எளிதாக தயாரிக்க முடியக்கூடிய -வலி ,சளிக்கான தைலம் -
கற்பூராதி தைலம்
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. ஓமம் – அஜமோதா 3.200 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 12.800 லிட்டர்
இவைகளைக்
கொதிக்கவைத்து 3.200 லிட்டராகக்
குறுக்கி வடிகட்டி அத்துடன் தேங்காய் எண்ணெய் (நாரிகேள தைல) 800 கிராம் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில்
இறக்கி 200 கிராம் கற்பூரம்
(கற்பூர) பொடித்துப்போட்ட பாத்திரத்தில் வடிகட்டவும். எண்ணெய்ச் சூட்டில் கற்பூரம்
நன்கு கரையுமாறு கலக்கி பத்திரப்படுத்தவும். கற்பூரம் ஆவியாகிப் போய்விடாமல் தக்க
எச்சரிக்கையுடன் செயல்படவும்.
பயன்படுத்தும்
முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
கபக்காய்ச்சல் (கபஜ்வரம்), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), ஆமவாதம் (ஆமவாத), வீக்கம், வலி.
மார்பு, விலா, முதுகு மற்றும் பாதிக்கப்பட்ட அவயவங்களில் இதைத் தடவித் தேய்த்து ஒத்தடம்
கொடுக்கவும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- பச்சை கற்பூரம் பயன்படுத்திதான் பெரும்பாலும் இந்த தைலம்
தயாரிக்கபடுகிறது ..செயற்கை மூலபொருள் கொண்டும் கற்பூரம் தயாரிக்கபடுவதால்
சற்று கவனம் தேவை ..கற்பூர மரத்திலிருந்து பதங்கமாதல் முறை படி தான்
கற்பூரம் தயாரிக்க பட வேண்டும் ..ஆனால் அவ்வளவு கற்பூர மரக்கட்டை
இருக்கிறதா என்பது சந்தேகம் தான் ..கற்பூரம் பற்றி மேலும் படிக்க இங்கே லிங்க் செய்யவும்
- நெஞ்சு சளிக்கு-நெஞ்சின் மேலே தேய்த்தால் சளி கரையும்
- வலிகளை போக்குவதில் இந்த தைலம் சிறந்த மருந்து
- பல போலி கம்பெனிகள் -தேங்காய் எண்ணையில் சூட வில்லைகளை போட்டு -கற்பூர தைலம் என்றும் விற்பனை செய்கின்றனர் ..இந்த முறையில் நாம் சில சமயங்களில் எளிதாக கற்பூர தைலம் போன்று தயாரிக்கலாம் ..ஆனால் அது கற்பூர தைலம் மாதிரி தான் ..
- வலிகள் உள்ள இடத்தில் கற்பூர தைலம் வீக்கத்தையும் குறைக்கும் ..
- பச்சை கற்பூரம் பயன்படுத்திதான் பெரும்பாலும் இந்த தைலம் தயாரிக்கபடுகிறது ..செயற்கை மூலபொருள் கொண்டும் கற்பூரம் தயாரிக்கபடுவதால் சற்று கவனம் தேவை ..கற்பூர மரத்திலிருந்து பதங்கமாதல் முறை படி தான் கற்பூரம் தயாரிக்க பட வேண்டும் ..ஆனால் அவ்வளவு கற்பூர மரக்கட்டை இருக்கிறதா என்பது சந்தேகம் தான் ..
- நெஞ்சு சளிக்கு-நெஞ்சின் மேலே தேய்த்தால் சளி கரையும்
- வலிகளை போக்குவதில் இந்த தைலம் சிறந்த மருந்து
- பல போலி கம்பெனிகள் -தேங்காய் எண்ணையில் சூட வில்லைகளை போட்டு -கற்பூர தைலம் என்றும் விற்பனை செய்கின்றனர் ..இந்த முறையில் நாம் சில சமயங்களில் எளிதாக கற்பூர தைலம் போன்று தயாரிக்கலாம் ..ஆனால் அது கற்பூர தைலம் மாதிரி தான் ..
- வலிகள் உள்ள இடத்தில் கற்பூர தைலம் வீக்கத்தையும் குறைக்கும் ..
4 comments:
அநேகமாக எல்லோருக்கும் அடிக்கடி உபயோகபடும் அற்புத மருந்து
நட்புடன் ,
கோவை சக்தி
நல்ல பகிர்வு நன்றி சார்.
அழகாக சொல்லி இருக்கீங்க சகோ ,
நல்ல மருந்து ,எச்சரிக்கையும் அருமை சகோ
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
@M.Rநன்றி நண்பர்களே ..
கருத்துரையிடுக