சனி, டிசம்பர் 03, 2011

தோல் நோய் தீர -எரிச்சல் மாறிட -தூர்வாதி தைலம்


தோல் நோய் தீர -எரிச்சல் மாறிட -தூர்வாதி தைலம்
                                                                                                               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அருகம்புல்சாறு தூர்வா ஸ்வரஸ      3.200 கிலோ கிராம்
2.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல  0.800                    
3.            தண்ணீர் ஜல                   3.200  லிட்டர்

இவைகளை ஒன்றாகக் கலந்து அத்துடன் அதிமதுரம் (யஷ்டீ) 50 கிராம் அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

  
பயன்படுத்தும் முறை: 
           
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 


 உடலெரிச்சல் (தாஹ), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), பித்தம் (பித்தாதிக்ய) சீர்கேடடைந்த தோல் நோய்கள். புண்களை வெகு விரைவில் ஆற்றி அந்தப் பகுதிகளில் திசுக்கள் தோன்றி விரைந்து வளர்வதை ஊக்குவிக்கிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. அருகம் தைலம் என்றும் இதை அழைக்கலாம்
  2. தோல் நோய்களை ,அரிப்பை சரி செய்கிறது
  3. தோலில் வயதாவதால் ஏற்படும் சுருக்கம் வராமல் இருக்க -இந்த தைலத்தை தேய்த்து குளிக்கலாம்
  4. சித்த மருந்துகளில் மத்தன் தைலத்தோடு சேர்த்து போட ஆறாபுண்ணும் ஆறும்

Post Comment

1 comments:

Unknown சொன்னது…

good

கருத்துரையிடுக