திங்கள், அக்டோபர் 07, 2013

விடாத காய்ச்சலை விரட்டும் பவழ மல்லி என்னும் பாரிஜாதம்

விடாத காய்ச்சலை விரட்டும் பவழ மல்லி என்னும் பாரிஜாதம் 

டாக்டர்.அ,முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.,MBA

காய்ச்சல் தொடர்ந்து இருக்கும் போதும் ,அதிகமாக இருக்கும் போதும் நாம் வேறு வழியே இல்லாமல் ஆங்கில மருந்தை நாட வேண்டி உள்ளது . ஆண்டி பயாடிக் மருந்துகளையும் ,ஆண்டி பைரெட்டிக் என்னும் காய்ச்சலை குறைக்கும் மருந்துகளை பயன்படுத்தினாலும் குறையாத காய்ச்சல் பல இப்போது நிறைய உள்ளது .


மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் –பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகமாகி நமது பர்சை காலி செய்து விடும் நிலை தான் இன்றும் உள்ளது .


எனக்கு தெரிந்த நோயாளி ஒருவருக்கு காய்ச்சல் தொடந்து விட்டு விட்டு ஒரு வாரமாக இருந்தது –எல்லா பரிசோதனைகளும் சரியாக இருந்தது .அவருக்கு செய்யாத பரிசோதனைகளே இல்லை என்ற அளவுக்கு செய்து விட்டு இது பெயர் தெரியாத வைரஸ் காய்ச்சல் என்று சொல்லி ஆங்கில சிகிச்சைகள் தொடர்ந்தன . முதுகில் ஊசி போட்டு CSF என்கிற மூளையில் உள்ள திரவத்தில் கிருமி உள்ளாதா என்ற பரிசோதனை கூட அவருக்கு செய்தாகி விட்டது –அதுவும் நார்மல் . பத்து நாட்களுக்கு மேல் விட்டு விட்டு வரும் காய்ச்சல் என்ற நிலையில் எனக்கு அவரது மனைவி என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டார்கள் அவர் இருக்கும் நான் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவு . நடந்த விஷயங்கள் அனைத்தும் என்னிடம் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது . ஏதாவது செய்ய முடியுமா என்ற அழுகை குரல் . எனது ஆசான் வைத்ய உஸ்மான் அலி அவர்கள் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது . பவள மல்லி இலையை குடிநீராக்கி கொடுத்து வர சொன்னேன் .அந்த பெரிய மருத்துவ மனையிலே அவருக்கு ஒரு நாள் கொடுத்த உடன் காய்ச்சல் வருவது முற்றிலுமாக நின்று முழுவதுமாக சரியானார் .இதே போல பல நோயாளிகளின் - பல பெயர் தெரியாத காய்ச்சலை குணமாக்கிய வித்தை இந்த பவள மல்லி இலைக்கு உள்ளது எனபது தான் கூடுதல் தகவல் .இப்போதும் காய்ச்சல் என்ற உடன் டெங்கு ,அணுக்கள் குறைந்து போகிற காய்ச்சல் என்று அலறி அடித்து திருநெல்வேலியில் உள்ளா பெரிய பெரிய மருத்துவமனையில் நாற்பது ஆயிரம் ரூபாய் ,எண்பது ஆயிரம் ரூபாய் , லட்சதிற்கும் மேல் பணத்தை செலவு செய்தவர்கள் பல ஆயிரக்கணக்கில் எனது ஊரு கடையநல்லூரில் உள்ளனர் .


இந்த மூலிகையின் பெயர் –பவள மல்லி என்கிற பாரிஜாதம்தாவரவியல் பெயர் -Nyctanthes arbortristis

பெயர் தெரியாத காய்ச்சல் ,,,
எலி காய்ச்சல் ..
நிண நீர் நெரி கட்டிய காய்ச்சல் ...
விடாத காய்ச்சல் ..
கிருமிகளால் வரும் காய்ச்சல் ...
குமட்டல் ,வாந்தியுடன் வருகிற காய்ச்சல்
குளிர் காய்ச்சல் .
மலேரியா காய்ச்சல்
அணுக்கள் குறைகிற காய்ச்சல்
பெயர் தெரியாத காய்ச்சல்
வைரஸ் காய்ச்சல்


தயாரிக்கும் முறை

 பாரிஜாதம் என்னும் பவள மல்லி இலைகளை பத்து எண்ணம் 
( 10 numbers ) பறித்து இருநூறு மிலி தண்ணீர் ஊற்றி  இருபத்தைந்து மிலியாக கொதிக்க வைத்து வடி கட்டி வற்ற வைத்து குடிக்க கொடுக்க வேண்டும் .இரண்டு வேளை முதல் மூன்று வேளையும் கொடுக்கலாம் .வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது –ஐந்து நாட்கள் வரையும் கொடுக்கலாம்

பலன் -

மேலே சொன்ன காய்ச்சல் உடனே சரியாகும்..


ஆங்கில மருந்தோடு கொடுக்கலாமா ?

ஆம் ,எந்த பயமும் இல்லாமல் ஆங்கில மருந்தோடு கொடுக்கலாம் .


நிலவேம்பு குடிநீர் கிடைக்காதவர்கள் இந்த குடிநீரை மாற்றாக பயன் படுத்தலாம் .

இடுப்பு வலிக்கும் ,கழுத்து வலிக்கும் ,வலிகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும்  இந்த குடிநீர் சரியாக கேட்கும் என்பது கூடுதல் தகவல்

குறிப்பு –காய்ச்சல் –ஜுரம் பல காரணிகளால் வருகிறது .தக்க மருத்துவர் ஆலோசனையுடன் இதை பயன் படுத்துவது நல்லது


சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )Post Comment

0 comments:

கருத்துரையிடுக