கற்பூரவள்ளி இலையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்
கற்பூரவள்ளியின் பயன்கள்.
Internal and External Different Usage methods of Karpooravalli leaves ..
Usage & Using Methods of Karpooravalli in Tamil
#கற்பூரவள்ளி #கற்பூரவள்ளிபயன்கள் #karpooravalliuses #karpuravallidiffernetusingmethods #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth
#subscribeourchannelalshifayush
சளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், ஜூலை 29, 2021
வியாழன், மே 20, 2021
நாட்பட்ட நெஞ்சு சளியை, இருமலை போக்கும் நாம் இன்று மறந்த மூலிகை | ராஸ்னா ...
ஆயுர்வேத மூலிகைகளில்
மிக முக்கியமான ஒன்று இது
இந்த மூலிகை சேராத சளி
மருந்துகளே இல்லை
வீட்டு மருத்துவதில்
முக்கியமான ஒன்று
சித்த மறுத்துவர்களுக்கு
பிடித்த மூலிகைகளில் ஒன்று
இந்த கஷ்டமான சூழலில்
நாம் மருந்த மூலிகை இதுவும் முக்கியமானது
#மூலிகைமருத்துவம் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் # எளியவீட்டுமருத்துவம் # அல்ஷிபாஆயுஷ் # drsaleeem #drsaleeemayush #bestayurvedadrintamilnadu #bestdr #curesure4u #healthtips, #alshifaayushforall #alshifaayushhospital #URI #LRI #coughhomeremedy #coughayurveda
Post Comment
வெள்ளி, ஜனவரி 11, 2013
அழற்சி ஏற்படக்கூடிய நோய்களிலும் -குழந்தை நோய்களிலும் மிக சிறந்த மருந்து -கோரோசனாதி குடிகா -GOROCHANADHI GUTIKA
அழற்சி ஏற்படக்கூடிய நோய்களிலும் -குழந்தை நோய்களிலும் மிக சிறந்த மருந்து -கோரோசனாதி குடிகா -GOROCHANADHI GUTIKA
(ref-ஸர்வரோக சிகித்ஸா ரத்னம் – ஸன்னிபாத சிகித்ஸா ப்ரகரணம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. கலைமான் கொம்பு பற்பம் – ஸ்ருங்க பஸ்ம 10 கிராம்
2. ருத்ராக்ஷம் – ருத்ராக்ஷ 10 “
3. சந்தனம் – சந்தன 10 “
4. வசம்பு – வச்சா 10 “
5. கடல் தேங்காய் – அக்லாரி 10 “
6. விளாமிச்சவேர் – உசீர 10 “
7. கோரைக்கிழங்கு – முஸ்தா 10 “
8. பூனாகம் (சுத்தி செய்து உலர்த்தியது) – பூனாக சுத்தி 10 “
9. யானைக்கொம்பு – ஹஸ்தி தந்த 10 “
10. வெள்ளாட்டுக் கொம்பு – அஜ ஸ்ருங்க 10 “
11. மான் கொம்பு (வெள்ளை) – ம்ருக ஸ்ருங்க 10 “
12. மான் கொம்பு (கருப்பு) – க்ருஷ்ண ம்ருக ஸ்ருங்க 10 “
13. காண்டாமிருகக் கொம்பு – காண்டாம்ருக ஸ்ருங்க 10 “
14. நிலவேம்பு – பூநிம்ப 10 “
15. அஞ்சனக்கல் – அஞ்ஜன 10 “
16. சீரகம் – ஜீரக 10 “
17. தும்பைப்பூ – துரோண புஷ்பி 10 “
18. பருத்திக்கொட்டை பருப்பு – ரக்தகார்ப்பாஸ பீஜ 10 “
19. நாயுருவி வேர் – அபமார்கமூல 10 “
20. பீனாரிக்கட்டை – பூதிகந்தா 10 “
21. சுக்கு – சுந்தீ 10 “
22. மிளகு – மரீச்ச 10 “
23. திப்பிலி – பிப்பலீ 10 “
24. முன்னை – அக்னிமாந்தமூல 10 “
25. மல்லி வேர் – மாலதி 10 “
26. பாடக் கிழங்கு – பாட்டா 10 “
27. காக்கட்டான் வேர் – அபராஜிதமூல 10 “
28. அவுரிவேர் – நீலமூல 10 “
29. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 10 “
30. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 10 “
31. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் 10 “
32. ஜாதிக்காய் – ஜாதீபல 10 “
33. மாசிக்காய் – மாயக்கு 10 “
34. சதகுப்பை – ஸதபுஷ்ப 10 “
35. ஆசாளி – அதஸிபீஜ 10 “
36. நீர்க் கோரைக் கிழங்கு – முஸ்தா 10 “
37. கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக 10 “
இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தைக் கல்வத்திலிட்டுச் சிறிது இஞ்சிச்சாறு (ஆர்த்ரக ஸ்வரஸ) விட்டரைத்துப் பின்னர் அத்துடன்
2. அம்பர் (பொடித்தது) – அம்பர் 10 “
3. வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) – டங்கண பஸ்ம 10 “
4. பூண்டு (தோல் நீக்கிய பருப்பு) லசுன 10 “
5. தங்கபற்பம் – ஸ்வர்ண பஸ்ம 10 “
6. பவழபற்பம் – ப்ரவாள பஸ்ம 10 “
இவைகளையும் சேர்த்து இஞ்சிச்சாறு கொண்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத் தக்க பதத்தில் அத்துடன் பொடித்துச் சலித்த பச்சைக் கற்பூரம் (கற்பூர) 10 கிராம், இளஞ்சூட்டில் உருக்கி வடிக்கட்டிய புனுகு (கந்தமார்ஜர வீர்ய) 10 கிராம் இவற்றையும் சேர்த்து நன்கு கலங்க அரைத்து 50 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்.
குறிப்பு:
நாக என்பதற்கும், கரேளகம் என்பதற்கும் முறையே பூனாகம், மல்லிவேர் என்பதாகப் பொருள் கொண்டு அவைகளை உபயோகிப்பது ஸம்பிரதாயம்.
நாக பஸ்மமும், கரளையம் என்ற சரக்குமே அவற்றின் பொருள் எனவும் சிலர் கூறுவர்.
அளவும் அனுபானமும்:
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது தாய்ப்பாலுடன் இரண்டு முதல் நான்கு வேளைகள் வரை கொடுக்கவும்
சிலர் வெற்றிலைக் காம்புச்சாறு, இஞ்சிச்சாறு, சுரசா பத்ர சாறு அல்லது தசமூல கடுத்ரயாதி கஷாயம் ஆகியவற்றுடனும் தருவதுண்டு.
தீரும் நோய்கள்:
காய்ச்சல் (ஜ்வர), ஜன்னி (ஸ்வாஸநக ஜ்வர), இருமல் (இருமல்), இழைப்பு (ஸ்வாஸ), தொண்டை நோய்கள் (காந்த ரோக), மூச்சை (மூர்ச்சா), வலிப்பு மற்றும் மூளைக் கோளாறுகள்.
காய்ச்சல் (ஜ்வர), ஜன்னி (ஸ்வாஸநக ஜ்வர), இருமல் (இருமல்), இழைப்பு (ஸ்வாஸ), தொண்டை நோய்கள் (காந்த ரோக), மூச்சை (மூர்ச்சா), வலிப்பு மற்றும் மூளைக் கோளாறுகள்.
குழந்தைகளுக்கு உண்டாகும் மேற்கூறிய வியாதிகளில் விசேஷமாக உபயோகிக்கப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- சித்த மருத்துவத்தில் உள்ள கோரோசனை மாத்திரையும் -ஆயுர்வேத மருத்துவ கோரோசனை மாத்திரையும் செய்முறைகளில் பல வித்தியாசங்கள் உள்ளது ..வெகு விரைவில் சித்த மருத்துவத்தில் சொல்கிற கோரோசனை மாத்திரை செய்யும் முறைகள் பற்றி சொல்கிறேன்
- சாஸ்திரங்கள் சொல்வது போல் இப்போது எந்த கம்பெனியும் மான் கொம்பு பஸ்மம் ,யானை தந்த பஸ்மம் ,புனுகு ,அம்பர் எதையும் சேர்க்க இயலாது எபன்து தான் உண்மை ..
- விதி முறைகளில் சிலவற்றை தளர்த்தி மற்ற கிடைக்க கூடிய பொருகளை கொண்டு செய்யப்படும் கோரோசனை மாத்திரைகளும் வேலை செய்கிறது என்பது தான் உண்மை ..(என்னுடைய எனது தனிப்பட்ட கருத்து -இந்த ஒரேயொரு மருத்துக்கு மட்டும் தான் பொருத்தும் )
- குழந்தைகளின் நாள்பட்ட சளி தொல்லைகளுக்கும் ,குழந்தைகளின் பல பிரச்சனைகளுக்கும் நான் கொடுக்கிற மருந்து இது ( கோரோசனை மெழுகு )..
- சோரியாசிஸ் என்ற நோய்க்கு இந்த மருந்தில் நல்ல தீர்வு உள்ளது என்பது எனது ஆசான் சொன்ன தனிப்பட்ட விஷயம் ..தோல் வியாதிகளுக்கும் இதை பெரியவர் முதல் சிறியவர் வரை பயன்படுத்தி நல்ல குணம் காணுகிறேன் .
Post Comment
திங்கள், டிசம்பர் 05, 2011
எளிதாக தயாரிக்க முடியக்கூடிய -வலி ,சளிக்கான தைலம் - கற்பூராதி தைலம்
எளிதாக தயாரிக்க முடியக்கூடிய -வலி ,சளிக்கான தைலம் -
கற்பூராதி தைலம்
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. ஓமம் – அஜமோதா 3.200 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 12.800 லிட்டர்
இவைகளைக்
கொதிக்கவைத்து 3.200 லிட்டராகக்
குறுக்கி வடிகட்டி அத்துடன் தேங்காய் எண்ணெய் (நாரிகேள தைல) 800 கிராம் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில்
இறக்கி 200 கிராம் கற்பூரம்
(கற்பூர) பொடித்துப்போட்ட பாத்திரத்தில் வடிகட்டவும். எண்ணெய்ச் சூட்டில் கற்பூரம்
நன்கு கரையுமாறு கலக்கி பத்திரப்படுத்தவும். கற்பூரம் ஆவியாகிப் போய்விடாமல் தக்க
எச்சரிக்கையுடன் செயல்படவும்.
பயன்படுத்தும்
முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
கபக்காய்ச்சல் (கபஜ்வரம்), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), ஆமவாதம் (ஆமவாத), வீக்கம், வலி.
மார்பு, விலா, முதுகு மற்றும் பாதிக்கப்பட்ட அவயவங்களில் இதைத் தடவித் தேய்த்து ஒத்தடம்
கொடுக்கவும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- பச்சை கற்பூரம் பயன்படுத்திதான் பெரும்பாலும் இந்த தைலம்
தயாரிக்கபடுகிறது ..செயற்கை மூலபொருள் கொண்டும் கற்பூரம் தயாரிக்கபடுவதால்
சற்று கவனம் தேவை ..கற்பூர மரத்திலிருந்து பதங்கமாதல் முறை படி தான்
கற்பூரம் தயாரிக்க பட வேண்டும் ..ஆனால் அவ்வளவு கற்பூர மரக்கட்டை
இருக்கிறதா என்பது சந்தேகம் தான் ..கற்பூரம் பற்றி மேலும் படிக்க இங்கே லிங்க் செய்யவும்
- நெஞ்சு சளிக்கு-நெஞ்சின் மேலே தேய்த்தால் சளி கரையும்
- வலிகளை போக்குவதில் இந்த தைலம் சிறந்த மருந்து
- பல போலி கம்பெனிகள் -தேங்காய் எண்ணையில் சூட வில்லைகளை போட்டு -கற்பூர தைலம் என்றும் விற்பனை செய்கின்றனர் ..இந்த முறையில் நாம் சில சமயங்களில் எளிதாக கற்பூர தைலம் போன்று தயாரிக்கலாம் ..ஆனால் அது கற்பூர தைலம் மாதிரி தான் ..
- வலிகள் உள்ள இடத்தில் கற்பூர தைலம் வீக்கத்தையும் குறைக்கும் ..
- பச்சை கற்பூரம் பயன்படுத்திதான் பெரும்பாலும் இந்த தைலம் தயாரிக்கபடுகிறது ..செயற்கை மூலபொருள் கொண்டும் கற்பூரம் தயாரிக்கபடுவதால் சற்று கவனம் தேவை ..கற்பூர மரத்திலிருந்து பதங்கமாதல் முறை படி தான் கற்பூரம் தயாரிக்க பட வேண்டும் ..ஆனால் அவ்வளவு கற்பூர மரக்கட்டை இருக்கிறதா என்பது சந்தேகம் தான் ..
- நெஞ்சு சளிக்கு-நெஞ்சின் மேலே தேய்த்தால் சளி கரையும்
- வலிகளை போக்குவதில் இந்த தைலம் சிறந்த மருந்து
- பல போலி கம்பெனிகள் -தேங்காய் எண்ணையில் சூட வில்லைகளை போட்டு -கற்பூர தைலம் என்றும் விற்பனை செய்கின்றனர் ..இந்த முறையில் நாம் சில சமயங்களில் எளிதாக கற்பூர தைலம் போன்று தயாரிக்கலாம் ..ஆனால் அது கற்பூர தைலம் மாதிரி தான் ..
- வலிகள் உள்ள இடத்தில் கற்பூர தைலம் வீக்கத்தையும் குறைக்கும் ..
Post Comment
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







