வெள்ளி, ஜனவரி 25, 2013

தைராய்ட் நோயை குணப்படுத்தும் -காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU)


தைராய்ட் நோயை குணப்படுத்தும் -காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU)
(சாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த குக்குலு ஷோதித குக்குலு      1037.5 கிராமை

சுத்தமான நீருடன் கொதிக்க வைத்துக் கரைத்து வடிகட்டிக் காய்ச்சிப் பதத்தில் நன்கு பொடித்துச் சலித்த


2.            மந்தாரைப்பட்டை காஞ்சனாரத்வக்    500 கிராம்
3.            திரிபலை (வகைக்கு) த்ரிபலா         100         “
4.            திரிகடு (வகைக்கு) த்ரிகடு            50           “
5.            மாவிலிங்கம் வருணமூல            50           “
6.            ஏலக்காய் ஏலா                      12 ½       “
7.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       12 ½       “
8.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         12 ½       “

இவைகளைச் சேர்த்து நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

1 முதல் 2 மாத்திரைகள் வரை கொட்டைக் கரந்தைச் சூர்ணம், கருங்காலி க்ஷார சூர்ணம், கடுக்காய்ச் சூர்ணம் அல்லது வெந்நீருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: குன்மம் (குல்ம), கண்டமாலை (கண்டமால), அபசீ, அற்புதம், கிரந்தி எனப்படும் பல விதமான விபரீதமான கழலைகளும், புற்று நோய்களும், புண்கள் (வ்ரண), நெறிகட்டுதல், ஆசன வெடிப்பு (பகந்தர), யானைக்கால் (ஸ்லீபாத), தோல்நோய்கள் (குஷ்ட), பொதுவாக வலியுடன் கூடிய எந்த வீக்கத்திலும் நிவாரணமளிப்பது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. ஹைப்போ தைராய்ட் என்னும் -தைராய்ட் குறைவாக சுரக்கும் நோயை -ஆங்கில மருந்தான எல்ட்ராக்சின்  என்னும் மருந்தை விட நன்றாக வேலை செய்யும் மருந்து இது ..
  2. இந்த மருந்து தைராய்ட் சுரப்பியின் வேலையை சரி செய்யும் 
  3. தைராய்ட் வீக்கம் -கட்டிகள் அனைத்தையும் தக்க துணை மருந்த்துகளோடு  தர சீக்கிரம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணம் ஆகும் 
  4. ஹோமியோ மருந்தோடு இந்த மருந்தை கொடுத்து வர (NAT MUR,THYRODIUM,IODUM...) சீக்கிரம் நல்ல பலன் தரும் 
  5. ஆங்கில மருந்தை போல் ஆயுசுக்கும் இந்த மருந்தை சாப்பிட தேவை இல்லை 
  6. சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரமும் இந்த மருந்தும் -நல்ல இணை மருந்துகள் ..
  7. ஆங்கில மருந்துகள் தைராய்டுக்காக எடுத்து கொண்டிருப்பவர்கள் -நன்கு படித்த -நல்ல அனுபவ அறிவும் உள்ள ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படியே ஆங்கில மருந்தை நிறுத்தி இந்த மருந்தை எடுத்தல் அவசியம் 

Post Comment

2 comments:

கருத்துரையிடுக