புதன், பிப்ரவரி 06, 2013

அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ (Kamaduga Rasa)


அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ     (Kamaduga Rasa)                                                                                        
(ref-ரஸயோகஸாகரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            முத்து பற்பம் மௌக்திக பஸ்ம                300 கிராம்
2.            பவள பற்பம் ப்ரவாள பஸ்ம                   300         “
3.            முத்துச்சிப்பி பற்பம் மௌக்திகசுக்தி பஸ்ம     300         “
4.            பலகரை பற்பம் வராடிக பஸ்ம                300         “
5.            சங்கு பற்பம் சங்க பஸ்ம                     300         “
6.            காவிக்கல் கைரிக                             300         “
7.            சீந்தில் சர்க்கரை குடூசீஸத்வ                   300         “

இவைகளை ஒன்று கலந்து முறைப்படி ரவைகளாக்கி 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் சீரகச் சூர்ணம், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

வயிற்றில் புளிப்புநீர் (அமிலம்) அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்தம்), வெள்ளை படுதல் (ஸோமரோகம்), நாள்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை 

எவ்வளவு மோசமான வயிறு புண் ,உணவு குழாய் புண் ,சிறுகுடல் புண் -சீரண  மண்டலத்தில் இருக்கும் புண்களை இது வியக்கத்தக்க வகையில் குணமாக்கும் 

வயிற்று வலி ,தாங்க முடியாத மேல் வயிற்று எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் 

எந்த கம்பெனியும் முத்து பற்பத்தை  சேர்ப்பதில்லை ...சேர்த்தால் விலை அதிகமாகும் .,முத்து சேர்க்காத  காமதுகா ரச  பெரிய வேலையை செய்வதில்லை ..

எங்களிடம் முத்து சேர்த்தும் ..முத்து சேர்க்காத காமதுகா  ரச என்ற பற்பம்  எங்களிடம் கிடைக்கும் ..நோயாளிக்கு தக்கவாறு ,நோய்க்கு தக்கவாறு இதை முத்து சேர்ந்ததா  அல்லது முத்து சேராததா  நோயாளிக்கு சொல்லி கொடுப்போம் 

எனது அனுபவத்தில் இந்துகாந்தம் கஷாயம் அல்லது இந்துகாந்தம் கிருதம்  போன்ற மருந்தோடு தர எவ்வளவு நாள்பட்ட அல்சர் ஆனாலும் கடவுள் நாடினால் குணமாகும் 

இந்த மருந்தை நான்கு அரிசி எடை அளவுக்கு தேன் அல்லது  தண்ணீர்  விட்டு பிழியாத  தேங்காய்பால் சாற்றுடனும் தர அல்சர் பற்றி கவலை வேண்டாம் 

மருந்து சாப்பிடும் பொது நிச்சயம் எண்ணெய் எண்ணையில் பொறித்த உணவுகளை நூற்றுக்கு நூறு மூன்று மாதமாவது நிறுத்துதல் அவசியம் 

அதிகமான அமில சுரப்பை சரி  செய்யும் 

கடையில் விற்கும் பால் மருந்துகள் எனப்படும் ஜெலுசில் இதனிடம் வெட்கி மோசமாக தோற்கும் 

மேலும் வெள்ளை படுதல் ,எரிச்சல் ,சர்க்கரை நோயில் வரும் எரிச்சல் ,நாக்கில் புண் ,காரணம் தெரியா அரிப்பு வியர்க்கும் நல்ல பலன் தரும் 
Post Comment

4 comments:

கருத்துரையிடுக