புதன், நவம்பர் 02, 2011

வாய் ,நாக்கு ,பல் சார்ந்த நோய்களுக்கு அரிமேதாதி தைலம்


வாய் ,நாக்கு ,பல் சார்ந்த நோய்களுக்கு அரிமேதாதி தைலம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - முகரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கருவேலம்பட்டை (பச்சையாக வெட்டி எடுத்தது) –    அரிமேதாத்வக்    5.600 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                                   12.800 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆகக்குறுக்கி வடிகட்டி அத்துடன் 1.600 கிலோ கிராம் நல்லெண்ணெய் (திலதைல) சேர்த்து அதில்,

1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்ட                       12.500 கிராம்
2.            பச்சோத்திப்பட்டை லோத்ராத்வக்           12.500       “
3.            அதிமதுரம் யஷ்டீ                         12.500       “
4.            கருவேலம்பட்டை அரிமேதா               12.500       “
5.            கருங்காலி கதிர                           12.500       “
6.            குமிழ்வேர் காஷ்மரீ                       12.500       “
7.            கொம்பரக்கு லாக்ஷா                     12.500       “
8.            ஆலம்பட்டை வாதத்வக்                   12.500       “
9.            கோரைக்கிழங்கு முஸ்தா                  12.500       “
10.          சிற்றேலம் ஏலா                           12.500       “
11.          கற்பூரம் கற்பூர                           12.500       “
12.          அகில் கட்டை அகரு                      12.500       “
13.          பதிமுகம் பத்மக                          12.500       “
14.          இலவங்கம் லவங்க                       12.500       “
15.          தக்கோலம் தக்கோல                     12.500       “
16.          ஜாதிக்காய் ஜாதீபல                       12.500       “
17.          செஞ்சந்தனம் ரக்தசந்தன                   12.500       “
18.          காவிக்கல் கைரிக                         12.500       “
19.          இலவங்கப்பட்டை லவங்கபத்ரி             12.500       “
20.          சிறுநாகப்பூ நாககேஸர                     12.500       “
21.          காட்டாத்திப்பூ தாதகீ                    12.500       “ 


                இவைகளைக் கற்பூரம் நீங்கலாக அரைத்துக் கல்கமாகக் கலந்து காய்ச்சி மத்தியம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். கற்பூரத்தை எண்ணெய் வடிகட்டும் பாத்திரத்தில் பொடித்துப் போட்டு வடிகட்டும் எண்ணெய்ச் சூட்டிலேயே கரைத்து விடவும்.


              
  பயன்படுத்தும் முறை:       

கண்டூஷம், கவளக்கிரகம் என்ற முறைப்படி வாய்க் கொப்பளிக்க உபயோகிக்கவும். நஸ்ய, சிரோதாரண முறைப்படியும் உபயோகிக்கலாம்.

                
 தீரும் நோய்கள்:  





பல் கூசுதல் (தந்தஹர்ஷ), பல்லாட்டம் 
(தந்தசலன), குழி விழுந்த பற்கள் (க்ருமிதந்த), பற்களின் மேற்பூச்சு (Enamel) சிதைவு, பல்லிலிருந்து சீழும் ரத்தமும் வடிதல் (பூதிதந்த), வாய் துர்நாற்றம் (முகதௌர்கந்த) போன்ற வாய் நோய்கள் (முகரோக), பல்நோய்கள் (தந்தரோக), ஈறு நோய்கள் (தந்தார்வேஷ்த ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. இந்த அரிமேத தைலம் வைத்து வாய் கொப்பளிக்க ,வாயில் வெகு நேரம் வைத்திருந்து -ஆயில் புல்லிங் அதாவது ஆயுர்வேதத்தில் கவளம்,கண்டூஷம் என்பார்கள் (வாய் கொப்பளிக்க ,வாயில் வெகு நேரம் வைத்திருப்பது )செய்ய -வாய் துர்நாற்றம் ,வாய்ப்புண் ,நாக்கில் புண் ,பல்லில் உள்ள கூச்சம் ,பல் நடுக்கம் ,பல் வலி ஆகியவை போய் போய்விடும் ..
  2. வெறும் அந்த நல்லெண்ணெய் இந்த நல்லெண்ணை -ஆயில் புல்லிங் செய்வதை விட இந்த அரிமேத தைலம் வைத்து ஆயில் புல்லிங் செய்வது நல்லது
  3. இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் இந்த ஆயில் புல்லிங் செய்தி வந்தபின்பு நம்மவர்களும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்த ஆயில் புல்லிங் ஒரு holistic treatment என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவத்தினால் நாள்பட்ட நோய்கள்கூடக் கட்டுப்படுகிறது என்பது அனுபவ உண்மை. கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், அது இந்த ஆயில் புல்லிங் தான்.  ஆனால் இது நவீன காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையல்ல. நமது யோகிகளால் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட "கவளம்" என்ற மருத்துவமுறை.  மூலிகைகளினால் காய்ச்சப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு வாய்க்கொப்பளிப்பதற்கு "கவளம்"என்று பெயர். இந்தக் கவளம் நோயின் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்பட்டது.

    ஸ்நேகன கவளம்: இது வாதத்தைத் தணிப்பது.
    சமன கவளம் : பித்தத்தைத் தணிப்பது.
    சோதன கவளம்: கபத்தைத் தணிப்பது.
    ரோபண கவளம்: வாய்ப்புண் மாற்றுவது.

    ஸ்னேகன கவளம் என்பது எண்ணெய்யைக் கொண்டோ, எள்ளை அரைத்துக் காய்ச்சியத் தண்ணீரைக் கொண்டோ வாய்க்கொப்பளிப்பது. வாத நோய்களுக்கும், குறிப்பாக பல் நோய்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும். அரிமேதாதி தைலத்தினால் செய்யப்படும் கவளம் பல் நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    சமன கவளம் என்பது கசப்பு, துவர்ப்பு, இனிப்பு,சுவைகள் சேர்ந்த மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயங்களைக் கொண்டும், குளிர்ச்சி தரக்கூடிய மூலிகைச் சாறைக்கொண்டும் வாய்க்கொப்பளிக்கும் முறை. தேன் கலந்த திரிபலா கஷாயம் இதற்கு எடுத்துக்காட்டு. மன நோய்களுக்கு இது சிறந்தத மருந்து.

    சோதன கவளம் என்பது காரம், புளிப்பு போன்ற சுவைகளையுடைய கஷாயங்களால் செய்யப்படுகிறது. இதனால் சுவை அறியும் திறன் கூடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயன்படும். இஞ்சிக் கஷாயத்துடன் தேன் சேர்த்து சோதன கவளம் செய்யலாம்.

    ரோபண கவளம் அதிமதுரக் கஷாயத்தால் செய்யப்படுவது. இது வாயில் வரக்கூடிய கேன்சரைக்கூட குணமாக்கும் என்ற மருத்துவச் செய்திகளைக் உள்ளது என்பதை அறிந்தால் ஆச்யர்யமடையாமல் நம்மால் இருக்க முடியாது

    இந்த ஆயில்புல்லிங் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.  இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!

    இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம். இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.

    சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது. ஒரு மனிதனுக்கு உமிழ் நீர் ஒழுங்காகச் சுரந்து, கட்டிப்படாமல் நீர்மத்தன்மையுடன் காணப்பட்டாலே ஆரோக்கியம் தானாக வந்துவிடும். "கோதடர்ந்த உமிழ்நீரை முறிய வைத்தால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே" என்பது அஹஸ்தியர் வாக்கு. .பாதி ஜீரணம் உமிழ் நீருடன் கலந்து, மென்று சாப்பிடுவதிலேயே முடிந்து விடுகிறது.உமீழ்நீர்ச்சுரப்பிகளை ,ஆயில்புல்லிங் நன்றாகச் சுரக்க வைக்கிறது

Post Comment

3 comments:

வானவன் யோகி சொன்னது…

வாக்கு.மூக்கு,நாக்கு,நோக்கு முதலியவை மிகச் சிறப்பாகச் செயல்புரிய மிகச் சிறப்பான ஒருபெரும் இடுகை...

ஆயுர்வேதத்தின் ஒரு சிறப்பை அறிந்த மருத்துவரால் வழ்ங்கப் பெற்ற அரிய விடயம்.

எம் போன்ற வாசகர்களுக்கு இது ஒரு கொடை என்றால் மிகையில்லை.

தாங்கள் மென்மேலும் நலம்,வளம்,புகழ் பெற எல்லம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்......

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகிதங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே ..ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதை தான் ஆயுர்வேதம் வேல் என்ற கருவேலமரம் அடங்கிய அறிமேத தைலத்தை சொல்லியிருக்கிறது ..

sakthi சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி நண்பரே ,
வானவன் யோகி நீண்ட நாளுக்கு பின் விஜயம் செய்துள்ளார் தொடர்ந்து வாங்க நண்பரே
நட்புடன்,
கோவை சக்தி

கருத்துரையிடுக