ஞாயிறு, டிசம்பர் 04, 2011

குன்மத்திற்கு சிறந்து மருந்து -ஹிங்குத்ரிகுண தைலம்


குன்மத்திற்கு சிறந்து மருந்து -ஹிங்குத்ரிகுண தைலம்
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் குல்ம சிகித்ஸா)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            உள்ளிப்பூண்டு லசுன 2.700 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல        10.800 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 2.700 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டி அத்துடன் விளக்கெண்ணெய் (எரண்ட தைல) 900 கிராம் சேர்த்து அதில்

1.            பொரித்துப் பொடித்த பெருங்காயம் ஹிங்கு        100 கிராம்
2.            இந்துப்பு (பொடித்தது) ஸைந்தவலவண      300         “

இவைகளைக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும். 
குறிப்பு:     

தைலத்திற்கு சமன் பூண்டுடன் 16 பங்கு நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ¼ பாகமாகக் குறுக்கி வடிகட்டி உபயோகிப்பதும் உண்டு.
                 
கல்கத்தை மத்யம பாகத்தில் எடுத்து லேஹ்யமாக உட்கொள்வதும் உண்டு.

                 
சிலர் மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டாமல் கல்கத்துடன் இதை உபயோகிக்கின்றனர்.
               
மற்றும் சிலர் பூண்டுப் பருப்புகளைச் சிறிது வேகவிட்டு மாசு நீக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பதத்தில் பெருங்காயம், இந்துப்பு இவைகளைச் சேர்த்து லேஹ்யமாகச் செய்து உபயோகிக்கின்றனர்.பயன்படுத்தும் முறை:      
 உட்கொள்ளவும், வெளி உபயோகத்திற்கும்.

அளவு:          

 5 முதல் 25 கிராம் வரை பால் அல்லது வெந்நீருடன் பேதி உண்டாக்க உட்கொள்ளப்படுகிறது.தீரும் நோய்கள்:  குன்மம் (குல்ம), பெருவயிறு (மஹோதரம்), குடலிறக்கம் (ஆந்த்ரவ்ருத்தி), அண்ட விருத்தி, வயிற்றுவலி (உதர சூல) போன்ற வயிற்று நோய்கள் (உதர ரோக), கீல் வாயு (சந்திவாத), நாட்பட்ட மலச்சிக்கல் (புராண மலபந்த).

                தைலத்தைக் காது வலியில் (கர்ணருக்) சொட்டு மருந்தாகப் (பிந்து) பயன்படுத்தலாம். இதனைக் குழந்தைகளுக்குக் குறைந்த அளவில் பயன்படுத்தலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. குன்மங்கள் பல இருந்தாலும் பொதுவாக குன்மம் என்று சொல்லபடுவது -வயிற்றில் எந்த பகுதியிலும் ஏற்படக்கூடிய வாயு பந்து போல் அடைத்து முன்னும் செல்லாமல் கீழும் செல்லாமல் புடைத்து ,எந்த வயிறு ஸ்கேனிலும்  கண்டுபிடிக்க முடியாமல் தாங்க முடியாத வலியை ஏற்படுத்த கூடிய விஷயம் இந்த குன்மம் ,இதை ஆயுர்வேதத்தில் குல்மம் என்று சொல்லுவோம் ..இந்த வாயு குன்மதிர்க்கு சித்த மருந்துகளில் பயன்படும் குன்மகுடாரி மெழுகுடன் இந்த தைலம் சிறந்த நிவாரணம் தரும் \
  2. வயிற்று பொருமலுக்கு இந்த மருந்தை -செரிமானம் தெரிந்து கொடுக்க சரியாகும்
  3. விளக்கெண்ணை இந்த மருந்தில் சேர்வதால் மலம் இளக்கியாக வேலை செய்யும்
  4. காயம் ,பூண்டு இவைகள் சேர்வதால் இதை வாத ஆவரணம் என்னும் கபம் அடைத்த வாயுவுக்கும் கொடுக்கலாம்
  5. மாதகணக்கில் பெண்களுக்கு தீட்டு வராதவர்களுக்கு -இந்த மருந்தை பட்டு கருப்பு என்னும் சித்த மருந்துக்கு அனுபானமாக பயன்படுத்தலாம்
  6. குழந்தைகளுக்கு வயிற்றின் மேல் தடவினாலே நல்ல பலன் தெரியும்

Post Comment

1 comments:

கருத்துரையிடுக