ஞாயிறு, டிசம்பர் 18, 2011

வலிகளை போக்கும் எளிதாக செய்யகூடிய பிண்ட தைலம் செய்வது எப்படி ? -Pinda thailam


வலிகளை போக்கும் எளிதாக செய்யகூடிய பிண்ட தைலம் செய்வது எப்படி ? -Pinda thailam                                                                       
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்: 
1.            தண்ணீர் ஜல        3.200 லிட்டர்
2.            நல்லெண்ணெய் திலதைல 0.800 கிலோ கிராம்

ஆகிய இவைகளில்

1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா 50 கிராம்

2.            நன்னாரி ஸாரிவா         50    


இவைகளைக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி கர பாகத்தில் இறக்கி சிறு துண்டுகளாக்கிய தேன் மெழுகு (மதூச்சிஷ்ட) 50 கிராம்

 , நன்கு பொடித்த வெள்ளைக் குங்கிலியம் (ஸர்ஜரஸ) 50 கிராம் 

இவைகளை எண்ணெய் வடிகட்டும் பாத்திரத்திலிட்டு (மேற்படி) எண்ணெய்யை வடிக்கட்டி அந்தச் சூட்டிலேயே அவைகளை நன்கு கரையும்படி கலக்கி பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:   
 1. மஞ்சட்டி, நன்னாரி, இவைகளின் கஷாயம் சேர்த்தும் இது தயாரிக்கப்படுகிறது.
 2.  தயிர்த் தெளிவு, காடி, பலாமூல கஷாயம், தண்ணீர் விட்டான் கிழங்கு கஷாயம், புங்கம் பட்டை கஷாயம், சீந்தில் கொடி கஷாயம், இவைகளை ரோகங்களின் நிலையைப் பொருந்தச் சேர்த்தும் தயாரிப்பது உண்டு.
 3.  மரத்துப் போதல், சுருங்குதல் போன்ற நிலை உள்ள வாத ரோகங்களில் விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் இவைகள் சேர்த்தும், குஷ்டம் முதலியவைகளுக்கு நீரடிமுத்து எண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.
 4.  சம்பிரதாயத்தில் மஞ்ஜிஷ்டா, நன்னாரி இவைகளை வகைக்கு 2 ½ பங்கு என்ற விகிதத்தில் எடுத்து அவற்றை நல்லெண்ணெய் 32 பங்குடன் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி இறக்கி வடிகட்டிச் சிறிது சூடாக்கி அதில் தேன் மெழுகு, வெள்ளைக் குங்கிலியம், இவைகளை முறையே 1.5 : 1 என்ற விகிதத்தில் சேர்த்துத் தைலம் தயாரிக்கப்படுகிறது

 

பயன்படுத்தும் முறை:      \
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.


தீரும் நோய்கள்: 


 குதிகால்வாதம் (வாதரக்த), எரிச்சல் (தாஹ), நரம்பு மண்டல சீர்கேட்டாலேற்படும் வலி, வீக்கம் (ஸோப), அடிபடுதல் (அபிகாத), கட்டிகள் (பிடக), தீப்புண்கள் (தக்தவ்ரண), காயங்கள் (வ்ரண), குதிகால் வெடிப்புகள் (விபாதிகா), தோல் நோய்கள் (குஷ்ட ரோக) ஆகியன.

தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. நான்கே மூலப் பொருட்கள் -எளிதாக செய்யகூடிய மருந்து இது
 2. அரை மணிநேரத்தில் -ஐந்து லிட்டர் கூடப எளிதாக காய்ச்சிவிட முடியும்( கஷாயம் ரெடியாக இருந்து நல்ல நெருப்புடன் கூடிய சூப்பர் அடுப்பு கிடைத்தால் )
 3.  ஆயில் என்றும் இதனை செல்லமாக அழைப்பார்கள்
 4. எல்லா ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சித்த ,ஆயுர்வேத மருத்துவ பிரிவில் தரமான இந்த தைலம் காசில்லாமல் கிடைக்கும்
 5. சூடு செய்து வலி உள்ள இடங்களில் தேய்த்து ஒத்தடம் கொடுத்தால் -சாதாரணமான வலிகள் எல்லாம் ஓடிப்போகும்
 6. தொடர்ந்து தேய்த்தால் எலும்புக்கும் வலு தரும்
 7. தேன் மெழுகு உள்ளதால் -இயன் முறை மருத்துவத்தில் செயல்படுத்தப்படும் -மெழுகு ஒத்தடம் என்ன பலன் அளிக்குமோ அந்த பலனை இந்த தைலம் தேய்ப்பதால் அடைந்து கொள்ளலாம்
 8. பிண்ட தைலம் என்ற தலைப்பில் இருபத்து நான்கு வகைக்கும் மேல் உள்ளதாக ஆயுர்வேத மருத்துவர் -நண்பர் -டாக்டர் பாலமுருகன் ஒரு சூப்பர் புத்தகம் வெளிவிட்டு உள்ளார் ..மிக நல்ல புத்தகம் அது ..ஆதாரப் பாட்டுகளுடன் அற்புதமான ஆயுர்வேத படைப்பு அது ..
 9. வலிகளை மட்டுமல்லாது குதிகால் வெடிப்பு ,ஆசனவாய் வெடிப்புக்கும் இந்த தைலம் பயன்படும்
 10. பிண்ட தைலம் -சதை -எலும்பு -மூட்டு -முதுகுதண்டுவட வலிகளை போக்கும் ...
 11. நம்பிக்கை கொண்டு தேய்க்கும் முறை அறிந்து உரிய இடத்தில் தேய்க்க வாத வலிகள் காணாமல் போகும்


Post Comment

4 comments:

கருத்துரையிடுக