புதன், டிசம்பர் 07, 2011

மூட்டுக்கு பசை உண்டாக்கும் அற்புத மருந்து -க்ஷீரபலாதைலம் (ஆவர்த்தித்தது)-KSHEERA BALA 101


மூட்டுக்கு பசை உண்டாக்கும் அற்புத மருந்து -க்ஷீரபலாதைலம் (ஆவர்த்தித்தது)-KSHEERA BALA 101

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

                சாதாரண க்ஷீரபலா தைலம் செய்த முறைப்படியே குறிப்பிட்ட அளவு நல்லெண்ணெய் திரும்பத்திரும்ப மற்ற சரக்குகளை அதிகமாக எடுத்துச் சேர்த்து மீண்டும், மீண்டும் காய்ச்சி மத்யமபாகத்தில் வடிகட்டி ஆவர்த்தித்த க்ஷீரபலா தைலம்
தயார் செய்யப்படுகிறது.

                மாறாத ஒரே அளவு எண்ணெய்யில், ஒவ்வொரு ஆவர்த்தனத்திற்கும் ஏற்ப பலாமூலம், பால் இவைகளின் பங்குகள் மட்டுமே கூடுதலாக அமைந்து சிறந்ததோர் நோய் தீக்கும் குணத்தை அளிக்கின்றன.ஆகையால் துளி அளவுகளில் உபயோகிக்கப்பட்டும் சிறந்த பலன்களை இவைகள் அளிக்கின்றன.

                அதாவது நல்லெண்ணெய்யின் அளவு மட்டும் மாறாது, மற்ற சரக்குகளின் அளவுமட்டும் ஆவர்த்தனத்திற்கு ஆவர்த்தனம் அதிகமாகும். எனவே அதிகமான தடவைகள் ஆவர்த்தனம் செய்யப்பட்ட தைலம் மிகவும் வீரியமுள்ளதாகிறது.

                இந்த விதமான ஆவர்த்தனம் 3 முதல் 101 தடவைகள் வரை செய்யப்படுகின்றன. ஆவர்த்தனம் அதிகமாக அதிகமாக அவற்றின் குணமும் அதிகரிக்கிறது.

அளவு:         
 (பலவித ஆவர்த்தனங்கள்)

7 முறை ஆவர்த்தித்தக்ஷீரபலா தைலம்: 10 முதல் 30 துளிகள் வரை பால், ஜீரகக் கஷாயம் அல்லது வேறு பொருத்தமான கஷாய வகைகளுடன் இரு வேளைகள் சாப்பாட்டிற்கு முன்.

28 முறை ஆவர்த்தித்த க்ஷீரபலா தைலம்:    7 முறை ஆவர்த்தித்த க்ஷீரபலா தைலத்தை போலவே பயன்படுத்த வேண்டும். இது முதலில் குறிப்பிட்டதைவிடச் சிறப்பானது.

101 முறை ஆவர்த்தித்த க்ஷீரபலா தைலம்:   5 முதல் 10 துளிகள் வரை பால் முதலியவைகளுடன் ஒரு வேளை முதல் இரு வேளைகள் வரை.

தீரும் நோய்கள்: 


 முகவாதம் (அர்திதம்), தோள் பட்டை வாதம் (அப்பாஹுக), கீல்வாயு (சந்திவாத) ஆமவாதம் (ஆமவாத) போன்ற பலவிதமான வாத நோய்கள் (வாத ரோக), நரம்புத்தளர்ச்சி (நாடீதௌர்பல்ய), இளைப்பு (கார்ஸ்ய / க்ஷய), பலவீனம் (தௌர்பல்ய), தூக்கமின்மை (அநித்ரா), சூர்யாவர்த்தம் போன்ற தலைவலிகள் (சிரோரூஜா), ரத்தக்கொதிப்பு, சரீரத்தை இது நன்கு போஷிக்கிறது.

                நரம்புமண்டலம் கடுமையாகச் செயலிழந்த நிலையிலும், தூக்கமில்லா நிலையிலும் தலைக்குத் தேய்க்கப்படுகிறது. நசிய மிடவும் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆங்கில மருத்துவர் -மூட்டு தேய்மானம் -ஒன்றுமே செய்ய இயலாது என்று கூறும் இடத்தில் எல்லாம் இந்த மருந்து சவால் விடும் (தொடர்ந்து ஆறு மாதமாவது சாப்பிடணும்)
  2. குளுகோஸ் அமைன் சல்பேட் என்னும் -குருத்தெலும்பு வளர்ச்சிக்கு உதவும் மருந்தை விட பல நூறு மடங்கு நன்றாக கார்டிலேஜ் என்னும் குருதெலும்பை வளர்த்து சாதனை புரியசெய்யும்
  3. முதுகு தண்டு வட டிஸ்க் பிரச்சனைக்கும் இந்த மருந்து சூப்பரோ சூப்பர் மருந்து
  4. வாத நோய்களில் இந்த மருந்து கண் கண்ட மருந்து
  5. உடலை தேற்றும் ,பலம் தரும் ,வன்மை புகட்டும் ..
  6. கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் -தக்க ஆலோசனை படி இந்த மருந்தை பயன் படுத்துவது நல்லது ..
  7. க்ஷீர பலா நூறு -வாத நோய் சிகிச்சையில் பயன்படுத்தபடுவது -நூற்றுக்கு நூறு
  8. நரம்பு மண்டல நோய்க்கு சிறந்த மருந்து

Post Comment

1 comments:

கருத்துரையிடுக