மசாஜ் தைலங்களில் ராஜா -பலா அஸ்வகந்தாதி தைலம்
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. குருந்தொட்டிவேர் – பலாமூல 270 கிராம்
2. அமுக்கிராக் கிழங்கு – அஸ்வகந்தா 270 “
3. கொம்பரக்கு – லாக்ஷா 270 “
(தனியே துணியில்
மூட்டைகட்டி இட்டது)
4. தண்ணீர் – ஜல 12.800 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டி அத்துடன்
1. நல்லெண்ணெய் – திலதைல 800 கிராம்
2. தயிர் தெளிவு – ததிமஸ்து 3.200 கிலோ கிராம்
சேர்த்து அதில்
1. சித்தரத்தை – ராஸ்னா 12.500 கிராம்
2. சந்தனம் – சந்தன 12.500 “
3. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா 12.500 “
4. அருகம்புல் – தூர்வா 12.500 “
5. அதிமதுரம் – யஷ்டீ 12.500 “
6. கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ 12.500 “
7. நன்னாரி – ஸாரிவா 12.500 “
8. விளாமிச்சவேர் – உஸீர 12.500 “
9. கோரைக்கிழங்கு – முஸ்தா 12.500 “
10. கோஷ்டம் – கோஷ்ட 12.500 “
11. அகில்கட்டை – அகரு 12.500 “
12. தேவதாரு – தேவதாரு 12.500 “
13. மஞ்சள் – ஹரீத்ரா 12.500 “
14. ஆம்பல் கிழங்கு – உத்பல கந்த 12.500 “
15. அரேணுகம் – அரேணுக 12.500 “
16. சதகுப்பை – ஸதபுஷ்ப 12.500 “
17. தாமரைக்கேஸரம் – பத்மகேஸர 12.500 “
இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக்
காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.
குறிப்பு:
(1) சம்பிரதாயத்தில் குருந்தொட்டி வேரையும், அமுக்கிராக் கிழங்கையும் முறைப்படி கஷாயம்
செய்தும், கொம்பரக்கிலிருந்து
பாண்டகஷாய முறைப்படி லாக்ஷா ரஸம் தயாரித்தும் உபயோகப்படுத்தப்படுகிறது.
(2)
யோகரத்னாகரம்
ஜ்வரப்ரகரணத்தில் கூறியுள்ள அச்வ கந்தாதிதைலம் சற்றேரக்குறைய இது போன்றதே. ஆனால்
அங்கு கஷாய சாமான்கள் வகைக்கு 800 கிராம் எனக்
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
(3)
இதற்கு “பலாஸ்வகந்தலாக்ஷாதி தைல” என்றொரு பெயருமுண்டு.
உபயோகிக்கும்
முறையும், அளவும்:
வெளி உபயோகத்திற்கும், உட்கொள்வதற்கும், உள்ளுக்கு 1 முதல் 4 மி.லிட்டர் வரை சூடான பாலுடன் 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
பல விதமான வாத நோய்கள் (வாத ரோக), காய்ச்சல் (ஜ்வர), பைத்தியம் (உன்மாத), பலவீனம் (அ) க்ஷயம் (க்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), இருமல் (காஸ).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- இந்த தைலம் -வலிகளை குறைக்கவும் ,எலும்பு சதை அமைப்புகளுக்கு வலு சேர்க்கவும் பயன்படுகிறது
- உடலுக்கு இந்த எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் உடல் வலி போவதுடன் ,உடல் ஆற்றல் பெருகும்
- எண்ணெய் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் எண்ணைகளில் அரக்கு தைலம் சிறந்து ,லாக்ஷா என்னும் அரக்கும் சேரக்கூடிய தைலமாக இந்த தைலங்கள் விளங்குவதால் எண்ணெய் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் தைலங்களில் இந்த பலா அஸ்வகந்தா தைலமே ..செல்லமாக மசாஜ் தைலங்களில் ராஜா என்று அழைக்கலாம் ..
- ஆற்றல் சேரும் ,என்றும் இளமையாக இருக்கலாம் ,தோலில் சுருக்கங்கள் வர விடாது ,மூட்டுகளுக்கு பலம் தரும் ..
3 comments:
இந்த தைலத்தை எல்லா வயதினரும் பயண்படுத்தலாமா சார்.
பயன்படுத்தலாம்
இதனால் தலை சுற்றல் நீங்குமா ?
கருத்துரையிடுக