ஞாயிறு, டிசம்பர் 04, 2011

சொறி சிரங்குக்கு நல்ல கந்தகத் தைலம்


சொறி சிரங்குக்கு நல்ல கந்தகத் தைலம்
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மிளகு மரீச்ச             150 கிராம்
2.            மஞ்சள் ஹரீத்ரா          50           “

இவைகளை நன்கு பொடித்து 6.000 கிலோ கிராம் தேங்காய் எண்ணெய்யில் கலந்து அத்துடன் சுத்தி செய்யாத கந்தகம் (கந்தகம்) 300 கிராம் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

                பாகத்தை நிர்ணயிப்பது சிறிது சிரமமாகையால் இதில் சற்று அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்கள் லேசாகச் சூடுசெய்து கந்தகம் உருகி எண்ணெய்யுடன் ஒன்றுபடக்கலந்து கருஞ்சிவப்பான நிறம் வரும்போது இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    மிளகு, மஞ்சள் இவைகளைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துச் சேர்த்துக் காய்ச்சுவதும் உண்டு

பயன்படுத்தும் முறை:       

வெளி உபயோகத்திற்கு மட்டும்.


தீரும் நோய்கள்:  

சொறி (கண்டு), சிறங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) மற்றும் வாதம், கபம் சம்பந்தமான தோல் நோய்கள் (வாத, கபஜ குஷ்ட).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. நாள்பட்ட தோல் நோய்க்கு சிறந்தது
  2. சொறி -சிரங்குக்கு நல்லது


Post Comment

0 comments:

கருத்துரையிடுக