மர்ம காய்ச்சல் தீர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மர்ம காய்ச்சல் தீர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

காய்ச்சல் வகைகளும் சிகிச்சை முறைகளும் -ஆயுர்வேத இரகசியங்கள் - Dathugatha...


காய்ச்சல் வகைகளும் சிகிச்சை முறைகளும் -ஆயுர்வேத இரகசியங்கள் - Dathugatha Jwara & Its Treatment

 

நமது உடம்பில் ஏழு தாதுக்கள் என்னும் அடிப்படை கூறுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா ?

 

எல்லா வகை காய்ச்சளையும் விரட்டும் மிக பெரிய ரகசியம் தெரிய வேண்டுமா ?

 

தாதுக்களை  பாதிக்கும் அளவுக்கு உள்ள காய்ச்சலை போக்கும் ரகசியம் அறிந்து கொள்ள வேண்டுமா ?

காயச்சல் காரணம் எந்த வைரஸ் கிரிமி எது  இருந்தாலும் அதில் இருந்தும் மீள ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம் !!!

 

ஆயுர்வேதத்தின்படி, உடல் வெப்பநிலையின் ஜெனரேட்டர் நெற்றியில் அமைந்துள்ளது. ஆயுர்வேதத்தில், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் ஏற்படும் இடையூறு ஜ்வாரா என்று அழைக்கப்படுகிறது, இது காய்ச்சல் மருத்துவக் கருத்தோடு தொடர்புடையது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காய்ச்சல் இரைப்பைக் குழாயின் உள்ளே (அதாவது அமசாயா) வெப்பம் குறைந்து, அதிக புற வெப்பநிலையுடன் தொடர்புடையது. ஏறக்குறைய அனைத்து தொற்று நோய்களும் (வைரஸ் / பாக்டீரியா) உயர்த்தப்பட்ட உடல் வெப்பநிலையை முக்கிய அம்சமாகக் காட்டுகின்றன ஜ்வாராவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனமிகவும் தீவிரமான அடிப்படை நிலையின் அறிகுறியாக காய்ச்சல் அடையாளம் காணப்பட்டு அதற்கேற்ப சிகிச்சையளிக்கப்பட வேண்டும். ஆபத்தான அறிகுறிகளில் மூச்சுத் திணறல், வாந்தி, நனவு இழப்பு, பொருந்துகிறது அல்லது வலிப்புத்தாக்கங்கள், தடிப்புகள் போன்றவை அடங்கும்.

 

Facebook id https://www.facebook.com/drsaleem.ayush

Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S...

​ Facebook  Group Link https://www.facebook.com/groups/22238...

youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...

 Instagram link https://instagram.com/drsaleemayush?i...

Twitter link https://twitter.com/AyushDrsaleem

Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

 

 

ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் ஆயூஷ் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை#Ayush #Alshifaayush #curesure4u #curesure

#dathugathajwara #puoayurveda  #jwaraayurveda #panchakarma #panchkarmatreatment

#ayurveda #ayurvedawellness #fever #ayurvedatreatment #chikitsasutra #காய்ச்சல்ஆயுர்வேதசிகிச்சை


Post Comment

புதன், மார்ச் 08, 2017

பன்றி காய்ச்சலை விரட்டும் -கப ஜ்வர குடிநீரில் உள்ள மூலிகைகள் -படங்களுடன்

ஸ்வைன் ஃப்ளு என்கிற பன்றி காய்ச்சலை தடுக்கிற மருந்தாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள குடிநீர் இந்த கப ஜ்வர குடிநீர் ..


சாதாரண காய்ச்சலுக்கு நில வேம்பு  குடிநீர் பயன் பட்டுவருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம் ..ஆனால் சளி .அதிக இருமல் ,தொண்டை வலி ,காய்ச்சல் என்று கபம் சார்ந்த்சஅறிகுறிகள் உள்ள  பன்றி காய்ச்சலுக்கு சந்தனம் ,வெட்டிவேர் ,விலாமிச்சம் வேர் போன்ற அதிக குளிர்ச்சி உள்ள நிலவேம்பு குடிநீர் பலன் அளிக்காது ..


கப சுர குடிநீர் கீழ் கண்ட மூலிகைகளை உள்ளடக்கியது ..
சுக்கு
திப்பிலி
இலவங்கம்
சிறுகாஞ்சொறி வேர்
அக்கிரகார வேர்
முள்ளி வேர்
கடுக்காய் தோல்
ஆடாதொடை இலை
கோஷ்டம்
சீந்தில் தண்டு
சிறு தேக்கு
நிலவேம்பு சமூலம்
வட்ட திருப்பி வேர்
கோரை கிழங்கு ,

சுக்கு 

\\\
திப்பிலி 


இலவங்கம் 




சிறுகாஞ்சொறி வேர் 



அக்கிரகார வேர் 



முள்ளி வேர் 

கடுக்காய் தோல் 


ஆடாதொடை இலை


கோஷ்டம் 



சிறு தேக்கு 



நிலவேம்பு சமூலம்




வட்ட திருப்பி வேர் 



கோரை கிழங்கு


மேலே கூறிய அனைத்து மூலிகைகளையும் சம அளவில் சேர்த்து -கஷாயமாக -குடிநீராக அரைத்து வைத்து கொள்ள வேண்டும் .

பத்து கிராம் கஷாயத்தை இருநூறு மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி ஐம்பது மிலியாக்கி வடிகட்டி காலை மாலை ஆகாரத்திற்கு முன் தொடர்ந்து பத்து நாட்கள் பருகி வர பன்றி காய்ச்சல் -குணமாகும் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர  பன்றி காய்ச்சல் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திட முடியும் ,.

இப்போது இந்த கப சுர குடிநீர் -ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக கிடைக்கிறது .மக்கள் பயன்பெற அரசு மருத்துவமனையை நாடலாம் ..வசதி வாய்ப்புள்ளவர்கள் அருகில் உள்ள படித்த சித்த மருத்துவரை அல்லது படித்த ஆயுர்வேத மருத்துவரை அணுகி எளிதாக பெறலாம் ..

நோய் எதிர்ப்பு சக்தி பெருக  -இந்த மருந்து பெரிதும் உதவும் .
ஆலோசனை மற்றும் தேவைக்கு வேண்டிய முகவரி 
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000

Post Comment

செவ்வாய், மார்ச் 07, 2017

பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து டேமிஃப்ளு -ஆயுர்வேத சித்த மூலிகை மருந்தில் இருந்து தயாரிக்க ப்படுகிறது

பன்றி காய்ச்சலை தடுக்க உதவும் டேமிஃப்ளு மாத்திரை –அண்ணாச்சி பூ என்ற ஆயுர்வேத –சித்த மருத்துவ மூலிகையில் இருந்தே தயாரிக்கபடுகிறது ..


Tamiflu (oseltamivir phosphate)  என்கிற உலகளவில் ஃப்ளு வைரசை தடுக்க பயன்படுகிற மருந்து ஓர் இயற்கை மூலப்பொருளில் இருந்தே தயாரிக்கபடுகிறது .சிக்சிமிக் ஆசிட் என்ற மூல பொருளில் இருந்து தயாரிக்கபடுகிற இந்த மருந்தின் மூலம் ஒரு சித்த /ஆயுர்வேத மருந்து என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் ..



மஞ்சளில் ,வேம்புவில் வைரசை அழிக்க பயன்படுகிறது என்பதை அறிந்தே நமது தமிழ் /இந்திய மக்கள் அம்மை போன்ற நோய்களை கட்டுபடுத்த /வராமல் தடுக்க வேப்ப இலைகளை பயன்படுத்தினர்..அல் ஷிபா ஆயுஷ் மருத்துமனை .


இந்த வரிசையில் –நமது மசாலா உணவுகளில் /பிரியாணிகளில் பயன்படுத்தபடுகிற இந்த அண்ணாச்சிபூ ஒரு மிக சிறந்த வைரஸ் கொல்லி என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம் –

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்.

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை  90 4333 6000

Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

காரணமில்லாத நாள்பட்ட காய்ச்சலை ஓட ஓட விரட்டும் -மஹாஜ்வராங்குச ரஸம் (Maha Jwarankusa Ras)

காரணமில்லாத நாள்பட்ட காய்ச்சலை ஓட ஓட விரட்டும் -மஹாஜ்வராங்குச ரஸம் (Maha Jwarankusa Ras)
                                                                                                
(ref-பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக  10           “
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்



3.            சுத்தி செய்த நாபி ஷோதித நாபி      10 கிராம்
4.            சுத்தி செய்த ஊமத்தன் விதை ஷோதித
தத்தூரபீஜ  30           “

                இவைகளைத் தனித்தனியே சிறிது எலுமிச்சம்பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) அல்லது இஞ்சிச்சாறு (ஆர்த்ரக ஸ்வரஸ) சேர்த்து நன்கு அரைத்து விழுதாக்கிச் சேர்த்துப் பின்

5.            திரிகடு சூர்ணம் த்ரிகடு சூர்ண 120 கிராம் கலந்து 

எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்டுள்ள இரு வகைச் சாறுகள் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்துப் பதத்தில் 50 மில்லிகிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகள் இஞ்சிச்சாறு அல்லது தேனுடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 
நாட்பட்ட சுரங்கள் (புராண ஜ்வர), விட்டுவிட்டு வரும் சுரங்கள், டைபாய்டு போன்ற விஷசுரங்கள், போன்ற பலவித காய்ச்சல்கள், ஜன்னி ,பொதுவாக இதனை தசமூலாரிஷ்டம், கஸ்தூரியுடன் கலந்து கொடுப்பது வழக்கம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

  1. பெயர் தெரியாத நாள்பட்ட காய்ச்சலை இந்த மருந்து அற்புதமாக நீக்கும் 
  2. இதனுடன் லிங்க சிந்தூரம் அம்ருதாரிஷ்டம் உடன் -காய்ச்சல் விதிகளுடன் இந்த மருந்தை தரும் போது எல்லா மர்ம காய்ச்சலும் மாயமாகிடும் 
  3. சரியான்  அளவில் நோயாளிக்கு கொடுத்தால் ஆண்டிபயாடிக் போல வேலை வேலை செய்யும் 
  4. டைபாய்ட் காய்ச்சலுக்கு இந்த மருந்து மிக நன்றாக வேலை செய்யும் 

Post Comment

திங்கள், அக்டோபர் 07, 2013

விடாத காய்ச்சலை விரட்டும் பவழ மல்லி என்னும் பாரிஜாதம்

விடாத காய்ச்சலை விரட்டும் பவழ மல்லி என்னும் பாரிஜாதம் 

டாக்டர்.அ,முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.,MBA





காய்ச்சல் தொடர்ந்து இருக்கும் போதும் ,அதிகமாக இருக்கும் போதும் நாம் வேறு வழியே இல்லாமல் ஆங்கில மருந்தை நாட வேண்டி உள்ளது . ஆண்டி பயாடிக் மருந்துகளையும் ,ஆண்டி பைரெட்டிக் என்னும் காய்ச்சலை குறைக்கும் மருந்துகளை பயன்படுத்தினாலும் குறையாத காய்ச்சல் பல இப்போது நிறைய உள்ளது .


மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் –பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகமாகி நமது பர்சை காலி செய்து விடும் நிலை தான் இன்றும் உள்ளது .


எனக்கு தெரிந்த நோயாளி ஒருவருக்கு காய்ச்சல் தொடந்து விட்டு விட்டு ஒரு வாரமாக இருந்தது –எல்லா பரிசோதனைகளும் சரியாக இருந்தது .அவருக்கு செய்யாத பரிசோதனைகளே இல்லை என்ற அளவுக்கு செய்து விட்டு இது பெயர் தெரியாத வைரஸ் காய்ச்சல் என்று சொல்லி ஆங்கில சிகிச்சைகள் தொடர்ந்தன . முதுகில் ஊசி போட்டு CSF என்கிற மூளையில் உள்ள திரவத்தில் கிருமி உள்ளாதா என்ற பரிசோதனை கூட அவருக்கு செய்தாகி விட்டது –அதுவும் நார்மல் . பத்து நாட்களுக்கு மேல் விட்டு விட்டு வரும் காய்ச்சல் என்ற நிலையில் எனக்கு அவரது மனைவி என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டார்கள் அவர் இருக்கும் நான் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவு . நடந்த விஷயங்கள் அனைத்தும் என்னிடம் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது . ஏதாவது செய்ய முடியுமா என்ற அழுகை குரல் . எனது ஆசான் வைத்ய உஸ்மான் அலி அவர்கள் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது . பவள மல்லி இலையை குடிநீராக்கி கொடுத்து வர சொன்னேன் .அந்த பெரிய மருத்துவ மனையிலே அவருக்கு ஒரு நாள் கொடுத்த உடன் காய்ச்சல் வருவது முற்றிலுமாக நின்று முழுவதுமாக சரியானார் .



இதே போல பல நோயாளிகளின் - பல பெயர் தெரியாத காய்ச்சலை குணமாக்கிய வித்தை இந்த பவள மல்லி இலைக்கு உள்ளது எனபது தான் கூடுதல் தகவல் .



இப்போதும் காய்ச்சல் என்ற உடன் டெங்கு ,அணுக்கள் குறைந்து போகிற காய்ச்சல் என்று அலறி அடித்து திருநெல்வேலியில் உள்ளா பெரிய பெரிய மருத்துவமனையில் நாற்பது ஆயிரம் ரூபாய் ,எண்பது ஆயிரம் ரூபாய் , லட்சதிற்கும் மேல் பணத்தை செலவு செய்தவர்கள் பல ஆயிரக்கணக்கில் எனது ஊரு கடையநல்லூரில் உள்ளனர் .


இந்த மூலிகையின் பெயர் –பவள மல்லி என்கிற பாரிஜாதம்



தாவரவியல் பெயர் -Nyctanthes arbortristis

பெயர் தெரியாத காய்ச்சல் ,,,
எலி காய்ச்சல் ..
நிண நீர் நெரி கட்டிய காய்ச்சல் ...
விடாத காய்ச்சல் ..
கிருமிகளால் வரும் காய்ச்சல் ...
குமட்டல் ,வாந்தியுடன் வருகிற காய்ச்சல்
குளிர் காய்ச்சல் .
மலேரியா காய்ச்சல்
அணுக்கள் குறைகிற காய்ச்சல்
பெயர் தெரியாத காய்ச்சல்
வைரஸ் காய்ச்சல்


தயாரிக்கும் முறை

 பாரிஜாதம் என்னும் பவள மல்லி இலைகளை பத்து எண்ணம் 
( 10 numbers ) பறித்து இருநூறு மிலி தண்ணீர் ஊற்றி  இருபத்தைந்து மிலியாக கொதிக்க வைத்து வடி கட்டி வற்ற வைத்து குடிக்க கொடுக்க வேண்டும் .இரண்டு வேளை முதல் மூன்று வேளையும் கொடுக்கலாம் .வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது –ஐந்து நாட்கள் வரையும் கொடுக்கலாம்

பலன் -

மேலே சொன்ன காய்ச்சல் உடனே சரியாகும்..


ஆங்கில மருந்தோடு கொடுக்கலாமா ?

ஆம் ,எந்த பயமும் இல்லாமல் ஆங்கில மருந்தோடு கொடுக்கலாம் .


நிலவேம்பு குடிநீர் கிடைக்காதவர்கள் இந்த குடிநீரை மாற்றாக பயன் படுத்தலாம் .

இடுப்பு வலிக்கும் ,கழுத்து வலிக்கும் ,வலிகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும்  இந்த குடிநீர் சரியாக கேட்கும் என்பது கூடுதல் தகவல்

குறிப்பு –காய்ச்சல் –ஜுரம் பல காரணிகளால் வருகிறது .தக்க மருத்துவர் ஆலோசனையுடன் இதை பயன் படுத்துவது நல்லது


சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )



Post Comment

வியாழன், ஜனவரி 17, 2013

பத்து நிமிடத்தில் காய்ச்சலின் வெப்பம் போக்கும் -காலகூட ரஸ-(kAALKOOTA RAS)


பத்து நிமிடத்தில் காய்ச்சலின் வெப்பம் போக்கும் -காலகூட ரஸ-(kAALKOOTA RAS)
(ref-பஸவராஜீயம் - ஸன்னிபாதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           30 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக       50           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.           சுத்தி செய்த மனோசிலை (பொடித்தது) ஷோதித மனசில   60 கிராம்
4.            தாமிர பற்பம் தாம்ரபஸ்ம                              40           “
5.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) டங்கண பஸ்ம      70           “
6.            சுத்தி செய்த தாளகம் (பொடித்தது) ஷோதித ஹரிதாளக  90           “
7.            பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) ஹிங்கு           10           “
8.            சுத்தி செய்த நாபி (குறிப்பிட்டுள்ள சாறுகளில் ஒன்று சேர்த்து
அரைத்து விழுதாக்கியது) ஷோதித வத்ஸநாபி         120         “

இவைகளையும் நன்கு பொடித்துச் சலித்த

9.            கொடிவேலி வேர் சித்ரக                                90           “
10.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்        100         “
11.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்       100         “
12.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                      100         “
13.          சுக்கு சுந்தீ                                           120         “
14.          மிளகு மரீச்ச                                        120         “
15.          திப்பிலி பிப்பலீ                                      120         “
16.          வசம்பு வச்சா                                        10           “

இவைகளின் சூரணமும் சேர்த்து நன்கு கலங்க அரைத்துப் பின்னர்,

1.            இஞ்சிச்சாறு ஆர்த்ரக ஸ்வரஸ
2.            கொடிவேலிவேர் கஷாயம் சித்ரக கஷாய
3.            எலுமிச்சம் பழச்சாறு ஜம்பீர ஸ்வரஸ
4.            பூண்டுச்சாறு லசுன ஸ்வரஸ
5.            குந்துமணி வேர் கஷாயம் குஞ்ஜாமூல கஷாய
6.            முருங்கப்பட்டை கஷாயம் சிக்ருத்வக் கஷாய
7.            எருக்கன் வேர் கஷாயம் அர்க்கமூல
8.            கலப்பைக் கிழங்குச் சாறு லாங்லிஸ்வரஸ
9.            சிறு செருப்படைச் சாறு ஹம்ஸபாடீஸ்வரஸ
10.          நொச்சியிலைச் சாறு நிர்க்குண்டீஸ்வரஸ
11.          வெற்றிலைச் சாறு நாகவல்லி பத்ர ஸ்வரஸ
12.          அழிஞ்சில் வேர்ச் சாறு அங்கோலமூல ஸ்வரஸ
13.          முருங்கை வேர்க் கஷாயம் சிக்ருமூல கஷாய
14.          பஞ்சகோல கஷாயம் பஞ்சகோல கஷாய
15.          பெருபஞ்சமூல கஷாயம் மஹாபஞ்சமூல கஷாய

இவைகளைத் தனித்தனியே உபயோகித்து ஒவ்வொன்றைக் கொண்டு மூன்று மணி நேரம் அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    

இதை மிகுந்த கண்காணிப்புடன் உபயோகிக்க வேண்டும்

அளவும் அனுபானமும்:     

ஒரு மாத்திரை வீதம் இரு வேளைகளுக்கு இஞ்சிச் சாற்றுடன் அல்லது சுக்குக் கஷாயத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 
டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் (ஜ்வர), ஜன்னி , இரைப்பிருமல் (தமகச்வாஸ), அமிர்தாரிஷ்ட, தசமூலாரிஷ்ட அல்லது கிராதாரிஷ்டத்துடன் இதனைச் சேர்த்துத் தருவது வழக்கம்.

தெரிந்த கொள்ள வேண்டிவை 
  1. பத்தே நிமிடத்தில் எந்த காய்ச்சலின் வெப்பத்தையும் வெகு வேகமாக குறைக்கும் அற்புத மருந்து 
  2. காய்ச்சல் எந்த நோயினால் வந்திருந்தாலும் இந்த மருந்து அறுபத மருந்து 
  3. சர்வ காய்ச்சல் நிவாராணி இது 

                

Post Comment