உதிரம் காப்போம் | இரத்த கோளாறு சிகிச்சைகள் | ரக்த பித்தம்
உடலில் இரத்தம் எந்த பகுதியில் வெளியேறினாலும் அதற்கான சிகிச்சைகளை ஆயுர்வேத எப்படி அணுகிறது எனபதை இந்த காணொளியில் தெரிந்து கொள்ளலாம் ..
ரத்த பித்தம் நோய் ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தேர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த காணொளி உதவும்
This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine .Thank you for watching this Ayurvedic and Ayush youtube channel.
---------Contact information with whatsapp number -------------
Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @
Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333
Chennai – Al shifa Ayush hospital cell 9043336000
Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999
Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888
Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577
--------------------------------------------Our Social medida connetion----------------------
Facebook id https://www.facebook.com/drsaleem.ayush
Instagram link https://instagram.com/drsaleemayush?i...
Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S...
Twitter link https://twitter.com/AyushDrsaleem
Facebook Group Link https://www.facebook.com/groups/22238...
linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohamad-saleem-md-ayurveda-254505209/
youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...
Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl
-----------------------------------------------------------------------------------------------------------------------
#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்
#அலஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth
#subscribeourchannelalshifayush
#ரக்தபித்தம் #BAMS #ஆயுர்வேததமிழ் #இரத்தகோளாறுகள்
இரத்த பித்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரத்த பித்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், மே 27, 2021
உதிரம் காப்போம் | இரத்த கோளாறு சிகிச்சைகள் | ரக்த பித்தம் | ஆயுர்வேதம் |...
வியாழன், ஜூலை 26, 2012
அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodhaya Rasa
அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodahya Rasa
(ref -பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ 10 கிராம்
2. சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக 30 “
இவைகளை நன்கு
அரைத்துக் கறுத்த கஜ்ஜளி செய்து அத்துடன்,
1. தாமிரபற்பம் – தாம்பர பஸ்ம 20 கிராம்
2. அயபற்பம் – லோஹ பஸ்ம 20 “
3. அப்பிரக பற்பம் – அப்ரக பஸ்ம 50 “
இவைகளைச்
சேர்த்தரைத்துப் பின்னர்,
1. பொடித்துச் சலித்த மிளகு – மரீச்ச 165 கிராம்
2. பொரித்துப் பொடித்த பெருங்காயம் – ஹிங்கு 5 “
3. எலுமிச்சம் பழச்சாறு விட்டரைத்து விழுதாக்கிய
நாபி – ஷோதித வத்ஸநாபி 30 “
இவைகளைச் சேர்த்து எலுமிச்சம்பழச்சாறு, அத்திப்பட்டைக் கஷாயம் (உதும்பரத்வக் கஷாய),
லவங்க கஷாயம் (லவங்க
கஷாய) இவைகளை விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
அளவும்
அனுபானமும்: ஒன்று முதல் இரண்டு
மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாக சுரத்தல்
(அம்லபித்தம்), ரத்த சோகை
(பாண்டு), காமாலை (காமில),
கல்லீரல், மண்ணீரல் பெருத்தல் (யக்ருத் ப்லீஹ வ்ருத்தி),
ரத்தப் போக்கு
(அஸ்ரஸ்ருதி), சூதக சூலை
(ஆர்த்தவசூல), பெரும்பாடு
(அஸ்ரிக்தர), கருப்பை நோய்
(யோனி ரோக)
- காய்ச்சலில் சுக்கு, கொத்தமல்லி, மிளகுக்கஷாயத்துடன் இது வழங்கப்படுகிறது.
- பாண்டு, காமாலை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் போன்றவற்றில் திரிகடுகுச் சூர்ணம், அன்னபேதிச் செந்தூரம், கரிசலாங்கண்ணித்தழை ஆகியவர்றுடன் தரப்படுகிறது.
- அமுக்கராச் சூரணத்துடன் கலந்து இதனை ரத்தப்போக்கு, சூதக சூலை, பெரும்பாடு, கருப்பைக் கோளாறு போன்றவற்றுக்கு தருவது வழக்கம்.
- ரக்த வஹ ஸ்ரோதஸ் சார்ந்த நோய்களை குணபடுத்தும் ..\
- பெண்களின் அதிக உதிரப்போக்கினால் வரும் அனீமியாவை சரிசெய்யும் ..கருப்பையையும் வலுபடுத்தும் ..
Post Comment
செவ்வாய், ஜூலை 19, 2011
பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களுக்கான மருந்து -மஹாதிக்தக க்ருதம்
பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களுக்கான மருந்து -மஹாதிக்தக
க்ருதம்
(ref-அஷ்டாங்க
ஹ்ருத்யம் – குஷ்ட சிகித்சா)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. தண்ணீர் – ஜல 12.800 லிட்டர்
2. நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீரஸ 3.200 கிலோ கிராம்
3. பசுவின் நெய் – க்ருத 1.600
“
இவைகளை என்று
சேர்த்து அதில்
1. ஏழிலம்பாலைபட்டை – ஸப்தஸதத்வக் 12.500 கிராம்
2. பர்பாடகம் – பர்பாடக 12.500 “
3. சரகொன்னைப்பட்டை – ஆரக்வதத்வக் 12.500 “
4. கடுகரோஹிணீ – கடுகீ 12.500 “
5. வசம்பு – வச்சா 12.500 “
6. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 12.500 “
7. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 12.500 “
8. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் 12.500 “
9. பதிமுகம் – பத்மக 12.500 “
10. பாடக்கிழங்கு – பாத்தா 12.500 “
11. மஞ்சள் – ஹரீத்ரா 12.500 “
12. மரமஞ்சள் – தாருஹரீத்ரா 12.500 “
13. நன்னாரி – ஸாரிவா 12.500 “
14. நன்னாரி (கருப்பு) – க்ருஷ்ண ஸாரிவா (அனந்த மூல) 12.500 “
15. திப்பிலி – பிப்பலீ 12.500 “
16. யானைத்திப்பிலி – கஜபிப்பலீ 12.500 “
17. வேப்பம்பட்டை – நிம்பத்வக் 12.500 “
18. சந்தனம் – சந்தன 12.500 “
19. அதிமதுரம் – யஷ்டீ 12.500 “
20. தும்மட்டி – இந்த்ரவாருணீ 12.500 “
21. வெட்பாலை அரிசி – இந்த்ரயவா 12.500 “
22. சீந்தில்கொடி – குடூசீ 12.500 “
23. நிலவேம்பு – பூநிம்பா (அ) கிராடதிக்தா 12.500 “
24. விளாமிச்சம் வேர் – உசீர 12.500 “
25. ஆடாதோடை – வாஸாமூல 12.500 “
26. பெரும்குரும்பை – மூர்வா 12.500 “
27. தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ 12.500 “
28. பேய்ப்புடல் – பட்டோலா 12.500 “
29. அதிவிடயம் – அதிவிஷா 12.500 “
30. கோரைக்கிழங்கு – முஸ்தா 12.500 “
31. பிராம்மீ – ப்ராஹ்மீ 12.500 “
32. சிறுகாஞ்சூரி – துராலபா 12.500 “
இவைகளைப் பொடித்து அரைத்துக் கல்கமாகச்
சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிக்கட்டவும்.
குறிப்பு:
கல்கத்ரவ்யங்களையே
கஷாயச் சரக்காக உபயோகித்து முறைப்படி தயாரித்த கஷாயம் நான்கு பங்குடன் ஒரு பங்கு
நெய், கால் பங்கு கல்கம்
சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
வெண்குட்டம் (ஸ்வித்ர), விரணங்கள்
(புண்கள்)(வ்ரண), புறையோடும்
புண்கள் (துஷ்டவ்ரண), அக்கி (விஸர்ப்ப),
சொறி (கண்டு (அ) கட்க),
சிறங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) போன்ற பலவித தோல் நோய்கள்
(குஷ்ட), கண்டமாலை
(கண்டமாலை), அபசீ போன்றவை,
பைத்தியம் (உன்மாத),
காமாலை (காமால), மூலம் (அர்ஸஸ்), பவுத்திரம் (பகந்தர), பெரும்பாடு (அஸ்ரிக்தர), இடுவிஷம் (கரவிஷ), அமில பித்தம் அதிகரித்த நிலை (அம்ல பித்த),
இரத்த சோகை (பாண்டு ரோக),
உடலுள்ளுறுப்புகளிலேற்படும்
ரத்தப்போக்கு (ரக்த பித்த).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- அதிகமான கசப்பான மருந்துகளில் ஒன்று
- வறட்சியாக உள்ள தோல் நோய்கள் ,பித்தம் அதிகமாக நாள்பட்ட தோல் நோய்களில் இந்த மருந்து மிக அருமையாக வேலை செய்யும்
- கட்டிகளை கரைக்க இந்த மருந்து தக்க துணை மருந்தோடு பயன்படுத்தலாம்
- பவுந்திரத்திர்க்கு இந்த மருந்து வேலை செய்வதுண்டு
- ஆறாத புண்களுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
Post Comment
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








