ஹோமியோபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹோமியோபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 16, 2023

ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்

 ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்




சோரா - வாதம் சிபிலிஸ் - பித்தம் சைகோசிஸ்- கபம் மையாஸ்மிக் தத்துவம் ஆயுர்வேத திரி தோஷ தத்துவத்துடன பொருந்துகிறது Homoe Medicine Ashoka Q-அசோக மரம் Rawolfia Q - சர்ப்பகந்தா Syzygium Q- நாவல் Homeo puncture Homeo Panchakarma Homeo Nasyam Homeo Vasthi Combination of ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதம் அதிக எளிமையான சீக்கிர பலனை கொடுக்கிறது Earth Element -Silecea மண் தாது உப்பு அதிக வியர்வை நோய்க்கு -Hyperhydrosis நோய்க்கு உதவுகிறது.. 12 Tissue elements 12 தாது உப்புகள் ஹோமியோ பேச் Flower medicine works in all psychiatric complaints Revaluationary R&D of Al Shifa Ayush combines Ayurveda and homeopathic medicine in most of the chronic diseases including life style diseases #ayurhomeo #ayurvedahomeopathy #combineayurvedahomeopathy #organaon #homeopathymixed #usesofcombination #drjawahaira #saleemdr #homopuncture #flowerremediesintamil #12tissueelements #homeocelebrits #tamilhealth #tamildoctor

Post Comment

வெள்ளி, செப்டம்பர் 17, 2021

மருந்தில்லா மருத்துவம் செய்த அற்புதம் | டாக்டர் ஜாவாஹிரா டைரியில் இருந்த...


மருந்தில்லா மருத்துவம் செய்த அற்புதம் டாக்டர் ஜாவாஹிரா டைரியில் இருந்து விளக்கங்கள் மற்றும் feedbacks உத்தர வஸ்தி, ஹிஜாமா , மர்மம் , பி ஆர் பி , ஹோமியோபஞ்சர் இந்த ஐந்து சிகிச்சைகள் பற்றி இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள் .. 1. உத்தர வஸ்தி உத்தர வஸ்தியின் பயன்கள் ஃபெலோபியன் குழாய் அடைப்பு, கருப்பை நார்த்திசுக்கட்டி, கர்ப்பப்பை வாய் அரிப்புகள், எண்டோமெட்ரியோசிஸ், கர்ப்பப்பை வாய் பாலிப், மலட்டுத்தன்மை போன்ற நிலைகளிலும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் உத்திர வஸ்தி சிகிச்சையானது கையாளப்படுகிறது. 2. ஹிஜாமா நபி (ஸல்) அவர்கள் ஹிஜாமா சிறந்த மருந்துகளில் ஒன்று என்று விளக்கினார்: "நீங்களே சிகிச்சை செய்யும் மிகச் சிறந்த மருந்து ஹிஜாமா, அல்லது அது உங்கள் மருந்துகளில் சிறந்த ஒன்று" அல்லது "நீங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த சிகிச்சை ஹிஜாமா. ” [ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-எண்: 5371] 3. மர்மம் - வர்மம் தலைவலி , உடல்வலி , முதுகெலும்பு சீரமைப்பு , மூட்டுகளில் வலி போன்ற பொதுவான வியாதிகள் மர்ம சிகிச்சை மூலம் புத்துயிர் பெறலாம்.இந்த சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை மூலம் வயதானவர் வரை அனைத்து தரப்பினர்க்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.இந்த மருந்தில்லா மருத்துவ சிகிச்சையை அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் பல்வேறு நோய் நிலைகளில் உடனடி வலி நிவாரண சிகிச்சையாக பெற்ற ஆயிரக்கணக்கானோர் துயரம் நீக்கியுள்ளோம். 4. பி ஆர் பி மூட்டு வலிக்கு பி ஆர் பி முடி உதிர்தலுக்கு பி ஆர்‌ பி 5 ஹோமியோபஞ்சர் #Drjawahariasaleem #medicineless #உத்தரவஸ்தி #ஹிஜாமா #மர்மம் #ஹோமியோபஞ்சர் #வர்மம் #prp #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

சனி, ஜூலை 01, 2017

வாழ்வியல் நோய்களில் ஹோமியோபதி மருத்துவத்தின் வெற்றிகரமான பங்கு

வாழ்வியல் நோய்களில் ஹோமியோபதி மருத்துவத்தின் வெற்றிகரமான பங்கு



டாக்டர். G. வர்தினி .,BHMS.,
டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS


Efficacy of Homeo In Life Style Disorders



தொற்றா நோய் கூட்டங்களில் திறன் மிகு ஹோமியோபதி மருத்துவத்தின் சிறந்த பலன்கள்



கடந்த சில வருடங்களாக வாழ்க்கை முறை சீர்குலைவுகள் ஒரு துன்பகரமான வளர்ச்சியில் இருந்து வந்திருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களுடன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே  இதற்கு மூலகாரணம். அதிலும், இன்றைய சூழலில் சரியான விழிப்புணர்வு இல்லாத நிலைமைகளும் இன்னும் மோசமாகிவிட்டது. இதற்கு விழிப்புணர்வு கொடுத்தாலும் அதை போட்டியிட்டு மற்ற செயல்களும் நம்மை நம்பமுடியாமல் ஆக்கிவிட்டன.

அதனால் கிட்டத்தட்ட ஓவ்வொரு நிமிடங்களும் யாரோ ஒருவர் (Life Style Disorder) வாழ்க்கை சீர்குலைவுகளால் பாதிக்கப்படுகின்றனர் ஆரோக்கியமற்ற  மற்றும் இறுக்கமான வாழ்க்கை முறையானது உடல் பருமன் மற்றும் நிரிழிவு நோய் ஆகியவற்றை அதிகரித்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வயதினரும் உடல்பருமன் மற்றும் நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கவலை மற்றும் மன அழத்தம் அதிகரித்து வருகின்றன்.



வாழ்க்கை சீர்குலைவு நோய்கள் (Life Style Disorders) :-

🌸 Alzheimer’s Disease (அல்சைமர் நோய்)

🌸 Stroke (பக்கவாதம்)

🌸 Arteriosclerosis (ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்)

🌸 Hypertension (உயர் இரத்த அழுத்தம் )

🌸 Hypothyroidisn (தைராய்டு)

🌸 Cancer (புற்றுநோய்)

🌸 Cardiac Problems (இதய பிரச்சினைகள்)

🌸 Renal Failure (சிறுநீரக செயலிழப்பு)

🌸 Chronic Liver Problem (நாள்பட்ட கல்லீரல் பிரச்சனை)


இந்த வாழ்நாள் சீர்குலைவுகள், சிகிசையளிக்கப்படவில்லை என்றால், ஒரு மனிதனின் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிடும்.

   
வாழ்க்கை சீர்குலைவு நோய்களின் காரணங்கள் :-

🌸 மன அழுத்தம்

🌸 அறியாமை

🌸   மோசமான உணவுகள்

🌸    உடற்பயிற்ச்சி இல்லா நிலை

🌸    வாழ்க்கை முறை மாற்றம்

🌸    Poor Posture

🌸    சுற்றுசூழல் நிலைமைகள்

🌸     Occupational Disorders

பல வாழ்க்கை முறை சீர்குலைவுகள் நமது தொழில் வாழ்க்கையாக (Occupational Life Style) மாற்றப்படுகின்றது. இப்போது குழந்தைகளும் வெளிப்புற விளையாட்டுகளில் ஆர்வம் குறைந்து வீட்டிலேயே Mobile Phone - ல் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள் இருந்த இடத்தில் துரித உணவுகள் மாறியுள்ளன. இதனால் நீங்கள் கற்பனை செய்ய முடியாத இடத்தில் குழந்தைகள் அதிக பருமனாகவும் , நீரிழிவு நோயுடனும் பிறக்கின்றன.


மன அழுத்தம் மற்றும் பதட்டம் பல வாழ்க்கை சீர்குலைவுகளை துண்டலாம். எனவே, மூல காரணத்த பொறுத்தே ஒரு பயனுள்ள சிகிச்சை பெறலாம்.


ஹோமியோபதியில் ஒரு நோயை, மேலோட்டமாகவோ அல்லது அதனின் பெயர் அடிப்படையில் சிகிச்சையளிக்கபடவில்லை இது நோயாளியை காட்டிலும் நோயாளியின் நோயை குணப்படுத்திவிடும்.


இது ஒரு முழுமையான அணுகுமுறையோடு கையாளும் ஒரு சிகிச்சை. ஒரு குறிப்பிட்ட அறிகுரியைக்கையாளும் சமயத்தில் ஹோமியோபதியில் Miasm கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்த மருந்துகள் இயக்கவியல் மற்றும் ஆற்றல்மயமாக்கல் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இது மருந்துகளின் நச்சு மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை மிகவும் குறைக்கிறது, இதனால் மருந்துகளின் உள்ளார்ந்த குணப்படித்தும் திறன் அதிகரிக்கிறது. இதனால் ஹோமியோபதி மருந்துகள் ஆரோக்கியமாகவும் மற்றும் பக்கவிளைவுகளும் இல்லை.


நீரிழிவு, உயர் இரத்த, தைராய்டு,  மன அழுத்தம் போன்ற நோய்கள் வெற்றிகரமாக ஹோமியோபதியில் சிகிச்சையளிக்கபடுகிறது.



நோய்க்கான சிகிச்சை தவிர ஹோமியோபதியில் நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்கவும் செய்கிறது. ஹோமியோபதியில் நோய்களை பெயர் கொண்டு மட்டும் சரி செய்யாமால் உடல், மனம், மற்றும் உணர்வு ஆகியவற்றையும் சமன் செய்ய உதவுகிறது. இதனால் மன அழுத்தம் தொடர்பான நோய்களையும் நல்ல முறையில் குணமடைய செய்கிறது.



ஹோமியோபதியால் பல அற்புதங்களை செய்ய முடியும். ஒரு மனிதனின் நோயின் ஆணிவேர் வரை குணமடைய செய்வதனால் சிறிது கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். ஹோமியோபதி சிகிச்சையில் பொறுமை வேண்டும். சிறந்த ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை இருந்தால் வாழ்க்கை முறை சீர்குலைவுகளிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.



 சிறந்த ஆயுஷ் –ஹோமியோபதி மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333 ( டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS )
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை –டாக்டர் .G. வர்தினி .,BHMS


Post Comment

மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி ?

மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி ?


டாக்டர். G. வர்தினி .,BHMS.,
டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS 



How To Select Who Is Best Doctor In Homeopathy


இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மருத்துவமனை உள்ளது. அதிலும்  குறிப்பாக ஹோமியோபதி மருத்துவமனை  அதிகம். ஹோமியோபதி   மருத்துவம் என்பது அனைத்து மருத்துவத்தை விடவும் தனி சிறப்பு    வாய்ந்தது. அதனால்  அம்மருத்துவமானது அம்மருத்துவரை அன்றி  பிறரால்   சரிவர பரிந்துரைக்க முடியாது. ஏன்னென்றால் இம்மருந்துகளின் அளவு , வீரியம்,  நேரம் அனைத்தும்  5,1/2  ஆண்டு ஹோமியோபதி   மருத்துவத்தை பயின்ற மருத்துவரால் மட்டுமே முடியும் .


அப்பேற்பட்ட மருத்துவரை தேர்ந்து எடுப்பது எப்படி ?


நாம் ஹோமியோபதி  மருத்துவரிடம்  என்ன எதிர் பார்க்க வேண்டும் :-


ஒரு நோயாளி தன்  பிரச்சனைகளை கூறும் போது நடுவில்  இடையூரு  செய்யாமல் அதை கூர்ந்து கவனிப்பவராக இருத்தல் வேண்டும்.


மேலும்  அம்மருத்துவரின்  கேள்விக்கு  ஆம்,  இல்லை என்று நோயாளி பதில்  கூறக்கூடாது,   அப்படிப்பட்ட கேள்விகளை அவர் கேட்பவராய் இருத்தல்  வேண்டும்.


மேலும் நோயாளி ஏதேனும் சந்தேகம் கேட்டால்,  அந்த  மருத்துவர் கோபத்தையோ,  எரிச்சலையோ  காட்டாமல் பொறுமையாக பதில் அளிக்க வேண்டும்.


நோயாளின் அனைத்து சந்தேகங்களை போக்கவே   ஹோமியோபதியின் கலை என்று நோயாளி உணரும் வண்ணம் இருத்தல் வேண்டும்.




மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவர் கடைபிடிக்க வேண்டியது :-


நல்ல ஹோமியோபதி மருத்துவர் அதிகமான மருந்துகளை பரிந்துரைக்க மாட்டார்.



முதலில் நான் உங்கள் அல்லோபதி மருத்துவத்தை நிறுத்துகிறேன் என்று கூறும் ஹோமியோபதி மருத்துவரை நம்ப வேண்டாம்.



ஹோமியோபதி சிகிச்சையில் முன்னேட்றம் ஏற்பட்ட பிறகே அல்லோபதி மருந்துகளின் அளவை குறைக்கவும் என்று கூறும்  மருத்துவரே  உண்மையான ஹோமியோபதி மருத்துவர்.



நீங்கள் உங்கள் மருத்துவரிடம் உரையாடும்போது அவர் மற்றவர்   ஆலோசனை கேட்டாலும்,  பிற தொலைபேசி அழைப்புகளை  எடுத்தாலும் நீங்கள் அவரை தவிர்க்கவும்.



நல்ல ஹோமியோபதி மருத்துவர்,  உங்களுக்கு மருந்து   கொடுத்தவுடன்,  மூன்று நாட்களுக்கு பின் உங்களிடம் மாற்றம் உள்ளதோ என்று விசாரிப்பார்.



மேலும்,  ஹோமியோபதி சிகிச்சையானது யாது?  எவ்வாறு  குணமடைய   செய்யும் என்றும்,  ஹோமியோபதி மீண்டும்  எப்படி திரும்ப எடுக்க  வேண்டும் என்று கூறுவார்.



ஒரு குறிப்பிட்ட (Single Dose )  மருந்தை  Dry  Dose ஆக  மாதம்  ஒரு  முறை மட்டும் எடுத்தால் போதும் என்று மூன்று  மாதமும் ஒரு  முறை மட்டும் அதன் Dose- யை  மாற்றாமல் பொருத்துத்திருந்து   பார்ப்போம். என்று  செய்வது Hahnemann   கூறிய முறை அல்ல.



ஹோமியோபதி மருத்துவர் மாதம் ஒரு முறையாவது உங்கள் வருகைக்காக காத்திருப்பார்,  உங்களின் அறிகுறிகளை அறிய ஆவல்  கொடுத்தவராய் இருப்பார். மேலும்,  வாரம் ஒரு முறையாவது  தொலைபேசி மூலம் உங்களின் அறிகுறிகளை கண்காணிப்பார்,  அதன்  மூலம் உங்களின் மருந்தின் அளவும் மற்றும் வீரியமும் அதிகம்  செய்ய வேண்டுமா அல்ல குறைக்க வேண்டுமா என்று முடிவெடுப்பார்.



  உங்களின் முன்னேற்றத்தை உங்கள் மருத்துவரிடம் கூறும் போது இது  நான்  அறிந்ததே என்று கூறும் மருத்துவரை தவிர்க்கவும்.



அவசர காலத்தில்,  உங்கள் தொலைபேசியோ அல்லது மின்னஞ்சல்களுக்கும் எந்த ஒரு பதிலும் தராத மருத்துவரை தவிர்க்கவும்.



நீங்கள் படித்த கல்லூரியோ,  அல்லது  உங்களின் டிகிரியோ  அவர்களை மருத்துவர் என்று சொன்னாலும்,  அவர்கள் நோயாளிடத்து பழகும் விதத்தை பொருத்து மருத்துவர் என்று ஆவார். மேலும், அவர்கள் 20 வருடத்திற்கு முன்பே மருத்துவ படிப்பை முடித்திருந்தாலும், அவர்களை Experience  Doctor  என்றை அறிவார். ஆனால், நாம் அவர்களிடம் எதிர் பார்க்க வேண்டியது, அவர்கள் அந்த  20 ஆண்டு காலமும் மருத்துவத்தில் ஈடுபட்டாரா அல்லது தொழில்  ரீதியாக பயன்படுத்தினாரா என்பதை உண்மையில்  Experience  Doctor  யார் எனில், அவர்களில் சிகிக்சை செய்த நோயாளியை கேளுங்கள் விளைவு என்ன ? அவர்களை சந்திப்பது எளிதா ? அவர் உங்களை   எப்படி நடத்தினார் ? அவர்  ஒரு  மனித நேயமிக்கவரா ? நோயாளியின்   துன்பத்தை அவரால் அறிய  முடியுமா ? என்று கேட்டு தெரிந்துக்  கொள்ளுங்கள்.



எவர் ஒருவர் உங்கள் மருந்தை வாரம் வாரம்  மாற்றுகிறார்ளோ ,அல்லது அதிகமான மருந்துகளை  கொடுக்கிறார்களோ, அப்பேற்பட்ட   ஹோமியோபதி மருத்துவரை தவிர்க்க வேண்டும்.



நீங்கள் உங்களின் நாள்பட்ட பிரச்சனைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும்போது,  உங்களுக்கு கடுமையான பிரச்சனை வருகிறது என்றால்,  அதற்கு மருந்து தராமல் உங்களின் மருந்தை அதை சரி செய்து விடும் என்று கூறும் மருத்துவரை நம்ப வேண்டாம். அதற்கு காரணம் உங்களின் ஹோமியோபதி மருத்துவர் உங்களுக்கு தகுந்த காரணத்தை அளிப்பார்.



உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மருந்து மட்டும் போதும் என்று கூறும் ஹோமியோபதி மருத்துவரை நம்ப வேண்டாம்.



ஒரு வருடத்திற்குப் பிறகு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல், மீண்டும் உங்களை பரிசோதித்து பழைய மருந்தையே தரும், பிடிவாத  நம்பிக்கையில் இருக்கும் ஹோமியோபதி மருத்துவரை நம்ப வேண்டாம்.



  ஒரு நல்ல ஹோமியோபதி, உங்களின் அனைத்து குறைகளையும் கண்டறிந்து ஒரு சிறப்பான மருந்தை தருவார். நோயின் விளக்கமும் மருந்தின் செயல்பாடும் புரியும்வண்ணம் எடுத்துரைப்பர். மேலும், அனைத்து கேள்விக்கும் பொறுமையுடன் பதில் அளிப்பர்.



எந்த ஒரு ஹோமியோபதி மருத்துவர் இரண்டு மருந்துகளை தந்து, ஒன்று காலையிலும், மற்றொன்று இரவிலும் எடுத்துகொள்ள சொல்கிறாரோ அவரை தவிர்க்கவும்.


சிறந்த ஹோமியோபதி மருத்துவர் என்பவர் மிகவும் இயல்பகவும் , மற்றும் உங்களின் உணர்சிக்கு மதிப்பும் மரியாதையும் தருபவராக இருப்பார். மேலும், பொறுமைசாலியாகவும், ஆலோசனை நேரத்திலும் நீங்கள் பேசும்போது எதிர்பேச்சு பேசாமல், முன்கூட்டிய உங்கள் மருந்தை தேர்வு செய்ய மாட்டார். சின்ன விஷயங்களாக இருந்தாலும் பொறுமையுடனும் ஆழ்ந்து கவனிப்பர். வேறு விதமாக கூறினால், அவர் ஹோமியோபதியையும் மக்களையும் மிகவும் நேசிப்பர். அவர் அவர் ஏழை, பணக்காரர் என்று பாராமல் தன் பொக்கிஷமான நேரத்தை நோயாளிகளுக்காக செலவழிப்பார்.



மேலும், எவர் ஒருவர் நோயாளியை, நோயாளியாக பார்க்காமல் சக மனிதராக பார்க்கிறோ அவரே உண்மையான ஹோமியோபதி மருத்துவர்.



சிறந்த ஆயுஷ் –ஹோமியோபதி மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333 ( டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS )
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை –டாக்டர் .G. வர்தினி .,BHMS


Post Comment

வியாழன், மார்ச் 09, 2017

ஹோமியோபதி இலவச மருத்துவ ஆலோசனை -இலவச மருந்துகளுக்கு அணுகவும்

ஹோமியோபதி மருத்துவம் 




நோயாளியின் வைட்டல் போர்ஸ் என்னும் உயிர் ஆற்றலை அதிகரிக்கும் மிக சிறந்து மருத்துவம் –நோயை வராமல் தடுக்கம் சக்தி வாய்ந்தது .
எளிமையானது
வேகமானது
அறிவியல் பூர்வமானது
அதிக பொருட் செலவுகள் இல்லாதது
இனிப்பானது.
சுலபமானது ..
மிக சிறந்தது .
லேட்டஸ்ட் ஆனது ..ஆனால் லேட் ஆகாதது ..
மருந்தில் எக்ஸ்பைரியே இல்லாதது .
மருந்தை கையாள்வதில் மிக எளிமையானது ..
மனதின் கூறுகளே எந்த நோய்க்கும் அடிப்படை என்று நம்பக்கூடியது.
இன்றைய வேகமான உலகத்தில் அனைவருக்கும் தேவை படுவது
பக்க விளைவுகளே இல்லாதது ..

ஹோமியோபதி மருத்துவத்தின் வெற்றி –நோயை கணிப்பதிலும் –மருந்தை,வீர்யத்தை தேர்வு செய்தலிலும் –மனக் குறிகளை ஆராய்வதிலும் உள்ளது ..ஹோமியோபதி மருத்துவம் –மருத்துவத்திற்கு மேல ஓர் அற்புத கலை .

இலவச மருத்துவ ஆலோசனைக்கு அணுகவும்
டாக்டர் வர்தினி BHMS-ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் ஆயுஷ் மருத்துவமனை –சென்னை –கீழ் கட்டளை –முன்பதிவுக்கு செல் 90 4333 6000
டாக்டர் ஜவாஹிரா சலீம் BHMS.,DHM.,PG Dip Acu.  அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –கடையநல்லூர் –செல் 90 4222 5333
வயதான எளியவர் ,ஆதரவு அற்றோர் ,மாற்று திறனாளிகள், ஏழைகள் அனைவருக்கும் மருந்தும் இலவசம்.
























இலவச மருத்துவ ஆலோசனைக்கு அணுகவும்
டாக்டர் வர்தினி BHMS-ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் ஆயுஷ் மருத்துவமனை –சென்னை –கீழ் கட்டளை –முன்பதிவுக்கு செல் 90 4333 6000
டாக்டர் ஜவாஹிரா சலீம் BHMS.,DHM.,PG Dip Acu.  அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –கடையநல்லூர் –செல் 90 4222 5333
வயதான எளியவர் ,ஆதரவு அற்றோர் ,மாற்று திறனாளிகள், ஏழைகள் அனைவருக்கும் மருந்தும் இலவசம்.

Post Comment