செவ்வாய், அக்டோபர் 28, 2014

ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை -சென்னையில் நவம்பர் 2 முதல் ஆரம்பம்.

இனிதே ஆரம்பம் ..

நவம்பர் இரண்டு முதல் (02/11/2014-ஞாயிற்றுக்கிழமை முதல் நமது முதல் கிளை சென்னையில் துவங்க உள்ளது ..

துவக்க விழா அழைப்பிதழ் இதோ உங்களுக்காகநமது கிளையை மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் துவக்கி வைக்கிறார் ,எனது மானசீக குரு வைத்ய உஸ்மான் அலி அவர்கள் தலைமை ஏற்கிறார்கள் ,சித்த மருத்துவத்தை  வளர்ப்பதையே உயிர் நாடியாக கொண்டு அள்ளும் பகலும் அயராது உழைக்கும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவன தலைவர் -டாக்டர் திருநாராயணன் அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள் ,எமது வளர்ச்சியின் ஆணி வேர் டாக்டர் சித்தீக் அலி M.D ( Siddha) -வர்ம மருத்துவர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகிக்கிறார் ,மேலும் பல சித்த ஆயுர்வேத ஹோமியோபதி, யுனானி ,மருத்துவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் ,நண்பர்கள் ,அலோபதி மருத்துவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் ..


வர்ம மற்றும் சித்த மருத்துவ ஆலோசனைக்கு -
டாக்டர் சித்தீக் அலி  M.D ( Siddha) -அவர்கள் முன் பதிவுகளோடு அவர்களை சந்திக்கலாம் .அவர் மிக சிறந்த வர்ம வித்தகர் ,அறிஞர் அண்ணா மருத்துவ  மனையில் வர்ம துறையில் அவரது சேவை சென்னை மாநகரமே அறிந்த ஒன்று .முதுகு தண்டுவட நோய்களுக்கு  வர்ம சித்த மருத்துவ சிகிச்சை அவரது தலைமையின் கீழ் நடைபெற உள்ளது ..

ஆயுர்வேத மருத்துவ அலோசனைக்கு முன் பதிவுகளோடு
மாதம் இரு முறை என்னை சந்திக்கலாம் ..ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை -முதுகு தண்டு வட நோய்களுக்கு எனது ஆலோசனையில் கீழ் நடைபெற உள்ளது ..

ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை டாக்டர் ஜவாஹிரா பானு BHMS முன் பதிவுகளோடு நடை பெற உள்ளது

சித்த மருத்துவர் டாக்டர் ஸ்வேதா  M.D ( Siddha) அவர்கள் தினமும் மருத்துவ ஆலோசனை அளிக்க உள்ளார்கள்

நமது மருத்துவ குழுவில் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள் ,டாக்டர் சாய்ரா பானு M.D ( Siddha),மேலும் யுனானி மருத்துவர்கள் யோகா நேச்சுரோபதி மருத்துவர்கள் ,அக்குபஞ்சர் மருத்துவர்கள் பெரிய குழுவே உள்ளது ..
நமது மருத்துவ நிலைய முகவரி -ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் ,4, முதல் தெரு ,துரை சாமி நகர் ,கீழ்கட்டளை ,சென்னை 117 ( Near KFC )


அனைவரும் வருக -நலம் பெருக

குறிப்பு -திறப்பு விழா அன்று (2/11/2014)  எனது மருத்துவ ஆலோசனை காலை பதினொன்று முதல் மாலை நான்கு வரை உள்ளது .( முன் பதிவுகளோடு மட்டும் ) ,முன் பதிவுக்கு இந்த முறை மட்டும் இந்த  9688778640  என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் ..


தெரிந்து கொள்ள வேண்டியவை


  1. நமது சிகிச்சை முற்றிலும் மாறுபட்ட ஒருங்கிணைந்த பாரம்பரிய சிகிச்சை முறை 
  2. Scientific Approach-Through Traditional  System of Medicine 

Post Comment