உடல் எடை குறைய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் எடை குறைய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 16, 2023

எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?

 கூடிய உடல் எடை மட்டுமே உங்கள் வலிகளுக்கு காரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை


It's purely mindset.. Not always true எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ? எடை குறைந்தால் மட்டுமே வலி இல்லாமல் இருக்க முடியும் என்று உங்கள் மனம் நம்புகிறதா ? உனமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எடை இழக்கும்போது முதுகுவலி. இன்றைய உலகில் எடை மற்றும் எடை குறைப்பு என்ற தலைப்பை நகர்த்துவது கொஞ்சம் தந்திரமானதாக இருக்கலாம் உங்கள் எடையைப் பற்றி நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருந்தால், எடை இழப்புக் கருத்துக்கு எதிராக கலோரிகளுக்கு எதிரான கலோரிகளை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் இணைந்து உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் விளைவாக எடை இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும், இந்த கலோரிக் குறைப்பு "விரைவான தீர்வு" எடை இழப்பு உணவுகளுடன் (குலுக்கல்கள் மற்றும் பார்கள் போன்றவை) உங்கள் உடலில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை ஏற்படுத்துகிறது. இந்த முறையில் அடையப்படும் எடை இழப்பு கணிசமான அளவு நீர் மற்றும் தாது இழப்பால் ஏற்படுகிறது - இது ஒரு நபரின் எலும்பு அடர்த்தியைக் குறைக்கிறது. பலவீனமான எலும்புகள் முதுகுத்தண்டு தவறான அமைப்பை ஏற்படுத்தலாம், அதனால்தான் எடை இழக்கும் போது பலர் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள். கூடுதலாக, நாம் நமது உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதால், அதிகப்படியான பயிற்சி மற்றும் குறிப்பிட்ட தசைகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம், இன்னும் அதிகமான முதுகுவலி பிரச்சினைகள் ஏற்படலாம். நாம் கொழுப்பை இழக்கும்போது, ​​​​அந்த உடல் கொழுப்பின் குஷனிங் விளைவை நம் வயிறு, பிட்டம் மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளில் இழக்கிறோம். குறைக்கப்பட்ட குஷனிங் அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் நமது முதுகெலும்பு சீரமைப்பை பாதிக்கும். #udaledaikuraiya #உடல்பருமன் #உடல்எடைகுறைய #வயிறுகுறைய , #கால்வலி #முதுகுவலி #இடுப்புவலி #பருமன்குறைய #tamilhealth #weightloss #weightlosstips #painreduceafterweightloss #udalnalam #edaikuriaya #valikuraiya #ayurveda #healthtips

Post Comment

செவ்வாய், செப்டம்பர் 14, 2021

உடல் பருமனை குறைக்க


உங்கள் எடை கூடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? ஆயுர்வேதம் சொல்லும் எளிமையான வழி

Post Comment

சனி, ஜூலை 31, 2021

உடல் எடை குறைக்க, வயிற்று புண் குணமாக பூசணிக்காய் சூப். | Weight loss fi...



சிறுநீரக பிரச்சினை உடல் பருமன் நீர்க்கடுப்பு பிரச்சனை போன்றவற்றால் அவதிப்படுபவரா ? உங்களுக்காகவே ஒரு நல்ல வீட்டு உணவு பூசணிக்காய் சூப்.... செய்முறை: நறுக்கிய பூசணிக்காய் நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், வெண்ணெய், தக்காளி, பூண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி. பூண்டு மிளகு சீரகம் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் காய்கறிகள் ஒன்றன்பின் ஒன்றாக வதங்கியபின் கடைசியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் மிளகு சீரகம் மல்லி கறிவேப்பிலை போட்டு இறக்குதல் வேண்டும். பயன்கள் : இது சிறுநீரக பிரச்சினைகள், உடல் பருமன், சர்க்கரை நோய், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை சரிபடுத்துகிறது. மேலும் இவற்றின் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து, அதிக நீர் சத்து செரிமானத்தை பெருக்கி சரியான உடல் எடையை தருகிறது.
#பூசணிசூப் #உடல்எடைகுறைக்க #நார்சத்துஉணவு #நீரழிவு #நீர்க்கடுப்பு #சீறுநீரக #வயிறுபுண் #நெஞ்செரிச்சல் #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

ஞாயிறு, ஜூலை 18, 2021

தொப்பையை கரைக்கும் மூலிகை ஸமூத்தி | Reduce Belly Fat with Herbal Green S...


தொப்பையை குறைக்க 
பெருத்த தொந்தியை குறைக்க 
குழந்தை பேறுக்கு  பின் உண்டான வயிறு சதையை குறைக்க 
எளிதான ஒரு மூலிகை  Green Smoothie 

இந்த Green Smoothie பயன் பெற்றவர்கள் ஆயிரகணக்கானோர் 

நீங்களும் பயன் பெறுங்கள் .. 

#உடல்எடைகுறைய #தொப்பைக்குறைய #bellyreduceayurveda #greeensmoothie #homeremedyreducebelly #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth  #subscribeourchannelalshifayush

Post Comment

வெள்ளி, ஜூலை 02, 2021

உடல் எடை குறைக்கும் சுவையான முட்டை கஞ்சி செய்வது எப்படி | Diet Egg soup ...



உடல் எடை குறைக்கும் சுவையான முட்டை கஞ்சி செய்வது எப்படி ?

முட்டை கஞ்சி என்னும் சுவையான உடல் எடை குறைக்கும்  ரகசிய பார்முலா

அல் ஷிபா ஆயுஷ் ஆயுர்வேத கிச்சனின் நிரூபனம் செய்யபட்ட  பார்முலா இது .. 

பலரது உடல் எடையை குறைக்க  இந்த முட்டை சூப் உதவி இருக்கிறது .. 

முட்டையை கொண்டு இப்படி ஒரு உணவை நீங்கள் சாப்பிட்டே இருக்க முடியாது ..

முட்டை சூப், முட்டை கஞ்சி என்கிற மிகவும் சுவையான உணவு இது .. 

 

இந்த காணொளியை காண தவறாதீர்கள் 



#உடல்எடைகுறைக்க  #முட்டைகஞ்சி #முட்டைசூப் #ஆயுர்வேதகிச்சன் #wightreductiondiet #eggsoup #ayurvedicdiet #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush #drsaleem #drsaleemayush #டாக்டர்சலீம்

Post Comment

புதன், மார்ச் 31, 2021

குறையாத எடையை குறைக்கும் இரண்டு ஆயுர்வேத மருந்துகளும், சிகிச்சைகளும்-கடை...


குறையாத எடையை குறைக்கும் இரண்டு ஆயுர்வேத மருந்துகளும், சிகிச்சைகளும் கடைசி இருபது நொடியில் ரகசியம்

குண்டு முதல் ஒல்லியானது வரை .. 

என்ன செய்தாலும் உங்கள் எடை குறையவில்லையா ?
யாரும் உண்மையை சொல்ல மறுக்கிறீர்களா ?
எடை குறைப்பில் –காசு பணத்தை கரைத்தவரா ?
முழு வீடியோவை பாருங்கள் 
மேலும் வீடியோகக்கள்  பெறவும் ..

டாக்டர் முகமது சலீம் MD Ayurveda அவர்களின் தலைமையில் தகுதி வாய்ந்த மருத்தவர்கள் மூலம்  சிறந்த முறையில் ஆயுர்வேத சிகிச்சை பெற வேண்டுமா ?
Telegram மூலம் சந்தேகங்களை தெரிந்து கொள்ள 
https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl
பேஸ் புக்
 https://www.facebook.com/drsaleem.ayush/

பேஸ் புக் பேஜ் 
https://www.facebook.com/Dr-Mohamad-Saleem-MD-Ayurveda-Al-Shifa-Ayush-for-All-108803994602983

#உடல்எடைகுறைய #நீங்கள்குண்டா #உடல்பருமன் #தொப்பை  #ஆயுர்வேதஇரகசியம் #என்னசெய்தாலும்உடல்எடைகுறையவில்லையா 
#obesity #sthoulya #bigbelly #weightlosschallenge  #weightlossprograme #weightolosswithout #ayurvedictreatment #panchakarma #curesure4u
#curesure #Alshifaayush #AlShifaayushforall #Dr_mohamad_saleem_MD_Ayurveda #அல்ஷிபா  #அல்ஷிபாஆயுஷ் 
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை  #மருத்துவம் #உணவேமருந்து #கஷாயம்  #மூலிகைகள்  #ஹைப்போதைராய்ட்
#ஆயுர்வேதம்  #நோய்_நாடி #ayurveda #ayurvedam #ayurvedam #tamil #weightgain #uncontorlledweight #ayuredictreatmentforobesity



Post Comment

சனி, ஜூன் 24, 2017

உடல் எடை குறைக்க ஆரோக்கியமற்ற வழிமுறைகள்

மரணத்தை கூட வரவைக்கும் தவறான உடல் எடை குறைப்பு வழி முறைகள்



டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.G.வர்தினி .,BHMS.


Danger  of Wrong W ay to Reduce Weight-




இந்த  தலைமுறையில்  இருக்கும் நம் அனைவரும் உடலின் எடை மீது மிக அதிக கவனம் செலுத்துகிறோம். இப்போதைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையை குறைக்க தீவிர சிந்தனை செய்கின்றனர். அதற்காக அவர்கள் அபாயகரமான காரியங்கள் பல செய்கின்றனர்.


எடை இழக்க பல வழிகள்  உண்டு.  ஆனால்  அது அனைத்தும் நல்லது அல்ல. இதனால் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் ஆற்றலும் உள்ளது. உடல்  எடையை குறைப்பதற்காக நம் மேற்கொள்ளும் வழிகளில்  உள்ள பயங்கரத்தை நாம் பார்ப்போம் .


எடை இழக்க ஆரோக்கியமற்ற வழிகள் :-


உணவை  தவிர்த்தல்  (Skipping  Meals , Fasting)

உடல் எடையை தவிர்க்க நம் அனைவரும் கையாளும்  ஒரே  வழி  உணவுகளை  தவிர்ப்பதாகும்.  ஆனால் இது  உடலுக்கு  மிக  மோசமான  விளைவுகளை  தரவள்ளது. மேலும்  உணவுகளை   தவிர்த்துக்கொண்டே வந்தால் காலப்போக்கில் வளர் சிதை மாற்றம்  அடைந்து உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது . கடுமையாக   விரதம் இருந்தால் உடல் எடை   குறையலாம் . ஆனால்   நினைவில்  கொள்ளுங்கள்  நீங்கள்   இழக்கும்  எடை , விலைமதிப்பற்ற  தசைகளையும்  , வளர்ச்சிதை   மாற்றத்தையும்  குறைக்கிறது . இதனால்  வளர்ச்சிதை மாற்ற  நோய்கள்  மற்றும்  நீரழிவு   ஆபத்துகள்  வர  வல்லது .



குறைந்த   கலோரி  உணவுகள் :-

நம்  உடலுக்கு  கொழுப்புகள்  மிக  முக்கியம் . ஆரோக்கியமான   கொழுப்புகள்  , கொழுப்பை   எரிக்க   உதவுகிறது . குறைந்த  கலோரி  உணவுகளை  எடுப்பதால்  உடலுக்கு   தேவையான  வைட்டமின்கள்  மற்றும்  தாதுக்கள்   நமக்கு  சரிவர  கிடைப்பதில்லை .இதனால்  உடல்  எடையை   மட்டும்   குறைக்காமல்   நாம்  பல்வேறு  நோய்களையும்  வரம்  பெற்று  வாங்கிக்கொள்கிறோம்.

மருத்துவ  மேற்பார்வைப்படி  ஒரு  நாளைக்கு  1,200 கலோரிகள்   எடுக்க வேண்டும் . அவ்வாறு  எடுப்பதனால்  ஆரோக்கியமான  எடையோடு   நோயற்று  வாழலாம் .



மருந்துகள்   மற்றும்  மாத்திரைகள்  :-



எடை  இழப்புக்கான  மாயமான    மாத்திரைகள்  எதுவும்  இல்லை . ஆனால்  துரதிருஷ்டவசமான , கோகைன்  போன்ற   மருந்துகள்  விரைவான  ஆற்றல்  தருகின்றது . மேலும்  அது   இதயத்தையும் , மூளையையும்  கடுமையாக  பாதிக்கின்றது . மேலும்  மலச்சிக்கலையும்  உண்டுபடுத்தும் .இதை  தவிர்த்து  மேலும் , பல்வேறு   பாதிப்புகளையும்  வழங்கவள்ளது .


நீங்கள்   மருந்துகளை   எடுத்துக்கொள்ளும் .  நபராக  இருந்தால்  உங்கள்   மருத்துவரிடம்  அதன்  பக்கவிளைவுகளையும்  கேட்டுக்கொள்வது  நல்லது .



Fad Diet :-

ஆரோக்கியமற்ற   மற்றும்  சமநிலையற்ற  உணவு   மூலம்  விரைவான  எடை  இழப்பாகும் .எந்தவித  உடற்பயிற்சியும்  இல்லாமல்  இது  எடையை  குறைக்க  வல்லது . ஆனால் , இது  நமது   உடலில்  இருக்கும்  நீரினை  குறைக்கிறது .



அதிக    உடற்பயிற்சி  :-


ஊட்டச்சத்து  குறைவாக  உள்ளவர்கள்  , உடல்  எடையை  குறைக்க  தீவிரமாக  உடற்பற்சி  மேற்கொண்டால்  அது  பல  மோசமான  விளைவுகளை   தரவல்லது . இதனால்  நீர்ப்போக்கு  மற்றும்  *Electrolyte Imbalance*  போன்றவை  ஏற்படும் . உடல்  எடையை  இழக்க  வேண்டியது   அவசியம் . ஆனால்  அது  ஆரோக்கியமான  உணவு  மற்றும்  உடற்பயிற்சி   மூலம்  மேற்கொள்ள  வேண்டும்.




கடுமையாக   வாந்தி  எடுத்தல் :-



இப்போதைய   இளையர்கள்  பலர்  , தங்கள்  உண்டபின்  , அது  உடல்  எடையை  அதிகரிக்கும்  என்று எண்ணி ,சுயமாக  கட்டாயமாக  வாந்தி  எடுக்கின்றனால்  இதனால்  உடல்  எடை  குறையும்  என்கிறார்கள் . இது  மிகவும்  தவறு . மீண்டும்  மீண்டும்  வாந்தியெடுத்தால்  உமிழ் நீர்ச்சுரப்பிகளில்   நீர்போக்கு  மற்றும் வீக்கத்தை  ஏற்படுத்தும்   அதே  போல் , வயிற்று  அமிலம்  உங்கள்   உணவுக்குழாய்  மற்றும்  பல்  சிதைவை  ஏற்படுத்தும்   மேலும்  Bullumia  என்ற  வழிவகுக்கும் . 




நீர் சத்தை  இழக்கும் கழிவு நீக்க  மற்றும்  Detox   Plans :-

உடலில்  இருக்கும்  நீரையும்  , மலத்தையும்  வெளிக்கொண்டு  வருவது  ஆபத்தானது .  இதனால்  நீர்போக்கு  மற்றும்  Electrolyte  Imbalance போன்றவை  ஏற்படுத்தும் . மருத்துவமேற்பார்வை இல்லாமல்    திரவம்  நிறைய  இழப்பு  ஆபத்தானது .மேலும்  உண்ணாவிரதத்தை  கடைபிடித்தால்  அது  அபாயகரமான   பல  பாதிப்புகளை  தரவல்லது .அதற்கு  பதிலாக , நீங்கள்  சாப்பிட  வேண்டிவற்றை  கவனத்தில்  கொள்ளுங்கள்   உங்கள்  உடலை  சுத்தப்படுத்தவோ  அல்லது  குறைக்கவோ  விரும்பினால் , நிறைய  தண்ணீர்  குடிக்கவும் ,உயர்  ஃபைபர்  உணவுகளை  நிறைய  சாப்பிடவும் . 




அறுவை  சிகிச்சை :-




இது , கடைசியான  வழி , உடல்  எடை  குறைக்க  பல்வேறு வழிகள்   தோற்றுபோனாலும்  அறுவை  சிகிச்சை   எடையை  குறைக்கலாம் .



ஆனால்  இது  பல்வேறு   பக்கவிளைவுகளை   தரவல்லது .
உடல்  இழப்பு   என்பது  ஆரோக்கியமான  எடையை  தக்கவைப்பதே  ஆகும் . நாம்  வாழும்  வாழ்க்கைக்கு  ஏற்ப  நமது  உணவு  முறைகளை   தேர்ந்தெடுக்கவேண்டும் . மேலும்  ஆரோக்கியமான  உணவு, மற்றும்  ஆரோக்கியமான  உடற்பயிற்சியை  நோயில்லாத  வாழக்கைக்கு  வழிசெய்யும்.



இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை)

Post Comment

செவ்வாய், மே 30, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -5)-உடல் எடையை குறைக்க

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -5)
பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் எடையினை குறைப்பதற்கு


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS


அழகை விரும்பும் யாரும் குண்டாய் இருக்க விரும்புவதே இல்லை . தொந்தி ,உடலில் அதிகமான சதை ,கூடி கொண்டே போகும் உடல் எடை இதை மையமாய வைத்து  உலகத்தில் எத்தனை  எத்தனை வியாபரங்கள் ..

காதில் பூ அல்ல பூக்கூடை வைக்கும் அளவுக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லா மருத்துவ துணுக்குகள் ,மருத்துவ கதைகள் .எது உண்மை எது பொய் ?. உடல் எடையை குறைப்பது உண்மையில் எளிது அனால் இழந்த எடையை தக்க வைத்து கொள்ளத்தான் யாருக்கும் இங்கே வழிகள் தெரியவில்லை.


வீட்டில் தூங்கும் உடல் பயிற்சி இயந்திரங்கள் ,மறந்து போன யோகா பயிற்சிகள் ,நடக்க மறந்த கால்கள் ,ஆசையை அடக்க முடியாத வாய்கள் என எல்லாமே இங்கே துவங்குவது எளிது ..கடைபிடித்து காப்பற்றுவது தான் கஷ்டம் .


ஆயுர்வேதத்தில் உடல் எடை கூட காரணம் சரியான ஜீரண சக்தி இல்லாத நிலை –ஆமம் என்கிற பசி அறியா உடலில் தேங்கும் விஷம் –இதை தான் நவீன மருத்துவம் மெட்டபாலிக் சின்ட்றோம் என்கிறது .தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணம் வாழ்வியல் மாற்றங்கள் ,மன அழுத்தம். இந்த வேகமான உலகத்தில் சாப்பிட்டுவது ,பார்டி கொடுப்பது ,டீ கொடுத்து உபசரிப்பது ,குளிர்பானங்களை கொடுத்துதான் அன்பை வெளிப்படுத்தி அன்பானவர்களை நோயாளியாக்கி விடுகிறோம்- உணவு கலாசாரம் விஷம் உள்ளதாய் இருக்கிறது.


ஆயுர்வேதம் உடல் எடை குறைக்கும் சிகிச்சைகளை லங்கண சிகிச்சை முறைகளை ,கபத்தை குறைக்கும் அப தர்பண சிகிச்சை முறைகளை கையாள சொல்கிறது ..இந்த சிகிச்சை முறைகளை பின்னர் வாய்ப்பு வரும்போது விரிவாக பார்போம்


பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் எடையினை குறைப்பதற்கு :-

ஆயுர்வேத மூலிகைகள் :-

  •              கோரைகிழங்கு
  •              ஆவில் என்ற புங்கம் வேர்
  •              குக்குலு
  •              பிரம்மி
  •              சீந்தில்
  •              கற்றாழை
  •              கடுக்காய்
  •              சுக்கு
  •              மிளகு
  •              திப்பிலி
  •              மஞ்சள்
  •              மரமஞ்சள்
  •              கொட்டம்
  •              வசம்பு
  •              கொடுவேலி
  •              அதிவிடயம்
  •              கடுகரோஹினி
  •              அதிமதுரம்



ஆயுர்வேத மருந்துகள் :-

  •              வராதி கஷாயம்
  •              வரணாதி கஷாயம்
  •              லோஹாசவம்
  •              ஆரோக்ய வர்தினி வடி
  •               மேதோஹர குக்குலு
  •              நவக குக்குலு
  •              திரிபலா சூர்ணம்
  •              அமிரதாதி குக்குலு
  •              திரிபலா குக்குலு
  •              குக்குலு பஞ்ச பல சூர்ணம்




ஆயுர்வேத சிகிச்சைகள் :-


  • o             உத்வர்தணம்
  • o             வமனம்
  • o             விரேசனம்
  • o             லேகன வஸ்தி
  • o             ஸ்வேதனம்
  • o             யோகாசனம்
  • o             வியாயாமம்



லைப்போ சக்ஷன் என்று கொழுப்பை கரைக்கும் அறுவை சிகிச்சை அவசியம் இல்லை ..நீராவி குளியலில் உட்கார வைத்து உடலின் நீர் சத்து குறைந்த உடன் உடனடியாக ஏற்படும் உடல் இழப்பை காட்டி ஒரு கிலோ குறைக்க இத்தனை ரூபாய் என்று ,இத்தனை இஞ்ச் குறைக்க இவ்வளவு பணம் என்று பணம் பறிக்கும் கொள்ளை கும்பலை பற்றி அறிந்து கொள்வது அவசியம் .உடல் எடை குறைக்க உதவும் ஸ்பா போன்ற அழகு நிலையங்களில் பக்க விளைவும் ஆபத்துமே நிறைந்து உள்ளது .


ஸ்தௌல்யம் என்கிற உடல் எடை கூடிய நிலையை மாற்ற ஆயுர்வேதம் இன்னும் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள சொல்கிறது ..எந்த நோயால் உடல் பருமன் உண்டாகிறது என்று தெரிந்து தக்க உணவு அட்டவணை ,செய்ய வேண்டியவை என்ன ,செய்ய கூடாதவை என்ன என்று ஆயுர்வேத பட்டியல் நீள்கிறது .தகுந்த ஆயுர்வேத சித்த மருத்துவரை அணுகி உடல் எடை குறைய தக்க ஆலோசனை பெற்றே உடல் எடையை குறைப்பது நல்லது .

சிறந்த ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)

Post Comment

திங்கள், ஜனவரி 16, 2012

குண்டா இருக்கீங்களா ? - உடல் எடை குறைய நல்ல மருந்து -நவக குக்குலு Navaka Gugglu


குண்டா இருக்கீங்களா ? - உடல் எடை குறைய நல்ல மருந்து -நவக குக்குலு Navaka Gugglu
(ref- பைஷஜ்ய ரத்னாவளி - மேதோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகள்:

1.            சுக்கு – சுந்தீ                                     10 கிராம்
2.            மிளகு – மரீச்ச                                   10           “
3.            திப்பிலி – பிப்பலீ                            10           “
4.            கொடிவேலிவேர் – சித்ரகமூல                           10           “
5.            வாயுவிடங்கம் – விடாங்க                        10           “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       10           “
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     10           “
8.            கோரைக்கிழங்கு – முஸ்தா                        10           “

செய்முறை:      

இவைகளை நன்கு பொடித்துச் சலித்து சுத்தி செய்த குக்குலு (ஷோதித குக்குலு) 90 கிராம் சேர்த்துக் கல்வத்திலிட்டு திரிபலா கக்ஷாயம் விட்டு துண்ணியதாக அரைத்து 500 மில்லி கிராம் மாத்திரைகளாக்கி நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தண்ணீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 


உடல் பருமன் (மேதோவ்ருத்தி (அ) ஸ்தூலதா), உடல் துர்நாற்றம் (சரீர தௌர்கந்த்ய), ஆமவாதம் (ஆமவாத), கீல்வாயு (அ) வாதம் (சந்திகாதவாத), பேராசன நரம்புவலி (க்ருத்ரஸி), நாட்பட்ட புண்கள் (புராணவ்ரண), கொப்பளங்கள், கட்டிகள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கொடம்புளி சூப்புடன் -இந்த மாத்திரையை காலை மாலை இரண்டு சாப்பிட வெகு வேகமாக எடை குறையும் ..
  2. வாரனாதி கஷாயம்  அல்லது வராதி கஷாயம் + இந்த மாத்திரையும் எடை குறைய பயன்படுத்தலாம் ..
  3. மேலே சொன்ன அனுபானம் கிடைக்காதவர்கள் ..திரிபலா கஷாயம் அல்லது  கொள்ளு கஷாயம் கூட நல்ல பலன் தரும்
  4. உடல் குண்டானதால் ஏற்படும் கால் வலி ,வாத நீர்  போன்றவற்றுக்கும் இந்த மாத்திரை வேலை செய்யும்
  5. ஆகாரத்தில் கட்டுப்பாடு ,சரியான உடல் பயிற்சியும் அவசியம் செய்யவேண்டும்

Post Comment