ஸ்ரோதஸ் சார்ந்த நோய்களை குணபடுத்தும் ..\
  2. பெண்களின் அதிக உதிரப்போக்கினால் வரும் அனீமியாவை சரிசெய்யும் ..கருப்பையையும் வலுபடுத்தும் ..
 

Post Comment