புதன், நவம்பர் 30, 2011

வலிகளை போக்கும் - தான்வந்த்ர தைலம்


வலிகளை போக்கும் - தான்வந்த்ர தைலம்
 (ஸர்வரோக சிகித்ஸாரத்னம் - வாதப்ரகரண)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            குருந்தொட்டிவேர் பலாமூல           1.200 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல             19.200                   “

                இவைகளைக்  கொதிக்கவைத்து 4.800 லிட்டராகக் குறுக்கி வடிகட்டவும்.

1.            சம்பா கோதுமை யவ                15.385 கிராம்
2.            இலந்தைக்கொட்டை பாதரி                 15.385        “ 
3.            கொள்ளு குலத்தா                         15.385        “ 
4.            வில்வவேர் பில்வமூல                    15.385        “ 
5.            முன்னை வேர் அக்னிமாந்த                 15.385        “ 
6.            பெருவாகைவேர் ஸ்யோனாக               15.385        “ 
7.            குமிழ்வேர் காஷ்மரீ                       15.385        “ 
8.            பாதிரிவேர் பாட்டால                     15.385        “ 
9.            ஓரிலை ப்ரிஸ்னிபார்ணீ                    15.385        “ 
10.          மூவிலை சாலீபர்ணீ                       15.385        “ 
11.          கண்டங்கத்திரி கண்டகாரீ                  15.385        “ 
12.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                 15.385        “ 
13.          நெருஞ்சில் கோக்ஷூர                     15.385        “ 
14.          தண்ணீர் ஜல                        3.200 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 0.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டவும்.

இனி மேற் கூறிய

1.            குருந்தொட்டிக் கஷாயம்                     4.800 லிட்டர் (6 பங்கு)
2.            சம்பா கோதுமை முதலானவைகளின் கஷாயம்0.800 லிட்டர்(1பங்கு)

இவைகளுடன்
3.            பசுவின் பால் கோக்ஷீர                     4.800 கிராம் (6 பங்கு)
4.            நல்லெண்ணெய் திலாதைல                 0.800       “      (1 பங்கு)

                சேர்த்து அத்துடன்

1.            மேதா மேதா                              6.500 கிராம்
2.            மஹாமேதா மஹாமேதா                  6.500       “
3.            தேவதாரு தேவதாரு                      6.500       “
4.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                6.500       “
5.            காகோலீ காகோலீ                         6.500       “
6.            க்ஷீரகாகோலீ க்ஷீரகாகோலீ           6.500       “
7.            சந்தனம் சந்தன                      6.500       “
8.            நன்னாரி ஸாரிவா                         6.500       “
9.            கோஷ்டம் கோஷ்ட                        6.500       “
10.          கிரந்திதகரம் தகரம்                        6.500       “
11.          ஜீவகம் ஜீவக                        6.500       “
12.          ரிஷபகம் ரிஷபக                          6.500       “
13.          இந்துப்பு ஸைந்தவலவண                  6.500       “
14.          வெந்தயம் மேதிக                         6.500       “
15.          கோமூத்திரசிலாஜது (சுத்தி செய்தது)
                                                – கோமூத்ரசிலாஜித் (சுத்தி)  6.500       “
16.          வசம்பு வச்சா                             6.500       “
17.          அகில்கட்டை அகரு                       6.500       “
18.          மூக்கிரட்டை புனர்னவ                     6.500       “
19.          அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தா            6.500       “
20.          தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ        6.500       “
21.          கீரைப்பாலை ஜீவந்தி                 6.500       “
22.          அதிமதுரம் யஷ்டீ                         6.500       “
23.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ           6.500       “
24.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ         6.500       “
25.          நெல்லிமுள்ளி ஆமலகீ                    6.500       “
26.          நரும்பசை -                                6.500       “
27.          சதகுப்பை சதபுஷ்ப                        6.500       “
28.          காட்டுளுந்துவேர் மாஷபர்ணீ               6.500       “
29.          காட்டுப்பயறுவேர் முட்கபர்ணீ              6.500       “
30.          ஏலக்காய் ஏலா                      6.500       “
31.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்             6.500       “
32.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி              6.500       “

                                இவைகளை கோமூத்திர சிலாஜது நீங்கலாக அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி கோமூத்திர சிலாஜதுவைப் பாகம் வருவதற்கு சிறிது நேரம் முன்பாகவே நன்கு தண்ணீரில் கரைத்து ஊற்றி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    
 1.            இதே கல்க, கஷாயங்களைக் கொண்டு ஆவர்த்தனம் எனப்படும் பலதடவைகள் மடக்கி மடக்கிக் காய்ச்சப்படும் செய்முறைக்கு உட்படுத்தப்படும்போது இது ஆவர்தித தான்வந்த்ர தைலம் எனப்படும்.

                               
2.            ஸ்நேக திரவியமாக 800 மி.லி. நல்லெண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், நெய் ஆகியவற்றை சம அளவாக மொத்தம் 800 மி.லி அளவுக்கு எடுத்து இதே கல்க கஷாய சரக்குகளுடன் காய்ச்சும்போது இதற்கு த்ரிவ்ருத் தான்வந்த்ர தைலஎன்று பெயர் பெருகிறது.

                                 
3.            இதற்கு டலாதைலஎன்றொரு பெயருமுண்டு.


பயன்படுத்தும் முறை:    
  10 முதல் 60 சொட்டுகள் வரை சூடான பாலுடன் உள்ளுக்குக் கொடுக்கவும்.(தான்வந்தரம் ஆவர்த்தி -உள்ளுக்கு பயன்படுத்துவது நல்லது )

                 
நஸ்யம், பஸ்தி, தாரா, அப்யங்கம் போன்ற உள் மற்றும் வெளி உபயோகங்களுக்குப் பயன்படுகிறது.

வெளிப்ரயோகமாகவும் பயனபடுத்தலாம்


               
தீரும் நோய்கள்:  
பாரிசவாயு (பக்ஷவாத), முகவாதம் (அர்தித), முற்றுடல் வலி (சர்வாங்கவாத), நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய) போன்ற வாதநோய்கள் (வாதரோக), இளைப்பு எனும் தாதுக்ஷயம், உரஃக்ஷதம் எனும் ரத்தம் துப்புதல், யோனி நோய்கள் (யோனிரோக), பிரஸவத்திற்கு பின்வரும் நோய்கள் (சூதிகா ரோக) ஆகியன.




 தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. தான்வன்தரம் தைலம் -பொதுவாக எல்லாவிதாமான வலிகளுக்கு வெளிபிரயோகமாக பயன்படுத்த படுகிறது
  2. ஆயுர்வேதத்தின் முக்கிய விஷயமான -பஞ்சகர்மாவில் -இந்த தைலம் பெரும்பான்மையாக -வஸ்தி,பிழிச்சல் .தாரை ,அபயங்க மாசாஜ் போன்றவற்றில் பயன்படுத்தபடுகிறது
  3. முக்கியமாக வாத வலிகளை போக்கும் ,உடலுக்கு தெம்பை அளிக்கும்
  4. பலஹீனத்தை போக்கும் -உடலுக்கு ஆற்றலை தரும்
  5. கேரளாவில் இந்த தைலத்தை -பிரசவத்திற்கு பின் வயிறு பகுதியில் தேய்த்து குளிப்பார்கள் -அதனால் -பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படுகிற கோட்டை -அதாவது ஸ்ட்ரெச் மார்க்கை நன்றாக குறைக்கும் ,தளந்த வயிறை இறுக செய்யவும் செய்யும் என்பது உண்மை ..சிலர் பிரசவத்திற்கு முன் -கடைசி இரண்டு -மூன்று மாதங்கள் -வயிறில் மிதமாக தேய்ப்பதும் உண்டு
  6. மிக முக்கியமான மருந்துக்கு தான் தான்வன்தரம் என்று பெயர் வைப்பார்கள்
  7. இந்த மருந்திலே -கோமூத்திர சிலாஜித்தை பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் -பெரும்பானையான மருந்து கம்பெனிகள் -கோமூத்திர சிலாஜிதுக்கு பதில் கற்பூர சிலாஜிதை பயன்படுத்துகிறார்கள் .

Post Comment

5 comments:

M.R சொன்னது…

அருமையான தகவல் கொண்ட பதிவு சகோ

ஓய்வாக இருக்கும் பொழுது தங்கள் தளம் வந்து முழுதும் வாசிக்க வேண்டும்

இன்று முதல் தங்கள் தளம் தொடர்கிறேன் சகோ

மச்சவல்லவன் சொன்னது…

நல்ல பல்வேறு பயனுள்ள மருந்துகள் பற்றி அறிய முடிகிறது வாழ்த்துக்கள் சார்.

curesure Mohamad சொன்னது…

@M.Rநன்றி நண்பர்களே

sakthi சொன்னது…

''கேரளாவில் இந்த தைலத்தை -பிரசவத்திற்கு பின் வயிறு பகுதியில் தேய்த்து குளிப்பார்கள் -அதனால் -பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படுகிற கோட்டை -அதாவது ஸ்ட்ரெச் மார்க்கை நன்றாக குறைக்கும் ,தளந்த வயிறை இறுக செய்யவும் செய்யும் என்பது உண்மை ..சிலர் பிரசவத்திற்கு முன் -கடைசி இரண்டு -மூன்று மாதங்கள் -வயிறில் மிதமாக தேய்ப்பதும் உண்டு''''''

ஸ்ட்ரெச் மார்க்கை குறைக்க தளந்த வயிறை இறுக செய்ய அருமையான மருந்து கூறி உள்ளீர்கள் நண்பரே
அனைவரும் பயன்படுத்தி பின் பெறலாம் .

அன்புடன் ,
கோவை சக்தி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான கருத்துக்கள். தங்கள் என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி நண்பரே! தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."


"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"


"மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?"

கருத்துரையிடுக