சனி, அக்டோபர் 05, 2013

மர்ம வகைப்பாடுகள்

மர்ம வகைப்பாடுகள்
           இந்தியாவில் மர்மம் என்ற அறிவியலானது மிக தொன்று தொட்டே மருத்துவத்தோடும், வாழ்க்கையோடும் பின்னி பிணைந்தே வளர்ந்துள்ளது. உலகிலேயே முதன்முதலில் அறுவை சிகிச்சை செய்த பெருமை பெற்ற சுஸ்ருதர் என்ற மருத்துவ மேதை தன் நூலில் உடலில் பிராண ஆற்றல் செறிவு மிக்க நூற்றியேழு தானங்களை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். அந்த தானங்களில் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றும், தவிர்க்க முடியாமல் செய்ய நேரிடின் மிக கவனமாகவே கையாள வேண்டும் என்றும் தெளிவுபட விளக்குகிறார்.
                மேலும் ஆயுர்வேத வல்லுநர்கள் தங்கள் நூல்கள் அனைத்திலும் மர்மம் என்ற சொல்லையே இத்தலங்களை குறிப்பிட பயன்படுத்தி உள்ளனர். மர்ம தானங்களை அவர்கள் நான்கு வகைப்பாடுகளாக விவரிக்கின்றனர்.
                மர்ம தானங்களின் பரிணாம அளவுகளை வைத்து ஒரு விரலளவு, இரு விரலளவு, மூன்று விரலளவு, நான்கு விரலளவு அல்லது கைமுட்டளவு உள்ள வர்மங்கள் அரைவிரல் அளவு உள்ள வர்மங்கள் அளவியல் வகைப்பாடுகளையும் அமைத்துள்ளனர்.
வகைப்பாடுகளின் விவரம்
  1. உடற்கூறுபாட்டியல் வகைப்பாடு (Regional Classification)
  2. அமைப்பியல் வகைப்பாடு (Structural Classification)
  3. குறி குண வகைப்பாடு (Prognostic Classification)
  4. அளவியல் வகைப்பாடு (Metrical Classification)



  
          

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

சிறந்த பகிர்வு சார்,தொடருங்கள்

கருத்துரையிடுக