கேட்காத காதை கேட்கவைக்கும் -க்ஷார தைலம்
(ref-சாரங்கதர ஸம்ஹிதா - தைலப்ரகரணம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. எலுமிச்சம் பழச்சாறு – ஜம்பீரரஸ 3.200 லிட்டர்
2. தேன் – மது 800 கிராம்
3. திப்பிலி சூர்ண – பிப்பலீ சூர்ண 200 “
இவைகளை ஒரு
பானையிலிட்டு ஒரு மாதம் சீலைசெய்து வைத்துப்பின் வடிக்கட்டவும். இது “மது சுக்தம்” எனப்படும்.
1. அவ்விதம் வடிகட்டி எடுத்த மது சுத்தம் 3.200 கிலோ கிராம்
2. வாழைக்கிழங்கின் சாறு – ரம்பாரஸ 3.200 “
3. எலுமிச்சம்பழச்சாறு – ஜம்பீரரஸ 3.200 “
4. நல்லெண்ணெய் – திலதைல 0.800 “
இவைகளை ஒன்று
சேர்த்து அத்துடன்
1. முள்ளங்கிக் கிழங்கின் க்ஷாரம் – மூலக க்ஷார 12.500 கிராம்
2. ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார 12.500 “
3. யவக்ஷாரம் – யவக்ஷார 12.500 “
4. இந்துப்பு – ஸைந்தவலவண 12.500 “
5. சோற்றுப்பு – ஸாமுத்ரலவண 12.500 “
6. கல்லுப்பு – ஸ்வர்ச்சல லவண 12.500 “
7. கருப்பு உப்பு – பிடாலவண 12.500 “
8. வளையலுப்பு – காச்சலவண 12.500 “
9. பெருங்காயம் – ஹிங்கு 12.500 “
10. முருங்கப்பட்டை – சிக்ருத்வக் 12.500 “
11. சுக்கு – சுந்தீ 12.500 “
12. தேவதாரு – தேவதாரு 12.500 “
13. வசம்பு – வச்சா 12.500 “
14. கோஷ்டம் – கோஷ்ட 12.500 “
15. சதகுப்பை – ஸதபுஷ்ப 12.500 “
16. மரமஞ்சள் சத்து – ரஸௌத் 12.500 “
17. மோடி – பிப்பலீ மூல 12.500 “
18. கோரைக்கிழங்கு – முஸ்தா 12.500 “
இவைகளில் உப்பு
வகைகள், க்ஷார வகைகள்,
பெருங்காயம் இவைகள்
நீங்கலாக மற்றவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்க்கவும். பெருங்காயத்தைப் பொரித்துப்
பொடித்தும், உப்புகளையும்,
க்ஷாரங்களையும்
பொடித்தும் சேர்க்கவும். பின்னர் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.
பயன்படுத்தும் முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும். மூக்கிலிடவும் (நஸ்யம்), காதிலிடவும் (கர்ணபிந்து), வாய்க்கொப்பளிக்கவும் (கண்டூஷ, கவளக்ரஹ) பயன்படுத்தப்படுகிறது.
தீரும் நோய்கள்:
காதில் சீழ் வடிதல் (கர்ண பூய (அ) கர்ணஸ்ராவ),
காதிரைச்சல் (கர்ண நாத),
காதுவலி (கர்ண சூல (அ)
கர்ணார்தி (அ) கர்ணபீட (அ) கர்ணருக்), காதுப்புண் (கர்ணவ்ரண), காதில் பூச்சி
இருத்தல், செவிட்டுத்தன்மை
(பாதிர்ய), மூக்குப்புண்
(நாசாவ்ரண), பல்லில்
சீழ்வடிதல் (பூதி தந்த), பல்லீறு வீக்கம்
போன்ற காது, மூக்கு, வாய் ஆகியவற்றில் ஏற்படும் தொற்று மற்றும்
அழற்சி நிலைகள்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- காதுகளில் ஏற்படும் சகல நோய்க்கும் இந்த மருந்து சிறந்த மருந்து
- காதில் நீர் ,சீழ் வடிந்தால் -காது செவிப்பறையில் ஓட்டை விழுந்திருக்க வாய்ப்பு அதிகம் -இந்த நிலையில் காதுக்கு எண்ணை விடுதல் மிக கேடாக ,ஆபத்தாக முடியும் எனவே தக்க ஆலோசனை இன்றி காதில் எந்த மருந்தையும் விட வேண்டாம்..
- நஸ்யமாக இந்த எண்ணையை பயன்படுத்துவது அரிது ..
- உள்ளுக்கும் கொடுக்கலாம் -எனது குருக்களில் ஒருவர் இந்த மருந்தை ஆறாத
புண் ஆற்றவும்,கல்லை கரைக்கவும் ,வீக்கத்திற்கும் ,பெரிய கட்டிகளை
கரைக்கவும் பயன்பத்துவார்
- கேட்காத காதை இந்த மருந்தை பயபடுத்தி -தக்க வர்ம புள்ளிகளை தூண்டி -கேட்க வைக்கலாம் ..
5 comments:
காதில் நீர் ,சீழ் வடிந்தால் -காது செவிப்பறையில் ஓட்டை விழுந்திருக்க வாய்ப்பு அதிகம் -இந்த நிலையில் காதுக்கு எண்ணை விடுதல் மிக கேடாக ,ஆபத்தாக முடியும் எனவே தக்க ஆலோசனை இன்றி காதில் எந்த மருந்தையும் விட வேண்டாம்..
நல்ல ஆலோசனை மற்றும் தக்க எச்சரிக்கை
நட்புடன் ,
கோவை சக்தி
"கேட்காத காதை இந்த மருந்தை பயபடுத்தி -தக்க வர்ம புள்ளிகளை தூண்டி -கேட்க வைக்கலாம் "
நிஜமாகவா ? எங்கள் தந்தையார் 79 வயதானவர். அவருக்கு கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக காது கேட்காது. ஹியரிங் எய்ட் வைத்து பார்த்ததில் பேச்சைவிட வெளிப்புற ஒலிகளே அதிகம் கேட்டு தொந்தரவாக இருப்பதாக கூறி அதை பயன்படுத்துவதே இல்லை.
அவருக்கு இம்மருந்து பயனளிக்குமா ?
URGENTLY REQUIRE THIS MEDICINE PLEASE HELP ME.. IS ANY READYMADE?
i want immediately and urgently this medicine.. is this avilable in readymade??? pls help me
கேட்காத காதை கேட்கவைக்கும் -க்ஷார தைலம்
இந்த மருந்து எங்கே வாங்கலாம் எங்கே இப்போது இருக்கு தகவல் தரவும்.............
கருத்துரையிடுக