கட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 09, 2013

எல்லா விதமான மார்பக கட்டிகளை கரைக்கும் –ஆயுஷ் மருத்துவம்

எல்லா விதமான மார்பக கட்டிகளை கரைக்கும் –ஆயுஷ் மருத்துவம் 


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.MBA

மார்பகத்தில் வரும் எல்லா கட்டிகளும் மோசமான கட்டிகள் இல்லை ..

சாதரணமாக வருகிற மார்பக கட்டிகளை எளிதாக ஆயுர்வேத –சித்த மருந்துகளில் கரைக்கலாம் ..எல்லா மார்பக கட்டிகளுக்கும் அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்று இல்லை ...பயம் ஏற்படுத்தாத பல மார்பக கட்டிகளை அதிக பட்சம் ஆறு மாதத்தில் முழுவதுமாக கரைக்க முடியும் ...

மார்பகக் கட்டிகள்: 
சதை முடிச்சுகள், 
நீர்க் கட்டிகள், 
சீழ் கட்டிகள்.
சதை முடிச்சுகள்.


ஃபைப்ரோ அடினோஸிஸ் :

இதைத் தொட்டுப் பார்த்தால் பொடி கற்களும் மண்ணும் போட்டு மூடப்பட்ட துணியைத் தொடுவது மாதிரி நறநறவென்று இருக்கும்.

ஃபைப்பேரா அடினோமோ: 

சுண்டெலி மாதிரியே அங்கங்கே நகரும். தொடுவதற்கு ரப்பர் மாதிரி இருக்கும். இது ஒன்றாகவோ பல கட்டிகள் சேர்ந்தோ இருக்கலாம். இதனுடைய பிரச்சனையே மார்பகத்தின் வடிவம் அழகாக இருக்காது என்பதுதான்.

ஃபைப்ரோ அடினோஸிஸ்: 

பொதுவாக பெண்கள் பூப்படையும் பருவத்திலோ மெனோ பாஸ் நிலையிலோ ஏற்படக்கூடியது. மாத விலக்கிற்கு சில நாட்களுக்கு முன் இந்தக் கட்டி பெரிதாகும். அதிக வலி எடுக்கும்.

பெரிய ஃபைப்ரோ அடினோமா என்பது பொதுவாக வயதுக்கு வரும் நேரத்தில் ஏற்படுவது.

கொழுப்பு உருண்டை கட்டிகள்: 

தொட மிருதுவாக, முடிச்சு முடிச்சாக இருக்கும். திடீர் என்று வலி வந்தால் கட்டியின் அளவு பெரிதானாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நீர்க்கட்டிகள்: 

உடலில் உள்ள ஒருவகை நீர்கோத்து கட்டியாவது. இது பொதுவாக அக்குள் பகுதியிலும் அடி மார்புப் பகுதியிலும் ஏற்படுகிறது. வலி இருக்கும். மார்பகம் பெரிதாகும். கட்டி பெரிதாகி வலியும் அதிகரித்தால் கட்டியில் கிருமி பாதிப்பு எனலாம்.

சீழ்க்கட்டிகள் : 

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அவை ஏற்படும். சர்க்கரை நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை. சிகிச்சை செய்தவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோருக்கு சீழ் பிடித்து ஏற்படுவதுதான் இந்தக் கட்டிகள்

எல்லாக் கட்டியுமே புற்றுநோய் அல்ல. எந்தக் கட்டியையும் அலட்சியப்படுத்தவே கூடாது


மார்பக கேன்சர் பற்றி கூடுதல் தகவலுக்கு இங்கேகிளிக் செய்யவும் ..

ஆயுர்வேத மருந்துகளில் –பல்லாதகம் என்ற சேராங்கோட்டை சேர்ந்த மருந்துகளும் ,சேதனம் என்னும் குணம் உடைய மருந்துகளான வாரனாதி ,திர்யந்த்யாதி ,குக்குலு  திக்த்கம் கஷாயம் ,லேகன குணம் உடைய கிருத  மருந்துகளும் ,ஷட் குண செந்தூரம் ,தாம்ற பஸ்மங்களும்,..


சித்த மருத்துவத்தில் குரு மருந்துகளும் ,வான் மெழுகு ,நந்தி மெழுகு ..இடி வல்லாதி மெழுகு ,நரசிம்ஹ்க வல்லாதி லேஹ்யங்களும் ,

யுனானி மருந்தில் கமிரே அப்ரேஷம் ....அர்ஷதவாலா லேஹ்யமும் 

,ஹோமியோ மருந்தில் பைட்டோ லேக்கா சேர்ந்த மருந்துகளும் நல்ல பலன் தரும்,இன்னும் பல மருந்துகளும்  நல்ல பலன் தரும் .



எங்களது அனுபவத்தில் நாங்கள்  கேன்சர் அல்லாத சாதாரண மார்பக கட்டிகளை எளிதாக கரைக்க முடிகிறது ..

கேன்சர் என்ற சந்தேகம் எழ கூடிய கட்டிகளையும் கரைக்க முடிகிறது ..பரவிய முற்றிய நிலை கேன்சர் மார்பக கட்டிகளை நாங்கள் சிகிச்சைக்கு எடுப்பதில்லை ( எல்லாமே சாத்தியம் என்பது சுத்த பொய் –நாங்கள் நோயாளியின் தேவை அறிந்தே மருந்து கொடுப்பதுண்டு )...


அக்குபஞ்சர் சிகிச்சை மருந்துகளோடு சேர்த்து செய்து வருகிறோம்

ஹிஜாமா என்னும் சிறப்பு சிகிச்சையும் மார்பக கட்டுகளுக்கு மிக மிக சிறப்பாக செய்து நல்ல பலனை தருகிறோம்

அட்டை விடல் சிகிச்சை தேர்ந்தெடுத்து செய்வதால் –நல்ல பலனை எங்களது 

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை தர முடிகிறது 


மூன்று மாதத்தில் கட்டியின் அளவில் நல்ல மாற்றம் ( குறைந்த பட்சம் எண்பது சதம் )ஏற்பட்டால் மட்டுமே மருந்தை தொடர்வோம் ..

இதற்கென்று எனது மனைவி ஹோமியோ மருத்துவர் அவர்களின் மேற்பார்வையில் ஒரு தனி ப்ரோட்டோகால் ( வழி முறை ) வகுத்து செயல்படுகிறோம் ...ஏக இறைவன் துணை கொண்டு நல்ல முன்னேற்றமே  அனைத்து நோயாளிக்கும் உணர முடிகிறது ..


மார்பக் கட்டிகள் என்றால் உடனடியாக அறுவை சிகிச்சை என்று உடனடியாக சென்று விடாமல் முதலில் உங்களுக்கு வந்த கட்டி கரைக்க –அறுவை இல்லாமல் குணப்படுத்த முடியுமா என்று முதலில் ஆலோசனை பெற்று தகுதி வாய்ந்த மருத்துவரிடம் ,பெண் மருத்துவ ஆலோசனை உள்ள ,கொஞ்சம் கூட மிக படுத்தி சொல்லாத ,காசுக்கு ஆசைபடாத ஆயுஷ் மருத்துவமனையை கண்டறிந்து சிகிச்சையை எடுப்பது நல்லது –இந்த எல்லா தகுதியும் வாய்ந்த அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சிகிச்சைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999

ராஜபாளையம் 90 4333 6888

Post Comment

வெள்ளி, ஜனவரி 25, 2013

தைராய்ட் நோயை குணப்படுத்தும் -காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU)


தைராய்ட் நோயை குணப்படுத்தும் -காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU)
(சாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த குக்குலு – ஷோதித குக்குலு      1037.5 கிராமை

சுத்தமான நீருடன் கொதிக்க வைத்துக் கரைத்து வடிகட்டிக் காய்ச்சிப் பதத்தில் நன்கு பொடித்துச் சலித்த


2.            மந்தாரைப்பட்டை – காஞ்சனாரத்வக்    500 கிராம்
3.            திரிபலை (வகைக்கு) – த்ரிபலா         100         “
4.            திரிகடு (வகைக்கு) – த்ரிகடு            50           “
5.            மாவிலிங்கம் – வருணமூல            50           “
6.            ஏலக்காய் – ஏலா                      12 ½       “
7.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்       12 ½       “
8.            இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர         12 ½       “

இவைகளைச் சேர்த்து நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

1 முதல் 2 மாத்திரைகள் வரை கொட்டைக் கரந்தைச் சூர்ணம், கருங்காலி க்ஷார சூர்ணம், கடுக்காய்ச் சூர்ணம் அல்லது வெந்நீருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



குன்மம் (குல்ம), கண்டமாலை (கண்டமால), அபசீ, அற்புதம், கிரந்தி எனப்படும் பல விதமான விபரீதமான கழலைகளும், புற்று நோய்களும், புண்கள் (வ்ரண), நெறிகட்டுதல், ஆசன வெடிப்பு (பகந்தர), யானைக்கால் (ஸ்லீபாத), தோல்நோய்கள் (குஷ்ட), பொதுவாக வலியுடன் கூடிய எந்த வீக்கத்திலும் நிவாரணமளிப்பது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. ஹைப்போ தைராய்ட் என்னும் -தைராய்ட் குறைவாக சுரக்கும் நோயை -ஆங்கில மருந்தான எல்ட்ராக்சின்  என்னும் மருந்தை விட நன்றாக வேலை செய்யும் மருந்து இது ..
  2. இந்த மருந்து தைராய்ட் சுரப்பியின் வேலையை சரி செய்யும் 
  3. தைராய்ட் வீக்கம் -கட்டிகள் அனைத்தையும் தக்க துணை மருந்த்துகளோடு  தர சீக்கிரம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணம் ஆகும் 
  4. ஹோமியோ மருந்தோடு இந்த மருந்தை கொடுத்து வர (NAT MUR,THYRODIUM,IODUM...) சீக்கிரம் நல்ல பலன் தரும் 
  5. ஆங்கில மருந்தை போல் ஆயுசுக்கும் இந்த மருந்தை சாப்பிட தேவை இல்லை 
  6. சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரமும் இந்த மருந்தும் -நல்ல இணை மருந்துகள் ..
  7. ஆங்கில மருந்துகள் தைராய்டுக்காக எடுத்து கொண்டிருப்பவர்கள் -நன்கு படித்த -நல்ல அனுபவ அறிவும் உள்ள ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படியே ஆங்கில மருந்தை நிறுத்தி இந்த மருந்தை எடுத்தல் அவசியம் 

Post Comment

வியாழன், ஜூலை 05, 2012

தோல் நோய்க்கும் ,கொழுப்பு சார்ந்த நோய்க்கும் மருந்தாகும் - ஆரோக்யவர்தனீவடீ Arogya Vardhani Vati


தோல் நோய்க்கும் ,கொழுப்பு சார்ந்த நோய்க்கும் மருந்தாகும் -
ஆரோக்யவர்தனீவடீ Arogya Vardhani Vati
(ref-ரஸரத்ன ஸமுச்சயம்; உத்தரகண்டம் - குஷ்டாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.      சுத்தி செய்த குக்குலு –                              ஷோதிதகுக்குலு  60 கிராம்
2.   சுத்தி செய்த கோமூத்ர சிலாஜது – ஷோதித கோமூத்ர சிலாஜது 45           “

இவைகளை வேப்பிலைச் சாறு (நிம்பபத்ரஸ்வரஸ) விட்டு நன்கு அரைத்து விழுதாகச் செய்து அத்துடன் நன்கு பொடித்துச் சலித்த

1.            கடுகரோஹிணீ – கடுகீ                            270 கிராம்
2.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       10           “
3.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     10           “
4.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                    10           “
5.            கொடிவேலி வேர் – சித்ரகமூல                       60           “

இவைகளின் சூர்ணம்,

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ                15 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதிதகந்தக             15           “

இவைகளை நன்கு அரைத்துத் தயாரித்த கஜ்ஜளி, மற்றும்

1.            அயபற்பம் – லோஹபஸ்ம             15 கிராம்
2.            அப்பிரகபற்பம் – அப்ரகபஸ்ம           15           “
3.            தாமிரபற்பம் – தாம்ர பஸ்ம            15           “

ஆகியவற்றைச் சேர்த்து வேப்பிலைச்சாறு (நிம்ப பத்ரஸ்வரஸ) விட்டு எல்லாவற்றையும் நன்கு அரைத்துப் பதத்தில் 500 மில்லி கிராம் மாத்திரைகளாக்கவும்.

அளவு:          

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகளுக்கு தண்ணீர், பால், தேன், இஞ்சிச்சாறு அல்லது வேப்பிலைச் சாறு ஆகியவற்றுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  

நாட்பட்ட சுரம் (ஜீர்ண ஜ்வர), அதிக உடற்பருமன் (மேதோதோஷ), மதுமேகம் (மதுமேக), தோல் நோய்கள் (குஷ்ட), கல்லீரல் கோளாறுகள் (யக்ருத் விகார), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமில), வயிற்றுப்பூச்சிகள் (க்ருமி), ஜீரணக் கோளாறுகள். இதயத்திற்கு பலத்தைத் தரக் கூடியது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த மருந்து வாரனாதி கஷாயத்துடன் கொடுக்க தேவையற்ற கொழுப்பை குறைக்கும் ..
  2. மஞ்சிஷ்டாதி கஷாதுடன் கொடுக்க தோல் நோயை குணப்படுத்தும்
  3. வசா குளுச்யாதி கஷாயத்துடன் கொடுக்க மஞ்சள் காமாலை தீரும்
  4. வராதி கஷாயம் அல்லது தக்க துணை மருந்துடன் கொடுக்க உடல் பருமன் குறையும்
  5. பில்வாதி மாத்திரையும்,இந்த மாத்திரையும் சேர்ந்து அவுரி கஷாயத்துடன் கொடுக்க விஷ கடிகள் நீங்கும்
  6. இந்த மருந்தில் பல கம்பெனிகள் கோமூத்திர சிலாஜித்துக்கு பதில் கற்ப்பூர சிலாஜித்தையே சேர்க்கின்றனர் ...அப்படி சேர்த்தால் நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது ..
  7. இந்த மாத்திரை + தான்வந்தர கிருதம் என்ற நெய் மருந்து + அப்ரக பற்பம் சேர்த்து கொடுத்தால் சர்க்கரை நோயாளியின் உடம்பில் ஏற்படும் கட்டிகளை குணமாக்கலாம்

Post Comment

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam


பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தேவதாரு – தேவதாரு            50 கிராம்
2.            சுக்கு – சுண்டீ                     50           “

இவைகளைப் பொடித்துச் சலித்து அத்துடன் தனியே பொடித்துச் சலித்த நவாச்சாரம் (நவக்ஷார) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
                இது நீர்க்கும் தன்மை உள்ளதாகையால் காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை:  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

                 
எலுமிச்சம் பழச்சாறு, மோர் அல்லது சூடான தண்ணீர் இவற்றுடன் கலந்து மேலே பூசலாம்.

தீரும் நோய்கள்:  

ஆரம்ப நிலையிலும், பழுக்கும் நிலையிலும் உள்ள கட்டிகள் (விஷ்போட (அ) வித்ரதி), வீக்கம் (ஸோத), வலி (ருஜா), யானைக்கால் (ஸ்லீபாத).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வீக்கம் சார்ந்த வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிடலாம் ..நல்ல குணம்  தெரியும்
  2. பழுக்காத கட்டிகளுக்கு கஞ்சி தண்ணீருடன பற்றிட சீக்கரம் உடையும்
  3. ஊசி குத்துதல் போன்ற வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிட நல்ல பலன் தெரியும்
     



Post Comment