ஞாயிறு, டிசம்பர் 11, 2011

தேமலுக்கு மருந்தாகும் -மரிசாதி தைலம் Marichadi Thailam


தேமலுக்கு மருந்தாகும் -மரிசாதி தைலம் Marichadi Thailam
 (ref-பைஷஜ்யரத்னாவளி - குஷ்டாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பசுவின் மூத்திரம் கோமூத்ர                 3.200 லிட்டர்
2.            கடுகு எண்ணெய் ஸர்ஸபதைல            800 கிராம்   

இவற்றுடன்

3.            மிளகு மரீச்ச                             25 கிராம்
4.            கோரைக்கிழங்கு முஸ்தா                  25     “
5.            எருக்கன் பால் அர்க்கக்ஷீர                  25     “
6.            அரளி வேர் கரவீர மூல                    25     “
7.            சிவதை த்ரிவ்ருத்                         25     “
8.            பசுவின் சாணம் கோமய                   25     “
9.            ஆற்றுத்தும்பட்டி இந்த்ரவாருணி            25     “
10.          கோஷ்டம் கோஷ்ட                        25     “
11.          மரமஞ்சள் தாருஹரீத்ரா                   25     “
12.          மஞ்சள் ஹரீத்ரா                          25     “
13.          சந்தனம் சந்தன                          25     “
14.          தேவதாரு தேவதாரு                      25     “
15.          சுத்தி செய்த நாபி ஷோதித நாபி            50     “

இவைகளில் பொடிக்க வேண்டியவைகளைப் பொடித்தும், அரைக்க வேண்டியவைகளை அரைத்தும் கலந்து கொதிக்க வைத்துக் கரபாகத்தில் இறக்கி வடிகட்டி ஆறிய பின்னர் தாளகம் (ஹரிதாள) 25 கிராம், மனோசிலை (மனசிலா) 25 கிராம் இவற்றைப் பொடித்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.


பயன்படுத்தும் முறை:- 

வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:-  

வண்டுகடி (ஷட்பத தம்ஷ்ட), படை (விஸிர்ச்சிகா), வெண்குஷ்டம் (ஸ்வித்ர), குஷ்டம் போன்ற பலவிதமான தோல் நோய்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த மருந்து தேமலுக்கு நல்ல மருந்து
  2. வெண் புள்ளிகள் ,வெண் குஷ்டதிர்க்கும் இந்த மருந்து -அவல்குஜாதி லேபம் என்ற மருந்தோடு வெளிபிரயோகம் செய்ய சீக்கிரம் மாறும்
  3. ஆரம்ப நிலை தோலின் வெள்ளை நிற மாற்றத்திற்கு இந்த மருந்து நல்ல பலன் தரும்
  4. நிற மாற்றம் சம்பதமான தோல் நோய்களை இந்த தைலம் நல்ல பலன் தரும்
  5. வெண் புள்ளிகள் ,வெண் குஷ்டம் போன்றவற்றிக்கு உள் மருந்தகளோடு வெளிமருந்தை உபயோகித்தால் நல்ல பலன் தெரியும்
நண்பர்களே -மேலே உள்ள கேட்கட்டில் எனக்கு வாக்கு அளியுங்கள் 

Post Comment

1 comments:

கருத்துரையிடுக