தோல் நோய்களை சரி செய்யும் -தினேசவல்யாதி
தைலம்
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. சுருள்பட்டை – தினேசவல்லீ 100 கிராம்
2. மஞ்சள் – ஹரீத்ரா 100 “
3. எருக்கன்வேர் – அர்க்கமூல 100 “
4. சரக்கொன்னைப்பட்டை – ஆரக்வதத்வக் 100 “
5. ஆலம்பட்டை – வாதத்வக் 100 “
6. அரசம்பட்டை – அஸ்வத்தாத்வக் 100 “
7. அத்திப்பட்டை – உதும்பரத்வக் 100 “
8. இத்திப்பட்டை – ப்லக்க்ஷத்வக் 100 “
9. தண்ணீர் – ஜல 12.800 லிட்டர்
இவைகளைக் கொதிக்க
வைத்து 3.200 லிட்டர் ஆகக்
குறுக்கி வடிகட்டி அதில் நல்லெண்ணெய் (திலாதைல) 800 கிராம் சேர்த்து அத்துடன் மேற்கூறிய கஷாய
சாமான்களையே வகைக்கு 25 கிராம் வீதம்
எடுத்துரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி வடிகட்டவும்.
குறிப்பு:
ஸம்பிரதாயத்தில்
400 கிராம் நல்லெண்ணெய்யும்,
400 கிராம் தேங்காய்
எண்ணெய்யும், கல்கத்திற்கு
வகைக்கு 12.500 கிராம் வீதம்
சரக்குகளும் சேர்க்கப்படுகின்றன.
பயன்படுத்தும்
முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
தோல்நோய்கள் (சர்மரோக), நிறமாற்றம் (சரீர வர்ணபேத), சொறி (கண்டு), சிரங்கு (பாமா).
தெரிந்து கொள்ளவேண்டியவை
- கரப்பான் போன்ற தோல் வியாதிக்கும் மற்றும் உள்ள தோல் நோய்க்கும் சிறந்த மருந்து
- தோலில் ஏற்படக்கூடிய நிற மாற்றங்களை சரி செய்யும் குணம் உள்ளது
- உடலில் ஏற்படக்கூடிய அரிப்புகளுக்கு தேய்த்து குளிக்கும் மருந்தாக பயன்படுத்தலாம்
- பரவக்கூட்டிய சொறி சிரங்குகளை சரி செய்யும்
- மஞ்சள் ,ஆலமரம் ,அரசமரம் போன்றவைகளை உள்ளதால் -சிறந்த கிருமி நாசினியாக வெளிபிரயோகத்துக்கு பயன்படுத்தலாம்
- கப பித்த தோல் நோய்க்கு சிறந்த மருந்து
2 comments:
உபயோக தகவல் சகோ ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
பரவக்கூட்டிய சொறி சிரங்குகளை சரி செய்யும்
நல்ல மருந்து நண்பரே !
நட்புடன் ,
கோவை சக்தி
கருத்துரையிடுக