வியாழன், மார்ச் 17, 2016

பன்றி கொழுப்பை வைத்து கட்டு போடும் புத்தூர் எலும்பு முறிவு -மூலிகை வைத்தியர்கள்


  • எலும்பு முறிவு என்றால் எல்லோருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது எலும்பு முறிவு வைத்தியர்கள் ...

அதில் பல் ரகங்கள் -புத்தூர் கட்டு என்று இந்தியா முழுவதும் உள்ளவர்கள் ..
முட்டை வெள்ளை கருவை வைத்து கட்டு போடும் வைத்தியர்கள் 
எலும்பு முறிவு வைத்தியர்கள் ..பல்வேறு நிலைகளில் உள்ளனர் ..
ஆங்கில எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்றால் பெரும் செலவு ஆகும் என்று அருகில் உள்ள நாட்டு வைத்தியர் -எலும்பு முறிவு வைத்தியர் - புத்தூர் கட்டு வைத்தியர் என்று எளிதாக மக்கள் அணுகி வருகிறார்கள் ..


நமது இந்த கட்டுரை -எலும்பு முறிவுக்கு கட்டு நல்லதா இல்லையா ,சரியா ,தவறா என்பதில்லை ...இந்த மருத்துவர்கள் எதை எல்லாம் வைத்து கட்டு கட்டுகிறார்கள்  என்பதை பற்றி தான் ...

இஸ்லாமிய சகோதர்களுக்கு பொதுவாக   பன்றி என்றாலே மிக பெரிய அருவெறுப்பு ...
பன்றியை வாகனத்தில் இடித்து விட்டால் மிக பெரிய குற்றம் என்று இடித்த புது வாகனத்தையே விற்கும் இஸ்லாமிய அல்லாத சகோதர்களுக்கும் பன்றியை கண்டால் பயம் ,அருவெறுப்பு .



பன்றியின் கொழுப்பு தான் பல்வேறு எலும்பு முறிவுக்கு கட்டு போடும் வைத்தியர்கள் சேர்கிறார்கள் என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் ..
எனது ஊருக்கு அருகில் உள்ள முட்டை பற்று போடுகிற ஒரு வைத்தியர் பன்றியின் கொழுப்பை மட்டுமே உருக்கி  எண்ணையாக்கி கட்டு போடுகிறார்கள் ..


கை வலி ,கால் வலிக்கும்  ,சதை கிழிந்திருக்கிறது ,ஜவ்வு விட்டிருக்கிறது ,எலும்பு தேய்ந்து இருக்கிறது என்று முட்டை பத்து மருந்தில் இந்த பன்றியின் கொழுப்பு சேர்ந்த எண்ணையை தடவி கட்டு போடுகிறார்கள் எனபது தான் உணமையான தகவல் ..

இஸ்லாமிய சமுதாய மக்கள் இதை தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த கட்டுரை எழுதபடுகிறது .படிக்காத வைத்தியர்களிடம் செல்வதை  தவிர்த்தல் மிகவும் நல்லது . பன்றியின் கொழுப்பு சேர்த்த எண்ணையை பயன்படுத்த வில்லை என்று தெரிந்து கட்டு போடுதலுக்கு முன் தெரிவது மிகவும் நல்லது .
நியாய தர்மங்களுக்கு கட்டு பட்டவர்கள் உண்மை சொல்வார்கள் ..

நன்கு படித்த மருத்துவரையே பார்த்து சிகிச்சை எடுத்தல் நல்லது ..

தெரிந்து கொள்ள வேண்டியவை.

  • ·         எலும்பு முறிவுக்கு கட்டு போடும் அனைவரும் பன்றி கொழுப்பு எண்ணெய் கலந்த எண்ணையை பயன்படுத்துவதில்லை.


  • ·         இஸ்லாத்தில் பன்றி இறைச்சி மட்டுமே உண்ண தடையே தவிர –அதை தொடுவது எந்த உணர்வை தரும் என்பதையும் –மக்களின் நம்பிக்கையை பொருத்து மாறுபடுகிறது.



  • ·         மூலிகை கட்டு போடுபவர்கள் –நிறைய திறமை வாய்ந்தவர்கள் உள்ளனர் –என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..நான் பாரம்பரிய வைத்தியர்களை குறை சொல்லவில்லை. மூலிகை கட்டில் என்ன சேர்க்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் பற்றி தான் –அவர்களின் மக்களின் மன உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் சாராம்சம்.




Post Comment