நெய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 21, 2017

உடலுக்கு கேடாகும் நெய்

உடலுக்கு கேடாகும் நெய்

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். வர்தினி .,BHMS.,



இந்தியர்களுக்கு, நெய் பாரம்பரிய மிக்க உணவு. பல நூற்றாண்டுகளாக நமது சமையல் அறைகளில் நெய் ஆதிக்கம் செலுத்துகிறது. இனிப்புகளில் நெய் பயன்படுத்துவது அவர்களின் தரம் மற்றும் செழுமையின் சின்னமாக கருதப்பட்டது.

ஆரோக்கியமான கொழுப்பு உணவு மூளை சரியாக இயங்க தொடங்குகிறது மேலும் ஆயுர்வேத சூழலில், நீண்ட ஆயுள், புத்துயிர், இளமை தோற்றத்தை பராமரிப்பது மற்றும் முழு உடலின் மீளுருவாக்கம் ஆகியவற்றிலும் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.

மேலும் மத சடங்குகளுக்கு நெய் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

மேலும், மஞ்சள் காமாலை, ஹெப்படைடிஸ், Fatty Liver போன்ற நோய்க்கு நெய்யை தவிர்ப்பது நலம்.

நெய் அதிகமாக பயன்படுத்தினால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

மேலும், மருத்துவ ஆராய்ச்சி ரீதியாக, நெய், புற்றுநோயை தடுக்கிறது. ஜீரணத்திற்கு வழிவகுக்கிறது.



இத்தகைய மிக சிறந்த பண்புகளைக் கொண்ட நெய் நமக்கு எப்படி கிடைக்கிறது?

தூய்மையாகவா.? இல்லை கலப்படமாவா.?

நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நெய் பல பிராணிகள் விலங்குகளின் உடல் கொழுப்புடன் கலப்படம் செய்கின்றன என்று ஆய்வாக பரிசோதனை கூறுகிறது.

கடைகளில் கிடைக்கும் எந்த ஒரு நெய்யும் நெய் அல்ல! வனஸ்பதி தால்டாவையை நாம்  நெய் என்று நினைத்து வாங்குகிறோம்.

மாட்டு நெய் ஒரு வளமான CLA  (Conjugated Linolcic Acid) உள்ளது, மற்ற எண்ணெய்களை இந்த குறிப்பிட்ட கொழுப்பு அமிலத்தை கொண்டிருக்கவில்லை.

இந்தியாவில் கிடைக்கும் நெய் பெரும்பாலும் எருமை பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

நமக்கு கிடைக்கவிருக்கும் பெரும்பாலான எண்ணெய்கள் அதிக அளவு கொழுப்பு அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இது D.N.A வை சேதப்படுத்தும், Queensland Butter Board (QBB) இது Australia-வில் தடைசெய்யப்பட்டது, மேலும் Malaysia-வில் வேறு பெயரில் விற்கப்படுகிறது. இந்தியாவில் எந்த பெயரோ.?

தடைசெய்யப்பட்ட காரணம், இது பன்றி கொழுப்பால் செய்யப்பட்டது.

ஆராய்ச்சியின் அறிக்கையில் அசுத்தமதாகவும், மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுத்துவதாகவும் Kanhaiya Ghee  பற்றி கூறப்படுகிறது.

இதே போல் பல்வேறு நெய்களும் பல்வேறு கலப்படங்கள் உள்ளது.

கடைகளில் ,அழகான பேக்கிங்கில் கிடைக்கிற நெய் பெரும்பாலும் கலப்படம் உள்ளதாகவே உள்ளது என்கிறது ஒரு ஆய்வு நிறுவனம்

தாவர எண்ணையில் நிக்கல் கலந்து வேதி வினை புரிய வைத்து கட்டியாக்கி மேலும் சணல் எண்ணெய், பாமாயில் . நெய் மணம் கொண்ட எசன்ஸ் கலந்து கலப்பட நெய் மட்டுமே இப்போது எங்கும் கிடைக்கிறது ..

போலி அக்மார்க் முத்திரைகளை கொண்டுள்ளன பல நெய் தயாரிக்கும் நிறுவனங்கள் .





உடலை கெடுக்கும் போலி நெய் ..

நெய் இப்போது கிடைப்பதெல்லாம் பொய் ..


நெய் எப்போது கேடு ?

1.       வீட்டில் காய்ச்சாத –உருக்காத நெய் பெரும்பாலும் கலப்படமே –இந்த நெய் என்றுமே கேடு

2.       நல்ல தரமான் நெய்யே ஆனாலும் உருக்கி (சூடு செய்து உருக்கி ) சாப்பிடவில்லை எனில் கேடு தான் –அதனால் தான் நீர் சுருக்கி ,மோர் பெருக்கி ,நெய் உருக்கி  என்று நோய் அணுகா விதியில் சொல்லப்பட்டுள்ளது

3.       ஆமம் என்கிற வயிறு மந்த நிலையில் நெய் உண்பது கேடு –கபம் சார்ந்த நோய்களுக்கு நெய்யை தவிர்த்தல் நல்லது

4.       மஞ்சள் காமாலையில் நெய் முக்கியமாக சாப்பிடவே கூடாது

5.       Fatty liver என்கிற கொழுப்பு உள்ள கல்லீரல் நோயில் நெய்யை தவிர்த்தல் நல்லது

6.       நெய்யும் தேனும் சம அளவு சேர்த்து சாப்பிட கூடாது

7.       நல்ல சளி ,இருமல் –காய்ச்சல் உள்ள நிலையில் நெய்யை தவிர்த்தல் நல்லது –கர்ப்பிணிகள் அதிக இருமல் ,சளி ,காய்ச்சல் உள்ள நாட்களில் நெய்யை தவிர்த்தல் நல்லது

8.       செரிமானத்தின் தன்மை தெரியாமல் அளவுக்கு அதிகமாக நெய்யை சாப்பிடுவது வயிறு அஜீரணத்தை ,வயிற்று போக்கையும் ஏற்படுத்தும்

9.       கலப்பட நெய் இனிப்புகள் ,மைதா மாவில் கலக்கப்படும் நெய் பலகாரங்கள் உடல் நலத்திற்கு மிகவும் கேடு

10.   உடலில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் ,எடை அதிகமாக உள்ளவர்கள் ,இதய நோய் உள்ளவர்கள் ,கிட்னி நோய் உள்ளவர்கள் நெய்யை தவிர்த்தல் நல்லது


நெய்யா ? பொய்யா ?

கடைகளில் வாங்கி வீட்டில் பயன்படுத்தபடும் நெய்கள் தொண்ணூறு சதவீதம் பொய்யாக இருக்கும் என்று நாம் முன்பே சொன்னோம் .
நெய்யை வாங்கினாலே நம்மால் கண்டு பிடிக்க முடியாத நிலையில் ஸ்வீட் கடைகளில் ,இனிப்பு பலகாரத்தில் கலப்பட நெய்யால் ஆனா ஸ்வீட்சை எப்படி கண்டு பிடிப்போம் என்று யோசித்து பாருங்கள்
பிரபல்ய ஹோட்டல்களில் எப்படி கிலோ அறுநூறு ரூபாய் செலவாகும் ஒரிஜினல் நெய்யை சேர்ப்பார்கள் என்று நம்மால் நம்ப முடியும் ?

நல்ல நெய் மிக சிறந்த மருத்துவ குணம் உள்ளது

நல்ல நெய்யால் என்றுமே கேடு வர வாய்ப்பே இல்லை ..ஆனால் நல்ல நெய் கிடைக்கவில்லை என்று தெரிந்து கலப்பட நெய்யை அவசர கதியில் நம்மை போல் நம்பி பயன்படுத்துபவர்கள் மத்தியில் கலப்படத்தால் மட்டுமே நெய் நோய் தரும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கட்டுரை –அறிவே ஆயுதம் .பயன்படுத்தாத ஆயுதம் தேவை இல்லா சுமை .

வீட்டிலேயே நெய்யை பரிசோதிக்க சில எளிய முறைகள்.

ஒரு ஸ்பூன் அளவு நெய்யை நமது உள்ளங்கையில் போட்டால் அது உடனே உருக வேண்டும். அது உருகினால் அந்த நெய் தூய்மையானது. பொதுவாக, தூய நெய் உடல் வெப்ப நிலையில் உருகும்.

நெய்யை சூடு செய்தால், அது உடனே உருகி இருண்ட பழுப்பு நிற வண்ணம் தோன்றினால், அது சுத்தமான நெய், மாறாக, அது உருகுவதற்கு நீண்ட நேரம் எடுத்து, மஞ்சள் நிறமாக மாறினால் அது தூய்மையற்றது.

எளிய பரிசோதனையில் நெய்யின் போலித்தன்மையை தெரிந்து கொள்ள .- மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

நெய் பொய்யானால் –நெய்யில் செய்கிற ஆயுர்வேத சித்த மருந்துகள் எப்படி வேலை செய்யும் ?

கலப்படம் இல்லா நெய் மருந்துகள் மூலம் ஆயுர்வேத சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் இல்லவே இல்லை .எங்களால் முடிந்த அளவுக்கு இயற்கையாய் கிடைக்கிற நெய்யில் செய்த மருந்துகளை    கொண்டே சிகிச்சை அளிக்கிறோம் .

ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)

Post Comment

சனி, அக்டோபர் 29, 2011

பித்தம் அதிகமாக உள்ள -தோல் நோய்களில் -திக்தக க்ருதம்


பித்தம் அதிகமாக உள்ள -தோல் நோய்களில் -திக்தக க்ருதம்

 (ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதபிரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பேய்ப்புடல் – பட்டோல          50 கிராம்
2.            வேப்பம்பட்டை – நிம்பத்வக்       50           “
3.            கடுகரோஹிணீ – கடூகீ          50           “
4.            மரமஞ்சள் – தாருஹரீத்ரா        50           “
5.            பாடக்கிழங்கு – பாத்தா            50           “
6.            சிறுகாஞ்சூரி – துராலபா           50           “
7.            பர்பாடகம் – பர்பாடக             50           “
8.            பிராம்மி – ப்ராஹ்மீ               50           “
9.            தண்ணீர் – ஜல                  6.400     “


                இவைகளைக் கொதிக்கவைத்து 0.800 லிட்டர் ஆகக் குறுக்கிப் பசுவின் நெய் (க்ருத) 0.600 கிலோ கிராம் சேர்த்து அதில்
1.            பிராம்மி – ப்ராஹ்மீ                12.500 கிராம்
2.            கோரைக்கிழங்கு – முஸ்தா        12.500        “
3.            நிலவேம்பு – பூநிம்ப               12.500        “
4.            வெட்பாலை அரிசி – இந்த்ரயவ    12.500        “
5.            திப்பிலி – பிப்பலீ                 12.500        “
6.            சந்தனம் – சந்தன               12.500        “

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை சூடான பால் அல்லது வெந்நீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 





 அதிகமானதாகம் (த்ருஷ்ணா), பித்தக் கிறுகிறுப்பு (ப்ரம), எரிச்சல் (தாஹ), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), அக்கி (விஸர்ப்ப), ராஜபிளவை (பிடகா), பித்தகுஷ்டம் எனப்படும் உஷ்ணத்தாலேற்படும் தோல் நோய்கள், வேனல் கட்டிகள் (விஷ்போட்ட), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), கண்டமாலை (கண்டமால), புறையோடிய புண்கள் (நாடீவ்ரண), மற்றும் பலவித தோல் நோய்கள், அழற்சி நிலைகள்


தெரிந்து கொள்ளவேண்டியவை

  1. வறட்சியான தோல் நோய்களில் ,பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களில் இந்த மருந்து நல்ல வேலை செய்யும்
  2. உஷ்ணத்தை குறைக்க இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. நாள்பட்ட புண்களை ,புரையோடிய புண்களை ஆற்ற உதவும்
  4. சர்க்கரை நோயால் ஏற்படும் பாத எரிச்சலை  போக்கும் 

Post Comment

புதன், செப்டம்பர் 21, 2011

எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham


எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ராஜயக்ஷ்ம சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் – ஜல        2.400 லிட்டர்
2.            பசுவின் நெய் – க்ருத        0.600 கிலோ கிராம்
3.            பசுவின் பால் – கோக்ஷீர     0.600           “

இவைகளை நன்றாகக் கலந்து அதில்


1.            திப்பிலி – பிப்பலீ      25 கிராம்
2.            மோடி – பிப்பலீ மூல        25   “
3.            செவ்வியம் – சவ்ய          25   “
4.            கொடிவேலி வேர் – சித்ரக   25   “
5.            சுக்கு – சுந்தீ                25   “
6.            யவக்ஷாரம் – யவக்ஷார     25   “

                இவைகளைக் கல்கமாக அறைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:     

 5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:  



பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பெருங்கழிச்சல் (க்ரஹணீ), பெருவயிறு (உதர), சூலை (சூல), குன்மம் (குல்ம), மண்ணீரல் பெருக்கம் (ப்லீஹ வ்ருத்தி), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), குடற்புண்கள், ராஜயக்ஷ்மா எனப்படும் TB

தெரிந்து கொள்ளவேண்டியவை ..

  1. ஆயுர்வேதத்தின் அடிப்படையான விஷயங்களில் ஒன்று  -ஸ்ரோதஸ் என்பதாகும் .நமது  உடல் பதிமூன்று வகையான  ஸ்ரோதஸ்களால் ஆக்கப்ட்டுள்ளது ..புரிவதற்காக ஸ்ரோதசை உடலே ச்ரோஷஸ் மயம் எனலாம் .ஸ்ரோதஸ் என்றால் என்ன -ஒரு குழாய் ,ஒரு இரத்த தந்துகிகள் ,இணைப்பை ஏற்படுத்தும் பாலம் ,தாதுக்களை கடத்திடும் ஒரு வழி....என்றும் பலவாறு புரியலாம் ...
  2. பலவைதாமான நோய்க்கு இந்த ஸ்ரோதசில் ஏற்படக்கூடிய அடைப்பே காரணம் எனலாம் -உதாரணதிற்கு கருக்குழாய் அடைப்பு ,விந்து  குழாய் அடைப்பு ,இதய அடைப்பு ,என்று அடைப்புகள் அனைத்தும் ஆயுர்வேதத்தில் ஸ்ரோதோ ரோதம் என்று அளிக்கபடுகிறது  ..இந்த பொதுவாக எல்லா நோய்க்கும் காரணமான ஸ்ரோதோ ரோதம் என்பதனை சரி seyyum -முக்கிய மருந்தாக இந்த மருந்து உள்ளது
  3. கருக்குழாய் அடைப்புக்கும் தக்க துணை மருந்தோடு தர குணமாகும் என்பது இதற்க்கு உதாரணம்
  4. melum இந்த மருந்து காச நோய்க்கும் ,இளைத்துகொண்டே போகும் நோய்க்கும் தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும்


Post Comment

திங்கள், செப்டம்பர் 12, 2011

குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis


குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis-பலஸர்பிஸ்
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – உத்தர ஸ்தானம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் – ஜல        3.200 லிட்டர்
2.            பசுவின் பால் – கோக்ஷீர     3.200 கிலோ கிராம்
3.            பசுவின் நெய் – க்ருத        0.800         “

இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்

1.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                      12.500 கிராம்
2.            கோஷ்டம் – கோஷ்ட                             12.500       “
3.            கிரந்தி தகரம் – தகர                              12.500       “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       12.500       “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     12.500       “
6.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 12.500       “
7.            சர்க்கரை – ஸர்க்கர                               12.500       “
8.            வசம்பு – வச்சா                                  12.500       “
9.            மஞ்சள் – ஹரீத்ரா                               12.500       “
10.          மரமஞ்சள் – தாருஹரீத்ரா                        12.500       “
11.          அதிமதுரம் – யஷ்டீ                              12.500       “
12.          மேதா – மேதா                                   12.500       “
13.          ஓமம் – அஜமோதா                               12.500       “
14.          கடுகரோஹிணீ – கடுகீ                      12.500       “
15.          கீரைப்பாலை – ஜீவந்தி                      12.500       “
16.          பெருங்காயம் – ஹிங்கு                      12.500       “
17.          காகோலீ – காகோலீ                              12.500       “
18.          அமுக்கிராக்கிழங்கு – அஸ்வகந்தா                 12.500       “
19.          தண்ணீர் விட்டான் கிழங்கு – ஸதாவரீ             12.500       “

                இவைகளைச் சர்க்கரை, பெருங்காயம் நீங்கலாக அரைத்துக் கல்கமாகக் கலக்கவும். பெருங்காயத்தைப் பொரித்துப் பொடித்துச் சேர்க்கவும். பின்னர் கலவையைக் காய்ச்சி மத்யம பதத்தில் இறக்கி வடிக்கட்டவும். ஆறியபின் சர்க்கரையைப் பொடித்துக் கலக்கவும்.

குறிப்பு:     

நெய்க்கு சமம் பாலும், 25 கிராம் சர்க்கரையும் சேர்ப்பது சம்பிரதாயம்.
புஷ்ய நக்ஷத்திரங்களில் இதைத் தயாரிக்க வேண்டும் என்று நூல் கூறுகிறது.

இதை “பலக்ருதம்” என்றும் அழைப்பர்.

அளவும் அனுபானமும்:    



5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: குழந்தைகளின் வளர்ச்சியின்மை, குழந்தைகளை ஸ்கந்தக்ரஹம் பீடித்தல் (பாலக்ரஹ), போன்ற குழந்தைகளின் நோய்கள் (பாலரோக), விந்துக் கோளாறுகள் (சுக்ர தோஷ (அ) சுக்ர விகார), ஆண்மைக் குறைவு, கருப்பை நோய்கள் எனும் கருப்பாயஸ ரோக (யோனி விகார), மலட்டுத் தன்மை (வந்த்யத்வ), கர்ப்பிணி நோய்கள் (கர்ப்பிணி ரோக), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), சூதகக்கட்டு (நஷ்டார்த்வ).

                
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காரணம் தெரியாத மலட்டு தன்மைக்கு -குறிப்பாக பெண்களின் உள்ள காரணம் தெரியாத குழந்தை இன்மைக்கு இந்த மருந்து மிக சிறந்த மருந்து
  2. எனது அனுபவத்தில் ..கரு முட்டை வெடிப்பதில் உள்ள பிரச்சனை,கருப்பை சுவர் தடிமன்  (என்டோமெட்ரியம் தடிப்பு ),கரு முட்டை வளர்ச்சி இன்மை போன்ற விஷயங்களால் ஏற்படும் குழந்தை இல்லாத குறைக்கு -தக்க துணை மருந்தோடு கொடுக்க -ஆறு மாதத்தில் நல்ல பலன் தரும் ..
  3. பலம் (phala )என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு கருமுட்டை என்றும் பொருள்

Post Comment