திங்கள், டிசம்பர் 12, 2011

வலிகளை குணபடுத்தும் சிறந்த தைலம் -நாராயண தைலம்-Naryana thailam


வலிகளை குணபடுத்தும் சிறந்த தைலம் -நாராயண தைலம்-Naryana thailam
 (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அமுக்கராக் கிழங்கு அஸ்வகந்தா      500 கிராம்
2.            சித்தாமுட்டிவேர் பலாமூல           500        
3.            வில்வேர் பில்வமூல                 500        
4.            பாதிரிவேர் பாடாலா            500        
5.            முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ            500        
6.            கண்டங்கத்திரி கண்டகாரீ             500        
7.            நெருஞ்சில் கோக்ஷுர           500        
8.            பேராமுட்டி அதிபலா            500        
9.            வேப்பம்பட்டை நிம்பத்வக்            500        
10.          பெருவாகை வேர் ஸ்யோனாக        500        
11.          மூக்கரட்டை புனர்னவ மூல                500        
12.          அம்மையார் கூந்தல் ப்ரஸாரிணி      500        
13.          முன்னைவேர் அக்னிமாந்த           500        
14.          தண்ணீர் ஜல                   51.200 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்

1.        நல்லெண்ணெய் திலதைல     3.200 கிலோ கிராம்
2.        தண்ணீர் விட்டான் கிழங்குச்சாறு ஸதாவரீஸ்வரஸ 3.200                    
3.          பசுவின் பால் கோக்ஷீர                    12.800                  

இவைகளைச் சேர்த்து அதில்

1.            கோஷ்டம் கோஷ்ட                  100 கிராம்
2.            ஏலக்காய் ஏலா                 100        
3.            சந்தனம் சந்தன                100        
4.            பெருங்குரும்பை மூர்வா              100        
5.            வசம்பு வச்சா                        100        
6.            சடாமாஞ்சில் ஜடமாம்ஸீ             100        
7.            இந்துப்பு ஸைந்தவலவண            100        
8.            அமுக்கராக் கிழங்கு அஸ்வகந்தா      100        
9.            சித்தாமுட்டி பலாமூல                100        
10.          சித்தரத்தை ராஸ்னா                 100        
11.          சதகுப்பை ஸதபுஷ்ப                 100        
12.          தேவதாரு தேவதாரு                 100        
13.          காட்டுளுந்து வேர் மாஷபர்ணீ         100        
14.          காட்டுப்பயறு வேர் முட்கபர்ணீ        100        
15.          ஓரிலை ப்ரிஸ்னிபார்ணீ              100        
16.          மூவிலை சாலிபர்ணீ                 100        
17.          கிரந்திதகரம் தகர                    100        

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

பயன்படுத்தும் முறை:      

 உட்கொள்ளவும், வெளி உபயோகத்திற்கும் பயனாகிறது.

தீரும் நோய்கள்:  


முடத்தனம் (பாங்கு), தலையைப் பற்றிய வாதம் (சிரோகாதவாத), கழுத்துப்பிடிப்பு (அ) செயலிழத்தல் (மன்யாஸ்தம்ப), தாடைப்பிடிப்பு (அ) செயலிழத்தல் (ஹனுஸ்தம்ப) போன்ற பலவிதமான வாத நோய்கள் (வாத ரோக), பல்நோய்கள் (தந்த ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. அற்புத வலி நிவாரணி
 2. தேய்த்தவுடன் வலி  குறையும் ,வலி மேலும் வராமல் தடுக்கும் ,எலும்புக்கு சதைக்கு வலு கொடுக்கும்
 3. மூட்டு வலிக்கு சிறந்த தைலம் என்று என்னை கேட்டால் -இந்த மருந்தை தான் மிக சிறந்தது என்பேன்
 4. மகா நாராயண தைலம் என்ற வகை இந்த தைலத்தை விட சிறப்பாக வேலை செய்யும்
 5. கடைகளில் கிடக்கும் அந்த பாம் இந்த பாம் என்று தேய்க்காமல் இந்த தைலத்தை தேய்த்து வந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்
 6. நாரயண தைலம் -பிடிப்பு ,உளுக்கு.சதை பிறழ்தல் ,சதை காயம் ,நரம்பு அடி படுதல் -வாத நோய்களில் சிறந்த பங்காற்றுகிறது
 1. அற்புத வலி நிவாரணி
 2. தேய்த்தவுடன் வலி  குறையும் ,வலி மேலும் வராமல் தடுக்கும் ,எலும்புக்கு சதைக்கு வலு கொடுக்கும்
 3. மூட்டு வலிக்கு சிறந்த தைலம் என்று என்னை கேட்டால் -இந்த மருந்தை தான் மிக சிறந்தது என்பேன்
 4. மகா நாராயண தைலம் என்ற வகை இந்த தைலத்தை விட சிறப்பாக வேலை செய்யும்
 5. கடைகளில் கிடக்கும் அந்த பாம் இந்த பாம் என்று தேய்க்காமல் இந்த தைலத்தை தேய்த்து வந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்
 6. நாரயண தைலம் -பிடிப்பு ,உளுக்கு.சதை பிறழ்தல் ,சதை காயம் ,நரம்பு அடி படுதல் -வாத நோய்களில் சிறந்த பங்காற்றுகிறது

Post Comment

1 comments:

கருத்துரையிடுக