சனி, டிசம்பர் 31, 2011

எனது பயோ டேட்டா

என்னைப்பற்றி தெரிவிக்க வேண்டும் என்று வாக்களித்த 178  நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு ..

எல்லாப் புகழையும் ஏக இறைவனுக்கு சமர்பித்தவனாக ..உண்மை பெயர்
முகம்மது 
புனை பெயர்
Curesure4u
ஊர்
கடையநல்லூர் (பொதிகை மலை -குற்றாலத்திற்கு அருகில் உள்ள அமைதியான ஊர் ),திருநெல்வேலி மாவட்டம் ..
கல்வி தகுதிகள் 
Bachelor of Ayurvedic Medicine & Surgery ( BAMS)-The tamilnadu Dr.MGR medical university
M.Sc(Psychology)-The Madras University
M.B.A ( Hosp .Mgt)- The Alagappa University
P.G.Dip.Hospital Management(PGDHM)-Annamalai University
P.G.Dip.Guidance & Counselling (PGDGC)-Annamalai university
P.G.Dip Yoga (PGDY)- Annamalai university
P.G.Dip .Acupuncture( PGDHSc-Acu)- Annamalai university
P.G.Dip. Nutrition &  Dietetics (PGDND)-The Madurai Kamaraj University
P.G.Dip Varmam & Massage Science (PGDVM)-The sports University
Fellowship in Clinical research (FCLR)-The medvarsity –applo hospital-Hyderabad

மனைவி 
ஹோமியோபதி மருத்துவர் 
பிடித்தது 
மருத்துவ சேவை புரிதல்
நெடுநாள் ஆசை
ஒரு பெரிய மருத்துவமனை நிறுவி -இந்திய மருத்துவத்தை ,பாரம்பரிய மருத்துவத்தை உலகறிய செய்தல் வேண்டும் -மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
எப்போதுமுள்ள ஆசை
இந்திய மருத்துவத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வர என்னால் இயன்றதை செய்தல்
தேடும் மனிதர்கள்
எனது கனவு மருத்துவமனை நிறுவ உதவும் நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்களை
மருத்துவத்தில் பிடித்த விஷயங்கள்
ஆயுர்வேதம் ,பஞ்சகர்ம சிகிச்சைகள் ,வர்ம சிகிச்சை ,சித்த மருத்துவம் ,அக்குபஞ்சர் சிகிச்சை,மருத்துகள் செய்தல் ,மூலிகை ஆராய்ச்சி
மருத்துவ அனுபவம் 
பதினான்காண்டுகள்
சந்தோஷ பட வைப்பது 
ஏழை ,எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் பார்ப்பது ,இலவச மருந்துகள் கொடுத்து நோய் தீர்க்க வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றியுடன் ..ஏக இறைவன் கிருபையால் இதுவே மிக்க சந்தோசம்
தேடி அலைவது 
வர்ம மருத்துவம் கற்று கொள்ள
பொழுதுபோக்கு 
நேரமில்லையே
விரும்புவது
மனித நேய  மிக்கவனாய்  -நூற்றுக்கு  நூறு  திருக்குர்ரான்  ,ஹதீஸ்களின் படி வாழ
பிடிக்காதது
வட்டி ,ஹராமான அனைத்து விஷயங்களும்
பிடித்த ரோல் மாடல் ஹீரோ
நபிகள் நாயகம்
மறக்க முடியாத தருணங்கள்
2008 ல் ஹஜ் பயணம்
நன்றி சொல்ல விரும்புவது
வெளிநாட்டில் மிக்க கஷ்டமான வேலை பார்த்தும் ,ஏழ்மைக்கும் ,சிரமத்திற்கும் இடையே என்னை படிக்க வைத்த தந்தை ,எப்போதும் பாசத்திற்கு உரிய எனது அம்மா
என்னை தொடர்பு கொள்ள
9688778640( between 4 pm to 5 pm IST)
Curesure4u@gmail.com
சொல்ல நினைப்பது
இந்திய மருத்துவதை உலகறிய செய்ய எனது கனவுக்கு உங்களது ஆதரவை

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
 

Post Comment

செவ்வாய், டிசம்பர் 27, 2011

சொல்லலாமா வேண்டாமா ?

எனது உண்மை பெயர் என்ன ?
எனது ஊர் எது ?
நான் மருத்துவ சேவை செய்யும் ஊர் எது ?

சொல்லலாமா  வேண்டாமா ?

சொல்ல வேண்டாம் என்பதற்கு நான் நினைத்த  காரணங்கள்
 1. என்னை பற்றி விளம்பரம் ஆகி விடும் -சுய விளம்பரம் விட -ஆயுர்வேத மருத்துவ அறிவே மக்களுக்கு வேண்டும்
 2. ஆயுர்வேதம் மக்களை சென்றடைந்தால் போதும் -தமிழ் நாடு -இந்தியா முழுவதும் படித்த நல்ல ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளனரே -தேவை என்றால் அவர்களை நாம் பரிந்துரை செய்யலாம் என்ற எண்ணம்
 3. மருந்துகளை -அனுப்பி தர சொன்னால் என்ன செய்வது ?-எனக்கு அதற்க்கு நேரம் ஒதுக்க முடியுமா என்ற எண்ணம்
 4. இந்த தளத்தை பார்த்து என்னை பார்க்க நேரில் வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு  தோன்றினால் என்ன செய்ய -இருக்கிற நோயாளிகளையே பார்க்க நேரம் ஒதுக்க முடியவில்லையே ?..\
 5. இன்னும் சொல்ல முடியாத காரணங்கள் -மூன்று உள்ளது ..
தெரிவிக்க வேண்டும் என வாக்களித்த நண்பர்களே ..உங்கள் காரணம் என்ன ?..

பின்னூட்டத்தில் காரணம் அறிய முயல்கிறேன் ...உங்கள் வாக்குக்கு நன்றி ..

Post Comment

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

செம்பருத்தி தைலம் செய்வது எப்படி ?


ஜபாபத்ரியாதி தைலம் 
(செம்பருத்தியாதி தைலம்)                             (ref-ஸஹஸ்ரயோகம்)    
 செம்பருத்தி தைலம் செய்வது எப்படி  ?
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            செம்பருத்தி இலை ஜபாபத்ரி     200 கிராம்
2.            கீழாநெல்லி பூ ஆமலகீ          200        
3.            வில்வ இலை பில்வ பத்ர       200        
4.            விருட்சிப்பூ விருக்ஷிக புஷ்ப          200        
5.            அருகம்புல் தூர்வா              200        
6.            வெற்றிலை நாகவல்லி பத்ர          200        
7.            துளசி இலை துளசி பத்ர        200        
8.            ஜாதிமல்லி இலை மாலதி பத்ர  200        
9.            அவுரி இலை நீலி பத்ர          200        

இவற்றை நன்கு இடித்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய் (நாரிகேள தைல) 800 கிராம், தேங்காய்ப் பால் (நாரிகேள க்ஷீர) 800 கிராம், நன்கு விழுதாக அரைத்த

10.          அதிமதுரம் யஷ்டீ              33 கிராம்
11.          சீரகம் ஜீரக                     33          
12.          கருஞ்சீரகம் கிருஷ்ணஜீரக       33          

ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து காய்ச்சிப் பதத்தில் வடிகட்டவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சிரங்கு (பாமா), அரிப்பு (கண்டு), கரப்பான் (விஸர்ப்ப) போன்ற தோல் நோய்கள் (சர்ம ரோக), முக்கியமாக குழந்தைகளின் மேற்கூறிய நிலைகளில் மிகச் சிறந்தது. தலைப் பொடுகுக்கு (சிரகண்டு) இதனைப் பயன்படுத்துவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை

 1. ஆயுர்வேதத்தில் செய்யபடும் இந்த செம்பருத்தி தைலமும் -சித்த முறைப்படி செய்யப்படும் செம்பருத்தி தைலமும் ஒன்றல்ல
 2. பொடுகுக்கு -துர்துற பத்ராதி தைலம் + வெட்பாலை தைலம் + இந்த தைலம் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்
 3. இந்த தைலம் -தோல் வியாதிகளிலும் நல்ல பலன் தரும்

Post Comment

சனி, டிசம்பர் 24, 2011

வாத நோய்க்கு -விஷகர்ப்ப தைலம்- Visha Garba thailam


வாத நோய்க்கு -விஷகர்ப்ப தைலம்- Visha Garba thailam
 (ref-பைஷஜ்யரத்னாவளி - வாதவ்யாத்யதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.          ஊமத்தன் சாறு தத்தூரஸ்வரஸ               1       லிட்டர்
2.             நல்லெண்ணெய் (மூர்ச்சிதம்) திலதைல (மூர்ச்சித)3.200           “       
3.            காடி காஞ்ஜிக                                  3.200           “

இவைகளை ஒன்று கலந்து அத்துடன் சிறிது தண்ணீர் கலந்து அரைத்து விழுதாக்கிய

1.            கோஷ்டம் கோஷ்ட                         93 ¾ கிராம்
2.            வசம்பு வச்சா                              93 ¾       “
3.              ஹிருத்தாத்ரீ ஹிருத்தாத்ரீ(கீழாநெல்லி )        28 ¼       “
4.            மிளகு மரீச்ச                              28 ¼       “
5.            நாபி வத்ஸநாபி                           18 ¼       “
6.            ஊமத்தன் விதை தத்தூர பீஜ              84.375   “
7.            பொடித்த இந்துப்பு ஸைந்தவலவண        84.375   “

இவைகளையும் சேர்த்து கொதிக்க வைத்துக் கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டி பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:     

இது லகு விஷகர்ப்ப தைலம்எனப்படும். இதே மூல நூலில் ப்ருஹத் விஷகர்ப்ப தைலம்என்ற மற்றொரு தயாரிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பயன்படுத்தும் முறை:     

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.


தீரும் நோய்கள்:  

பாரிசவாயு (பக்ஷாகாத), மோவாய்க்கட்டை அசைவற்றப் போதல் (அ) தாடைப்பிடிப்பு (ஹனுஸ்தம்ப), கழுத்துப்பிடிப்பு (அ) செயலற்றுப் போதல் (மன்யாஸ்தம்ப), இடுப்புப் பிடிப்பு (கடீக்ரஹ), நடுக்கல் வாதம் (ஸர்வாங்க்கம்ப), ஸர்வாங்கவாத போன்ற பலவித வாத நோய்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை

 1. வாத நோய்களில் சிறப்பாக வேலை செய்யும் -வெளிபிரயோக நல்ல மருந்து
 2. பிடிப்புகளில் நல்ல மருந்து


Post Comment

வெள்ளி, டிசம்பர் 23, 2011

தலை சார்ந்த நோய்க்கு தலையாய தைலம் -ஷட்பிந்து தைலம் -Shad Bindu thailam


தலை சார்ந்த நோய்க்கு தலையாய தைலம் -ஷட்பிந்து தைலம்  -Shad Bindu thailam
(ref-பைஷஜ்யரத்னாவளி - சிரோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கரிசலாங்கண்ணிச்சாறு ப்ருங்கராஜஸ்வரஸ  3.200 லிட்டர்
2.            ஆட்டுப்பால் அஜக்ஷீர                  800 கிராம்
3.            நல்லெண்ணெய் க்ருஷ்ணதிலதைல              800        

இவைகளை ஒன்று கலந்து அத்துடன்

1.            ஆமணக்குவேர் எரண்டமூல          10   கிராம்
2.            தகரம் தகர                     10          
3.            சதகுப்பை ஸதபுஷ்ப            10          
4.            கீரைப்பாலை ஜீவந்தி             10          
5.            அரத்தை ராஸ்னா              10          
6.            இந்துப்பு ஸைந்தவலவண       10          
7.            கரிசலாங்கண்ணி ப்ருங்கராஜ    10          
8.            வாயுவிடங்கம் விடங்க         10          
9.            அதிமதுரம் யஷ்டீ              10          
10.          சுக்கு சுந்தீ                     10          

இவைகளையும் நன்கு அரைத்து விழுதாக்கிச் சேர்த்துக் காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிக்கட்டி பத்திரப்படுத்தவும்.

அளவு:           

6 சொட்டுகள் வரை மூக்கில் சொட்டு மருந்தாக உபயோகிக்கலாம். கபாலக்ரஹ, சிரோப்யங்க, அப்யங்க போன்ற உபயோக முறைகளிலும் பயன் படுத்தலாம்.

தீரும் நோய்கள்:  

தலைசார்ந்த நோய்கள் (சிரோ ரோக), பல்லாட்டம் (தந்தசலன), பார்வைமங்கல் (த்ருஷ்டி தௌர்பல்ய), முடியுதிரல் (கேஸஸாத).


தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. துஷ்ட பீனசம் தவிர எல்லா பீனச நோய்களுக்கும் -நசியம் செய்து வர -மண்டை கணம் -பீனச தொந்தரவுகள் மாறும்
 2. கரிசாலை இருப்பதால் -முடி வளர வைக்க -நசியம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
 3. கண் பார்வை தெளிவாக்கும்
 4. பல் ஆட்டத்தை குறைக்க -இந்த தைலம் கொண்டு நசியம் செய்திடல் வேண்டும்

Post Comment